ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

+3
ஹர்ஷித்
யினியவன்
பூவன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by பூவன் Tue Sep 25, 2012 10:35 pm



பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகு


Last edited by pooven on Thu Oct 04, 2012 9:03 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Thu Oct 04, 2012 2:33 am

பூவெனிடம் இருந்து கட்டுரையா?

பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by பூவன் Thu Oct 04, 2012 9:45 am

யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?

பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை

அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......

அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by ஹர்ஷித் Thu Oct 04, 2012 9:53 am

pooven wrote:
யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?
பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை
அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......
அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????
இது பூசணிக்காக இயற்றிய கவி போல இல்லையே இனியவன் அண்ணா?
கொஞ்சம் பூவன் அண்ணாவை கவனியுங்க..., சிரி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by பூவன் Thu Oct 04, 2012 9:57 am

ஜேன் செல்வகுமார் wrote:
pooven wrote:
யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?
பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை
அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......
அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????
இது பூசணிக்காக இயற்றிய கவி போல இல்லையே இனியவன் அண்ணா?
கொஞ்சம் பூவன் அண்ணாவை கவனியுங்க..., சிரி

இன்று இனிவரிடம் இருந்து தப்பித்து விட்டேன் ....
நான் அண்ணன் இல்லை நீங்கள் தான் அண்ணன் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by ஹர்ஷித் Thu Oct 04, 2012 10:09 am

அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by பூவன் Thu Oct 04, 2012 10:12 am

ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by ஹர்ஷித் Thu Oct 04, 2012 10:21 am

pooven wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...
பின்னுறீங்க போங்க....,எப்படி இப்படி? சூப்பருங்க
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by பூவன் Thu Oct 04, 2012 10:29 am

ஜேன் செல்வகுமார் wrote:
pooven wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...
பின்னுறீங்க போங்க....,எப்படி இப்படி? சூப்பருங்க

சடை பின்னும் பெண்ணே
என் காதலையும் கொஞ்சம் எண்ணு ....
இல்லேன்னா போவேன் மண்ணு ..

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by யினியவன் Thu Oct 04, 2012 1:26 pm

விழி வீழ்ச்சு இருப்பின் போவேன் விண்ணுக்கு
விழி வீழ்ச்சு இல்லையெனில் போவேன் மண்ணுக்கு

அப்படியா பூவென்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Empty Re: பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum