ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

+5
கபாலி
விநாயகாசெந்தில்
ராஜா
யினியவன்
அருண்
9 posters

Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by அருண் Wed Jun 20, 2012 1:02 pm

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., லாசர். இவர் மதுரையில் இருந்து தேனி செல்வதற்காக, அரசு பஸ்சில் நின்று கொண்டு பயணம் செய்ததால், உட்கார சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இருந்து தேனி வந்த அரசு பஸ்சில், மாலை 5.35 மணிக்கு காளவசால் ஸ்டாப்பில் எம்.எல்.ஏ., லாசர் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகம் இருந்ததால், நின்று கொண்டு பயணம் செய்தார். நாகமலை புதுக்கோட்டை அருகே சென்ற போது, கண்டக்டர் ஜெபமாலை ஸ்டீபன், லாசரிடம் டிக்கெட் வாங்குமாறு கூறினார். எம்.எல்.ஏ.,வுக்குரிய பாசில் பயணம் செய்வதாக, லாசர் கூறினார். செக்கானூரணியில் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு, பஸ் மீண்டும் தேனி நோக்கி சென்றது. கண்டக்டர் அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்து பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது, எம்.எல்.ஏ., லாசர், தான் நின்று கொண்டு பயணம்செய்வது பற்றியும், கண்டக்டர் பஸ்சில் அமர்ந்து வருவது பற்றியும், தேனி கிளை மேலாளர் சுப்பிரமணியிடம், மொபைல் போனில் புகார் கூறினார். இதுகுறித்து சுப்பிரமணி உடனடியாக மதுரை கிளை மேலாளர் அறிவானந்தனிடம் தெரிவித்தார். பஸ் உசிலம்பட்டி வரும்போது நடவடிக்கை எடுக்க, நான்கு பரிசோதகர்கள் கொண்ட குழுவை, அதிகாரிகள் உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டிற்கு அனுப்பி வைத்தனர். பஸ் எண் குழப்பத்தால் அவர்கள் பஸ்சை கோட்டை விட்டனர்.

தொட்டப்பநாயக்கனூர் அருகே பஸ் சென்ற போது தேனி கிளை மேலாளர்,எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, "சார் சீட் கிடைத்து விட்டதா,' என விசாரித்தார். அதற்கு எம்.எல்.ஏ., "இன்னும் நின்று கொண்டு தான் வருகிறேன்,' என்றார். மொபைல் போனை கண்டக்டரிடம் கொடுக்கச்சொல்லிய மேலாளர் சுப்பிரமணி, அவரை கண்டித்ததுடன், சீட் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார். உடனே எம்.எல்.ஏ.,விடம் மன்னிப்பு கேட்ட கண்டக்டர், அமருமாறு கூறினார். அதற்குள் பஸ் ஆண்டிபட்டி வந்து விட்டது. அதன் பிறகே எம்.எல்.ஏ., அமர்ந்து பயணம் செய்தார். மதுரை பொது மேலாளர் சந்திரசேகரன், அந்த கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கவும், பஸ்சில் பணி வழங்க வேண்டாம், எனவும் உத்தரவிட்டார்.

தேனி கிளை மேலாளர் சுப்பிரமணி கூறுகையில், ""மக்கள் பிரதிநிதிகளுக்கு பஸ்சில் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். பஸ்சில் சீட் இல்லாத நிலையில் கண்டக்டர் சீட்டையாவது வழங்கி இருக்க வேண்டும்,'' என்றார். மதுரை பொதுமேலாளர் சந்திரசேகரன் கூறுகையில், ""எம்.எல்.ஏ., விற்கு சீட் வழங்காத கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க, மதுரை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டு உள்ளேன்,'' என்றார். லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார். கண்டக்டர் ஸ்டீபன் கூறுகையில், ""நான் அதிகாலை 5 மணி முதல் பணியில் இருந்தேன். எம்.எல்.ஏ., பஸ்சில் ஏறுவதற்கு முன்னரே, பஸ்சில் 75 பயணிகள் இருந்தனர். நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது. எம்.எல்.ஏ., முன் பக்கமாக ஏறினார். செக்கானூரணியில் 6 பேரும், உசிலம்பட்டியில் 16 பேரும் இறங்கினர். அதே எண்ணிக்கையில் பயணிகள் ஏறினர். அப்போது ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார் என்று நினைத்து, என் வேலையை பார்த்து கொண்டிருந்தேன். கண்டக்டர் சீட் உள்ள பின்பக்க சீட்டில் ஏற்கனவே 6 பேர் அமர்ந்திருந்தனர். நான் ஏழாவது ஆளாக அமர்ந்து வந்தேன். மேனேஜர் என்னிடம் பேசிய உடனே எம்.எல்.ஏ.,வை பஸ்சில் அமர வைத்தேன்,'' என்றார்.

தினமலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by யினியவன் Wed Jun 20, 2012 1:09 pm

இதென்ன எழுதப் படாத சட்டமா?

ப்ரீ பாஸ் ஒகே - சீட்டெல்லாம் குடுக்க சொல்றது கொடுமை - மரியாதைல அவரே கொடுத்தா ஒகே - ஏன் இவர்கள் மரியாதை தரும் செயல்களை செய்யக் கூடாது?

விட்டா டிரைவர் சீட்ட குடுக்க சொல்லுவாங்க போல இருக்கே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by ராஜா Wed Jun 20, 2012 1:18 pm

லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.


நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன. என்ன கொடுமை சார் இது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by விநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 3:30 pm

அய்யோ, நான் இல்லை


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by கபாலி Wed Jun 20, 2012 3:34 pm

அட்லீஸ்ட் டிரைவராவது தன் சீட்டைக்கொடுத்துட்டு நின்னுட்டு இருந்திருக்கலாம். புன்னகை


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by தர்மா Wed Jun 20, 2012 6:29 pm

அந்த ரூட்டில் உள்ள கண்டக்டர்கள் அனைவருமே அடாவடிகள். அவர்கள் பயணிகளை எப்படி அசிங்கபடுதுவார்கள் என்பது அந்த ரூட்டிலே பயணம் செய்தவர்களுக்கு தான் தெரியும். மற்றபடி தமிழ் நாட்டில் ஒரு எம் எல் எ பஸ்ஸில் பயணம் செய்வது எவ்வளவு ஒரு ஆச்சரியம் என்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் வார்ட் உறுப்பினர் கூட சுமோவில் வரும் காட்சி மதுரை மக்களுக்கு தெரியும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by அப்துல் Thu Jun 21, 2012 7:37 am

கபாலி wrote:அட்லீஸ்ட் டிரைவராவது தன் சீட்டைக்கொடுத்துட்டு நின்னுட்டு இருந்திருக்கலாம். புன்னகை

புன்னகை புன்னகை புன்னகை
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by முஹைதீன் Thu Jun 21, 2012 8:57 am

அரசியல்வாதிகளுக்கு இந்த சீட் பிரச்சினை பெரிய பிரட்சினைதான்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by உமா Thu Jun 21, 2012 2:58 pm

ராஜா wrote:
லாசர் கூறுகையில், ""கண்டக்டரை பற்றி புகார் செய்வது என் நோக்கம் அல்ல. எம்.எல்.ஏ., எனக் கூறியும் அவர் கண்டுகொள்ளாததால், அந்த வருத்தத்தை மட்டுமே போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பதிவு செய்தேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றுதான், பரிந்துரை செய்தேன்,'' என்றார்.
இதெல்லாம் இந்த கம்யூனிஸ்ட்களின் நாடகம் தான் , நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரை செய்யும் இந்த ஆள் , நேரடியாக நடத்துனரிடமே தனது வருத்தத்தை பதிவு செய்யவேண்டியது தானே.


நீண்ட தூர பஸ்களில் மட்டும் எம்.எல்.ஏ.,விற்கு இட ஒதுக்கீடு உள்ளது.
இதையும் எங்கே இவனுங்க உபயோகிக்கிரங்க , இந்த சலுகைகளை எல்லாம் இவர்களின் அடிப்பொடிகள் தான் பயன்படுத்துகின்றன. என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!  Empty Re: பஸ்சில் உட்கார எனக்கு இடமில்லையா'': எம்.எல்.ஏ., பஸ் பயணத்தால் சர்ச்சை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum