ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

+5
ராஜா
பத்மநாபன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
சாமி
9 posters

Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by சாமி Sat May 05, 2012 8:00 am

நம்மில் அனேகம் பேர் சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள ஆரிய கௌடா சாலைக்கு சென்றிருப்போம்.

ஆரிய கௌடா என்ற பேருக்கு காரணம் தெரியுமா?

ஆரியர் வாசனை அடிக்கிறதே? என்று மயங்க வேண்டாம். வழக்கம் போலத்தான் பெயர் மாற்றம்.

அந்தப் பேருக்கு உரியவர் HB ஆரி கௌடர். நீலகிரியைச் சேர்ந்த படுக இனத்தவர்களின் வழிகாட்டி மற்றும் தலைவர்.

அவரின் தந்தை ராவ் பகதூர் J.பெல்லி கௌடர் நீலகிரி ரயில் பாதையை ஒப்பந்தப் பணிகளின் மூலம் எடுத்து அமைத்தவர். அந்தப் பணி 1908 ல் நிறைவேறியது. அதன்மூலம் பெரும் செல்வந்தராக ஆனவர். அவரது இனத்தவர்களின் மதிப்பிற்குரியவராகவும் ஆனார். அவரது இனத்தவர்கள் எந்த ஒரு பிரச்சினை அல்லது ஆலோசனை என்றாலும் இவரை நாட ஆரம்பித்தனர். பெல்லி கௌடர் தனது இனத்தவர்களுக்காக தனது சொந்தக்கிராமத்தில் இலவசக் கல்விக் கூடத்தையும் ஏற்படுத்தினார். அது இன்றும் இயங்கி வருகிறது. பெல்லி கௌடரின் மகன் ஆரி கௌடர் 1893 ஆம் ஆண்டு பிறந்தார். தனது மகனை மதறாஸ் கிரிஸ்டியன் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். தன்னை ஒரு தொழில் முனைவோராக நினைத்த அவர், தனது மகன் அரசியலில் நுழைய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.

HB ஆரி கௌடர், 1923 ல் படுக இனத்தைச் சார்ந்த முதல் தமிழக மேலவை உறுப்பினராக ஆனார். 1934 வரை அதே பதவியில் தொடர்ந்தார். பின்னர் 1940ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மதுவிலக்குச் சட்டத்திற்கு ஆதரவாக அதை நீலகிரியில் செயல்படுத்தவும் முனைந்தார். ‘நீலகிரி கோஆபரேட்டிவ் மார்க்கெட்டிங்க் சொஸைட்டி’ ஏற்படுத்தி, ஆதிக்கம் செலுத்தி வந்த இடைத்தரகர்களை அகற்றி மலைவாழ் மக்களுக்கு நல்வழி ஏற்பட வழி வகுத்தார்.

நீதிக்கட்சியின் கருத்துக்களே அவரை மிகவும் ஈர்த்தது. மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.

ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?

(இந்த துணுக்குச் செய்தியில் உள்ள சில தகவல்கள் THE HINDU நாளிதழில் மே 2, 2012 ல் வெளிவந்திருந்தது.)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by T.N.Balasubramanian Sat May 05, 2012 8:11 am

பழைய ஏடுகளிலும் ,இன்னும் சில புதுப்பிக்காத பெயர் பலகைகளிலும் ஆரி கௌடர் பெயர் பார்க்கிறேன் . ஆரி என்பது பின்பு திரிந்து "ஆர்ய" என்று மாறி விட்டது. அரசியல் காரணமாக "ஆர்ய " என்பது மறைந்தாலும் ஆச்சரியபடமுடியாது .

(ஆரி கௌடா ரோடிலிருந்து பிரியும் போஸ்டல் காலனியில்தான் எந்தன் வீடும் உள்ளது.)
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat May 05, 2012 8:15 am

புதிதாக தெரிந்துகொண்டேன் சாமி ...நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by பத்மநாபன் Sat May 05, 2012 9:08 am

சாமி wrote:
மாம்பலம் ரயில்வே நிலையத்தை ஒட்டியிருந்த தனது சொந்த நிலத்தை நகர வளர்ச்சிக்காக அரசாங்கத்துக்கு இலவசமாகவும் கொடுத்தார். நீதிகட்சி ஆட்சியில் இந்த சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது. ஆரிய கௌடா சாலை மறுபடியும் ஆரி கௌடர் சாலையாக மாறுமா?

தனது சொத்தை நற்பணிகளுக்காக கொடுத்தவர் பெயர்தான் விளங்க வேண்டும். அதுதானே முறை!

இல்லா விட்டால் " .....முற்காலத்தில் நைமிசாரன்யக் காட்டில் சுத முனிவர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யன்தான் இந்த ஆரியக் கௌடர் . அவர் பல வேள்விகளை இந்த மாம்பலம் பகுதியில் செய்து வந்தார்...." என்று புதுப் புராணம் ஒன்று உரூவாக்கிவிடுவார்கள்.

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்


பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by ராஜா Sat May 05, 2012 10:34 am

சூப்பருங்க நன்றி அரிய தகவல் சாமி , நாமும் இனிமேல் ஆரி கவுடர் சாலை என்றே அழைப்போம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by balakarthik Sat May 05, 2012 10:36 am

ஆரி கவுடர் சாலையில் உள்ள பெருமால்த்தான் அனைவரையும் ஷேமிக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by யினியவன் Sat May 05, 2012 10:40 am

உண்மையான விளக்கத்தை விளக்கியதுக்கு நன்றி சாமி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by பாலாஜி Sat May 05, 2012 10:51 am

மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .

பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by ஹர்ஷித் Sat May 05, 2012 3:03 pm

பகிவுக்கு நன்றி சாமி அவர்களே
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by ராஜா Sat May 05, 2012 3:08 pm

வை.பாலாஜி wrote:
மாம்பலத்தில் தங்கியிருந்த போது நிறைய முறை அந்த சாலையை கடந்து சென்ருயிருக்கின்றேன் . இன்றுதான் அதன் நிஜ பெயரை தெரிந்துகொண்டேன் .பகிவுக்கு நன்றி சாமி அவர்களே .
மாம்பலம் மேன்ஷன்நா தல ?? 1999 - 2000 வாக்கில் எனது நண்பர்கள் சிலர் அங்கு தங்கியிருந்தார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம். Empty Re: ஆரிய கௌடா சாலை, மேற்கு மாம்பலம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum