ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

+5
கேசவன்
தர்மா
Rangarajan Sundaravadivel
சதாசிவம்
சாமி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by சாமி Thu Aug 16, 2012 5:09 pm

சிதம்பரம், மார்ச் - 3 - 2008

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பழமையும் பெருமையும் மிகுந்த சைவத்திருத்தலமான சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் நிர்வாகத்தில் உள்ளது.

சிதம்பரம் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் குறிப்பிட்ட பூஜை நேரத்தில் தேவாரப் பாடல்களை தமிழில் பாடலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஒரு ஆணை பிறப்பித்து இருந்தார்.

வழக்கு
அரசின் உத்தரவை எதிர்த்து கோவில் தீட்சிதர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் கோவில் சிற்றம்பல மேடையில் நின்று பாட அனுமதிக்கக்கூடாது என்றும் கீழே இறங்கி நின்று பாட உத்தரவிடவேண்டும் என்றும் கோரியிருந்தனர். மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இந்த விஷயத்தில் அரசு விசாரணை செய்து முடிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி தமிழக அரசு விசாரித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவை உறுதிசெய்தது. இந்த உத்தரவில் அதிக சத்தம் இல்லாமல் தேவாரம் திருமுறைகளை தமிழில் பாடலாம் என்று அறிவித்தது.

யானையில் வந்தார்
இதைத்தொடர்ந்து சிதம்பரம் கோவிலில் தேவார பாடல்களை தமிழில் பாடுவதற்காக போராடி வந்த நால்வர் மடத்தை சேர்ந்த ஓதுவார் ஆறுமுகசாமி நேற்று தேவாரம், திருவாசகம் பாடப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அறிவித்தபடி ஓதுவார் ஆறுமுகசாமி, சிதம்பர நடராஜர் கோவிலுக்கு நேற்று காலை வந்தார். அவரது ஆதரவாளர்கள் ஓதுவார் ஆறுமுகசாமியை யானை மீது அமரச்செய்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கோவில் தெற்கு சன்னதி முன் கூடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

தீட்சிதர்கள் எதிர்ப்பு
ஓதுவார் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் கோவிலுக்கு வந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார் அவர்களை தடுத்து 25 பேர் மட்டுமே கோவிலுக்கு உள்ளே செல்லவேண்டும் அனைவரையும் செல்ல அனுமதிக்கமுடியாது என்று தடுத்தனர். இதனால் ஓதுவார் ஆறுமுகசாமி "நான் பாடுவதை அனைவரும் பார்க்கவேண்டும்'' என்று கூறி போலீசாருடன் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் போலீசார் கூறியதுபோல் 25 பேர் மட்டும் ஆறுமுகசாமியை கீழசன்னதி வழியாக சேரில் வைத்து தூக்கிச்சென்றனர். அப்போது கோவில் தீட்சிதர்கள் சார்பில் அங்கு நின்றிருந்த வக்கீல்கள் இந்து சமய அறநிலையத்துறை வழங்கிய அரசு ஆணையை காண்பிக்குமாறு கேட்டனர். உத்தரவு நகலை வாங்கிப்பார்த்த வக்கீல்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

பின்னர் அனுமதிக்கப்பட்ட 5 பேர் மட்டும் மேடைக்கு ஏறிச்சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த தீட்சிதர்கள் தடுத்து வாக்குவாதம் செய்தனர். அங்கு நின்ற போலீசாரிடம் தொப்பி அணிந்து மேடைக்கு வரக்கூடாது என்று தீட்சிதர்கள் தடுத்தனர். உடனே போலீசார் தொப்பியையும், மேல் சட்டையையும் கழட்டி விட்டு சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர்
உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் மீது தண்ணீரை ஊற்றி தள்ளிவிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் அவரை கீழே விழாமல் பிடித்தனர். தொடர்ந்து வாக்குவாதம் நடந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் அங்குசென்றார். அவரும் தள்ளிவிடப்பட்டார். மற்ற போலீசார் அவரை தாங்கிப்பிடித்தனர்.

இதனால் அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கு நடந்த தள்ளுமுள்ளில் ஆறுமுகசாமியின் மூக்குகண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. நிலைமையை சமாளிக்க போலீசார் அமளியில் ஈடுபட்ட 25 தீட்சிதர்களையும் குண்டுகட்டாக அப்புறப்படுத்தினர். தகவல் அறிந்த டி.ஐ.ஜி. வன்னியபெருமாளும் கோவிலுக்கு விரைந்து வந்தார். பலத்த போராட்டத்திற்கு பிறகு போலீஸ் பாதுகாப்புடன் மேடை ஏறிய ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் நடராஜர் சன்னதியில் நின்று தமிழில் தேவாரம் பாடினார். அவர் பாடும்போது தீட்சிதர்கள் நடராஜர் சிலையை மறைத்தபடி நின்றனர்.

10 பேர் மீது வழக்கு
சம்பவம் பற்றி போலீஸ் டி.ஐ.ஜி.வன்னியபெருமாள் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுமுகசாமி மற்றும் அனுமதிக்கப்பட்ட 5 பேரை போலீசார் சிற்றம்பல மேடைக்கு அழைத்து சென்றனர். ஓதுவார் ஆறுமுகசாமி 15 நிமிடங்கள் தேவாரம் பாடினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலபிரயோகம் ஏற்பட்டது. இதில் காவல் துறையினர் தங்கள் பணியை சரியாக மேற்கொண்டனர்.

அரசாணையை நிறைவேற்ற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் அடையாளம் தெரிந்த 10 தீட்சிதர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை போலீசார் சிறப்பாக செய்தனர். தமிழக அரசின் ஆணை காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம், கடமை. அதை நாங்கள் சிறப்பாக செய்து இருக்கிறோம் என்று வன்னியபெருமாள் கூறினார்.

அடித்து உதைத்தனர்
சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாடிவிட்டு வெளியே வந்த ஓதுவார் ஆறுமுகசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"இந்து சமயஅறநிலையத்துறை செயலாளர் உத்தரவின் பேரில் தமிழில் தேவாரம் பாடுவதற்காக நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றேன். ஆனால் அங்கு சிவபெருமானையும் பார்க்கமுடியவில்லை, தேவாரத்தையும் முழுமையாக பாட விடவில்லை.

நான் கோவிலுக்கு சென்றபோது அங்குள்ள தீட்சிதர்கள் என்னை அடித்து உதைத்தனர். என் மூக்கு கண்ணாடியையும் உடைத்தனர். முதல்-அமைச்சரின் உத்தரவு சரியாக செயல்படுத்தப்படவில்லை. நான் தமிழில் தேவாரம், திருவாசகத்தை முழுமையாக பாடும்வரை தொடர்ந்து போராடுவேன்''.இவ்வாறு ஓதுவார் ஆறுமுகசாமி கூறினார்.

கல்வீச்சு-போலீஸ் தடியடி
மாலையிலும் ஓதுவார் ஆறுமுகசாமி 100-க்கும் மேற்பட்டோருடன் கோவிலுக்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் உதவி போலீஸ் சூப்பிரண்டு செந்தில்வேலன் தலைமையில் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்து போலீசாரை நோக்கி கற்கள் பறந்து வந்தன. இதில் ஆனந்த், ஆறுமுகம் என்ற 2 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். இதனால் நிலைமையை சமாளிக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர் வக்கீல்கள் ராஜ×, திருமார்பன் மற்றும் ஒரு பெண் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பதட்டமான சூழ்நிலை நிலவியதால் ஓதுவார் ஆறுமுகசாமியை போலீசார் பாதுகாப்புடன் தனியாக அழைத்து சென்றுவிட்டனர்.
(நன்றி - முத்தமிழ் இணையதளம்)


Last edited by சாமி on Fri Aug 17, 2012 9:55 am; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by Guest Thu Aug 16, 2012 5:15 pm

அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்
avatar
Guest
Guest


Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by சதாசிவம் Thu Aug 16, 2012 6:11 pm

புரட்சி wrote:அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்

சியர்ஸ் சியர்ஸ்


சதாசிவம்
தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by சதாசிவம் Thu Aug 16, 2012 6:16 pm

தேவாரத்தின் மீதும், திருவாசகத்தின் மீதும் மக்களுக்கும் பற்று வர வேண்டும். இது ஓதுவார்கள் பணி மட்டுமல்ல. தமிழ்முறையில் திருமணம், ஆயுள் வேள்வி போன்ற நம் வீட்டு நிகழ்வுகளில் இப்பதிகங்களை ஓதி, போற்றிப் புகழ வேண்டும்.



சதாசிவம்
தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by Guest Thu Aug 16, 2012 6:18 pm

சதாசிவம் wrote:
புரட்சி wrote:அடித்து உதைத்தனர்... இதை நாம திருப்பி செய்யணும்

சியர்ஸ் சியர்ஸ்

ஓகே!!!!
avatar
Guest
Guest


Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by Rangarajan Sundaravadivel Thu Aug 16, 2012 7:00 pm

தமிழ்நாட்டிலேயே தமிழ்மொழி நீச மொழி என்று பழிக்கப்படும் நிலை என்று தான் மாறும்?



கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்


பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by தர்மா Thu Aug 16, 2012 7:47 pm

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திர்க்கும் உருகார்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by கேசவன் Thu Aug 16, 2012 8:27 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! 1357389தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! 59010615தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Images3ijfதேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by ஆரூரன் Sat Aug 18, 2012 9:18 am

கட்டியது தமிழன்!
உழைப்பு தமிழனுடையது!
பணம் தமிழனுடையது!
இடம் தமிழனுடையது!

ஆனால் பல்லி போல் வீடு கட்டி முடிந்தவுடன் குடியேற வேண்டியது!
பின்னர் எல்லாம் அவர்கள் ஆதிக்கத்தில் போய்விடுமாம்!

என்ன கொடுமை அய்யா இது !!!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by venugobal Sat Aug 18, 2012 9:47 am


தேவாரம் திருவாசகத்தைக் கோயிலில் பாடுவது இருக்கட்டும்! எத்தனை தமிழிரின் நாவில் இவை ஒலிக்கின்றன! வீட்டில் ஒலிக்கின்றனவா? ஆங்கிலத்தில் அல்லவா தமிழன் திருவாசகத்தையும் திருக்குறளையும் படிக்கின்றான்!!!
நாட்டில் எத்தனை கோடி தமிழர் இருந்து என்ன பயன்? மொழிப்பற்றோ இனப்பற்றோ இல்லையே!!!
சூடு சுரணையில்லை! தமிழனுக்குச் சொந்தப் புத்தியில்லை!

மன்னித்தருள்க! உணர்வில் வெளிப்பட்ட வார்த்தையெனினும் உண்மை இல்லாமலில்லை!!
venugobal
venugobal
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு! Empty Re: தேவாரம், திருவாசகம் கோயிலில் பாடுவதற்கு எதிர்ப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum