ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லானாலும் கணவன்!

4 posters

Go down

கல்லானாலும் கணவன்! Empty கல்லானாலும் கணவன்!

Post by சாமி Sun 8 Jul 2012 - 9:12

கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' என்று ஒரு பழமொழி உண்டு. கல்லையோ, புல்லையோ, ஒரு துரும்பையோ காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று பெற்றோர்கள் விளையாட்டாகக் கூறினால்கூட அதை அப்படியே நம்பி வாழ்ந்தது தொடர்பாகப் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் நிறைய சான்றுகள் உள்ளன.

"கணவன்' என்பவன், மணந்தவளுக்குக் கண்ணைப் போன்றவன் என்ற பொருளில் "கணவன்' என்ற சொல் வழங்கிவருகிறது. "கொழுனன்' என்பார் வள்ளுவர். மனைவிக்குப் பற்றுக்கோடானவன் என்பது இதன் பொருள். உடம்பில் உள்ள உறுப்புகளுள் கண்ணே முதன்மையானது. அதுபோலத்தான் பெண்ணாய்ப் பிறந்தவளுக்குக் கணவனே கண் போன்றவன் - முதன்மையானவன் என்பதால் "கணவன்' என்று வழங்கினர்.

நீரில்லா நதி, மழையில்லா வயல்வெளி, சிறகில்லாப் பறவை, தந்தியில்லா வீணை, பூத்துக் காய்க்காத மரம், மணம் வீசா மலர், தந்தமில்லா யானை - என இவையெல்லாம் எப்படி இருந்தும் பயனற்றதோ, அதைப் போல கணவன் இல்லா பெண்ணும் வாழ்ந்தாலும் பயனற்றவளே! கணவனோடு சேர்ந்து நடத்தும் இல்லற தர்மமே பெண்டிர்க்குத் தவமாகும். அதனால்தான் ஒüவையார், "இல்லறமல்லது நல்லறம் அன்று' என்றார்.

இல்லறத்தில் நல்லறம் போற்றி வாழும் ஒவ்வொரு பெண்ணுக்கும் "கணவனே கண்கண்ட தெய்வமாக' அக்காலத்தில் இருந்துள்ளனர். சிலப்பதிகாரக் காப்பியத்தினுள் இதுபோல் வாழ்ந்த பெண் ஒருத்தி அழகாகச் சித்திரிக்கப்படுகிறாள்.

பொன்னி ஆற்றங்கரையில் கூடிய பெண்கள் பல வகையான விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுள் சிலர், தங்கள் மனதில் தோன்றிய உருவத்தை மணலில் பாவை செய்து விளையாடுகின்றனர். அப்போது ஒருத்தி, ஓர் ஆண் மகனின் உருவத்தை "மணல் பாவை'யில் செய்திருந்ததைக் கண்ட தோழியர், அவளருகில் சென்று, ""அடியே! நீ செய்த இந்தப் பாவையே நின் கணவராம்'' என்று விளையாட்டாகக் கூறிச் சிரித்தனர்.

அவர்கள் அவ்வாறு கூறியவுடன், நாணம் மிகக்கொண்ட அந்தப் பெண்ணின் எண்ணமெல்லாம் தான் செய்து வைத்திருந்த மணற் பாவையின் மீது படிந்தது. படிந்த மாத்திரத்தில், அவளுடைய எண்ண அலைகள் வாழ்க்கைக் கப்பலை அலைக்கழிக்கத் தொடங்கின. விளையாடி முடித்துத் தன் தோழியர் வீடு திரும்பியபோது, அவர்களுடன் அவள் செல்ல மறுத்துவிட்டாள். காரணம், தான் செய்து வைத்த மணற் பாவைக் கணவனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவளுக்குள் வந்துவிடுகிறது.

பொன்னியாற்றின் அலைகள் தன் மணற் பாவைக் கணவனை அழித்துவிடுமோ என்ற ஐயத்தில் - பயத்தில் அந்தப் பாவையைச் சுற்றிலும் மணலைக் குவித்து பாதுகாப்பு அரண் அமைக்கிறாள். "கணவன்' என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, ஆற்று நீரால் பாவை அழிந்துவிடாமல் அவள் அங்கேயே இருந்து பாதுகாத்து, பெண்மைக்குப் பெருமை சேர்த்த திறத்தை,

"பொன்னிக் கரையில் "மணற்பாவை நின் கணவன் ஆம்'
என்று உரை செய்த மாதரொடும் போகாள், திரைவந்து
அழியாது சூழ்போக அங்கு உந்தி நின்ற வரியார் அகலல்குல் மாதர்''


என்று சிலப்பதிகார வஞ்சினமாலை கூறுகிறது. மணற் பாவையைக் காட்டி, "இதுதான் உன் கணவர்' என்று விளையாட்டாகக் கூறியதற்கே அக்காலப் பெண்கள், அதைத் தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்த வாழ்க்கைக்கும்; இன்றைக்குள்ள பெண்கள், நீதிமன்றம் சென்று போராடிப் பெற்று வாழும் வாழ்க்கைக்கும்தான் எத்தனை எத்தனை வேறுபாடுகள்! சங்ககாலம் உண்மையிலேயே ஒரு பொற்காலம்தான்!

(நன்றி - தினமணி - சிவமானசா)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கல்லானாலும் கணவன்! Empty Re: கல்லானாலும் கணவன்!

Post by யினியவன் Sun 8 Jul 2012 - 16:02

நல்ல பகிர்வு சாமி.

இக்காலத்தில் பெண்களை மட்டும் குறை சொல்ல இயலாது.

ஆணோ பெண்ணோ -

மதிக்கும் நடத்தைகள் இருப்பின் மதியாதோர் யாரோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல்லானாலும் கணவன்! Empty Re: கல்லானாலும் கணவன்!

Post by ஜாஹீதாபானு Sun 8 Jul 2012 - 20:01

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கல்லானாலும் கணவன்! Empty Re: கல்லானாலும் கணவன்!

Post by dhilipdsp Sun 8 Jul 2012 - 20:04

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கல்லானாலும் கணவன்! Empty Re: கல்லானாலும் கணவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum