ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஸ்னி வழிகாட்டுகிறது...

3 posters

Go down

டிஸ்னி வழிகாட்டுகிறது... Empty டிஸ்னி வழிகாட்டுகிறது...

Post by சாமி Sun Jun 24, 2012 9:56 pm

சிறார்களுக்கான பொழுதுபோக்கு டிவி சேனல்களை நடத்திவரும் டிஸ்னி நிறுவனம் 2015 ஆம் ஆண்டு முதல் சிறார்களை மையப்படுத்தும் உடனடி உணவுகள் (ஜங்க் புட்) தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பப் போவதில்லை என்று தனது முடிவை அறிவித்திருக்கிறது. இந்த முடிவை உடனடியாக அமல்படுத்த முடியாததற்குக் காரணம் அவர்களுக்கு 2015 ஆம் ஆண்டு வரை விளம்பர ஒப்பந்தங்கள் இருப்பதுதான்.

இந்த முடிவின் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்களை இந்த நிறுவனம் இழக்க நேரிடலாம். 2011 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் சேனல்களில் ஒளிபரப்பான உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்கள் மூலம் கிடைத்த வருவாய் 70 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பின் அளவு மேலும் உயரக்கூடும்.

அமெரிக்காவில் குழந்தைகளின் உடல்பருமன் தொடர்பான பிரச்னைகளும், இளைஞர்கள் சர்க்கரை நோய் வகை - 2 பிரச்னைக்கு ஆளாவதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால் இத்தகைய நடவடிக்கையை சமூக நோக்குடன் டிஸ்னி எடுத்ததாகச் சொல்லப்படும் அதேவேளையில், பாதிப்பில்லாத உணவுகளை டிஸ்னி தனியாகச் சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி டாலர்களுக்கு விளம்பரங்கள் செய்யப்படுவதால், உடனடி உணவு விளம்பரங்களை மட்டும் நிறுத்துவதால் அதிக இழப்பு ஏற்பட்டுவிடாது என்ற கருத்தும் உள்ளது.

இப்படி ஓர் அதிரடி முடிவு எதற்காக என்றால், தொலைக்காட்சியில் காட்டப்படும் உடனடி உணவுகள்தான் சிறார்களைக் கவர்கின்றன, அதனால், விற்பனை அதிகரிக்கிறது என்பதால்தான். இந்த உண்மையைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது, டிஸ்னி எடுத்துள்ள முடிவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இனி இந்தியாவின் நிலைமையைப் பற்றி சற்றுப் பார்ப்போம். உருளைக்கிழங்கு சிப்ஸ், காரவகைத் தின்பண்டங்கள், இனிப்புகள், பர்கர் போன்றவை, பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், சாக்லெட், சத்துமாவுகள் என உடனடி உணவுக்கான விளம்பரங்கள் நிறைய தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் இடம்பெறுகின்றன. இந்த உணவுப் பொட்டலங்களில் அச்சிடப்பட்டுள்ள கலோரி, டிரான்ஸ்ஃபேட் (கரையாக் கொழுப்பு) ஆகியன குறித்து தரப்படும் புள்ளிவிவரங்கள் உண்மைக்கு மாறானவையாக உள்ளன.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அண்மையில் நடத்திய ஆய்வுகளில் பல உடனடி உணவுகளில், கரையாக் கொழுப்பு அதிக அளவு இருப்பது கண்டறியபட்டது என்று அதன் இயக்குநர் சுனிதா நாராயண் குறிப்பிட்டிருக்கிறார். இருப்பினும் அரசின் நடவடிக்கை ஏதுமில்லை.

ஒரு நாளைக்கான திட்டமிட்ட உணவில், ஒரு சிறார் அல்லது இளம்பருவத்து நம்பி, நங்கையின் உணவில் இருக்க வேண்டிய உப்பு, சர்க்கரை, கொழுப்பு, கார்போஹைட்ரேட் அளவுக்கு அதிகமாக இந்த உடனடி உணவுகளில் இருக்கின்றன. இவை நாளடைவில் உடலுக்குப் பாதகமாக அமைகின்றன. உணவே நஞ்சாக மாறுகின்றது.

இந்த நிறுவனங்கள் ஒவ்வோர் உணவுப் பொருளையும் ஒருமுறை பரிமாறும் அளவு (ஒன் சர்வ்) எவ்வளவு என நிர்ணயிப்பதில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாததும் இத்தகைய உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்களைத் தருவதற்கு இடமாகிறது.

சிறார்கள் தங்கள் தின்பண்டங்கள், உடனடி உணவுகள், பொம்மைகள் எல்லாவற்றையும் விளம்பரங்கள் மூலமே தீர்மானிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 60% தொலைக்காட்சிகளில் காணும் விளம்பரங்களால் ஏற்படும் தாக்கம்தான் என்று கூறப்படுகிறது.

சிறார்களால் விளம்பரத்தையும், விளம்பரக் காட்சியின் சம்பவத்தையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை. உதாரணமாக, ஒரு கிரிக்கெட் வீரர் தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட முடியாதபடி பேனா மக்கர் செய்யும்போது, ஒரு ரசிகர் நீட்டும் பேனா அவரது கையொப்பத்தை மிக அழகாக எழுதிச்செல்கிறது என்றால், அது அந்தப் பேனாவுக்கான விளம்பரம் என்று சிறார்கள் பார்ப்பதில்லை. அந்த கிரிக்கெட் வீரரின் மனதுக்கு உகந்த பேனா என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் அனைத்து விளம்பரங்களின் விற்பனை உத்தியாக இருக்கிறது.

விளம்பர நிறுவனங்களின் அடுத்த உத்தி, சிறார்களின் "அன்புத்தொல்லை அதிக வணிகம்' என்கின்ற கோட்பாடுதான். குழந்தைகள் அடம்பிடித்தால், பொம்மை கார்கள் மட்டுமல்ல, நிஜக் கார்களையும்கூட பெற்றோர்களை வாங்க வைத்துவிடும் என்கிற மனோரீதியான தாக்குதல்தான் அது.

மேலும் இப்போதெல்லாம் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் பாக்கெட் மணி, தந்தை தாய் வாங்கும் சம்பளத்தின் அளவைப் பொறுத்துள்ளது. ஆகவே குழந்தைகளும் வாங்குசக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள சிப்ஸ் மற்றும் பருப்பு வகைகளும் குளிர்பான வகைகளும் மிக அதிகம் விற்பனையாகின்றன.

சில தனியார் பள்ளிகளில் இத்தகைய உணவுகளுக்குத் தடை விதித்து, பாரம்பரியத் தின்பண்டங்களை விற்கச் செய்கிறார்கள். ஆனாலும் மாணவர்கள் வெளியே வாங்கிச் சாப்பிடுவதைத் தடுக்க யாரால் முடியும்?

இந்தியாவில் விளம்பரங்களின் அளவு 600 கோடி அமெரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவம், ஆட்டோமொபைல், வீட்டுமனை, அடுக்குமனை என்று ஆயிரமாயிரம் விளம்பரங்களுக்கு வழி இருக்கும்போது குறைந்தபட்சம் குழந்தைகளுக்குக் கேடு விளைவிக்கும் உடனடி உணவுகள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்பப்போவதில்லை என்று டிஸ்னி நிறுவனம் செய்திருப்பதுபோல இந்தியாவில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் எவையேனும் முடிவு மேற்கொள்ளுமா?

உடனடி உணவு உறைகளில் அச்சிடப்பட்டுள்ள தகவல்களை அரசு சரிபார்த்து, நடவடிக்கை எடுக்குமா?

வியாபாரத்திற்கும்கூட சில அடிப்படை விதிகள், தர்மங்கள் இருந்த காலம் போய், அவை நுகர்வோர் கலாசார உலகில் காலாவதியாகிப்போன தத்துவங்களாகிவிட்டன. வருங்கால சந்ததியரையும், நமக்குப் பின்னும் வாழ வேண்டிய உலகத்தையும் பற்றிய அடிப்படைச் சிந்தனைகூட இல்லாமல் நாமும், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசும், அந்த அரசின்கீழ் இயங்கும் நிர்வாக இயந்திரமும் இருந்தால் எப்படி?

(நன்றி தினமணி தலையங்கம்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

டிஸ்னி வழிகாட்டுகிறது... Empty Re: டிஸ்னி வழிகாட்டுகிறது...

Post by பாலாஜி Sun Jun 24, 2012 11:27 pm

நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டிஸ்னி வழிகாட்டுகிறது... Empty Re: டிஸ்னி வழிகாட்டுகிறது...

Post by யினியவன் Mon Jun 25, 2012 9:48 am

டிஸ்னி நிர்வாகத்திற்கு பாராட்டுகள்.

நம்ம ஊரில் எந்த சானல்கள் இதைப் பின்பற்ற போகிறது பார்க்கலாம்.

பகிர்வுக்கு நன்றி சாமி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டிஸ்னி வழிகாட்டுகிறது... Empty Re: டிஸ்னி வழிகாட்டுகிறது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum