ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

4 posters

Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by சாமி Mon May 07, 2012 1:23 am

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது – முதற்பகுதி

ஒரு நாள் நிகழ்ச்சி -
அகவல் -
1 . காலை மலர்ந்தது


இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.


விளக்கம்:
காலைக் கதிரவனின் கதிர்கள் கிழக்குத்திசையில் இன்னும் வரவில்லை.
இருள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டிருந்த இரவு இன்னும் விலகவில்லை.
ஆனாலும் கூட, எப்படி கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்களிடத்தில் அதுவரையிலும் சூழ்ந்து கொண்டிருந்த அறியாமை மெதுவாக நீங்கி விடுதலைப் போன்று அந்த இரவு மெதுவாக விலகி நடந்து கொண்டிருந்தது. தொட்டியில் கரைக்கப்பட்ட சுண்ணாம்பினில் நீலத்தைக் கலந்தது போன்று வெளிர் நீல நிறத்தில் மேகங்கள் இருள் விலகி விடியல் வருவதை உணர்த்தியது. விடியப் போகிற அந்தக் காலைப்பொழுதில் அங்குக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண் தன் மலர் போன்ற கண்கள் விரியும்படியாக விழித்தாள்

(விளக்கு தொடர்ந்து எரியும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty Re: குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by சதாசிவம் Mon May 07, 2012 10:28 am

தொடருங்கள் சாமி,
பாரதிதாசனின் படைப்புகளில் குடும்ப விளக்கு முத்தானது.


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty Re: குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by ஆரூரன் Mon May 07, 2012 2:42 pm

பாரதிதாசன் கவிதைகள் புரியும்படியாகவே உள்ளது.
ஆனாலும் உங்கள் முயற்சி நன்று .
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty Re: குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by பத்மநாபன் Tue May 08, 2012 10:57 am

சாமி wrote: விடியப் போகிற அந்தக் காலைப்பொழுதில் அங்குக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண் தன் மலர் போன்ற கண்கள் விரியும்படியாக விழித்தாள்

அதாவது ஆறு மணிக்கு முன்னாலேயே எழுந்திருக்க சொல்றிங்க!!! அதிர்ச்சி
பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty Re: குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by சாமி Tue May 08, 2012 9:56 pm

2 . அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

விளக்கம்:
மங்கை மட்டும் தூங்கவில்லை; சுறுசுறுப்பான உள்ளமும் ஆர்வமும் அவளுடன் தூங்கியிருந்தன. இப்போது அவள் எழுந்ததினால் அவை இரண்டும், இரண்டு கைகளையும் வீசியபடி எழுந்தன. விடிந்தும் விடியாத அந்தக் காலை வேளையில் ஒளிவீசிய அவளுடைய விழிகள், காண்பதற்கு குளத்தில் உள்ள நீரில் குதித்துக் கொண்டிருக்கும் கெண்டை மீன்களைப் போன்று இருந்தது

(விளக்கு தொடர்ந்து எரியும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Empty Re: குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum