ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

+2
பாலாஜி
முஹைதீன்
6 posters

Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by முஹைதீன் Tue Apr 24, 2012 1:41 pm

இயக்குனர் ஷங்கரின் ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 24, 2012,

சினிமாவில் எங்கும் பிரம்மாண்டம், எதிலும் பிரம்மாண்டத்தை காட்டி பிரம்மிக்க வைத்த இயக்குனர் ஷங்கர், தனது கார் விஷயத்திலும் தனது பிரம்மாண்ட எண்ணத்தை பிரதிபலித்துள்ளார் ஆம், உலகின் ஒவ்வொரு பணக்காரரும் விரும்பும் விஷயங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி இந்த முறை தனது பெயரை செய்தியாக்கியுள்ளார் ஷங்கர்.

பல கோடீஸ்வரர்களின் அந்தஸ்தின் அடையாளமாக ரோல்ஸ் ராய்ஸ் காரை கருதுகின்றனர். தமிழனை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஷங்கரும் தற்போது ரோல்ஸ் ராய்ஸ் குடும்பத்தில் இணைந்துள்ளார். சுங்க வரி உட்பட ரூ.3 கோடி கொடுத்து வாங்கியுள்ள இந்த காருக்கு ரூ.45 லட்சம் செலவழித்து பதிவு செய்துள்ளார். அந்த காரில் அப்படி என்னதான் இருக்கிறது. இயக்குனர் ஷங்கர் கோஸ்ட்டுடன் ஒரு சிறு செய்திப் பயணம். image-24-rollsroycecar.jpg tamil.drivespark.com}
ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பான்டம் மற்றும் கோஸ்ட் ஆகிய 2 மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் வாங்கியிருப்பது கோஸ்ட். இந்த கார் சாதாரண ரகம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் ஆகிய இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.

பொதுவாக, ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் சிறப்பு வாடிக்கையாளர்கள் விரும்பும் விஷயங்களுக்கு தக்கவாறு கஸ்டமைசேஷன் செய்து தரப்படுவதான். எனவேதான், ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் புக்கிங் செய்தாலும் டெலிவிரி பெறுவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது.

ஷங்கர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கார் 2240 கிலோ எடை கொண்டது. ஆடம்பரத்தை அள்ளி இறைக்கும் வெளிப்புற வடிவமைப்பு. முன்பக்க கிரில், ஹெட்லைட் என அனைத்திலும் கோஸ்ட் முழுவதும் ரோல்ஸ் ராய்ஸின் கைவண்ணம் பளிச்சிடுகிறது.

இந்த கார் 16 விதமான கலர்களில் கிடைக்கிறது. உங்களுக்கு விருப்பமான கலரை மிக்ஸிங் செய்தும் பெயின்ட்டிங் செய்து தருவார்கள். சுருக்கமாக சொன்னால், நீங்கள் நினைக்கும் கலரில் இந்த காரை பெற்றுக்கொள்ளலாம்.

ஏறி இறங்குவதற்கு ஏதுவாக இதன் கதவுகள் பிரத்யேகமான வடிவமைப்பை கொண்டுள்ளன. காரில் ஏறி உட்கார்ந்தவுடன் ஒரு விசாலாமான அறையில் உட்கார்ந்திருப்பது போன்ற அனுபவத்தை தரும். லெதர் இருக்கைகள் கண்ணை கவர்கிறது. இந்த இருக்கைகள் அனைத்தும் கையால் தைக்கப்படுகின்றன. லெதர் இருக்கைகளை தைப்பதற்கு பணியாளர்கள் இரண்டு வாரங்கள் எடுத்துகொள்கின்றனர்.

இதேபோன்று, ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டு ஆகியவை தேக்கு மர வேலைப்பாடுகளால் நிறைந்திருக்கிறது. இந்த தேக்கு மரங்கள் கேரளாவிலிருந்து செல்கின்றன என்பது கொசுறு செய்தி. ஒட்டுமாத்தத்தில் ஒரு நகரும் மாளிகை போன்று கலை நயம் மிக்கதாக இருக்கிறது இதன் உட்புறம். மேற்கூரையில் சன்ஃரூப் எனப்படும் திறந்து மூடும் கண்ணாடி கூரை பொருத்தப்பட்டிருக்கிறது.

கோஸ்ட் காரில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளும் உண்டு. டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஏர் சஸ்பென்ஷன் சிஸ்டம் ஆகியவை உண்டு. இதேபோன்று, இரவில் செல்லும்போது 300 மீட்டருக்கு முன்னால் வரும் பாதசாரிகள் மற்றும் விலங்குகள் குறித்து எச்சரிக்கை செய்யும் நைட்விஷன் அஸிஸ்ட் சிஸ்டமும் உண்டு.

காரின் முன்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருக்கிறது.இதனால், எந்த பக்கத்திலிருந்து வாகனங்கள் மோதினாலும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்புக்கு உத்தரவாதம்.
Read: In English
செயற்கோள் இணைப்பு வசதியுடன் கூடிய கன்ட்ரோல் சென்டர் டிஸ்ப்ளே மூலம் ஏராளமான வசதிகளை பெறலாம். இதேபோன்று, வைன்ட் ஸ்கிரீன் கூறப்படும் முன்பக்க கண்ணாடியில் பூசப்பட்டிருக்கும் ஸ்பெஷல் கோட்டிங்கில் காரின் வேகம் உள்ளிட்ட விபரங்களை காணலாம். தலையை குனிந்து ஸ்பீடோ மீட்டரை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால் கவனம் பிறழாமல் சாலையை கவனித்து ஓட்ட முடியும்.

இந்த காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 2.24 டன் எடை கொண்ட இந்த காரை வெறும் 4.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிப் பிடிக்கிறது இந்த எஞ்சின். மேலும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிமீ வேகத்தில் செல்லும். ஆனால், நம்மூர் சாலைகளில் இந்த காரின் முழு வேகத்தை எட்டிப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்.

இதுதவிர, இருக்கை முதல் ஸ்டீயரிங் வீல் வரை ஏராளமான கஸ்டமைசேஷன் வசதியை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

http://tamil.drivespark.com/four-wheelers/2012/dirctor-shankar-rolls-royce-car-special-review-aid0173.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by பாலாஜி Tue Apr 24, 2012 1:50 pm

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை 24-rollsroycecar


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty மல்லிகா ஷெராவத்தின் 'பின்புலம்' சரியில்லை என்று கூறிய ரோல்ஸ் ராய்ஸ்!

Post by பாலாஜி Tue Apr 24, 2012 1:52 pm

உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும் என்ற நீடிக்கிறது.

இதற்கு பணம் இருந்தால் மட்டும் போதாது, தகுதியும் அதாவது தக்க பின்புலமும் வேண்டும் என்பது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கொள்கையும் ஒரு காரணமாக இருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார் வாங்குவதற்கு பணத்தைவிட முக்கியமானது தகுதிதானாம். ஆம், கோடி கோடியாய் பணமிருந்தாலும் தகுதியுடையவர்களுக்கு மட்டுமே காரை விற்பனை செய்வேன் என்று பிடிவாதமாய் தனது பிராண்டு மதிப்பை காப்பாற்றி வருகிறது ரோல்ஸ் ராய்ஸ்.

மேலும், வாடிக்கையாளர்களின் பின்புலத்தை ஆய்வு செய்த பிறகுதான் அவர்களுக்கு கார்களை விற்பனை செய்கிறது பிரிட்டிஷ் பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ். பின்புலம் இல்லாவிட்டால் கார் கிடையாது என்று பளிச்சென்று மறுத்துவிடுகிறது ரோல்ஸ் ராய்ஸ்.

இதற்கு உதாரணமாய் ஓர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குவதற்கு புக்கிங் செய்ய சென்றுள்ளார். வழக்கம்போல் வாடிக்கையாளரின் தகுதி குறித்து அதாவது, அவரது பின்புலத்தை ஆராய்ந்த ரோல்ஸ் ராய்ஸ், உங்களுக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போதிய பின்புலம் இல்லை என்பதை நாசூக்காக கூறி கார் தர மறுத்துவிட்டதாம்.

பாலிவுட்டில் நான் ரொம்ப பெரிய்ய்ய...! நடிகை என்று அவர் கூறியதையும் அந்த நிறுவனம் ஏற்க மறுத்துவிட்டதாம். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மல்லிகா நேராக சென்று மெர்சிடிஸ் பென்ஸ் ஆடம்பர கார் ஒன்றை வாங்கிய பிறகே சமாதானம் அடைந்தாராம்.

-தட்ஸ்தமிழ் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by அருண் Tue Apr 24, 2012 1:54 pm

இங்கு இருக்கும் பெரும்பாலான அரபிகள் இந்த கார் உபயோக படுத்துகிறார்கள்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by பிரசன்னா Tue Apr 24, 2012 4:49 pm

அருண் wrote:இங்கு இருக்கும் பெரும்பாலான அரபிகள் இந்த கார் உபயோக படுத்துகிறார்கள்..! சூப்பருங்க

பெரும் பணக்கார அரபிகள் தான் வைத்து இருக்கிறார்கள் அருண்.... இங்கு ஓடும் ஆடம்பர கார்களில் வெகு சில தான் ரோல்ஸ் ராய்ஸ்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by உதயசுதா Tue Apr 24, 2012 5:09 pm

பிரசன்னா wrote:
அருண் wrote:இங்கு இருக்கும் பெரும்பாலான அரபிகள் இந்த கார் உபயோக படுத்துகிறார்கள்..! சூப்பருங்க

பெரும் பணக்கார அரபிகள் தான் வைத்து இருக்கிறார்கள் அருண்.... இங்கு ஓடும் ஆடம்பர கார்களில் வெகு சில தான் ரோல்ஸ் ராய்ஸ்...
ஆமா இங்க இருக்கிற ஷேக் மற்றும் பெரும் பணக்காரர்கள் தான் இதை வச்சு இருக்காங்க


ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Uரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Dரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Aரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Yரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Aரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Sரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Uரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Dரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Hரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by ராஜா Tue Apr 24, 2012 5:38 pm

வை.பாலாஜி wrote:[justify]உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும் என்ற நீடிக்கிறது.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு காலத்தில் இங்கிலாந்து பிரபுக்களுக்கு மட்டுமே விற்பனை செய்வார்களாம். ஒரு முறை லண்டன் சென்ற இந்திய மஹாராஜா (பஞ்சாப் அல்லது ராஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்) ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்டு விலை கேட்டிருக்கிறார், அதற்கு கார் நிறுவனத்தினர் இந்தியர்களுக்கு இந்த கார் விற்பனை செய்வது இல்லை என்று பதிலளித்திருக்கின்றனர். பதில் பேசாமல் இந்தியா திரும்பிய மஹாராஜா அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் மூலம் 100 பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி தான் குதிரை லாயத்தில் குதிரை சாணம் அள்ள பயன்படுத்தினார் என்றும்.இந்த விஷயம் இங்கிலாந்து தினசரி பத்திரிக்கையில் வந்து ரோல்ஸ் ராய்ஸ் மானம் போனது.இந்த விஷயம் கேள்விப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாக பதறியடித்து ஓடிவந்து இவரிடம் மன்னிப்பு கேட்டு பிறகு புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் இவருக்கு கொடுத்தது என்று கேள்விபட்டுள்ளேன், ஆனால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by உதயசுதா Tue Apr 24, 2012 5:40 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:[justify]உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டாக ரோல்ஸ் ராய்ஸ் திகழ்கிறது. அரசப் பரம்பரையினர், பிரபல நட்சத்திரங்கள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டும்தான் ரோல்ஸ்ராய்ஸ் காரை சொந்தமாக்க முடியும் என்ற நீடிக்கிறது.
இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரு காலத்தில் இங்கிலாந்து பிரபுக்களுக்கு மட்டுமே விற்பனை செய்வார்களாம். ஒரு முறை லண்டன் சென்ற இந்திய மஹாராஜா (பஞ்சாப் அல்லது ராஜஸ்தான் பகுதியை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன்) ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க ஆசைப்பட்டு விலை கேட்டிருக்கிறார், அதற்கு கார் நிறுவனத்தினர் இந்தியர்களுக்கு இந்த கார் விற்பனை செய்வது இல்லை என்று பதிலளித்திருக்கின்றனர். பதில் பேசாமல் இந்தியா திரும்பிய மஹாராஜா அப்போதைய ஆங்கிலேய அரசாங்கம் மூலம் 100 பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி தான் குதிரை லாயத்தில் குதிரை சாணம் அள்ள பயன்படுத்தினார் என்றும்.இந்த விஷயம் இங்கிலாந்து தினசரி பத்திரிக்கையில் வந்து ரோல்ஸ் ராய்ஸ் மானம் போனது.இந்த விஷயம் கேள்விப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் நிர்வாக பதறியடித்து ஓடிவந்து இவரிடம் மன்னிப்பு கேட்டு பிறகு புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் இவருக்கு கொடுத்தது என்று கேள்விபட்டுள்ளேன், ஆனால் இந்த செய்தியின் நம்பகத்தன்மை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை.
நல்ல பதிலடி. பகிர்வுக்கு நன்றி ராஜா


ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Uரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Dரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Aரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Yரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Aரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Sரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Uரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Dரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Hரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை Empty Re: ரோல்ஸ் ராய்ஸ் கார்- சிறப்பு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2022-ஐ வழியனுப்ப கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடு 1 பார்வை
» தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .
» கூகிள் வெளியீட்டுள்ள அழகான புதிய காமிக் புத்தகம் சிறப்பு பார்வை.
» 2012 இல் நடைபெறவிருக்கும் முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்பு பார்வை
» எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum