ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by Guest Wed Apr 25, 2012 10:43 am

ஓட்டுப் பொறுக்கி அரசியலில் என்னதான் கேவலமான நாய்ச் சண்டையில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஈடுபட்டிருந்தாலும், வேறு பல விடயங்களில் அண்ணனும் தங்கையுமாக உறவு கொண்டு, ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள். இதற்கு, பன்னாட்டு இந்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்வதில் இருந்து சோனியா-மன்மோகன் கும்பலுக்குத் துணை நின்று ஈழத் தமிழரின் முதுகில் குத்துவது வரை எவ்வளவோ எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். கருணாநிதி ஜெயலலிதாவின் பாசப் பிணைப்புக்கு மிகச் சமீபத்திய சான்றாக, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி அவதூறு செய்து ஒடுக்குவதில் இருவரும் கை கோர்த்துக் கொண்டு செயல்படுவதைக் கூறலாம்.

இந்த வகையில் காங்கிரசு, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் “தேசியக் கூட்டணி”யும் கருணாநிதி, ஜெயலலிதாவின் “திராவிடக் கூட்டணி”யும் ஒரே உத்தியைத்தான் பின்பற்றுகின்றன; இரண்டு கூட்டணிகளும் கூட்டுச் சேர்ந்து ஒரு மகாகூட்டணியும் அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. கூடங்குளம் அணுஉலை பற்றிய அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக என்று மத்திய-மாநில அரசுகள் தனித்தனியே இரண்டு நிபுணர் குழுக்களை அமைத்தன. அவை கூடங்குளம் வளாகத்தில் விருந்துண்டு ஏப்பமும் அறிக்கையும் விட்டதோடு சரி. போராடிய மக்களை சந்திக்கவோ, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவோ இல்லை.

இந்த நிலையில், அணுஉலை எதிர்ப்புப் போராட்டத் தலைமைக்கு எதிராக “அமைப்புசாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் அந்நியத் தொடர்பு, அந்நிய நிதி உதவி” என்ற அவதூறு கட்டவிழ்த்து விடப்பட்டது. மன்மோகன் சோனியாவின் எடுபிடி நாராயணசாமி போதாதென்று சிதம்பரமும் மன்மோகனுமே இந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் இறங்கினர். சி.பி.ஐ., ஐ.பி. முதலிய மத்திய உளவுப் படைகளை ஏவி விசாரணை, சோதனை, வங்கிக் கணக்கு முடக்கம், ஜெர்மனி சுற்றுலாப் பயணி வெளியேற்றம் என்று அனைத்து ஊடக உதவியுடன் பல கூத்துக்களை நடத்தினர். கடைசியில் அவ்வாறான புகார்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை, “உறுதிப்படுத்தப்படவில்லை” என்று நாடாளுமன்றத்திலேயே அறிவித்து விட்டனர். ஆதாரம் எதுவுமின்றி நாராயணசாமி, சிதம்பரம், மன்மோகன் ஆகியோர் புளுகியதற்கோ, அதற்காக உளவுத்துறைகள் கேடாகப் பயன்படுத்தப்பட்டதற்கோ எந்த விளக்கமும் தரப்படவில்லை.

ஆனால், அணுஉலைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அவதூறுப் பிரச்சாரம் என்ற தொடர் ஓட்டக் குச்சியை (பேட்டனை) ஜெயலலிதாவும், தமிழக உளவுத்துறையும் கையேற்றுக் கொண்டனர். அமைதிவழி உண்ணாவிரதப் போராட்டங்கள் மட்டுமே நடத்தியவர்கள் மீது நூற்றுக்கணக்கான பொய் வழக்குகள் போட்டு, பல ஆயிரம் போலீசாரை குவித்து, அதிரடிப்படையின் அணிவகுப்பு மிரட்டல் விடுத்து, குழந்தைகளுக்குப் பால் உள்ளிட்ட உணவுப் பொருள், மின்சாரம், குடிதண்ணீர் வழங்கீட்டைத் தடுத்து, ஏதோ பயங்கரவாதத் தடுப்புப் போல பாசிச அடக்குமுறையை ஏவிவிட்டனர். இதனால் ஏற்பட்ட எதிர்ப்பலைகளைத் திசை திருப்பிவிடுவதற்காக வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்துடன், போராட்டத் தலைமைக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு, நக்சலைட்டுகள் ஊடுருவல் அதனால் தீவிரவாத வன்முறை போராட்டங்களில் குதிப்பார்கள் என்று ஜெயாவின் உளவுத்துறையும் போலீசும் பீதியூட்டும் செயல்களில் இறங்கின.

இந்த அவதூறுக்கு ஆதாரமாக உளவுத்துறையே “முன்னாள் நக்சல்பாரிகள்” என்று சொல்லும் மூன்றுபேரைப் பிடித்து, அவர்களிடம் வன்முறைக்கு வழிவகுக்கும் கடிதமும், வரைபடமும் சிக்கியதாகவும், போராட்டக்காரர்களிடையே நக்சல்பாரிகள் உள்ளதான “வீடியோ” ஆதாரங்களை ஆய்வு செய்வதாகவும் பலவாறு புளுகுகிறது. பிடிபட்டதாகக் கூறப்படும் எவரும் நக்சல்பாரி அமைப்பினர் அல்ல. போலி ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதும் பொய் வழக்குகள் புனைவதும் ஜெயலலிதாவின் உளவுத்துறைக்கும் போலீசுக்கும் கைவந்த கலை. கலைஞர் மற்றும் சன் குழுமங்களின் வானொளி அலைவரிசைகள் ஜெயாவின் இந்த அவதூறுப் பிரச்சாரத்தை விசுவாசமாக ஒலிஒளிபரப்புகின்றன.

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைப் பிடித்து தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொல்வது; ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்புகளுக்குப் பழிபோடுவது; சீரழிந்த, அமைப்பு சாரா நபர்களைப் பிடித்து அவர்களைக் காட்டி நக்சல்பாரிகளை இழிவுபடுத்துவது இதெல்லாம் போலீசு, உளவுத் துறையின் கைவரிசை. வெளிநாட்டவர், நக்சல்பாரிகள் என்பதாலயே நாட்டு மக்களின் நியாயமான எந்தப் போராட்டங்களையும் ஆதரிக்கக் கூடாதா? மக்கள் மீதான பாசிச அடக்குமுறைகளை எதிர்க்கக் கூடாதா? மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.

வினவு
avatar
Guest
Guest

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by ராஜா Wed Apr 25, 2012 10:48 am

மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.
நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by யினியவன் Wed Apr 25, 2012 10:55 am

தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by Guest Wed Apr 25, 2012 10:59 am

கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்
avatar
Guest
Guest

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by யினியவன் Wed Apr 25, 2012 11:02 am

புரட்சி wrote:
கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்
எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by Guest Wed Apr 25, 2012 11:04 am

கொலவெறி wrote:
புரட்சி wrote:
கொலவெறி wrote:தமிழர்களை ஐந்தாடுகளுக்கு ஒரு முறை பிரித்தாளும்
இணை பிரியா அரசியல் அரக்கணும், அரக்கியும்
அந்தோ பரிதாபம் தமிழர்கள்.

பரிதாப தமிழர்கள் எழுந்தால் இவர்கள் நிலையோ , இருக்கும் இடம் தெரியாமல் போகும் , தமிழன் பரிதாபதிற்கு உரியவன் மட்டும் அல்ல ,, கண்ணிருந்தும் குருடன்
எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.

உண்மையான வார்த்தை அண்ணே சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by ராஜா Wed Apr 25, 2012 11:16 am

கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by யினியவன் Wed Apr 25, 2012 11:19 am

ராஜா wrote:
கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.
ஐ அப்ரிஷியெட் திஸ் தமிழன் - டாமில் டாஸ்மாக் ஸ்பிரிட் வாழ்க.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by Guest Wed Apr 25, 2012 11:28 am

ராஜா wrote:
கொலவெறி wrote:எழ விட மாட்டாங்களே. குருடாய், முடமாய், மூடர்களாய் தொடரவே அவர்கள் செவ்வென பணி செய்கிறார்கள்.
பின்ன அதுக்காக தானே , நாய்க்கு எலும்பு துண்டு போடுற மாதிரி , மாத்தி மாத்தி இலவசங்களை அள்ளி தெளித்து கிட்டு இருக்காங்க. பேசாம அதை வாங்கிக்கிட்டு டாஸ்மாக்ல சரக்கு அடிச்சிட்டு டீ கடைல உட்கார்ந்து தினத்தந்தி பேப்பர் பார்த்துட்டு உலக அரசியல் பற்றி பேசிட்டு இருந்தாலே எங்களுக்கு போதும்.

சூப்பருங்க
avatar
Guest
Guest

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by பாலாஜி Wed Apr 25, 2012 11:42 am

ராஜா wrote:
மக்களை ஒடுக்க முயலும் தேசிய, திராவிடக் கூட்டணிகள் அணுஉலைகளை விடவும் ஆபத்தானவை.
நன்றி

முற்றிலும் உண்மை ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும் Empty Re: ஓட்டுப் பொறுக்கி ! கருணாநிதியும் ஜெயலலிதாவும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum