ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

+2
ராஜா
இரா.பகவதி
6 posters

Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 9:59 am

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் 558262_193382180791771_698460250_n

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Tamil-Daily-News-Paper_28299677372

நியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர்களின் கோயிலான குருத்துவாராவில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர். சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தீவிர வாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். அமெரிக்காவில் விஸ்கான்சின் அருகே உள்ள ஓக் கிரிக் என்ற இடத்தில் சீக்கியர்களின் கோயிலான குருத்துவாரா உள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன்புதான் இது கட்டப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 400க்கும் மேற்பட்டவர்கள் கோயிலில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர். இந்தியாவில் இருந்து வந்த சீக்கிய மதத் தலைவர்கள் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தனர்.

அப்போது, குருத்துவாராவுக்குள் புகுந்த தீவிர வாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களில், ஒருவன் கையில் 2 துப்பாக்கிகள் இருந்தன. திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் நிலைக்குலைந்த மக்கள், பாதுகாப்பான இடங்களை தேடி அலறியபடி ஓடினர். ஆனால், அதற்குள் 20க்கும் மேற்பட்டோர் மீது குண்டுகள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர். போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் குருத்துவாராவை சுற்றி வளைத்தனர். உள்ளே இருந்த தீவிரவாதிகள் போலீசார் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அப்பாவி மக்களில் 7 பேர் பலியானதாக கூறப் படுகிறது. மற்றவர்கள் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவன் பருமனாகவும், வழுக்கை தலையுடன், டீ சர்ட் அணிந்து இருந்ததாகவும் தப்பியவர்கள் கூறினர். கோயிலுக்குள் 2க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கியுடன் இருப்பதாகவும், அவர்கள் 20 சிறுவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குருத்துவாராவில் புகுந்துள்ள தீவிரவாதிகள் அல்கைதா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை பிடித்து, மக்களை விடுவிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

thinakaran
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by ராஜா Mon Aug 06, 2012 11:46 am

அடடே குருத்துவாராவில் துப்பாக்கி சூடு நடந்துவிட்டதா , மண்ணுமோகன் இப்ப பாருங்க superman மாதிரி செயல்பாடுவாரு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by யினியவன் Mon Aug 06, 2012 11:56 am

அட போங்க ராஜா சும்மா சிரிப்பு காட்டாதீங்க.

அவரு முதுகு அரிச்சாலே சோனியாவ கேட்டு தான் சொரிஞ்சுப்பாறு.

இது நடந்தது அமெரிக்கால - நம்ம ஆளு ஒன்னும் கழட்ட முடியாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by மாணிக்கம் நடேசன் Mon Aug 06, 2012 11:57 am

தேவையில்லாத ஒன்று.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by பிரசன்னா Mon Aug 06, 2012 1:05 pm

ராஜா wrote:அடடே குருத்துவாராவில் துப்பாக்கி சூடு நடந்துவிட்டதா , மண்ணுமோகன் இப்ப பாருங்க superman மாதிரி செயல்பாடுவாரு

ஆமாம் இப்ப மட்டும் அவரு PM மாதிரி வேலை செய்வர் என்று நினைக்கிறன்... இறந்தவர்கள் சீக்கியர்கள் ஆச்சே.... தமிழனா என்ன விட்டு விடுவதற்கு
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by சிவா Thu Aug 09, 2012 12:47 pm



அமெரிக்க குருத்வாராவில் 6 சீக்கியர்களை சுட்டுக்கொன்றவனின் காதலி கைது, துப்பாக்கியும் சிக்கியது

அமெரிக்க குருத்வாராவில் 6 சீக்கியர்களை சுட்டுக்கொன்ற கொலையாளியின் காதலி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து போலீசார் ஒரு துப்பாக்கியை கைப்பற்றினர்.

காதலி

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஓக் கிரீக் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவில் கடந்த 5-ந் தேதி வேடு மிக்கேல் பேஜ் என்ற 40 வயதான முன்னாள் ராணுவ வீரன், புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான். இதில் 6 சீக்கியர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்த நிலையில் பேஜ், மிஸ்ட்டி குக் என்ற நர்சை காதலித்து வந்ததும், இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை போட்டனர்.

துப்பாக்கியுடன் காதலி கைது

ஏற்கனவே ஒரு வழக்கில் குக் சிக்கி, அவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவரது வீட்டில் ஒரு துப்பாக்கி இருந்ததை போலீசார் கண்டு, கைப்பற்றினர். குக்கையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேஜும், குக்கும் காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்திருந்தாலும், சமீபத்தில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டு விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஆத்திரம் கொண்டு பேஜ், குருத்வாராவில் தாக்குதல் நடத்தினானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இனவெறி அமைப்புகளில் தொடர்பு

கைது செய்யப்பட்டுள்ள குக், வெள்ளை இனத்தவர் ஆதரவு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.

பேஜ்-குக் வாழ்ந்து வந்த வீட்டின் அண்டை வீட்டைச்சேர்ந்தவர்கள் அவர்களைப்பற்றி கூறுகையில், "பேஜ்-குக் ஒரு வினோதமான தம்பதியராக தெரிந்தார்கள். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. காதைப்பிளக்கிற அளவுக்கு ராக் இசை கேட்பார்கள். அவர்கள் வீட்டுக்குள்ளேதான் இருப்பார்கள். வாகனம் எதுவும் வைத்திருக்கவில்லை'' என்றனர்.

கொலையாளி குடும்பத்தினர் வேதனை

இதற்கிடையே குருத்வாரா சம்பவத்துக்காக கொலையாளி பேஜினுடைய குடும்பத்தினர் வேதனையும், வருத்தமும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேஜின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வேடு பேஜின் குடும்பத்தினர் என்ற முறையில் ஓக் கிரீக் குருத்வாராவில் நடந்துள்ள சம்பவம் எங்களை நொறுக்கிப்போட்டுள்ளது. அந்த நாளில் நிகழ்ந்த சம்பவத்தில் ஆறுதல் கூறி தேற்றக்கூட வார்த்தைகள் இல்லை. இதில் பலியானவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

அந்த நாளில் உயிரிழந்தோரின் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் நாங்கள் ஒத்துழைப்போம். அதே நேரத்தில் எங்கள் அந்தரங்கம் காக்கப்படவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by சிவா Thu Aug 09, 2012 12:48 pm



குருத்வாரா தாக்குதலில் கொல்லப்பட்ட சீக்கியர்களின் குடும்பங்களுக்கு நிருபமா ஆறுதல்


அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் ஓக் கிரீக் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவில் கடந்த 5-ந் தேதி பேஜ் என்கிற 40 வயது முன்னாள் ராணுவ வீரன் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 6 சீக்கியர்கள் உயிரிழந்த சம்பவம், அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீக்கியர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமெரிக்க தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் நிருபமா ராவ், நேற்று விஸ்கான்சின் மாகாணத்துக்கு சென்றார். சத்வந்த்சிங் கலேகா உள்ளிட்ட பலியான சீக்கியர்களின் குடும்பங்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு எப்.பி.ஐ. அதிகாரிகள், உள்ளூர் போலீசார் நிருபமா ராவை சந்தித்து வழக்கு விசாரணை நிலவரத்தை விளக்கினர். ஓக் கிரீக் மேயர் ஸ்டீவ் ஸ்காபிடியையும் நிருபமா சந்தித்தார். இதற்கிடையே சம்பவம் நடந்த குருத்வாராவில் அனைத்து தரப்பினரும் அமைதி பேரணி நடத்தி மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடத்தி வருகின்றனர்.



அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல் Empty Re: அமெரிக்காவில் பயங்கரம் குருத்துவாராவில் தீவிரவாதிகள் தாக்குதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum