ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

4 posters

Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by சாமி Sat Jun 16, 2012 9:52 pm

மாமன்னன் இராசராச சோழன் இல்லை என்றால் சைவக்களஞ்சியமாம் பன்னிருதிருமுறை உருவாகி இருக்கவே வாய்ப்பில்லை. எனவே,தமிழர்கள் இராசராச சோழனைப் போற்றக் கடமைப்பட்டவர்கள் எனலாம்.

இப்படி ஓர் எண்ணம் அவனுக்குத் தோன்றியதும் ஒரு வரலாறே. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் தனது பெரியப்பா உறவின் முறையிலான மதுராந்தகச் சோழனைச் சில ஆண்டுகள் அரசுக்கட்டிலில் அமர்த்தி இராசராச சோழன் அரசாங்கக் காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்த காலையில் இவன் திருமுறைகளைக் கண்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

இராசராச சோழன் அவையில் இருந்த அரசவையில் சிலர் வந்து அழகான தமிழ்ப்பாடல்கள் சிலவற்றைப் பாடினர். இவை யாவை? பாடியவர்கள் யார்? பாடிய பாடல்கள் மொத்தம் இவ்வளவுதானா? என்ற கேள்விகளைக் கேட்டபோது இவை சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடிய பாடல்கள், இவை மொத்தம் எத்தனை என்று தெரியாது என்றும் இவனிடம் கூறிய போது இவையனைத்தும் கண்டெடுக்க வேண்டும் என்று உரியவர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டான்.

எவரிடமும் சரியான விவரம் கிடைக்காத நிலையில் திருவருள் இருந்தால்தான் இவையனைத்தும் கிடைக்கும் என்று அன்பர்களால் தெரிவிக்கப்பட்டான். எனவே திருவருள் மிக்க ஒருவரை இவன் தேடிக் கொண்டிருந்தான். அந்நிலையில் ஓர் அதிசயச் செய்தி இவன் காதுக்கு எட்டியது.

அதாவது திருநாரையூர் என்ற ஓர் ஊரில் நம்பியாண்டார் நம்பி என்ற ஓரு சிறுவன் அவ்வூர்ப் பிள்ளையார்க்கு அமுது படைக்க அதனை அக்கல் பிள்ளையார் உண்ணுகிறார் என்ற அதிசயச் செய்திதான் அது.

உடனே இச்சிறுவன் திருவருள் மிக்கவனாய் இருக்கிறான், ஒருவேளை இவன் மூலம் மூவர் அருளிய மொத்தப்பாடல்களையும் கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணம் இராசராச சோழனுக்குத் தோன்றியது.

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 16, 2012 10:25 pm

தொடருங்கள் ....சாமி... மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by சாமி Fri Jun 22, 2012 10:13 pm

இச்சிறுவனை சோதித்து அறியவேண்டும் என்று எண்ணி பெரும்படையல் பொருட்களை திருநாரையூரில் குவித்து அக்கல் பிள்ளையாரை அமுது செய்விக்க என்று சிறுவனை வேண்டினான். அப்படையல்கள் எல்லாம் கணநேரத்தில் காணாமல் போகவும், இவன் திருவருள் பெற்ற சிறுவனே என்று உணர்ந்து தனது ஏக்கத்தைக் கூறி அதன்படி மூவர் தேவாரம் முழுவதையும் கண்டுபிடித்துத் தரவேண்டினான்.

நம்பியாண்டார் நம்பி என்ற அச்சிறுவன் அரசன் முன்னிலையிலேயே பிள்ளையாரிடம் சென்று மனமுருக வேண்டிட பிள்ளையார் அவனுக்கு உணர்த்தியதாக இந்தச் செய்தியைக் கூறினான். அதாவது மூவர் தேவாரம் முழுவதும் சேகரிக்கப்பட்டுத் தில்லை தீட்சிதர்களால் ஓர் இருட்டறையில் வைத்துப் பூட்டப்பட்டுள்ளன என்பதே.

இராசராசன், நம்பிகளை அழைத்துக் கொண்டு தில்லைத் தீட்சிதர்களை அந்த இருட்டறையில் இருந்து எடுத்துத் தர பணித்தான்.

அவர்கள் அந்த இருட்டறையில் மூவர் தேவார ஏடுகள் இருப்பதை ஒப்புக்கொண்டு அந்த மூவரும் (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர்) வந்தால் அறையைத் திறந்து எடுத்துத் தருவதாகக் கூறினர். (திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் முக்தியடைந்து விட்டனர்; இப்போது வரமுடியாது என்ற காரணத்தினால் அவ்வாறு தீட்சிதர்கள் சொன்னனர்.)

(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by விநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 9:49 am

அருமையிருக்கு தொடருங்கள் நண்பரே மகிழ்ச்சி


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by சாமி Sat Jun 23, 2012 7:15 pm

இராசராசன் மனம் சோராது மூவர் செப்புத் திருமேனிகளைச் செய்து எடுத்து வந்து, ‘மூவர் வந்தனர்; தேவார ஏடுகள் தருக’ என்றான். அவை செப்புத் திருமேனி ஆயிற்றே என்று தில்லைத் தீட்சிதர்களால் மறுக்க இயலவில்லை. காரணம் அவர்கள் நாடோறும் வணங்கும் நடராசரும் செப்புத் திருமேனியாதலால், அது உண்மையானால் மூவர் செப்புத்திருமேனியும் உண்மைதானே என்று இராசராசன் உணர்த்த வேறுவழியில்லாமல் இருட்டறையைத் திறந்து கட்டி வைத்திருந்த மூவர் தேவார ஏடுகளைக் காட்டினர். ஆனால் அவை செல்லரித்துப் பெரும்பான்மை தூளாகக் கிடந்தன.

மனம் சோராமல் செல்லரித்தது போக எஞ்சியதை எடுத்துப் பாதுகாத்து அவைகளைச் செல்லரிக்காவண்ணம் செப்பேடுகளில் எழுதி வைத்தான். அவற்றை நம்பியாண்டார் நம்பிகளைக் கொண்டு திருமுறைகளாக தொகுக்கச் செய்தான். அவர் அவற்றைக் கொண்டு 7 திருமுறைகளைத் தொகுத்தார். இதன் பின்னர் ஏனைய 4 திருமுறைகளையும் இராசராச சோழன் வேண்ட அவன் வேண்டுகோளுக்கு இணங்கியே நம்பியாண்டார் நம்பி தொகுத்தார்.

இப்பதினோரு திருமுறைகளையும் மீண்டும் செல்லரிக்காதவண்ணம் இராசராசன் செப்பேடுகளில் ஏற்றி தில்லையில் வைக்காமல் திருவாரூரில் கொண்டு வைத்தான்.
ஓலைச்சுவடிகளாக கிடைத்தவற்றில் செல்லரித்தது போக கிடைத்தவையே தொகுக்கப்பட்டுள்ளன. மூவர்கள் பாடியவற்றிற்கும் கிடைத்தவற்றிற்கும் உள்ள வேறுபாடு நினைக்கத் தக்கது.

மூவர் பாடிய பதிகங்களும் கிடைத்தவையும்
சம்பந்தர் பாடியது 16,000 பதிகங்கள் கிடைத்தவை 384
அப்பர் பாடியது 49,000 பதிகங்கள் கிடைத்தவை 307
சுந்தரர் பாடியது 38,000 பதிகங்கள் கிடைத்தவை 100


இராசராசனுக்கு ஏறத்தாழ 200 ஆண்டுகட்குப் பின் வந்த இரண்டாம் குலோத்துங்கன் என்ற அநபாயன் காலத்தில் சேக்கிழார் எழுதிய ‘பெரியபுராணம்’ 12 வது திருமுறையாகச் சேர்க்கப்பட்டது.


[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 10:29 pm

இப்படி எத்தனை பொக்கிசங்களை நம் தமிழ் இழந்துள்ளது சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by ஆரூரன் Sat Jun 30, 2012 6:30 pm

சாமி wrote: மூவர் பாடிய பதிகங்களும் கிடைத்தவையும்
சம்பந்தர் பாடியது 16,000 பதிகங்கள் கிடைத்தவை 384
அப்பர் பாடியது 49,000 பதிகங்கள் கிடைத்தவை 307
சுந்தரர் பாடியது 38,000 பதிகங்கள் கிடைத்தவை 100

கிடைச்சதயாவது நாம படிக்கணும். அதுக்கு கடவுள்தான் அருள் புரியணும்!
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்! Empty Re: இருட்டறையில் பூட்டி மறைக்கப்பட்ட சைவத்திருமுறைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum