ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் யார்?

+4
சிவா
தர்மா
கேசவன்
சாமி
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முருகன் யார்?   Empty முருகன் யார்?

Post by சாமி Fri Aug 03, 2012 5:55 pm

1 ) தமிழ்க் கந்த புராணத்தில் முருகன், சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாகத் தோன்றுகிறான். அவை எந்தத் தாயின் கருப்பையிலும் கிடந்து வளர்ந்து பிறந்ததாகக் கூறப்படவில்லை. ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றி (விந்து நீரில் அல்ல) குழந்தையாய் உருவம் காட்டினான்.

முருகனின் தோற்றத்தை (அவதாரமல்ல) கடவுள் நிலைக்குச் சற்றும் இழுக்கு வராமல் காட்டிகிறது தமிழ்க் கந்த புராணம். பாடல் வருமாறு:

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.


பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு ஓர் மேனியாக உருவம் கொண்டது – கருணையால் என்று தமிழ்க் கந்த புராணம் கூறுவதைக் காண்க. இந்தக் கந்த புராணத்தைக் காஞ்சி குமரகோட்டக் கந்தனே மெய்ப்பு (PROOF) திருத்தினான் என்று ஒரு வரலாறு கூறுவர். எனவே இது கந்தனே ஏற்ற நூல் என்று அறிகிறோம்.
(தொடரும்)


Last edited by சாமி on Mon Aug 06, 2012 12:06 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by கேசவன் Fri Aug 03, 2012 6:52 pm


முருகன் யார்?
என்னை ஆளும் செந்தூர் ஆண்டவன் தான் முருகன்......


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
முருகன் யார்?   1357389முருகன் யார்?   59010615முருகன் யார்?   Images3ijfமுருகன் யார்?   Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by Guest Fri Aug 03, 2012 7:21 pm

கேசவன் wrote:

முருகன் யார்?
என்னை ஆளும் செந்தூர் ஆண்டவன் தான் முருகன்......
:வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by தர்மா Fri Aug 03, 2012 8:09 pm

எம்பெருமான் தமிழ் கடவுள் ஓம் முருகா துணை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by சிவா Fri Aug 03, 2012 8:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


முருகன் யார்?   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by சாமி Fri Aug 03, 2012 10:47 pm

2 ) சிவபெருமானின் மகன் என்பதால் சேயோன் என்று முருகனுக்குப் பெயர். சேய் என்றால் மகவு என்று பொருள்.

சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல்.
ஈசனே அவன் ஆடலால் மதலை ஆயினன் காண்!
“ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்றால்
(சிவபெருமான் கூறுவது) என்பன போன்ற கச்சியப்பரின் கந்தபுராண வாக்குகள் இதனை தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. மேலும் பரம்பொருளான பிரமமே நமக்கெல்லாம் கருணை செய்ய சோதிப் பிழம்பு என்ற நிலையில் இருந்து முருகன் என்ற உருவம் எடுத்தது என்று கூறும் மேற்காட்டில் ‘அருவமும்’ எனத் தொடங்கும் கந்த புராணப் பாட்டும் இதற்கு சான்று பகரும்.

சேயோன் என்ற தமிழ்ச் சொல்லும் முருகனுக்கும் சிவபெருமானுக்கும் பொதுவாகச் சென்று சேரும். சே என்ற ஓரெழுத்தொரு மொழிக்கு சிவப்பு, சிவந்த ஒளி என்று பொருள் என நிகண்டுகள் கூறுகின்றன. சிவபெருமான் பவளம் போல் மேனியை உடையனாக மணிவாசகர் கூறுகிறார்!. ‘பவளம் போல் மேனியில் பால் வெண்ணீரும்’ என்பது அவர் வாக்கு. எனவே சேயோன் என்பது செம்மைப் பண்பைக் குறித்து சிவனையும், சிவனது மகன் அதாவது சேய் என்ற பொருளில் முருகனையும் குறிக்கும். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்தபுராணம் காட்டும் கருத்திற்கு ஏற்ப சேயோன் என்ற சொல் துணை நிற்கிறது என்று கூறலாம்.

சேயோன் என்ற இந்தச் சொல்லையே தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் எடுத்துக் கொள்கிறது.

‘சேயோன் மேய மைவரை உலகமும்’ என்பது தொல்காப்பிய நூற்பா வரியாகும். அதாவது உலகத்தை நான்கு வகை நிலங்களாக வகுத்து அந்தந்த நிலத்திற்குரிய முதல், கரு, உரிப்பொருள்களைத் தமிழ் சான்றோர்கள் எனக்கு முன்னம் இப்படிக் கூறிவைத்தனர் என்று சொல்ல வந்த தொல்காப்பியர் குறிஞ்சி என்பது மலையும் மலையைச் சார்ந்த நிலத்தினைக் குறிக்கும் என்றும் அதற்குத் தலைவன் சேயோன் என்றும் கூறுகிறார்.
(தொடரும்)


Last edited by சாமி on Mon Aug 06, 2012 12:05 pm; edited 1 time in total
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by ஆரூரன் Sat Aug 04, 2012 11:20 am

சாமி wrote: ..... சிவபெருமானே முருகன். தனக்குத்தானே சேய் போல வந்தான். இது ஒரு விளையாடல்....

நல்ல விளக்கம் !
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by சாமி Mon Aug 06, 2012 12:02 pm

3 ) மலைக்குத் தலைவன் முருகன் என்று கூறாமல் சேயோன் என்ற சொல்லைத் தொல்காப்பியர் கொண்டதனால் சிவபெருமானையும் அந்தச் சொல்லில் அடக்கிக் காட்டினார் என்று கொள்க.

‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்’


என்று நிலங்களின் தெய்வங்களைக் கூறியவர் வருணன், இந்திரன் என்கிற சிறு தெய்வங்களையும், மால், முருகன் என்கிற பெருந்தெய்வங்களையும் கூறியவர் தமிழர்களால் பரம்பொருளாக வணங்கப்பட்டவரும், தமிழ்ச்சங்கத்தை நிறுவியவரும் ஆகிய சிவபெருமானைச் சொல்லாமல் விட்டால் அது குன்றக்கூறிய குறைக்கு ஏதுவாகும். எனவே சிவபெருமானையும், முருகனையும் ஒரு சேரக்குறிக்கும் சேயோன் என்ற சொல்லால் சிவபெருமானையும் அங்கே உள்ளடக்கினார் என்பதே கூர்ந்த உணர்வினரால் உணரக் கிடக்கிறது.

சிவபெருமான் இருப்பிடமும் மலை என்றே புராணங்களும் கூறுகின்றன. அவன் இருப்பது வெள்ளிமலை எனப்படும் இமயமலை. அவன் அயனுக்கும், அரிக்கும் காட்சி கொடுத்தது அண்ணாமலை. இன்னும் திரு ஈங்கோய் மலை, காளத்தி மலை, திருக்கழுக்குன்றம் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அவன் மலையையே வில்லாகக் கொண்டவன். இப்படி சிவபெருமானுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பு நன்றாகத் தெரிந்த ஒன்று.

மலையோடு தொடர்புள்ள சிவபெருமானது மகன் எனக் கூறப்படுகிற முருகனுக்கும் மலையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. குன்று தோறாடும் குமரன் என்று முருகனுக்குப் பெயர் உண்டு.

எனவே முருகனையும் சிவபெருமானையும் ஒரு சேரக்குறிக்கும் சொல்லான சேயோன் என்கிற சொல்லைத் தொல்காப்பியர் தேர்ந்தெடுத்தார். இதனால் சிவனே முருகன் என்ற தமிழ்க் கந்த புராணக்கருத்து கச்சியப்பர் கற்பித்ததல்ல என்றும், தொல்காப்பியர்க்கு பலகாலம் முன்னதாகவே தமிழ்ச் சான்றோர் கருத்து அது என்றும், அதைத் தொல்காப்பியரும் தழுவினார்; கச்சியப்பரும் பொன்னே போல் போற்றி வழி மொழிந்தார் என்று உணர்தல் வேண்டும்.

எனவே, இது காறும் கூறியவற்றால் முருகன் யார் என்ற கேள்விக்கு விடை: சோதிப்பரம்பொருளான சிவபெருமான் ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டு கருணை கொண்டு தனக்குத்தானே மகனாக அருவ நிலையில் இருந்து உருவ நிலைக்கு வர அந்த சோதிப்பிழம்பாகிய பரம்பொருளே முருகன்.

(மு.பெ.ச அவர்கள் எழுதிய திருமுருகாற்றுப்படை புத்தகத்தில் இருந்து)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by அசுரன் Mon Aug 06, 2012 12:26 pm

நமது தமிழ்க்கடவுள் முருகன் தான் என்பதை நமது பண்டைய இலக்கியங்கள் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது. அவரே சிவபெருமான் என்னும் சாமி அவர்களின் பதிவுகள் அருமை.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by இரா.பகவதி Mon Aug 06, 2012 2:06 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

முருகன் யார்?   Empty Re: முருகன் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..
» நாஞ்சில் சம்பத் தோடு வெளியேறப் போவது யார், யார்...! ம.தி.மு.க.,வில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum