Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கையை மாற்றிய வங்கிக்கணக்கு
3 posters
Page 1 of 1
வாழ்க்கையை மாற்றிய வங்கிக்கணக்கு
வங்கி...
மூன்று எழுத்துகள் கொண்ட ஓர் ஒற்றைச்சொல்
பணம்...
இதுவும் மூன்று எழுத்துகள் கொண்ட ஓர் ஒற்றைச்சொல்
இரண்டும் ஒன்று சேர்ந்தால் எழுத்துகள் ஆறாகும். எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்க்கையும் ஆறாகப் பெருகும். வளம் வாழ்க்கையை வசந்தமாக்கும்.
வங்கிகள்... நம்பிக்கையின் நாற்றங் கால்கள்.
மனிதர்கள் காற்றை சுவாசிப்பதால் மட்டும் வாழவில்லை. நம்பிக்கையையும் சுவாசிப்பதால் தான் வாழ்கிறார்கள்.
நூறு மைல்கள் ஓடப்போகிறவன் நம்பிக்கையோடு தன் முதல் அடியை எடுத்து வைக்கிறான். நம்பிக்கைகளே மனித சமுதாயத்தை வாழவைக்கின்றன. அந்த நம்பிக்கையில் தான் வங்கியில் பணத்தைச் சேமிக்கிறோம்.
பொருளீட்டல் என்றால் உழைத்துப் பணம் சேர்ப்பது மட்டுமல்ல; சிக்கனமாயிருந்து கையில் உள்ளதைக் கூடுமானவரை செலவழிக்காமல் இருப்பதும் பொருளீட்டலேயாகும். இதைத்தான் அறிஞர் ஜார்ஜ்ஹெர்பட் `சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கையை உயர்த்தும் இரண்டு கருவிகள்' என்பார்.
சேமிப்பது சிலருக்குச் சிரமம் தான். வலிகளைத் தாங்க வேண்டும். சேமிப்பின் வலிகள் வலிகளல்ல. அது மகிழ்ச்சியின் திறவுகோல்.
இதோ வறுமையை விரட்டி மகிழ்ச்சியில் திளைத்த சங்க இலக்கியப் புலவர் ஒருவரின் சரித்திரக்கதை.
புலவர் ஒருவர் வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். தனது குடும்பத்தினருக்கு உணவளிக்க முடியாத நிலையில் இருந்தார். வள்ளல் தன்மைக்குப் புகழ்பெற்ற ஓர் அரசரின் அரண்மனைக்குச் சென்றார். அவரைப்பணிந்து வணங்கி, `ஒரு பாடல் பாடலாமா?' எனக்கேட்டார். அரசரும் சம்மதித்தார்.
பாடல் அரங்கேறியது. பரவசப்பட்ட அரசர் `என்ன பரிசு வேண்டும்?' எனக் கேட்டார்.
புலவர் அரசருக்கு எதிரில் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த ஒரு சதுரங்க பலகையை காட்டி சொன்னார். `மேன்மை தங்கிய அரசே இந்த சதுரங்க பலகையில் முதல் கட்டத்தில் ஒரு அரிசியை மட்டுமே வைத்துவிட்டு பின்னர் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் முந்தைய கட்டத்தில் உள்ளது போல் இரு மடங்கு அரிசிகளை பெருக்கிக்கொண்டே போனால் எனக்குப் பெரிய விருது கிடைத்ததாக எண்ணி மகிழ்வேன்' என்றார்.
வியந்த அரசர், `சரியாகத்தான் சொல்கிறீர்களா, அரிசி மணிகள் மட்டுமே போதுமா? தங்கம் வேண்டாமா?' என்று கேட்டார்.
எளிமையான புலவரும் ஆமோதித்து, `ஆமாம் அரசே அரிசி மணிகள் மட்டுமே போதும்' என்றார்.
அரசரும் அப்படியே ஆகட்டும் என்று கட்டளையிட, அரண்மனை சேவகர்கள் அரிசி மணிகளை சதுரங்கப் பலகையில் வைக்க ஆரம்பித்தனர்.
முதலாம் கட்டத்தில் ஒரு அரிசி, இரண்டாம் கட்டத்தில் 2 அரிசி, மூன்றாம் கட்டத்தில் 4 அரிசி, நான்காம் கட்டத்தில் 8 அரிசி, என வைத்துக்கொண்டு வந்தனர்.
பத்தாவது கட்டத்தில் 512 அரிசி மணிகளை வைக்க வேண்டியிருந்து, இருபதாவது கட்டத்திற்கு வரும்போது 5,24,288 அரிசிகளை வைக்க வேண்டியிருந்தது.
சதுரங்கப்பலகையின் சரிபாதி அதாவது 32-வது கட்டத்திற்கு வந்தபொழுது சுமார் 214 கோடி அரிசி மணிகள் தேவைப்பட்டன. செய்வதறியாது திகைத்த அரசர் அந்தப் புலவருக்கு தன் நாட்டையை கொடுக்க வேண்டி வந்தது. இத்தனையும் ஒரே ஒரு அரிசி மணியில் ஆரம்பித்தது தான்.
`சிறுதுளி பெருவெள்ளம்' பழமொழி இதைத்தான் உணர்த்துகின்றது. நெல்மணியைப் போல் ஒவ்வொருவரும் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து வந்தால் முதுமைப்பருவத்தில் கணிசமான தொகை கிடைக்கும். அப்போது முதுமை சுமையாகத் தெரியாது. சுகமாக இருக்கும்.
வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு இரண்டு மட்டுமே
1) விரும்புவதைப் பெறுவது
2) பிறகு அதை அனுபவிப்பது
வங்கியின் சேமிப்பு இந்த இரண்டையும் தரும்.
இதோ படித்த ஒரு சம்பவம்.
ஒரு திருமணமான தம்பதியரிடம் மணப்பெண்ணின் தாய் ஒரு பரிசுப் பொருளைத் தந்தாள். பிரித்துப் பார்த்தால் அது அவர்கள் இருவர் பெயரிலும் உள்ள வங்கிக்கணக்கு.
தாய் சொன்னாள் `நீங்கள் இருவரும் எப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சிக்கு உட்படுகிறீர்களோ, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் நிகழ்வு நடக்கிறதோ அப்போதெல்லாம் உங்கள் வங்கிக்கணக்கில் உங்களில் ஒருவர் பணம் போட வேண்டும். காரணம் சொல்லி அதைக்குறித்து வைக்கவும் வேண்டும். இதைத் தவறாமல் செய்யுங்கள் சேமிக்க இது சிறந்த வழி'.
அவர்களின் திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் இனிமையாகக் கழிந்தன. எப்போதும் மகிழ்ச்சி, கும்மாளம், கொண்டாட்டம், திடீரென அவர்களுக்குள் கருத்து வேற்றுமை.
இனி நாம் இருவரும் சேர்ந்து வாழமுடியாது. பரஸ்பர ஒப்புதல் மூலம் விரைவில் மண முறிவு பெறலாம் என்று எண்ணினார்கள்.
அவள் தாயிடம் சென்று செய்தியைச் சொன்னாள். `இனி சேர்ந்து வாழமுடியாது என்று முடிவெடுத்தால் பிரிந்து விட வேண்டியது தான். ஆனால் அதற்கு முன் உங்கள் பங்கை சரியாகப் பிரித்துக் கொள்ளுங்கள். உங்கள் இணைந்த வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தில் நீ போட்டதை நீயும், அவர் போட்டதை அவரும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றாள் தாய்.
இருவரும் பீரோவுக்குள் வைத்திருந்த வங்கிக் கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். மனைவிக்கு மேல்படிப்பில் வெற்றி கிடைத்தவுடன் கணவன் அவன் பெயரில் இருபதாயிரம் போட்டிருந்தான். மனைவிக்குப் பணி கிடைத்ததும் பத்தாயிரம், கணவனுக்குப் பதவி உயர்வு கிடைத்ததும் பதினைந்தாயிரம்... இப்படிப் பல பதிவுகள். மொத்தம் இரண்டு லட்சம் கணக்கிலிருந்தது.
ஒவ்வொரு பதிவைப் பார்க்கும் போதும் அவர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அப்போது அவர்கள் இருவரும் நெருக்கமாக அன்பாக உயிருக்கு உயிராக உணர்ந்த நொடிகள் நிழலாடின. அதை நினைக்கும்போது கண்ணீர் சுரந்தது. துணையை சிநேகத்துடன் உணர முடிந்தது. பிரியப் போகிறோமே என்கிற உண்மை உறுத்தத் தொடங்கியது.
இவ்வளவு நெருக்கத்தையும் எப்படி நம்மால் தூக்கி எறியவும் மறக்கவும் முடிந்தது என்று மனதுக்குள் வருந்தினார்கள். இருந்தாலும் இருவருக்கும் இடையே இருந்த தன்முனைப்பு தலைதூக்கிக் கொண்டே இருந்தது.
பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன் என்று சென்றவன் ஒரு மணிநேரத்தில் திரும்பி வந்தான். வங்கிக் கணக்குப் புத்தகத்தைப் பிரித்து மனைவிக்குத் தந்தான். அதில் அன்றைய தேதியில் இருவரும் இணைந்ததற்காக என எழுதி ஐம்பதாயிரம் செலுத்தப்பட்டிருந்தது.
வாழ்க்கை இப்படித்தான் சில நேரங்களில் தன்னோடு மோதுகின்ற மனிதர்களை உடைத்துப் போட்டு விடுகிறது. எவனொருவன் உடைந்தே கிடக்காமல் மீண்டும் தன்னை இணைத்துக் கொண்டு மோதுகிறானோ அவன் வெல்வான்.
கிழிக்கப்படும் துணி தான் ஆடையாகிறது. கசக்கப்படும் வாழ்க்கையே கம்பீரமாகிறது.
இதுதான் வாழ்க்கையை மாற்றிய வங்கிக்கணக்கு உணர்த்தும் உண்மை.
தம்பதிகள் இருவரும் மீண்டும் இணைந்தனர். புது வசந்தம் வாசலில் பூக்கோலம் போட்டது.
மாறவேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படாமல் எதுவும் நிகழ்வதில்லை. இன்பத்தை உணர்ந்தவர்களை துன்பம் ஒருபோதும் தொடர்வதில்லை.
வாழ்வதற்குப் பொருள் வேண்டும். வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டும். முன்னேறிச் செல்வதுதான் வாழ்க்கை. உண்மையில் பிறருக்காக வாழும்போது தான் நாம் வாழ்கிறோம்.
தம்பதியர்கள் இருவரும் மாற்றம் தந்த வங்கியை வாழ்த்த புறப்பட்டார்கள்.
வாழ்வில் நிறைவடைய இதுவே போதும்.
-பேராசிரியர் க. இராமச்சந்திரன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வாழ்க்கையை மாற்றிய வங்கிக்கணக்கு
நல்ல கதை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» என் வாழ்க்கையை மாற்றிய நாள் இதுதான் – நெகிழும் திரிஷா
» டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை
» முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கப்படும்!
» டி.கே.சிவக்குமார் பெயரில் 317 வங்கிக்கணக்கு: அமலாக்கத்துறை
» முடிக்கப்படாத வங்கிக்கணக்கு பட்டியலில் முதல் ஜனாதிபதி
» வங்கிக்கணக்கு எண் காலாவதியானதாக வாட்ஸ்-அப்பில் தகவல் வந்தால் உஷார்;
» 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக்கணக்கு முடக்கப்படும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|