ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

5 posters

Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by மகா பிரபு Fri Apr 27, 2012 2:43 am

சச்சினின் அரசியல் "இன்னிங்ஸ்' ஆரம்பமாகிறது. கிரிக்கெட் அரங்கில் இவர் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படுகிறது.

இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள இவர், சமீபத்தில் 100வது சதம் அடித்து வரலாறு படைத்தார். இவரை கடந்த மாதம் காங்., கட்சியை சேர்ந்த சில மூத்த தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

சோனியாவுடன் சந்திப்பு: இந்நிலையில், நேற்று காங்., தலைவர் சோனியாவை டில்லியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தார் சச்சின். உடன் அவரது மனைவி அஞ்சலி, பி.சி.சி.ஐ., துணை தலைவர் ராஜிவ் சுக்லா இருந்தனர். சச்சினுடன் அரைமணி நேரம் செலவிட்ட சோனியா, 100வது சதம் அடித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின் ராஜ்யசபா எம்.பி., பதவியை ஏற்க சச்சின் சம்மதம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி ஒப்புதல்: அரசியல் சாசனப் பிரிவு 80ன்படி கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவையில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ராஜ்யசபாவில் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி பரிந்துரை செய்யலாம். இதன்படி சச்சின், இந்தி நடிகை ரேகா, தொழில் அதிபர் அனு அகா ஆகியோரது பெயரை மத்திய அரசு பரிந்துரை செய்தது. இதன் விவரத்தை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார். இது ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படும் முதல் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெறுகிறார் சச்சின், 39. கடந்த 1980களில் இந்தி திரையுலகில் கொடி கட்டிப்பறந்த நடிகை ரேகா, 57, தனது நடிப்புக்காக பல்வேறு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

கட்சியில் சேரலாம்: சமீபத்தில் சர்வதேச அளவில் தனது 100வது சதம் அடித்த சச்சினுக்கு நாட்டின் மிக உயர்ந்த "பாரத ரத்னா' விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் எம்.பி. பதவிக்கு பரிந்துரை செய்திருப்பது, அவருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும். பரிந்துரை செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,க்கள், கட்சித் தாவல் தடை சட்டப்படி, 6 மாதத்துக்குள் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். இதன்படி சச்சின் விருப்பப்பட்டால், காங்., உட்பட எந்த கட்சியிலும் சேரலாம்.

வாழ்த்து மழையில்: பார்லிமென்ட்டில் சச்சின் காலடி எடுத்து வைக்க இருப்பதை காங்., பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன. கிரிக்கெட் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவரது குரல், விளையாட்டு வளர்ச்சிக்காக பார்லிமென்ட்டில் எதிரொலிக்கும் என கருத்து தெரிவித்தனர். இது குறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி கூறுகையில்,""சச்சின் பார்லிமென்ட்டுக்கு வந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்தால், நல்லது தான்,''என்றார்.

பி.சி.சி.ஐ., வரவேற்பு: ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு சச்சின் பெயரை அரசு பரிந்துரை செய்திருப்பதை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) வரவேற்றுள்ளது. இதன் நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்""விளையாட்டு வீரராக சச்சின் செய்துள்ள சேவைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். இப்பதவியை பெறுவதற்கு தகுதியானவர்,'' என்றார்.

கிடைக்குமா 100வது "சீட்': சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதம் அடித்துள்ளதை குறிக்கும் வகையில், அவருக்கு ராஜ்யசபாவில் 100ம் எண் கொண்ட "சீட்' ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது இந்த "சீட்', இந்துஸ்தான் லீவர் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசோக் கங்குலிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சச்சினுக்காக தான் அமர்ந்து வரும் 100ம் நம்பர் "சீட்'டை தியாகம் செய்து விட்டு, வேறொரு இடத்தில் அமர இவர் ஒப்புக் கொண்டுள்ளாராம்.





தினமலர்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty தெண்டுல்கருக்கு மேல்-சபை எம்.பி. பதவி, மத்திய அரசு நியமித்தது

Post by சிவா Fri Apr 27, 2012 6:40 am

கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனை படைத்த தெண்டுல்கரை, டெல்லி மேல்-சபை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, 250 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மேல்-சபைக்கு 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும்.

தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி

கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மேல்-சபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு மத்திய அரசு தற்போது டெல்லி மேல்-சபை உறுப்பினர் பதவியை வழங்கி கவுரவித்து இருக்கிறது.

39 வயதான தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியவர். கடந்த மாதம் அவர் தனது நூறாவது சதத்தை பூர்த்தி செய்து வரலாற்று சாதனை படைத்தார்.

பிரதமர் சிபாரிசு

தெண்டுல்கரை மேல்-சபை எம்.பி.யாக நியமிக்க சிபாரிசு செய்து அதற்கான செய்திக் குறிப்பை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். உள்துறை அமைச்சகம் அதை ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு அனுப்பி வைத்தது.

அதை ஏற்று தெண்டுல்கரை மேல்-சபை எம்.பி.யாக நியமிப்பதற்கு ஜனாதிபதி நேற்று இரவு முறைப்படி ஒப்புதல் அளித்தார்.

`பாரத ரத்னா' கோரிக்கை

தெண்டுல்கருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான `பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று சமீபத்தில் பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் கட்சிகளும், அவருக்கு `பாரத ரத்னா' விருது வழங்க ஆதரவு தெரிவித்தன.

இந்தநிலையில், அவருக்கு டெல்லி மேல்-சபை நியமன உறுப்பினர் பதவியை மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

சோனியாவுடன் சந்திப்பு

முன்னதாக, தெண்டுல்கர் நேற்று காலை தனது மனைவி அஞ்சலியுடன் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது, கிரிக்கெட் விளையாட்டில் நிகழ்த்தி வரும் சாதனைகளுக்காக தெண்டுல்கருக்கு சோனியா காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது.

விளையாட்டு துறை

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை வைஜயந்திமாலா, பிரபல இந்தி நடிகைகள் ஹேமமாலினி, நர்கீஸ் தத், பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், வங்காள மொழி இயக்குனர் மிருணாள் சென் போன்ற கலையுலக பிரமுகர்கள் சிலர் ஏற்கனவே மேல்-சபை உறுப்பினர்களாக பதவி வகித்து உள்ளனர். பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தற்போது மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

ஆனால் விளையாட்டு துறையில் தீவிரமாக இருக்கும் ஒருவர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை ஆகும். அந்த பெருமை தெண்டுல்கருக்கு கிடைத்து உள்ளது.

கிரிக்கெட் வாரியம் வரவேற்பு

தெண்டுல்கர் டெல்லி மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி மகிழ்ச்சி தெரிவித்தார். தெண்டுல்கர் மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டது விளையாட்டு துறைக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என்று அவர் கூறினார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் வரவேற்பு தெரிவித்து உள்ளது. விளையாட்டு துறைக்கு தெண்டுல்கர் ஆற்றியுள்ள சேவை அங்கீகரிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், அவர் மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு தகுதியானவர் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறினார்.

பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்; தெண்டுல்கர் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது குறித்து பெருமை கொள்வதாகவும், மேல்-சபை உறுப்பினராகவும் அவர் திறம்பட செயல்படுவார் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்தி நடிகை ரேகா

பிரபல இந்தி நடிகை ரேகா, தொழில் அதிபர் அனு ஆகா ஆகியோரின் பெயர்களும் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

நடிகை ரேகா 1980-களில் இந்திப்பட உலகில் கொடிகட்டி பறந்தவர். 57 வயதான இவர் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

70 வயதான தொழில் அதிபர் அனு ஆகா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சிலில் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் சமூக சேவகரும் ஆவார்.

தினதந்தி


சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by யினியவன் Fri Apr 27, 2012 10:35 am

அப்ப இனிமே சச்சின் ராஜ்ஜியசபா போகும் தினங்களில் மத்த எம்‌பி ஈஸ் இனி தூங்காம உள்ள கிரிக்கெட் விளயாடுவாங்களா?

வாழ்த்துகள் சச்சின் - இன்னும் நாலஞ்சு செஞ்சுரி எப்படியும் அடிப்பாரு - அப்ப அந்த சீட் நம்பர் எம்பீக்களின் சீட்டுக்கு ஆபத்தா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by மகா பிரபு Fri Apr 27, 2012 9:35 pm

கொலவெறி wrote:அப்ப இனிமே சச்சின் ராஜ்ஜியசபா போகும் தினங்களில் மத்த எம்‌பி ஈஸ் இனி தூங்காம உள்ள கிரிக்கெட் விளயாடுவாங்களா?

வாழ்த்துகள் சச்சின் - இன்னும் நாலஞ்சு செஞ்சுரி எப்படியும் அடிப்பாரு - அப்ப அந்த சீட் நம்பர் எம்பீக்களின் சீட்டுக்கு ஆபத்தா?
புன்னகை புன்னகை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by யினியவன் Fri Apr 27, 2012 9:43 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:அப்ப இனிமே சச்சின் ராஜ்ஜியசபா போகும் தினங்களில் மத்த எம்‌பி ஈஸ் இனி தூங்காம உள்ள கிரிக்கெட் விளயாடுவாங்களா?

வாழ்த்துகள் சச்சின் - இன்னும் நாலஞ்சு செஞ்சுரி எப்படியும் அடிப்பாரு - அப்ப அந்த சீட் நம்பர் எம்பீக்களின் சீட்டுக்கு ஆபத்தா?
புன்னகை புன்னகை புன்னகை
அப்புறம் என்ன பிரபு? கைய்யப் பிடிச்சு காலப் பிடிச்சு எம்பி சீட்டு வாங்கி, மக்கள் கிட்ட புழுகு மூட்டைய அவுத்து விட்டு ஏமாத்தி சபைக்குள்ள வந்தா நிம்மதியா ஒரு சீட்ல உக்காரக் கூட விட மாட்டேங்கராங்க. அந்த எம்பிக்களோட கஷ்டத்த யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கராங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by இளமாறன் Sat Apr 28, 2012 12:02 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி கலை தொழில் பிறகு விளையாட்டு துறையும் உள் நுழைவது நல்லது தான் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by மகா பிரபு Sat Apr 28, 2012 7:03 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:அப்ப இனிமே சச்சின் ராஜ்ஜியசபா போகும் தினங்களில் மத்த எம்‌பி ஈஸ் இனி தூங்காம உள்ள கிரிக்கெட் விளயாடுவாங்களா?

வாழ்த்துகள் சச்சின் - இன்னும் நாலஞ்சு செஞ்சுரி எப்படியும் அடிப்பாரு - அப்ப அந்த சீட் நம்பர் எம்பீக்களின் சீட்டுக்கு ஆபத்தா?
புன்னகை புன்னகை புன்னகை
அப்புறம் என்ன பிரபு? கைய்யப் பிடிச்சு காலப் பிடிச்சு எம்பி சீட்டு வாங்கி, மக்கள் கிட்ட புழுகு மூட்டைய அவுத்து விட்டு ஏமாத்தி சபைக்குள்ள வந்தா நிம்மதியா ஒரு சீட்ல உக்காரக் கூட விட மாட்டேங்கராங்க. அந்த எம்பிக்களோட கஷ்டத்த யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கராங்க. புன்னகை
அது உண்மைதான். ஆனா எந்த சீட்ல உக்கந்தாலும் நம்ம ஆளுக என்னத்தை பெருசா சாதிக்க போறாங்க? உக்காந்து தூங்குரத்தை எங்க தூங்குனா என்ன?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by ஹர்ஷித் Sat Apr 28, 2012 10:08 am

மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி Empty Re: சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
»  தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
» மத்திய அரசின் விளம்பரங்களுக்கு ரூ.1,600 கோடி செலவு
» மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum