ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

4 posters

Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by சிவா Sat Sep 08, 2012 5:56 pm

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Rumar02

மனித வாழ்க்கையை இன்று பயம் கவ்வி இருக்கிறது. அதனால் எப்போதும், எதுவும் நடக்கலாம் என்ற அச்ச உணர்வு மேலோங்கி நிற்கிறது. மக்கள் எல்லாவற்றையும் தற்போது பயம் கலந்த பீதியுடன் பார்ப்பதால், வதந்திகள் ஏராளமாக உருவாகின்றன. எளிதாக பரவுகின்றன.

அசாம் மாநில மக்களுக்கு எதிராக கிளம்பிய வதந்தியால், அவர்கள் பீதி அடைந்து எல்லா மாநிலங்களில் இருந்தும் அணிஅணியாக கிளம்பினார்கள். அவர்கள் ஒட்டுமொத்தமாக சொந்த மாநிலத்தை நோக்கி படையெடுக்க இந்தியாவே அதிர்ந்தது. அடுத்து மருதாணி பூசியதில் வதந்தியையும் கலந்து பூசி, தமிழகத்தை சில மணி நேரம் பீதியில் தடுமாறவைத்தார்கள். பிறந்த குழந்தை ஒன்று பேசி, ஆரூடம் சொன்னதாக அடுத்த புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.

இவைகள் மட்டுமல்ல! இப்போது வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி, ஊருக்கு ஊர் வதந்திகள் அவ்வப்போது பற்றவைக்கப்படுகின்றன. பள்ளிக்கூடத்திற்கு போன் போட்டு, `குண்டு வைச்சிருக்கோம்' என்கிறார்கள். சில பிரபலங்களை குறிவைத்து, `அவர் இறந்து போய்விட்டாராமே' என்ற வதந்தியை கிளப்புகிறார்கள். பிரச்சினைக்குரிய காதலிக்கு போன் போட்டு, `அந்த மாதிரியான உன் படம் நெட்டில் வந்திருக்கிறது பார்த்தாயா?' என்கிறார்கள். இவற்றை பரப்ப, நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்துவதால் அவைகள் ஒரு சில நிமிடங்களிலே உலகம் முழுக்க வதந்`தீ'யை பற்றவைத்துவிடுகிறது.

- வதந்தி உருவாக என்ன காரணம்? ஏன் அது பரப்பப்படுகிறது?

- வதந்திகளால் உருவாகும் விளைவுகள் என்ன?

- வதந்தியால் நீங்களோ, உங்கள் குடும்பத்தினரோ பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? என்பது போன்ற ஏராளமான கேள்விகளுக்கு விளக்கம் தருகிறார், மனோதத்துவ நிபுணர் முனைவர் பி.என்.பிரபாகரன். இவர் மனோதத்துவம் பற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பி.எச்டி. பட்டம் பெற்றவர். அவர் சொல்கிறார்..

"மனிதன் கருவாகும் நாளில் இருந்து- பிறந்து- வளர்ந்து- கடந்து போன நொடிவரை உள்ள நிகழ்வுகள் அவனது மூளையில் பதிவாகின்றன. அந்த மூளையைத்தான் மனது என்று கூறுகிறோம். பயம், பீதி, வதந்தி போன்றவை எல்லாம் இங்குதான் உருவாகிறது.

வதந்தியை ஒரு பொருட்டாக நினைக்காமல் எதிர்த்து நின்று மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் போராடுகிறவர்களுக்கு பயம் ஏற்படாது. `எந்த முயற்சியும் இனி எடுபடாது. வருவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்' என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறவர்களையும் பயம் பாதிக்காது. இந்த இரு நிலைக்கும் இடைப்பட்டவர்களுக்குதான் பயம் அதிகம் ஏற்படும். இவர்கள்தான் பீதி, வதந்தியால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

உண்மையில் அளவோடு பயம் இருப்பது நல்லது. அளவான பயம், நாம் தேவையில்லாத விஷயங்களில் போய் மாட்டிக்கொள்வதைத் தடுக்கும். அதனால் பயம் முன்னெச்சரிக்கை உணர்வை உருவாக்கி நல்லதும் செய்கிறது.

மனிதனை சமூக விலங்கு என்பார்கள். அதனால், தான் எடுக்கும் முடிவு அறிவற்றது என்று அவனுக்கே புரிந்தாலும்கூட, இந்த சமூகத்தின் பக்கமாக சாய்ந்து நிற்கவே விரும்புவான். அதுதான் தனக்கு பாதுகாப்பு என்றும் நம்புவான். இதுவே வதந்தியை பரப்புவதற்கும், வதந்தியை நம்புவதற்கும் உரிய காரணமாகும். தன்னைச் சுற்றி இருக்கும் பத்துபேர் வதந்தியால் பயப்படும்போது, தானும் பயப்படுவான். தன்னைச் சுற்றி இருக்கும் பத்து பேர் ரெயிலைப் பிடிக்க ஓடினால் அவனும் ஓடுவான். ரெயிலில் லேசாக புகை தென்படும்போது, தப்பிப்பதாக நினைத்துக்கொண்டு பத்து பேர் ஓடும் ரெயிலில் இருந்து குதித்தால் இவனும் குதித்துவிடுவான்.

ஆதி மனிதன் விலங்குகளோடு வாழ்ந்து, விலங்குகளோடு போராடி, தன்னை பாதுகாத்துக்கொண்டே நாகரீகத்தை நோக்கி வந்தவன். அதனால் `தம்மை எப்படியாவது பாதுகாத்துக்கொள்ளவேண்டும்' என்ற எண்ணம் மனிதர்களின் மரபணுவிலே பதிவாகி இருக்கிறது. இயல்பான நிலையில் மனிதன் இருக்கும்போது, அவன் தன் பாதுகாப்பு பற்றி நின்று நிதானித்து முடிவு எடுப்பான். ஆபத்தான வதந்திகளுக்கு அவன் ஆட்படும்போது அவனுக்குள் பதட்டம், பீதி உருவாகும். அப்போது அவனை சட்டென்று ஆழ்மனது இயக்கத் தொடங்கிவிடும். யோசித்து முடிவெடுக்கும் இயக்கத்துக்கு ஆழ் மனது தடைபோட்டுவிட்டு, அவனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, `எல்லோரும் ஓடுகிறார்கள். நீயும் ஓடு' என்று தூண்டும். இப்படி தூண்டப்படுவதால்தான் ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ரெயிலைப் பிடிக்க ஓடுகிறார்கள். வதந்திகள், பலகீன மான மனதுடையவர்களை அப்படியே நம்பவைத்துவிடும்.

வதந்தியை மனிதன் நம்பி பீதி அடைந்துவிட்டால், அச்சம் தோன்றும். அச்ச சூழலில் இருந்து அவன் தப்பிக்க அதிக எனர்ஜி தேவைப்படும். அதற்காக இதயம் அதிகமாக துடித்து தயார்படுத்தும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஒருவர் வதந்தியை நம்பி உச்சகட்ட பீதி அடையும்போது அவர் கண் விழி விரிந்து பெரிதாகும். கை, கால் உதறும். எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருப்பார்.

இப்படி ஒருவர் பீதி அடையும்போது, `கிளப்பப்பட்டிருப்பது வெறும் வதந்திதான். நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்' என்பதை அருகில் இருப்பவர்கள், அவர் உணரும்படி செய்யவேண்டும். பீதி அடைந்தவர் மூச்சை மெதுவாக உள் இழுத்து வெளியே விடவேண்டும். அவர் தனக்குள்ளே, `நான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆபத்தும் இல்லை' என்று பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அந்த பீதி உண்மையானதாக இருந்தால் அந்த சூழலில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்ளவேண்டும்.

எல்லா வதந்திகளையும் ஒருவர் நம்பி, காரணமற்ற பீதிக்கு உள்ளாகிவிட்டால் அது மனநோயின் அறிகுறியாக மாறிவிடும். அப்போது அவர், `தன்னை யாரோ ஒருவர் துரத்திக்கொண்டே இருக்கிறார். எல்லோரும் தன்னை உற்றுப்பார்க்கிறார்கள். போலீஸ் என்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்லவே தனக்கு அச்சமாக இருக்கிறது' என்றெல்லாம் பேசத் தொடங்கி விடுவார். அப்போது அவரிடம் யாராவது, `நீ மனநிலை சரியில்லாத ஆள்' என்று கூறிவிட்டால், அவர் அப்படியே ஆகிவிடவும் செய்வார். அதனால் வதந்திகளை நம்பி, பீதி அடையாத அளவிற்கு மனதை ஒவ்வொருவரும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வதந்திகளை எல்லோரும் உடனே நம்பிவிடமாட்டார்கள். பாரம்பரிய ரீதியாக மனோபலம் கொண்டவர்களும், அனுபவங்கள் மூலம் தைரியத்தையும், மனப்பக்குவத்தையும் பெற்றவர்களும் வதந்திகளை எளிதாக நம்பமாட்டார்கள். ஒரு ஆண் வதந்தியை நம்பிவிட்டால் உடனே அவர் மட்டும் அதிலிருந்து தப்பிக்கும் வழியை பார்ப்பார். ஆனால் ஒரு பெண் தன் குடும்பமே தப்பவேண்டும் என்ற நிலையில் சிந்திப்பார்.

இப்போது அசாம் மக்கள் திடீர் வதந்தியால் சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட்டார்கள். தமிழகத்தில் உள்ள பலர் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் இதுபோன்ற வதந்திகளால் பாதிப்பு அடையாமல் இருக்க, மனதை பலப்படுத்தும் பயிற்சிகளை மனோதத்துவ நிபுணர்களிடம் பெறவேண்டும்.

இதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. சிறுவயதில் இருந்தே குழந்தைகளை தைரியமானவர்களாக வளர்க்கவேண்டும். இருட்டு, பேய், பிசாசு என்றெல்லாம் அவர்களை பயப்படுத்தக்கூடாது. தனியாக செல்லவும், தனியாக படுக்கவும் தயார்படுத்தவேண்டும். பத்துபேர் ஒருவிஷயத்தை சரி என்று சொன்னாலும், அந்த விஷயத்தை தன் அறிவுக்கு உள்படுத்தி ஆராய்ந்து பார்க்கும் பக்குவத்தை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். வதந்தியை பரப்புவது மூலம் தன் மனதை சந்தோஷப்படுத்திக்கொள்ளும் மனஊனம் கொண்டவர்கள் சிலர் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது முரண்பாடான மகிழ்ச்சிக்காகவும், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் வதந்தியை கிளப்பிவிட்டுக்கொண்டே இருப்பார்கள். அதை அப்படியே நம்பிவிடக்கூடாது என்பதை குழந்தைகளுக்கு விளக்கவேண்டும்.

வதந்திகளை பரப்புவது எதிர்காலத்தில் அன்றாட விஷயங்களாகிவிடும். அதை எதிர்கொள்ள மனோதைரியம் கொண்ட சமூகத்தை நாம் உருவாக்கவேண்டும். வதந்திகளை நம்பலாமா? கூடாதா? வதந்திகளை எப்படி ஆராயவேண்டும்? வதந்தி, உண்மையாக இருந்தால் உடனடியாக எப்படி செயல்பட்டு அதில் இருந்து தப்பவேண்டும் என்பன போன்ற விஷயங்களை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவ- மாணவிகளுக்கு பாடமாக கற்றுத்தரவேண்டும். இளைய தலைமுறையை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலப்படுத்தவேண்டும்''- என்கிறார்.

தினத்தந்தி


அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by சிவா Sat Sep 08, 2012 5:57 pm

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Rumar01


அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by Guest Sat Sep 08, 2012 6:28 pm

சிரி சிவா மாமா அன்னைக்கு தேங்காய நொறுக்கி தள்ளிட்டாங்க தமிழக மக்கள் ...உங்களால எல்லாம் நூறு பெரியார் வந்தாலும் திருத்த முடியாது .. ஒன்னும் புரியல
avatar
Guest
Guest


Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by அசுரன் Sat Sep 08, 2012 11:24 pm

மிக மிக அருமையான கட்டுரை.. மகிழ்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by அருண் Sun Sep 09, 2012 1:49 pm

விழிப்புணர்வு கட்டுரைக்கு நன்றி அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by Aathira Sun Sep 09, 2012 2:24 pm

மிகவும் பயனுள்ள கட்டுரைக்கு நன்றி சிவா


அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Aஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Aஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Tஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Hஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Iஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Rஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Aஅடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி Empty Re: அடிக்கடி பரவுகிறது வதந்`தீ' - அச்சம் இன்றி வாழ்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum