ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிய முடியாத ரகசியம் ! ,

Go down

அறிய முடியாத ரகசியம் ! , Empty அறிய முடியாத ரகசியம் ! ,

Post by கேசவன் Sun May 13, 2012 6:00 pm


விரதங்கள் இருக்கிறேன் நியமங்களை சரிவர செய்கிறேன் ஆலயம் போகிறேன் சாஸ்திரங்கள் என்னனென்ன சொல்கிறதோ அத்தனையும் செய்கிறேன் ஊசியை நட்டு அதன் மேல் ஏறி தவம் ஒன்றுதான் செய்யவில்லை எல்லாமும் செய்து பார்த்துவிட்டேன் பாழாய் போன மனதுதான் ஒருநிலை பட்டு வரமாட்டேன் என்கிறது இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை மனது ஒருமுகபடுவது என்பதெல்லாம் வெறும் கற்பணை வாதங்கள் மனிதர்களை ஏமாற்றுகிற வேலைகள் யாராலும் எந்த காலத்திலும் மனதை ஒருநிலை படுத்தவே முடியாது என்று பலர் விரத்தியின் உச்சத்தில் பேசுவதை தினசரி கேட்க முடிகிறது

மனமானது இப்படி நினைத்தது மகாசங்கடத்தை அனுபவிக்கும் இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தை நாம் மறந்து விடுகிறோம் முறைப்படி தியானம் செய்யலாம் நல்ல குருமார் கூட நமக்கு கிடைத்திருக்கலாம் இத்தனையையும் மீறி நம் மனது நிலை பெற இல்லை என்றால் அதற்கு எதாவது ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும் அல்லவா! அதை நாம் யோசிக்கவும் தவறி விடுகிறோம் அல்லது அப்படி யோசிக்க நமக்கு கற்றுதர படவும் இல்லை எல்லா காரியங்களுக்கும் காரணங்கள் இருக்கின்றன அதை அந்த மூலத்தை ஆராய்ந்தால் அறிய முடியாத ரகசியத்தை கூட அறிந்து கொள்ளலாம்


பலவகையான தவறுகளையும் பாவங்களையும் ஜென்மஜென்மாவாக செய்து கொண்டே வருகிறோம் கடலின் தண்ணீர் எப்படி இடையீடு இல்லாமல் நிறைந்திருக்கிறதோ அதை போலவே நமது பாவங்களும் நிறைந்திருக்கிறது உடம்பில் ஒட்டிய சகதி விலகாமல் உடல் சுத்தம் ஏற்படுமா? நாம் செய்த பாவ வினைகளின் பலனை அனுபவிக்காமல் ஆத்மானுபவம் என்னும் பேரானந்த நிலை நமக்கு கிடைக்குமா? கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகுமா? அறிவுக்கு பொருந்தியும் வருமா? கண்களில் விழுந்த துசியை எடுக்கும் வரை கண்ணெரிச்சல் போகாது என்பது போல பண்ணிய பாவத்தின் பலனை அனுபவிக்காமல் மனம் ஒருநிலைப்பட்டு வராது வரவும் முடியாது

நமது கர்மாக்கள் என்ற செய்கைகளுக்கு பலன் தருகின்ற அதிகாரியாக நாராயணன் இருக்கிறான் அவன் நமக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்த பிறகுதான் கிடைக்க வேண்டியது கிடைக்கும் ஒரு நீதிபதி தீர்ப்பு எழுதும் முன்பே தண்டனையையோ விடுதலையையோ எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமாகும்? அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும் நமது பாவம் என்னும் கொடிய சுமை குறைய உழைக்க வேண்டும் உழைப்பும் பொறுமையும் நம்மிடம் குடிகொள்ளுமேயானால் பாற்கடலில் பாம்பணையில் பத்மாவதி அருகில் பள்ளிகொண்டிருக்கும் பரந்தாமன் நமக்காக ஓடோடி வருவான் நமது கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீரை நிச்சயம் துடைப்பான்


போன ஜென்மத்தில் என்ன செய்தேன் எப்படிபட்டவனாக வாழ்ந்தேன் என்பது எனக்கு தெரியாது நான் செய்தது எல்லாம் பாவமாகவே இருக்கட்டும் அதற்கான தண்டனையாக இந்த வாழ்க்கை அமையட்டும் ஆனால் நான் கேட்பதெல்லாம் ஒன்று தான் அந்த பாவ சுமை என்னில் இருந்து நீங்க அல்லது அதன் கனம் குறைய நான் செய்ய வேண்டியது என்ன? என்பது தான் என்று பலர் ஏங்கி தவிக்கிறார்கள் உண்மையில் நமது பாவங்கள் தொலைவதற்காகவே மறு ஜென்மம் என்ற ஒன்றை கருணை கடலான கார்முகில் வண்ணன் நமக்கு தந்திருக்கிறான் ஆனால் இந்த பிறப்பு சென்ற பிறப்பின் பாவத்தை தொலைப்பதற்காக நாம் பெற்றிருக்கும் வரம் என்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம் உணர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்

நேற்று உடம்பில் ஒட்டிய சேற்றை கழுவி சுத்தப்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் இன்று புதிய சேற்றை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொள்கிறோம் அதாவது பழைய பாவமூட்டையை இன்னும் பெரியதாக ஆக்கிக் கொள்ள புதிய பாவங்களை செய்து கொண்டே போகிறோம் ராணி எறும்புக்கு பின்னால் அடிமை எறும்புகள் அணிவகுத்து வருவது போல் பழைய புதிய பாவங்களின் வரிசையானது நம் பின்னால் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இரண்டு கைகளிலும் தூக்க முடியாத சுமைகளை தூக்கி கொண்டு தோள்பட்டை வலியெடுக்கிறது என்று சொல்வதை போல இத்தனை பாவத்தை நமக்குள் வைத்து கொண்டு மனம் குவியவில்லையே என அழுது புலம்புவது எப்படி சரியாகும்?


இருட்டை போக்க வேண்டுமென்றால் அதை வாரி வாரி வெளியில் கொட்டினாலும் அது போகவே போகாது ஒரு சிறிய தீபத்தை ஏற்றி வைத்தாலே இருட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிடும் அதே போலவே நமது பாவ சுமைகள் குறைவதற்கு புண்ணிய காரியங்கள் செய்ய வேண்டும் தண்ணீர் மட்டும் தான் தாகத்தை தீர்க்கும் நெருப்பு மட்டும் தான் சுடும் புண்ணியம் மட்டும் தான் பாவத்தை போக்கும் என்பதை உறுதியாக நம்ப வேண்டும்


நான் தான் தினசரி நிறைய புண்ணிய காரியங்கள் செய்கிறேனே சாலையை கடந்து போக சிரமப்படும் வயோதிகர்களையும் பார்வையற்றோர்களையும் வழிகாட்டி நடத்தி வைக்கிறேன் படிக்க வசதி இல்லாத சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாடபுத்தகங்கள் வாங்கி தருகிறேன் பள்ளிக்கூட கட்டணத்தையும் கட்டுகிறேன் எனக்கு தெரிந்து யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக அன்னதானமும் செய்கிறேன் தெருவோரத்தில் வீடுகள் இல்லாத வறியவர்களுக்கு குளிர்காலத்தில் போர்த்திக் கொள்ள போர்வையும் கொடுக்கிறேன் இப்படி எத்தனையோ நல்ல காரியங்களை வெளியில் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகிறேன் ஆனாலும் என் மனது ஒருநிலைப்பட வில்லையே என் பாவங்கள் எப்போது தொலைவது நான் எப்போது பேரின்ப நிலையை எட்டிபிடிப்பது என்று சிலர் புலம்புவது நம் காதில் விழுகிறது


சாஸ்திரங்கள் சொல்லுகிறப்படி பாவங்கள் இரண்டு வகைப்படுகிறது ஒன்று சரீரத்தால் செய்கின்ற பாவம் மற்றொன்று மனத்தால் செய்கின்ற பாவம் உடம்பால் செய்கிற பாவத்திற்கு உடம்பாலும் மனத்தால் செய்கிற பாவத்திற்கு மனதாலும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் தானங்கள் நன்கொடைகள் யாகங்கள் பூஜைகள் என்பதெல்லாம் உடம்பால் செய்கின்ற பாவத்தின் பரிகாரமே ஆகும்

நெஞ்சம் நிறைய வஞ்சகத்தை வைத்துக் கொண்டு நான் வருடம் தோறும் சபரிமலை போகிறேனே மாதம் தோறும் திருப்பதி செல்கிறேனே தினம் தோறும் பெருமாளை சேவிக்கிறேனே என்பதால் எந்தபயனும் இல்லை நமது சனாதன தர்மத்தில் சொல்லப்படுகின்ற வேத நெறிப்படியான வாழ்க்கை முறையை வாழ பழக வேண்டும் அதாவது சொந்த லாபத்திற்காக காரியங்களை செய்வதை விட்டு விட்டு பொது நன்மைக்கான காரியங்களை செய்வது தான் வேத வழிப்பட்ட வாழ்க்கையாகும் இந்த வாழ்க்கை முறை நமது மனதிற்குள் ஆழமாக பதிந்துள்ள துவேசம் துக்கம் பயம் முதலிய கெட்ட சைத்தான்களை அடியோடு வேரறுத்து விடும்


பொது நல காரியம் செய்வது உடலால் வந்த கர்மவினையை தீர்க்கும் என்றால் அன்பு கருணை கனிவு போன்றவைகள் மனதால் ஏற்பட்ட கர்மவினையை போக்கும் பகவான் ராமகிருஷ்ணர் இதைதான் மிக அழகாக அன்னையின் மீது நீ பாசம் வை அவள் அருகில் இருப்பதாகவே சதா நினைத்துக் கொள் அந்த அன்பு நாளாவட்டத்தில் கனிந்து பக்தியாக முற்றிவிடும் என்கிறார் கல்லான மனதை பழம் போல கனிய வைக்கும் பக்தி என்பதே மனதை சுத்தப்படுத்தும் கருவியாகும் மனத்தால் ஏற்பட்ட பாவத்தை துடைக்கும் ஆயுதமாகும் எனவே உனது கைகள் கொடைகளை கொடுக்கட்டும் மனது பக்தியால் கனியட்டும் அதன் பிறகு பார் இதுவரை ஓடி ஓடி ஒழிந்த உன் மனது உன் காலடியில் வந்து நாய் குட்டி போல படுத்துக்கிடக்கும்

பிறப்பால் ஏற்பட்ட பாவங்களை தீர்க்காமல் தியானத்தில் எவனும் வெற்றி பெற முடியாது ஆகாசத்தில் பறக்க வேண்டுமென்றால் சிறகு வேண்டும் இல்லம் எங்கும் மலர்வாசம் வீசவேண்டுமானால் பூஞ்சோலைக்குள் வீடு கட்ட வேண்டும் தியானத்தில் அமர்ந்தவுடன் மனமானது குவிய வேண்டுமென்றால் நம்மை சூழ்ந்துள்ள இருவகை பாவங்களும் அழிய வேண்டும் பாவத்தை அழிக்க முயற்சிக்காமல் அழுவது அறியாமையாகும் எனவே நல்லதை மட்டுமே செய் நல்லதை மட்டுமே நினை நல்லது மட்டுமே நடக்கும் நாராயணன் துணை வருவான் பிறவி பெருக்கடலை நீ கடப்பாய்

http://ujiladevi.blogspot.com/2011/09/blog-post_25.html


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
அறிய முடியாத ரகசியம் ! , 1357389அறிய முடியாத ரகசியம் ! , 59010615அறிய முடியாத ரகசியம் ! , Images3ijfஅறிய முடியாத ரகசியம் ! , Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum