ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

5 posters

Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 1:50 pm


பொதுவாக இன்றைய காலக்கட்டங்களில் விருந்து, திருமணம் எனில் ‎பலவகையான பெயர் புரியாத உணவு வகைகளை கணக்கில் கூட கொள்ள ‎முடியாத அளவு இருக்க வேண்டும் என்ற நியதியை வரையறுக்கப்படாத ‎சட்டமாகவே கடைபிடித்து வருகிறோம். இது அவசியமா..?? இப்படி ‎செய்வதன் காரணம்தான் என்ன..?

முன்பெல்லாம் ஓரிரு இனிப்பு வகைகள், இரண்டு வகை கரி, கூட்டு, பச்சடி, ‎சாம்பார், ரசம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகள் விருந்தில் ‎இடம்பெறும். விருந்து கொடுப்பவர் ஒவ்வொருவரையும் அணுகி எப்படி ‎இருக்கிறது, நன்றாக சாப்பிடுங்கள் என அன்புடன் விசாரித்து உபசரிக்க ‎அனைவரும் உண்ட மகிழ்வு ஒருபுறமும், உபசரித்த விதத்திலான மகிழ்வு ‎ஒருபுறமுமாக மனநிறைவுடன் செல்வார்கள்.

இன்று, விருந்திற்கு வந்தவரை உபசரிக்கவும் ஆட்கள் கிடையாது. ‎உண்டனரா எனக் கேட்கவும் ஆட்கள் கிடையாது. அவரவர் எது ‎வேண்டுமோ போட்டு சாப்பிடலாம். சாப்பிட்டாரா இல்லையா என்றும் கூட ‎அழைத்தவர்க்கு தெரியாது. எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என ‎முடிவு செய்ய முடியாத அளவிலான உணவு வகைகள். இது யாருக்காக...?

சராசரியாக ஒரு மனிதன் தன் வயிற்றிற்கு எவ்வளவு உணவு சாப்பிட ‎முடியும்..?? தாங்கள் அதிக வகையிலான உணவுவகைகள் ‎வைத்திருப்பதால் அனைத்தையும் சாப்பிட முடியுமா..?? சரி என்னவென்று ‎பார்க்கலாமே என்ற எண்ணத்தில் எடுக்கப்படும் உணவுகள் எச்சிலிலையில் ‎ஏராளமாக குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றது. இது யாரை யார் திருப்தி ‎செய்யவதற்கான ஏற்பாடு..?? உங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் ‎உங்கள் இல்ல விழாவில் கலந்துகொள்ளத்தானே வருகின்றனர் அல்லது ‎உங்கள் வீட்டு விருந்தில் எவ்வளவு வகையான உணவு வகைகள் ‎பரிமாறப்படுகின்றன என்பதை பார்க்கவா..??

உங்கள் உடைகளையும், உணவு வகைகளையும் பார்த்துதான் மற்றவர்கள் ‎உங்கள் தரத்தை எடை போடவேண்டுமா..?? அப்படி உங்களுடைய ‎ஆடைகளுக்காகவும் ஆடம்பரமான உபசரிப்புக்காகவும் மதிப்பவன், நாளை ‎உங்களைவிட அதிக ஆடம்பரமாக ஒருவன் உபசரிக்கத் துவங்கினால், ‎உங்களை மறந்துவிடுவான் தானே..?? அப்படியிருக்க, தற்காலிகமாக ஒரு ‎சில நாட்கள் கிடைக்கப்போகும் அல்லது உங்களைப் பற்றி விமரிசையாக ‎பேசப்படும் ஒரு நிகழ்விற்காக இத்துனை ஆடம்பரம் தேவைதானா..??
ஏன் இந்த மனோநிலை..??

மேல்தட்டு நாகரீகமாக மட்டும் இருந்து வந்த இந்தப் பழக்கம், இன்று ‎நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் பரவுகிறது. தங்களால் இயலாவிட்டாலும் ‎ஒருவரைவிட ஒருவர் அதிகம் செய்து காட்ட வேண்டும் என்ற ‎எண்ணத்தில் அவர்களுக்கு ஈடுகொடுக்க முயற்சி செய்கிறார்கள். பாசம், ‎அன்புப் பகிர்வதில் போட்டியிடலாம். ஆடம்பரத்திலும் இந்த போட்டி ‎தேவையா..?? சில தவிர்க்க இயலாத சந்திப்புகளில் எனில் சரி. ஆனால் ‎இதையே வழக்கம் என மாற்றிக்கொண்டு வரும் நபர்கள் சற்றேனும் ‎சிந்திப்பார்களா..??

இன்று உங்கள் இலையில் அதிகமாக அல்லது நாகரீகம் எனக்கருதி ‎உங்களால் சுவைக்கப்படாமலேயே விரயமாக்கப்படும் உணவு எத்துனை ‎பேரின் வாழ்வாதாரமாக அமையும் என்பதை ஏன் சிந்திக்கத் ‎தவறுகிறோம்.?

இனியாவது யார் என்ன நினைப்பார்களோ என்பதற்காக இல்லாமல் நான் ‎இதைச்செய்வதனால் பலர் பயனடைகிறார்கள் என்ற நோக்கில் நம் மன ‎திருப்திக்காக மனிதம் கடைபிடித்து ஆடம்பரம் தவிர்த்து ‎வாழத்துவங்குவோமே..!!

மாற்றம் என்பது அதிசயத்தக்க வகையில் நிகழாது. நாமாக ‎துவங்குவதுதானே மாற்றம். முதலில் நமது இல்லத்தில் இருந்து ‎துவங்கலாமே. நமது இல்ல விழாவில் ஆடம்பரமும், விரயமும் தவிர்த்து ‎நிகழ்த்திக் காட்டுவோம். வயிற்றுக்குத் தேவையானவற்றை விருந்தளித்து ‎மனமாற அன்புசெலுத்தி மகிழ்விப்போம். ஆடம்பரம் மட்டுமே விரும்பி, ‎நம்மை நாலு பேர் இகழ்ந்து பேசுவதனால் நாம் தாழ்ந்துவிடப்போவது ‎இல்லையே.. பத்து பேருக்கு உண்டான உணவை விரயத்திலிருந்து ‎காப்பாற்றின மனநிறைவே போதுமான மகிழ்வை அளிக்கும். அதை ‎அனுபவித்து உணர்வோம்.

‎”நாம் இன்று உண்ணும் உணவிற்காக என்றோ உழைக்கத்துவங்கியவன் ‎விவசாயி..
‎ நாம் உண்ணும் இந்த வேளையில் அவன் உண்டானா...
பட்டினியில் சுருண்டு உறங்கினானா...?? அறியோம்..” சோகம்சோகம்சோகம்

அவன் வாழ மனதார வாழ்த்துவோம்..
அவன் வாழ நாம் வாழ்வோம். நாம் வாழ அவன் வாழ்வான். வாழ்க ‎வளமுடன்.‎
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 1:51 pm

இந்தக்கட்டுரை...விருந்துகளில் வீணாக்கப்படும் உணவுகள் கண்டு எமக்குள் எழுந்த உணர்வே..தோழமைகளும் இதுபற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிரவும்..நன்றி..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by அருண் Sat Oct 13, 2012 1:55 pm

மிக அருமையான கட்டுரை அக்கா! மகிழ்ச்சி
இருக்கப்பட்டவங்க எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by balakarthik Sat Oct 13, 2012 1:58 pm

மிகவும் ஆதங்கமான கட்டுரை ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது போன்ற ஆடம்பரங்கள் சொந்த பந்தங்களுக்காகவும் பெரிய இடத்து நண்பர்களுக்காகவும் நடத்தபடுகிறது ஒவ்வொருவரும் தாங்களாகவே உணர்ந்து திருந்தினால் ஒழிய இதுபோன்ற ஆடம்பரங்களை தடுக்கமுடியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by யினியவன் Sat Oct 13, 2012 2:01 pm

பகட்டுக்காக பந்தி போடுபவனுக்கு
பஞ்சத்தில் அழிபவனின் நினைவு
நினைவிற்கு வருவதேயில்லை

பஞ்சமா பாதகத்தில் இதுவும் ஒன்று...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 2:12 pm

அருண் wrote:மிக அருமையான கட்டுரை அக்கா! மகிழ்ச்சி
இருக்கப்பட்டவங்க எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
நன்றி தம்பி,.,,//எல்லாரும் பேரும் புகழுக்காவே
இப்படி செய்கிறார்கள் என்ன செய்வது// முடிந்தவரை நாமாவது நம் இல்லத்தில் பகட்டுக்காக இல்லாது உறவிற்காக மட்டும் விருந்துவழங்கலாமே..மாற்றத்தை நம்மில் இருந்து துவங்குவோம்..


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 2:18 pm

மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...


விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  224747944

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Aவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Emptyவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Oct 13, 2012 2:25 pm

ரா.ரா3275 wrote:மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி தோழமையே..புன்னகை உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து எம்மோடு இறுதிவரை பயணிக்கட்டும்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by ரா.ரா3275 Sat Oct 13, 2012 2:35 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
ரா.ரா3275 wrote:மிக அவசியமான-ஆலோசிக்கத் தக்க ஒரு கட்டுரை...
எழுத்தில் உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து வருவது இயல்பாக இருக்கிறது...
நன்று காயத்ரி...
மிக்க மகிழ்ச்சி தோழமையே..புன்னகை உண்மை-நேர்மை இரண்டும் இயைந்து எம்மோடு இறுதிவரை பயணிக்கட்டும்..புன்னகை

அப்படியே ஆகட்டும்...வாழ்த்துகள்...


விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  224747944

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Aவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Emptyவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Rவிருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விருந்தெனும் ஆடம்பரம்...!!!  ‎  Empty Re: விருந்தெனும் ஆடம்பரம்...!!! ‎

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum