ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

5 posters

Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by முஹைதீன் Fri Jun 15, 2012 5:46 pm

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்
Posted on June 15, 2012 by vidhai2virutcham
சினிமாவில், சீர்திருத்தங்கள், நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டி னால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா… எவருக்கும் அஞ்சாத ராஜா!
எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் 43293665
மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்பதன் சுருக்கம்… எம்.ஆர்.ராதா. ஜெர் மன் போர்க்கப்பலான எம்டன் சென்னை யில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்ப தால் அவரது வாழ்க்கை முழுவதும் வெடி ச்சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத் தில் இருந்தவர். முதலாம் உலகப்போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியான வர். அதற்காகப் பெற்ற வீரப்பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாக வைத்து இருப் பார் ராதா!

சின்னவயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளி யில் படிக்க மனம் இல்லை. நான் ஓர் அநாதை என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத் தங்கா ள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறி யது முதல் அனுபவம் ‘நாடகத்தில் நடி க்கச் சொல்லிக் கொடுத்தது ஜெகநாதய் யர் தான் என்பார்!

எம்.ஆர். ராதா நடித்த முதல் படம் ‘ராஜ சேகரன்ய (1937), கடைசிப் படம் பஞ்சா மிர்தம்ய (1979), சினிமா வாய்ப்பு கிடை த்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடு வார்கள். ஆனால், சினிமா – நாடகம் இர ண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

உலக பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லி, அரி வாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டுவதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திரா விடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டி விட்டுத் தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக்கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கே ற்றப்பட்ட து. தூக்குமேடை நாடகம் 800 நாட்களும், லட் சுமி காந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டு ள்ளன!

ப்ளைமெளத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார் களை வைத்திருந்தார். இம் பாலாவில் ஒரு நாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப்பலரும் ஆச்சர்யப் பட்டார்கள்.

‘நமக்குப் பயன் படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயி ன்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப்போக முடியும்? என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக் கும்போது செருப்பு, கல், அழு கிய முட்டை போன்றவை எதி ரிகளால் வீசப்படுவது வாடிக் கை அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பா ர். ‘நேற்று பேடிகள் விட்டுச் செ ன்ற சாமான்கள் என்று அதில் எழுதிவைப்பார்!

எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா என்றும், சிவாஜியை ‘கணேசா என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தது. அந்தச் சட்டம் விவாதத் துக்கு வந்தபோது டவுசர், பணியனோடு சபை வளா கத்துக்குப் போய் விட்டா ர். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதை யே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ். கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர் பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, ‘நண்பன் கையால் சாகக் கொடுத்து வைத்திருக்கணும்’

என்று என்.எஸ்.கே சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டு வைக்கப் போய் வெடி மருந் தைக் காயவைத்து, அது வெ டித்துச் சிறுவிபத்தான சம்ப வமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமா வரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதா கப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்ட னை தரப்பட்டது.

‘நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியை வெச்சு விளையாடிக் கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டு பிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது? என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார் அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக் கொண்ட கைதி ஒருவர், ஒரு நாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பி ட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போ னது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னால் தெரிய வந் தது!

‘அடியே காந்தா… ஃபாரின்ல நீராவியில் கப்பல் விடுறான்… நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்கய,

‘ஊருக்கு ஒரு லீடர்… அவனவனுக்கு ஒரு கொள்கை. அவனவனுக் கு ஒரு பட்டினிப் பட்டாளம்…. நான்சென்ஸ் இப்படி ராதாவின் வார் த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடி த்தவர். ‘கீமாயணம் என்று நாடகம் போட்டார். ராமன் வேடத்தில் இருக்கும் போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். மனம் புண்படு பவர்கள் யாரும் வர வேண்டாம்’

என்று விளம்பரம் கொடுத்தார்! ‘நீங்கள் எதில் அதிக இன்பம் காண் கிறீர்கள்? என்று கேட்டபோது. எதிர்ப்பில்தான்,

மக்கள் எதை விரும்புகிறார்களோ… அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம் ‘என்றார்!

ராதாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எவ்வ ளவு நீளமான வசனங் களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்கு ள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல் ல எழுதப்பட்டவை சிறு சிறு வெளியீடு களாக அந்தக் காலத்தில் வெளிவந்தன.

‘அண்ணாவின் அவசரம், ‘ராமாயணமா? கீமாயணமா?ய என்ற இரண்டும் அதிக சர்ச் சையைக் கிளப்பிவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன் னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட் டும் போ துமா, பெரிய இடத்துப்பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்துகாட்டிய படங்கள், 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை ‘கலைஞர் கருணாநிதி என்று அழைத்துப்பட்டம் கொடுத்த வர்.

‘நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும் என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

”திராவிட இயக்க ஆட்சி தமிழ கத்தில் மலரும் போது ராதா தான் கலைத் துறை அமைச்ச ராக நியமிக்கப்படுவார் என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா, 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங் காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்! தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்க ள் வந்தால் விரட்டுவார்.

”போய்ப் படிங்கடா… நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடாய் என்பது அவரது அழுத் தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல் லாத காம ராஜர், ராதாவுக்கு மட்டும் தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தி னார்.

‘ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகி றவர் புனிதர்… அதனால ஏத் துக்கிறேன். என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதா து. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை என்று சொன் னவர். விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்! ”சுட்டாள்….

சுட்டான்.. சுட்டேன் என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக் கத் திட்டமிட்டார். வி.என். ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர்.சுட்டான், நான் சுட்டேன்… என்று விஷயம் அறிந் தவர்களால் விளக்கம் சொல்லப்பட் டது!

”தமிழினத்துக்குத் துரோகம் செய்கிற வர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடை ய லட்சியம், 300 பேர் அதற்குக் கிடை த்தால் போதும் என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந் தார்!

****

ராமாயணமா? கீமாயணமா? எம்,ஆர். ராதா அவர்கள் எழுதிய நூல் பற்றிய விவரங்களும் அதுபற்றிய‌ பிரபலங்களின் கருத்தும்

ராமாயணமா? கீமாயணமா? என்ற நூல் எம். ஆர். ராதாவால் எழுத ப்பட்டது. இது டிசம்பர், 1954ம் ஆண்டு பாரதி அச்சகம், குடந்தை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் புதிய பதிப்பை அன்பு அச்சகம், மதுரை 2008ம் ஆண்டு வெளியிட்ட து.

முன்னுரை

அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மாக்களின் மூல (சமசுகிருத) மொழி பெயர்ப் புக்கள் அறிஞர்களின் சொல்லோவியங்கள், ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள், இத்தகை ய அடிப்ப டையிலேயே எழுந்ததுதான் என் ராமாயண நாடகம். வினா விடு த்தவர்களுக்கும் விடைபகரும், நோக்கமே உருவானது இச்சிறு நூல். ஐயப்பாடுடைய அக்ரகாரங் களுக்கு ஆதாரம். வேதனைப்படும் ஆத்தீக நன்பர்களுக்கு விளக் கம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலைமை வகித்து இதைப்படிக்கி ன்ற வாசகர்கள் கூறட்டும் இது ராமாயணமா? கீமாயணமா என்று? முடிவை மக்களிடம் விட்டு விடுகின்றேன்.

இந்நூலை பற்றிய தந்தை பெரியார்

நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாட கரூபமாய் நடிக்கப்ப டும் இராமாயணம் என்னும் நாடகத் தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடை ந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால் மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மை களை. இந்த உண்மைகளை மக்கள் அறியாமல் இருக்க வேண்டும்மென்றே பலர் மறைத்தும், திரித்தும், அடியோடு புது வடயங்களை புகுத்தியும் வந்ததி னால் பெரும் பாலான மக்களுக்கு ராமா யண உண்மைத் தத்துவம் தெரி யாமல் போய்விட்டது. நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிரு ந்தே இரா மாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண் மையை யும் சொற் பொழிவாலும் பத்திரிக்கையாலும் ஆராய்ச்சி நூல் என் பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்த்தினாலும் அவை மக்க ளிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது. இப்போது நடகவேள் ராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச் சிக் கருத்துக்களையே தழுவி நாடகரூபமாக்கி நடிக்க முன் வந்தி ருப்பதா னது மிகவும் பாராட்டத்தக்கதாகம் என்பதோடு இரு வரை யும் யாரும் செய்யமுடியாத இக்காரியத்தை இவரே முதலாக நடிக்க முன்வந்த இவரது துணிவையும் நான் பாராட்டுகின்றேன்.

இந்நூலைப் பற்றி அறிஞர் அண்ணா

நடிகவேள் இராதா நடத்தும் இராமாயணம் நாட்டிலே இன்று ஏற் பட்டிருக்கும் இன எழுச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. வால்மீகியி ன் ராமாயணத்தை மெருகளிப்பதாக கூறி க் கொ ண்டு கம்பன் தமிழகத்தாருக்கு ஓர் கரைபடிந்த காவியத்தைத் தந்து சென்றா ன். அதன் பயனாக இராமாயணம் கலாச் சாரபோரின் விளைவாக ஆரிய காவியங் களின் உண்மைகளும், தன்மைகளும் விள க்கப்பட்டு வருகின்றன. இதற்கு உறுது ணையாக ராதாவின் ராமாயணம் அமை ந்திருக்கிறது. இன எழுச்சியும் மனத் துணி வும் நடிப்புத் திறனும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகவேள் இராதா அவர்கள், இந்த நாடகம் மூலம் நாட்டு விடுதலைக் கிளர்ச் சிக்கு சிறந்த தொண்டாற்றுகிறார் என்று மகிழ்ந்து பாராட்டுகிறேன்.



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty Re: எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 15, 2012 5:56 pm

நல்ல பதிவு முஹைதின்...விரும்பினேன் மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty Re: எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by பாலாஜி Fri Jun 15, 2012 6:42 pm

நல்லதொரு பதிவு . நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty Re: எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by முரளிராஜா Sat Jun 16, 2012 8:49 am

எம் ஆர் ராதா பற்றிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி முஹைதீன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty Re: எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by ந.கார்த்தி Sat Jun 16, 2012 11:17 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள் Empty Re: எம்.ஆர்.ராதா பற்றி சுவையான சிறு குறிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum