ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்..!

Go down

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்..! Empty புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்..!

Post by Guest Tue Aug 14, 2012 12:45 pm

புதிய பைக்கை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள்..! 06-05-bajaj-auto

பைக் ஆடம்பர லிஸ்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. இன்று ஒவ்வொரு இந்தியர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாசிய பொருளாகிவிட்டது. எனவே, பைக் வாங்கும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் பைக் வாங்கிய பின் அவஸ்தை பட வேண்டியிருக்காது.

பட்ஜெட்:

புதிய பைக் வாங்குபவர்களும், பழைய பைக்கை மாற்ற நினைப்பவர்களும் முதலில் உங்களது பட்ஜெட்டை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு சில ஆயிரங்கள் கூடுதலானால் பரவாயில்லை. ஆனால், பட்ஜெட்டுக்கு மீறி வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

கடன் வாங்க வேண்டும் என்றால் குறைந்தது 30 சதவீத முன்பணத்தை செலுத்தவேண்டும். 18 மாதங்களுக்கு மிகாமல் மாதத் தவணையை போட்டுக் கொள்வது சிறந்தது. அதற்கு மேல் செல்லும்போது கடன் தொகையில் பாதி அளவுக்கு வட்டி வந்துவிடும். குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை அந்த பைக் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதால், கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.

சீட்டிங் பொஷிசன்:

முதலில் மார்க்கெட்டில் உங்களது பட்ஜெட்டுக்கு தகுந்த பைக் மாடல்களை வரிசைப்படுத்துங்கள். அதில், உங்களது உயரம் மற்றும் எடைக்கு தகுந்த பைக்குகளை தேர்வு செய்யுங்கள். சில சமயம் குறைவான உயரம் கொண்டவர்கள் அதிக உயரம் கொண்ட பைக்குகளை வாங்கிக் கொண்டு ஓட்டும்போது அவஸ்தைபடுவர். தவிர, சீட்டிங் பொஷிசனும் அவர்களுக்கு சரியாக இருக்காது.

அதுபோன்று வாங்க நினைத்தால் அந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்துவிட்டு திருப்திபட்டால் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். 45 வயதை கடந்தவர்கள் நிச்சயம் சரியான சீட்டிங் பொஷிசன் கொண்ட பைக்குகளை பார்த்து வாங்குவது நல்லது.

மேலும், மனைவியையும் அலுவலகத்திற்கு தினசரி அழைத்துச் செல்பவர்கள் ஸ்போர்ட்ஸ் பைக் மற்றும் சில பைக் மாடல்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், அதில் பின் இருக்கைகள் சிறியதாக இருக்கும். சில பைக்குகளில் சரிவாக இருக்கும்.

மேலும், பின்னால் ஒருவர் உட்கார்ந்துவிட்டால் ஓட்டுபவருக்கு போதிய இடமிருக்காது. இதனால், சரியான பேலன்சில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாது. மேலும், குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டியிருப்பவர்கள் எரிபொருள் டேங்க் பெரிதாக உள்ள பைக்குகளை வாங்க வேண்டாம்.

டீலர் மற்றும் சர்வீஸ் வசதி:

சிறந்த சேவை மற்றும் சர்வீஸ் வசதியை வழங்கும் டீலர்களை தேர்வு செய்து பைக் வாங்குங்கள். இதற்காக, ஒரு சிறு விசாரணை போடுவதும் நல்லது. மேலும், ஒரே நகரத்தில் உள்ள வேறு வேறு டீலர்களில் விலை வித்தியாசம் இருக்கும். சில டீலர்களில் 5,000 வரை கூட கூடதல் விலை வைத்திருப்பர். இரண்டு மூன்று ஷோரூம்களுக்கு சென்று ஆக்சஸெரீஸ் உள்பட ஆன்ரோடு விலையை கேட்டு தெரிந்துகொண்டு ஒப்பிட்டு பார்த்து வாங்குவது உசிதம்.

வீட்டிற்கு அருகிலோ அல்லது அலுவலகத்திற்கு அருகிலோ, சர்வீஸ் சென்டர் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்வது அவசியம். மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் மாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நடுவழியில் ஏதெனும் பழுது ஏற்பட்டால் கூட எந்தவொரு மெக்கானிக் கடைகளிலும் எளிதாக பழுது நீக்கிக் கொள்ளலாம்.

மைலேஜ் நெக்ஸ்ட்:

பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், அதிக மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை தேர்வு செய்வது நல்லதுதான். இருந்தாலும் மைலேஜை மட்டும் அடிப்படையாக வைத்து தேர்வு செய்வது புத்திசாலித்தனம் அன்று.

மைலேஜ் குறைவாக கொடுத்தாலும் திரும்ப விற்பனை செய்யும்போது சில பைக்குகள் நல்ல விலைக்கு போகும். மேலும், தரமான கட்டுமானம் கொண்டதாகவும் இருக்கும். எனவே, மைலேஜை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்.

இதுதவிர, பைக்கை தேர்வு செய்தவுடன் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சிறு விசாரணை போடுங்கள். அவர்களது ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு புதிய பைக்கை தேர்வு செய்யுங்கள். பைக் வாங்கிய பின்னர் புலம்ப வேண்டியிருக்காது அல்லவா?

-

ஒன் இந்தியா
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum