ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

4 posters

Go down

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! Empty நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

Post by முரளிராஜா Mon Jul 09, 2012 1:03 pm

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! 09-nails-12-300

உடலில் உள்ள நகங்களில் காணப்படும் நகங்களை அழகுப்படுத்த மட்டும் தான் இருக்கின்றன என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது மிகவும் முக்கியமான உறுப்பு. சிலர் நகங்களில் அதிகமாக அடிக்கடி அழுக்குகள் நுழைந்து நகங்களின் அழகைக் கெடுக்கிறது என்று வண்ணம் தீட்டுகின்றனர். மேலும் சிலரின் நகங்கள் நன்றாக பொலிவோடு இருக்கும், திடீரென்று நகங்களின் பழைய அழகு மாறி, நிறம் மாறி காணப்படும். இவ்வாறு ஏற்பட்டால் உடலில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். ஏனெனில் நாம் இந்த நகங்களை வைத்து உடலில் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ள முடியும்.

நகத்தின் அமைப்பு, நிறம் வைத்து மருத்துவர்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை எளிதில் கண்டறிவார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலம் நகத்தில் தெரிந்துவிடும். பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இப்போது என்னென்ன நிறத்தில் இருந்தால் என்னென்ன பிரச்சனை என்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நோய் அறிகுறிகளை கண்டறிய...

நகங்கள் வெள்ளை நிறத்தில் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி சிவப்பாக இருந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறது. நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் நகங்களானது இருக்கும்.

நகங்கள் வெளுத்து குழியாக இருந்தால், இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருக்கும். மேலும் நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருந்தால், நாள்பட்ட நுரையீரல், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும். நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் ஒன்றாக கலந்திருக்கிறது.

மேலும் இரத்தத்தில் போதிய அளவுக்கு ஓட்சிசன் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும். அவர்கள் அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாகச்சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். ஆகவே அவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன சின்னக் குழிகள் நகத்தில் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால், அது சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருந்தால், அதிகமாக புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து இருக்கலாம் அல்லது நகங்களுக்கு நெயில் பாலிஷ் தீட்டுவதாலும் ஏற்பட்டு இருக்கலாம்.

நகங்களில் எப்போதும் செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...

1. நகங்களை எப்போதும் நுனிப்பகுதிகளை சுத்தமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால், நகத்தை சுற்றி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும்.

2. நகங்களை பற்களால் கடிக்கக்கூடாது. நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே நகங்களை வெட்ட வேண்டும்.

3. சாப்பிட்டப்பிறகு கைகளை கழுவும் போது நகங்களை சுத்தமாக கழுவ வேண்டும். இல்லையென்றால் நகங்களில் கிருமிகள் படிந்து வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.

4. இரவில் தூங்கும் முன் கை மற்றும் கால்களில் உள்ள நகங்களை சுத்தமாக கழுவி பின் தூங்க வேண்டும்.

5. நகங்கள் அழகாக இருக்க தினமும் காய் மற்றும் கனிகளை அதிகம் உண்ண வேண்டும். ஏனெனில் காய்கனிகளில் உள்ள சத்துக்கள் உடலில் எந்த நோயும் அண்டாமல் பாதுகாக்கும்.

ஆகவே நகங்களானது எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவு நமது உடலும் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.


நன்றி போல்டு ஸ்கை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! Empty Re: நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

Post by யினியவன் Mon Jul 09, 2012 1:25 pm

நல்ல பகிர்வு முரளி.

சமைச்சு பாத்திரம் கழுவி, துணி துவைக்கிற உங்களுக்கு நகம் எப்பவும் சுத்தமா தான் இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! Empty Re: நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

Post by அருண் Mon Jul 09, 2012 1:31 pm

தகவலுக்கு நன்றி அண்ணா!
அடிக்கடி நகங்களை வெட்டினால் நல்லது..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! Empty Re: நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

Post by arjunsugu Mon Jul 09, 2012 1:34 pm

நகத்தை பார்த்தே உடல் நிலையினை அறியலாம் ... பயனுள்ள பதிவு நன்றி அண்ணா ...


சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
arjunsugu
arjunsugu
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Back to top Go down

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!! Empty Re: நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum