ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

2 posters

Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 12:58 pm

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியானது.

புதிய தகவல்கள்

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் அலெக்ஸ் பால்மேனன். 32 வயதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்த மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி ஆகும்.

கலெக்டர் அலெக்ஸ் நேற்று முன்தினம் மாலை அந்த மாவட்டத்தில் மஜிபரா என்ற கிராமத்தில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அலெக்சுடன் அரசு அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி என்பது பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண்மூடித்தனமாக சுட்டனர்

கலெக்டருடன் அந்த நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ. அதிகாரி வைத்யாவும் சென்று இருந்தார். அவர் இந்த சம்பவம் பற்றி கூறியதாவது:-

மஜிபரா கிராமத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நாங்கள் வாகனங்களில் சென்றோம். பாட்செட்டி என்ற இடத்தில் இருந்து அந்த கிராமம் வரை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு நடந்த கூட்டத்தில் கிராமவாசிகள், விவசாயிகள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கிய 10 நிமிடத்தில் ஆயுதங்களுடன் சுமார் 15 மாவோயிஸ்டுகள் அங்கு வந்தனர். அவர்களில் சில பெண்களும் இருந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவர் உயிர் இழந்தனர்.

கலெக்டர் கடத்தல்

உடனே நாங்கள் காருக்குள் ஏறினோம். அப்போது மாவோயிஸ்டுகள், "உங்களில் யார் கலெக்டர்?'' என்று கேட்டபடி காரை சூழ்ந்தனர். அதற்கு கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன், "நான்தான் கலெக்டர்'' என்றார். இதைத்தொடர்ந்து மாவோயிஸ்டுகள் அவரை கடத்திச் சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டதில் கலெக்டரின் பாதுகாவலர்களான கிஷன் குஜுரும் அம்ஜத்கானும் குண்டு பாய்ந்து பலி ஆனார்கள். அம்ஜத்கான் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மாவோயிஸ்டு தீவிரவாதி குண்டு பாய்ந்து பலி ஆனார்.

துப்பாக்கிகள்

மாவோயிஸ்டுகள் கலெக்டரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று உள்ளனர். மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கட்டளையிட்டு அவசரப்படுத்தியபோது அவர், தனக்கு ஆஸ்துமா இருப்பதாகவும் எனவே அதற்கான மருந்து பையை எடுத்துக் கொள்வதாகவும் கூறி உள்ளார். அதற்கு மாவோயிஸ்டுகள் அனுமதி அளித்தனர்.

இதனால் அவர் அந்த பையையும், தனது லேப்டாப் கம்ப்ïட்டரையும் எடுத்துக் கொண்டு அவர்களுடன் சென்றார். போகும் போது மாவோயிஸ்டுகள், கீழே கிடந்த கலெக்டரின் பாதுகாவலர்கள் இருவரின் ஏ.கே.-47 துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு போய்விட்டனர்.

சினிமாவில் நடப்பது போல் ஒரு சில நிமிடங்களுக்குள் இந்த கடத்தல் சம்பவம் நடந்து முடிந்து விட்டது.

மனைவி அதிர்ச்சி

நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. அப்போது கலெக்டர் அலெக்சின் மனைவி சுக்மா நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். மாலை 5 மணி அளவில் அவர் கடத்தப்பட்டது பற்றிய தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் அவர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார்.

கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்சை மாவோயிஸ்டுகள் சத்தீஷ்கார், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் எல்லையில் உள்ள அடந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று ரகசியமான இடத்தில் தங்க வைத்து இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அவர்களிடம் இருந்து அரசாங்கத்துக்கு இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை.

மீட்க நடவடிக்கை

கலெக்டர் கடத்தப்பட்டது பற்றி முக்கியமான துப்பு கிடைத்து இருப்பதாகவும், ஆனால் பாதுகாப்பு கருதி அதுபற்றிய விவரத்தை வெளியிட முடியாது என்றும் சத்தீஷ்கார் மாநில கூடுதல் டி.ஜி.பி. (நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கை) ராம்நிவாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட கலெக்டரை மீட்க சிறப்பு போலீஸ் படை அமைக்கப்பட்டு, அவரை பத்திரமாக மீட்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 1:00 pm

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கடத்தல் மாவட்ட கலெக்டரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் 3 நிபந்தனைகள் 25-ந் தேதிக்குள் நிறைவேற்ற சத்தீஷ்கார் அரசுக்கு `கெடு'

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col1

சத்தீஷ்காரில் கடத்தப்பட்ட மாவட்ட கலெக்டரை விடுதலை செய்வதற்கு, மாவோயிஸ்டுகள் 3 நிபந்தனைகள் விதித்து உள்ளனர். 25-ந் தேதிக்குள் கோரிக்கையை நிறைவேற்றும்படியும் அவர்கள் `கெடு' விதித்து இருக்கிறார்கள்.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டராக பணிபுரிந்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் (வயது 32), மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் நேற்று முன்தினம் கடத்தப்பட்டார்.

துணிச்சலான கலெக்டர்

பால்மேனன் கலெக்டராக பணிபுரிந்து வந்த சுக்மா மாவட்டம், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டமாகும். வனப்பகுதியில் மிகவும் பின்தங்கிய குக்கிராமங்களைக் கொண்ட அந்த மாவட்டத்தில், கலெக்டர் பால்மேனன் சேவை மனப்பான்மையுடன் மக்களின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வந்தார்.

கிராம மக்களை தீவிரவாதிகளின் பாதையில் இருந்து விலகச் செய்வதற்கான மக்கள் தொடர்பு முகாம், சத்தீஷ்கார் மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பால்மேனன் ஆர்வத்துடன் பங்கேற்றார். துணிச்சலான அதிகாரியான அவர், சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கும்கூட பாதுகாப்பை பொருட்படுத்தாமல் சென்று வந்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்றார்

நேற்று முன்தினம் அவர் கடத்தப்பட்ட மஜிபுரா கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏறத்தாழ 15 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில்தான் அவர் சென்று இருக்கிறார். பெண்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டு தீவிரவாதிகள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு, கலெக்டர் பால்மேனனை கடத்திச் சென்று விட்டனர்.

அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கலெக்டரின் இரு பாதுகாவலர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதவி கலெக்டர் வைத்யா மற்றும் அதிகாரிகள், அங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமுக்கு சென்று புகார் செய்த பின்னர்தான் கடத்தல் சம்பவம் வெளியில் தெரிந்தது.

பத்திரமாக மீட்க நடவடிக்கை

தகவல் அறிந்ததும், சத்தீஷ்கார் மாநில முதல்-மந்திரி ராமன்சிங், கலெக்டரை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சுக்மா மற்றும் தண்டேவாடா மாவட்ட வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

பஸ்தார் பிராந்திய பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பதுடன், அண்டை மாவட்டங்களான ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், முதல்-மந்திரி ராமன்சிங், மாநில போலீஸ் டிஜி.பி. அனில்நவானி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். கலெக்டர் கடத்தப்பட்டபின் கிடைத்துள்ள உளவு தகவல்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 1:02 pm

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col2

மாவோயிஸ்டுகளின் 3 நிபந்தனை


கலெக்டர் கடத்தப்பட்டபின் நேற்று மாலை வரை, தீவிரவாதிகளிடம் இருந்து அரசுக்கு எந்த தகவலும் வராமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை மாவோயிஸ்டுகளிடம் இருந்து வந்த ஒரு தகவலில், கலெக்டர் பால்மேனனை விடுதலை செய்வதற்கு 3 நிபந்தனைகள் விதித்து இருந்தனர்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 8 மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்; மாவோயிஸ்டுகளுக்கு எதிராக `பசுமை வேட்டை' என்ற பெயரில் நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும்; பஸ்தார் பகுதியில் இருந்து ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட்டு உடனடியாக தங்கள் முகாமுக்கு திரும்ப வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கையாகும்.

25-ந் தேதி வரை `கெடு'

3 நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு, சத்தீஷ்கார் மாநில அரசுக்கு வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) மாவோயிஸ்டுகள் `கெடு' விதித்து இருக்கிறார்கள்.

மாவோயிஸ்டுகளின் இந்த நிபந்தனை குறித்து தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது. பெயர் குறிப்பிடாத மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் ஆடியோ கேசட் மூலம் ஊடகங்களுக்கு நிபந்தனை விதித்து இருக்கும் தகவலை, கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராம்நிவாஸ் பின்னர உறுதி செய்தார்.

அரசுடன் தொடர்புகொள்ளவில்லை

அந்த ஆடியோ கேசட்டின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த ஒரு இயக்க தலைவரும் மாநில அரசுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பஸ்தார் பிராந்திய தீவிரவாதிகள் குழு தலைவர் விஜய் என்று அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் பத்திரிகையாளர்களுடன் போன் மற்றும் இ மெயில் மூலம் நேற்று தொடர்பு கொண்டார்.

அப்போது அவர், ராய்பூர் சிறையில் உள்ள 8 தலைவர்களுடன் தண்டேவாடா மற்றும் ஜெகதல்பூர் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களையும் விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

பத்திரமாக இருக்கிறார்

முன்னதாக முதல்-மந்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவரை உடனடியாக விடுவிக்கும்படி மாவோயிஸ்டுகளுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கூட்டத்துக்குப்பின் ராமன்சிங் வெளியிட்ட அறிக்கையில், "கலெக்டர் கடத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடம் பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் பத்திரமாக இருக்கிறார் என்று நம்புவதாக'' குறிப்பிட்டு இருக்கிறார்.

முக்கிய துப்பு கிடைத்தது

கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், "கலெக்டரை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமான அணுகுமுறையுடன் கூடிய மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக'' தெரிவித்தார்.

சத்தீஷ்கார் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. (தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு) ராம்நிவாஸ் கூறும்போது கலெக்டர் கடத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடம் குறித்து முக்கிய துப்பு கிடைத்து இருப்பதாக தெரிவித்தார்.

சுவாமி அக்னிவேஷ்

இதற்கிடையில், கடத்தப்பட்ட கலெக்டர் பால்மேனனை விடுவிப்பதற்கு அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் என்று, பிரபல சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் அறிவித்து இருக்கிறார்.

கலெக்டர் பால்மேனனுக்கு கடந்த அக்டோபர் மாதம்தான் திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அவருடைய மனைவி ஆஷா மேனன், தனது கணவரை விடுவிக்கும்படி மாவோயிஸ்டுகளுக்கு நேற்று மீண்டும் உருக்கமான வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

தினதந்தி


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 1:06 pm

கடத்தப்பட்ட கலெக்டர் பாளையங்கோட்டையில் படித்தவர், குடும்பத்தினர் பற்றி புதிய தகவல்

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col5

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் பாளையங்கோட்டையில் படித்தவர். அவரது குடும்பத்தினர் பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளன.

கடத்தப்பட்ட கலெக்டர்

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் சொந்த ஊர் பாளையங்கோட்டை ஆகும். தந்தை பெயர் ஏ.வரதாஸ். அலெக்ஸ் பால் மேனனுக்கு ஜுலியட் ரூபி என்ற தங்கை உள்ளார். தாயார் கங்கா தேவி கடந்த 1996-ம் ஆண்டு இறந்து விட்டார்.

வரதாஸ் தங்கை பெயர் ஞானம். இவரும், இவருடைய மகள் கவிதா ஆகியோரும் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார்கள்.

வரதாஸ் தூத்துக்குடி குட் ஷெப்பர்டு காது கேளாதோர் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பின்னர் அதே பள்ளியில் தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பாளையங்கோட்டையில் இருந்து வாரம் ஒரு முறை தூத்துக்குடிக்கு சென்று வருகிறார்.

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்ட தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை ராம்நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ``தினத்தந்தி'' நிருபர் நேரில் சென்று கேட்ட போது அவரது உறவினர்கள் கூறியதாவது:-

பாளையங்கோட்டையில் படித்தவர்

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் வள்ளிïர் கெய்ன்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் எல்.கே.ஜி., ï.கே.ஜி. படித்தார். பாளையங்கோட்டை ரோஸ்மேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் 1-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை படித்தார். அதன் பிறகு திண்டுக்கல்லில் உள்ள ஆர்.வி.எஸ். என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். படிப்பில் கெட்டிக்காரர்.

இவருடைய தங்கை ஜுலியட் ரூபி எம்.டி. சித்தா பட்டமேற்படிப்பு படித்தவர். அவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் திருமணம் நடந்தது. பின்னர் மைசூர் சென்று அங்கு வசித்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒரு முறை பாளையங்கோட்டை வருவார்.

இந்த வீட்டில் வரதாஸ், ஞானம் ஆகியோர் தங்கி உள்ளனர். ஞானம் மகள் கவிதாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. மகனை பார்ப்பதற்காக வரதாஸ் ஒரு மாதத்துக்கு முன்பு சத்தீஷ்கார் சென்றார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் சென்னை வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சி

கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த டிசம்பர் மாதம் பாளையங்கோட்டை வந்தார். இந்த புத்தாண்டை பாளையங்கோட்டையில் தனது வீட்டில் கொண்டாடினார். திடீரென்று அவரை மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்தி சென்று இருப்பதை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

நாகர்கோவில் சென்று இருந்த நாங்கள் இதை கேள்வி பட்டதும் பதற்றம் அடைந்து இரவு பாளையங்கோட்டை வந்தோம். அடுத்து என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் சோகத்துடன் கூறினார்கள்.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 1:08 pm

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col6

`மக்களுக்கு சேவை செய்யவே கலெக்டர் ஆனான்' கடத்தப்பட்ட அலெக்ஸ் பால்மேனனின் தாத்தா உருக்கம்


மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அலெக்ஸ் பால்மேனன் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆனதாக அவரது தாத்தா ராஜாமணி கூறினார்.

தேவாலயத்தில் பிரார்த்தனை

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் வள்ளிïர் ஆகும். கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் பணியில் இருந்த போது, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் கடத்திச் செல்லப்பட்டார். அவரை விடுவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசும், சத்தீஷ்கார் மாநில அரசும் மேற்கொண்டுள்ளன.

அவரை பத்திரமாக மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி அலெக்ஸ் பால் மேனனின் சொந்த ஊரான வள்ளிïரில் அவருடைய உறவினர்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

மக்களுக்கு சேவை செய்ய

கலெக்டர் அலெக்சின் தாத்தா ராஜமணி கூறுகையில், "ஐ.ஏ.எஸ். அதிகாரியானால் தான், மக்களுக்கு சேவையை செய்ய அனைத்து அதிகாரங்களும் கிடைக்கும் என்று சிறுவயதில் மூச்சுக்கு மூச்சு சொல்வான். சொன்னபடி அதிகாரி ஆனான். அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவனை கடத்துவதற்கு தீவிரவாதிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? அவனது நல்ல மனதுக்கு கூடிய சீக்கிரமே பத்திரமாக திரும்பி வந்து எங்களை எல்லாம் பார்ப்பான். அந்த நம்பிக்கை எனக்கு 100 சதவீதம் உள்ளது,'' என்று கண்ணீர் மல்க கூறினார்.

உறவினர் பாலசுந்தரராஜ் கூறும்போது, "அலெக்ஸ் பத்திரமாக திரும்ப வேண்டும் என்று தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து இருக்கிறோம். அந்த பிரார்த்தனை வீண் போகாது. அலெக்ஸ் கூடிய விரைவில் விடுவிக்கப்படுவார்,'' என்றார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Col7

கலெக்டரின் சித்தியும், ஆசிரியையுமான கண்ணகி கூறியதாவது:-

தாயின் ஆசையை நிறைவேற்றினார்

அலெக்ஸ் சிறு வயதில் இருந்தே படிப்பில் சுட்டிப் பையன். ஏழை, எளிய மக்களுக்கு அவனாகவே விரும்பிச் சென்று உதவி செய்வான். அவனை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று அவனுடைய அம்மா ஆசைப்பட்டார். தாயின் கனவை நனவாக்க வேண்டும் என்று லட்சியம் வகுத்து படித்தான். ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றான்.

வாழ்க்கையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும், கடவுள் கொடுத்த கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் என்னிடம் அடிக்கடி கூறுவான். என்னுடைய மகனைப் போன்று தான் அவனை நினைப்பேன். அவன் உயர் பதவி வகித்து எங்களுக்கு எல்லாம் பெருமை தேடித் தந்தான்.

ஊர் மக்கள் சோகம்

இப்போது மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அவன் கடத்தப்பட்டு, இன்னலுக்கு ஆளாகி இருப்பது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அலெக்ஸ் பத்திரமாக மீட்கப்பட வேண்டும். தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மத்திய அரசிடமும், சத்தீஷ்கார் மாநில அரசிடமும் பேசி அலெக்சை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு ஆசிரியை கண்ணகி கூறினார்.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by சிவா Mon Apr 23, 2012 1:10 pm

`மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு அஞ்சாமல் என் மகன் மக்கள் பணியாற்றினான்', கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை பேட்டி


மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயப்படாமல், தன் மகன் மக்கள் பணியாற்றியதாக கடத்தப்பட்ட கலெக்டரின் தந்தை கூறினார்.

கலெக்டர் கடத்தல்

சத்தீஷ்கார் மாநிலத்தில் சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றிய பாளையங்கோட்டையைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன் (வயது 32) மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி அளவில் கடத்தி செல்லப்பட்டார்.

2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற இவர் சத்தீஷ்கார் மாநிலத்தில் ராய்ப்பூரில் முதல்-முதலாக சப்-கலெக்டராக பணி அமர்த்தப்பட்டார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் தான் சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த புதிதாக உருவாக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தின் முதல் கலெக்டராக பொறுப்பு ஏற்றார்.

மக்கள் கலெக்டர்

அவரது நேர்மையான அதிரடி நடவடிக்கை அந்த மாவட்டத்து மக்களிடம் நன்மதிப்பை உருவாக்கியது. ரோடு வசதி இல்லாத ஊர்களுக்கு அலெக்ஸ் பால் மோட்டார் சைக்கிளில் சென்று மக்களை சந்திப்பார். குடிசை வீடுகளுக்கு சென்று அங்குள்ள திண்ணையில் உட்கார்ந்து மக்களோடு, மக்களாக பழகி குறைகளை தீர்த்து வந்தார். இதனால் அவர் மக்கள் கலெக்டர் என்று பாராட்டு பெற்றார்.

மாவோயிஸ்டு தீவிரவாதிகளுக்கு இது பிடிக்கவில்லை. கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை எச்சரித்தனர். அவரை கடத்திச் செல்வோம் என்றும் பயமுறுத்தினார்கள். ஆனால் அந்த மிரட்டல்-பயமுறுத்தல்களை சட்டை செய்யாமல், அலெக்சின் பணி தொடர்ந்தது. உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். தனியாகவோ, கூடுதல் பாதுகாப்பு இல்லாமலோ எங்கும் போகக்கூடாது என்று தெரிவித்தனர். ஆனால் அலெக்ஸ் இதையும் பொருட்படுத்தவில்லை.

எதையும் செய்வேன்

மாவோயிஸ்டுகளுக்கு நான் எதிரி இல்லை. அவர்களும் மக்களுக்காகவே பாடுபடுகிறார்கள். நானும் மக்களுக்காகவே பாடுபடுகிறேன். மக்களுக்காக எனது உயிரைப்பற்றி கவலைப்படாமல் எதையும் செய்வேன் என்று கலெக்டர் அலெக்ஸ் பால் தனது நண்பர்களிடம் கூறி வந்தார்.

கலெக்டரின் தந்தை

சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் தனது உறவினர் வீட்டில் தங்கி இருக்கும் அலெக்சின் தந்தை வரதாஸ், சோகம் கலந்த தைரியத்தோடுதான் இருக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியராக வேலை பார்த்த அவர் கடந்த பிப்ரவரி மாதம்தான் ஓய்வு பெற்றார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது ஆபரேஷனும் செய்துள்ளார்.

தனது மகனின் துணிச்சல் மிக்க மக்கள் பணியை பற்றி நிருபர்களிடம், அவர் பெருமைபட பேசினார். அவருக்கு செல்போனில் தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது. நண்பர்கள், உறவினர்கள் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்களுக்கு இவர் தைரியமூட்டியபடி பேசினார்.

"எனது மகன் ஒரு நேர்மையான அதிகாரி. அவனது மக்கள் பணி அவனை காப்பாற்றும்'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ராமசுப்பு எம்.பி. அப்போது அவரிடம் பேசினார். அவரிடமும் இதே கருத்தைத்தான் சொன்னார். மாவீரன் அலெக்சாண்டர் ஞாபகமாகவும், போப் ஆண்டவர் பெயரை நினைவு கூறும் வகையிலும், கிருஷ்ணமேனன் என்ற கேரள மந்திரியின் பெயரையொட்டியும், அலெக்ஸ் பால்மேனன் என்று தனது மகனுக்கு பெயர் கூட்டியதாகவும் அவர் சொன்னார். அவனுக்கு தந்தையானது நான் பெற்ற பேறு என்றும் அவர் பெருமைபட பேசிக்கொண்டே இருந்தார்.

முதல்-அமைச்சரை சந்திக்க விருப்பம்

கடத்தப்படுவதற்கு 5 நிமிடம் முன்பு அலெக்ஸ் என்னிடம் பேசினான். அப்பா உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் என்று பாசமாக சொன்னான். கடந்த ஒரு மாதமாக நான் அவனுடன் தான் இருந்து விட்டு வந்தேன். கடந்த வியாழக்கிழமைதான் சென்னை திரும்பினேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்று எங்கள் ஊர்பக்கம் ஒரு பழமொழி உண்டு. கள்ளன்தான் பெரியவன் என்பதை காட்டும் வகையில், மாவோயிஸ்டுகள் எனது மகனை கடத்திச்சென்று விட்டனர். ஆனால் காப்பாளனும் பெரியவன்தான், என்பதை நிரூபிக்கும் வகையில், மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்பட்டு, எனது பிள்ளையை நல்லபடியாக மீட்டு, தரவேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கைவைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, உதவி கேட்க முடிவு செய்துள்ளேன். பொன்னேரி எம்.எல்.ஏ. பொன்ராஜ் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாமனார்-மாமியார்

கலெக்டர் அலெக்சின் மனைவி புஷ்பபாக்கியம் என்ற ஆஷா. இவரும் பி.டெக். என்ஜினீயர் மற்றும் எம்.பி.ஏ. படித்தவர். கல்லூரி படிப்பில் தங்க பதக்கம் வாங்கியவர். திருமணத்துக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இவர்கள் திருமணம் நடந்தது. தனது கலெக்டர் கணவருக்காக ஆஷா வேலையை உதறி விட்டார்.

கணவர் செய்த மக்கள் பணிக்கு இவரும் ஊக்கம் கொடுத்து வந்தார். தற்போது 3 மாத கர்ப்பமாகவும் உள்ளார். அலெக்சின் மாமனார் வேணுகோபால், மாமியார் ஆனந்தி, மைத்துனர் ஆனந்தராஜன் ஆகியோரும் சென்னை நொளம்பூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். அலெக்ஸ் கடத்தப்பட்ட செய்தி வந்ததிலிருந்து இவர்களும் தூங்காமல், சாப்பிடாமல் சோகத்துடன் உள்ளனர். சத்தீஷ்காரில் இருந்து ஒரு நல்ல செய்தி வராதா? என்ற ஏக்கத்தோடு டி.வி.யை பார்த்தபடி உள்ளனர்.


சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by கே. பாலா Mon Apr 23, 2012 3:38 pm

கலக்டரின் பன்முக திறனை அவரின் பிளாக்கில் இருந்து தெரிந்துகொண்டேன்
நல்லவர் பத்திரமாக மீட்கபடவேண்டும்
http://alexmenon.blogspot.in/


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள் Empty Re: சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அஜித்தின் பிறந்த நாள் ஸ்பெஷல்- அஜித்தை பற்றி வெளிவராத பல பரபரப்பான தகவல்கள்
» பேராக் மாநிலத்தில் புதிய அரசியல் போர் வியூகங்கள்
» புதிய சட்டசபை கட்டிடத்தை அரசு கைவிட்டது ஏன்? புதிய தகவல்கள்
» எண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு கலெக்டர் தலைமையில் கருத்துகேட்பு கூட்டம்
» தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum