ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

+5
ராஜா
balakarthik
பிரசன்னா
யினியவன்
முஹைதீன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by முஹைதீன் Sun Apr 29, 2012 12:47 pm

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை 28tintedglass1
குற்றங்களை தடுக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட சதவீதத்திற்கு மேல் கார்களில் கருப்பு கண்ணாடிகளை பயன்படுத்த சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது.

கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

விபச்சாரம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகள் கருப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் எளிதாக தப்பி விடுவதாகவும், எனவே மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கார்களின் கண்ணாடியில் கூலிங் பேப்பர் ஒட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச், கார்களில் கருப்பு உள்ளிட்ட கலர் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்டட் கிளாஸ்)பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது.

மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் கண்ணாடிகளில் கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கண்ணாடியில் எவ்வளவு சதவீதம் சன் ப்லிம் ஒட்ட வேண்டும்:

மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) 70 சதவீதம் ஒளி உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.30 சதவீதம் மட்டுமே ஒளி ஊடுருவதை தடுக்கும் வகையில் கலர் பேப்பர்களை ஒட்டவேண்டும்.

இதேபோன்று, பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் அளவுக்கு வெளிச்சம் உள்ளே இருக்கும் அளவுக்குத்தான் கருப்பு அல்லது வேறு கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.

http://tamil.drivespark.com/news/2012/04/court-directive-on-use-tinted-glass-cars-aid0173.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் Sun Apr 29, 2012 12:52 pm

கருப்பு கண்ணாடி கண் மூடி கண்டபடி ஊழல் செய்து திரியும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் என்ற சட்டமும் வரப் போகிறது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by பிரசன்னா Sun Apr 29, 2012 12:54 pm

போலீஸ்க்கு மாமூல் கிடைக்கை உதவியது சுப்ரீம் கோர்ட்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by balakarthik Sun Apr 29, 2012 12:55 pm

கருப்பு மூக்கு கண்ணாடியாவது போடலாமா இல்ல அதுக்கும் தடையா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:01 pm

balakarthik wrote:கருப்பு மூக்கு கண்ணாடியாவது போடலாமா இல்ல அதுக்கும் தடையா
அப்ப வெள்ளை மூக்கு இருக்கரவங்க போடக் கூடாதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ராஜா Sun Apr 29, 2012 1:06 pm

அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா .... அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:07 pm

ராஜா wrote:அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா .... அழுகை
கார் ஓட்டும் போது தண்ணி தான் நீங்க போடக் கூடாது ராஜா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by ராஜா Sun Apr 29, 2012 1:13 pm

கொலவெறி wrote:
ராஜா wrote:அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா .... அழுகை
கார் ஓட்டும் போது தண்ணி தான் நீங்க போடக் கூடாது ராஜா.
தண்ணி போட மாட்டேன் அண்ணாத்த , பெட்ரோல் தான் போடுவேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by யினியவன் Sun Apr 29, 2012 1:22 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:
ராஜா wrote:அப்ப இனிமேல் காரில் போகும்போது கூலிங்க் கிளாஸ் கூட போட கூடாதா .... அழுகை
கார் ஓட்டும் போது தண்ணி தான் நீங்க போடக் கூடாது ராஜா.
தண்ணி போட மாட்டேன் அண்ணாத்த , பெட்ரோல் தான் போடுவேன்
பெட்ரோல் விலையப் பார்த்து ரொம்ப பேரு இப்ப தண்ணி தான் போடுராங்களாம் - கவலைய மறக்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு இன்று சென்னையில் அமலுக்கு வந்தது

Post by உமா Thu May 17, 2012 3:45 pm

சென்னை, மே. 17-

கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட கார்களில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்தியா முழுவதும் கார்களில் ஒட்டப்பட்டுள்ள கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும் என்றும், அதற்கு நிரந்தரமாக தடை விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. டெல்லி, பெங்களூரில் போலீசார் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார் 2 நாட்களில் 10 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான தடை இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா, உத்தரவின்பேரில் போலீசார் இன்று முதல் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதன்படி கருப்பு கண்ணாடி ஒட்டப்பட்ட கார்களில் சென்றால் முதல் முறை ரூ.100 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் சிக்கினால் ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும்.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு என்பதால் கார்களில் கருப்பு கண்ணாடிகளை அகற்றுவதற்கு கால அவகாசம் எதையும் நாங்கள் நிர்ணயிக்க முடியாது. எனவே பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கருப்பு கண்ணாடிகளை அகற்றவேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருப்பு கண்ணாடி பொறுத்தப்பட்ட காருக்குள் குற்றச்செயல்கள் நடப்பது வெளியில் தெரிவதில்லை. இதற்கு உதாரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றது.

சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை காரில் சென்ற வாலிபர்கள் சிலர் கடத்திச் சென்று காருக்குள் வைத்தே சின்னாபின்னமாக்கி விட்டனர்.அப்பெண்ணின் கதறலும், கூச்சலும் கருப்பு கண்ணாடியால் வெளியில் கேட்காமலேயே போய்விட்டது. காருக்குள் நடந்த எதுவும் வெளியில் தெரியவும் இல்லை.

இதுபோல, பல்வேறு கடத்தல் சம்பவங்களிலும் கருப்பு கண்ணாடிகள், குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு கவசம் போலவே அமைந்துள்ளது. இதேபோல கருப்பு கண்ணாடியின் போர்வையில் கார்களுக்குள் வைத்து செக்ஸ் லீலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையில் இது சர்வ சாதாரணமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

குறிப்பாக மெரீனா கடற்கரையில் விடுமுறை நாட்களில் கார் பார்க்கிங் பகுதியில் இந்த லீலைகள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது. போதை ஆசாமிகளும் காருக்குள் அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பலர், கடற்கரை காற்றை அனுபவித்தப்படியே காரில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கார்களில் ஒட்டப்படும் கருப்பு கண்ணாடிகள் அகற்றப்படுவதன் மூலம் இனி... இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புகள் அதிகமாகும்.

நன்றி
மாலை மலர்.

---


நல்லது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை Empty Re: கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum