ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

+3
இரா.பகவதி
யினியவன்
கே. பாலா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by கே. பாலா Fri Apr 06, 2012 5:53 pm

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வக்கீல் காசிநாதபாரதி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த சில வாரங்களாக பத்திரிகைகளில் ஆசிரியர்- மாணவர்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலை அளிக்கிறது. சென்னையில் பள்ளி மாணவன், உமாமகேஸ்வரி என்ற ஆசிரியையை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான்.

தாம்பரத்தில் என்ஜினீயரிங் மாணவர்கள் 4 பேர் சேர்ந்து தங்களுடன் படித்த மாணவியை கற்பழித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மாணவன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த பீர்பாட்டில் வெடித்து இறந்து போனான். சென்னையில் 17 வயது பள்ளி மாணவனை 37 வயது ஆசிரியை கடத்திச் சென்றார்.

இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆரம்ப காலகட்டத்தில் பள்ளிகளில் தனியாக நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது எந்த பள்ளியிலும் நன்னடத்தை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

இதனால்தான் மாணவர்கள் தவறான வழியில் சென்று விடுகிறார்கள். பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகளும் இல்லை. இதனாலும் மாணவ-மாணவிகளின் மனதை பாதிக்கிறது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய கேட்டு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு மனு கொடுத்தேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தொடக்க கல்வி மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை கற்றுக்கொடுக்க தனியாக பாடத்திட்டத்தை வகுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகள் நடத்துவது தொடர்பாக மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி அரசின் கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

மாலை மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by யினியவன் Fri Apr 06, 2012 5:55 pm

நல்ல முயற்சி தான் - பயன் தரும் என்று நம்புவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by இரா.பகவதி Fri Apr 06, 2012 8:27 pm

இது ஏற்கனவே இருக்கிந்த்றது ஆனால் அந்த நேரத்தில் நன்னடத்தை பற்றி ஏதும் நடத்துவது இல்லை சோகம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by அதி Fri Apr 06, 2012 8:59 pm

அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by கே. பாலா Fri Apr 06, 2012 9:57 pm

அதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
ஆமோதித்தல் பெரும்பாலான அரசுபள்ளிகளில் இதுதான் நடக்கிறது ! விளையாட்டு பாடவேலையை கூட 10 மற்றும் 12 வகுப்புமாணவர்கள் அனுபவிப்பதில்லை என்பது உண்மை


Last edited by கே. பாலா on Fri Apr 06, 2012 10:23 pm; edited 1 time in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by அசுரன் Fri Apr 06, 2012 10:21 pm

அதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
நன்னடத்தை வகுப்புகள் எங்கள் பள்ளியிலும் எங்கள் பள்ளியை போன்ற அனைத்து தனியார் கிறிஸ்தவ பள்ளிகளிலும் உள்ளது. காலை முதல் வகுப்பு : மறைக்கல்வி (கிறிஸ்தவ மாணவர்களுக்கு) மற்றும் நல்லொழுக்க வகுப்பு (இந்து மற்றும் முஸ்லீம் மாணவர்களுக்கு) தினமும் உண்டு. எங்கள் பள்ளியில் இந்த பாடத்தில் பெயில் ஆனால் ரேங்க் கூட கிடைக்காது. (இது மதிப்பெண் பெறுவதற்காக இல்ல, மாறாக அதிக முக்கியத்துவம் அதற்கு கொடுப்பதற்காகவே) மேலும் காலை முதல் வகுப்பிலேயே நடப்பதால் மாணவர்கள் அவரவர் வகுப்புகளுக்கு செல்லாமல் மறைக்கல்வி மற்றும் நல்லொழுக்க வகுப்புகளுக்கு செல்வார்கள். இதனால் மற்ற பாட ஆசிரியர்கள் அந்த வகுப்பை கடன் பெற இயலாது சோகம்

ஏனெனில் மாணவர்கள் கலந்து உட்கார்ந்திருப்பார்கள். போர்ஷன் முடிக்க இப்படி கடன் வாங்கி செயல்படுத்துவது செய்யவே முடியாது.. மேலும் LOE என்னும் வாழ்க்கை சார்ந்த கல்வி, இணைய கல்வி, மற்றும் தனித்திறமை வகுப்புகள் (CCA) உண்டு.

மொத்தமாக சேர்த்து 10 ஆயிரத்துக்கும் மேலான பள்ளிகள் லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் மாநிலத்தில் ஆங்காங்கே ஆசிரியர்களும் மாணவர்களும் செய்யும் தவறுகள் கொலைகள் கற்பழிப்புகள் இன்னும் பல தவறுகளுக்கு அவர்களுக்கு பாரபட்சம் மற்றும் தயவு தாட்சண்யம் பாராது தண்டனை வழங்க வேன்டும்.... ஒழுங்காக இருக்கும் மற்ற 99 சதவிகித மாணவ மாணவியரை இதுபோன்ற வழக்குகளும் செய்திகளும் தவறான வழிக்கு கொண்டு செல்லும்.

வேட்டி போட்ட ஒரு சிலர் வேட்டி உள்ளே துப்பாக்கி மறைத்து வைத்துள்ளனர் என்பதற்காக அனைவரையும் வேட்டியை அவிழ்த்து பார்க்க வேன்டும் என்பது தவறான முன்னுதாரணம் ஆகும்.


Last edited by அசுரன் on Fri Apr 06, 2012 10:51 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by அசுரன் Fri Apr 06, 2012 10:26 pm

கே. பாலா wrote:
அதி wrote:அப்படியொரு வகுப்பு இருந்தாலும் சிலபஸ் முடிக்க வேண்டும் என்று அதையும் மற்ற ஆசிரியர்கள் கடன் வாங்கி விடுவார்களே
ஆமோதித்தல் பெரும்பாலான அரசுபள்ளிகளில் இதுதான் நடக்கிறது ! விளையாட்டு பாடவேலையை கூட 10 மற்றும் 12 வகுப்புமாணவர்கள் அனுபவிப்பதில்லை என்பது உண்மை

ஒருவேளை சிலபஸ் முடிக்க முடியாமல் வகுப்பை கடன் வாங்கினாலும் அந்த ஆசிரியர்கள் சிலபஸ் முடிக்க முடியாமல் பள்ளியின் வேலை நாட்களை தயாரித்த பள்ளி நிர்வாகத்தின் தவறு மற்றும் பள்ளித்துறையின் தவறு.. பாவம் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள். வேகமா நடத்துனா ஆசிரியர் சரியில்லை என்பார்கள், மெதுவா நடத்துனாலும் அதே குற்ற சாட்டு...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by கே. பாலா Fri Apr 06, 2012 10:27 pm

உங்கள் பள்ளியை பாராட்டுகிறேன் அசுரன் !...
ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் உள்ள நிலை நீங்கள் சொல்வதற்கு மாறாக இருக்கிறது !
கண்டிப்பாக நன்னடதை வகுப்பை அமுல்படுத்தவேண்டும் ..!
வெறும் மதிப்பெண்ணை துரத்துகிற போக்கை கைவிடவேண்டும் .
ஒழுக்கதோடு இணைந்த கல்வி யே அவசியதேவை


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 06, 2012 11:07 pm

எங்கள் குடும்பத்தில் 99 விழுக்காடு எல்லாம் ஆசிரியர்களே. ஆகவே இதுபோன்ற ஆய்வு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். எந்த கல்யாண சுப காரியங்களுக்குச் சென்றாலும் இது போன்ற கலந்தாய்வு நடக்கும். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by Aathira Fri Apr 06, 2012 11:22 pm

ந்ன்னடத்தை வகுப்பா? அப்படி ஒரு பாடவேளை இருக்கும். ஆசிரியர்கள் மாணவர்களை ஏதாவது எழுத்து வேலை செய்யச் சொல்லி விட்டு அவர்கள் தன் வேலையைப் பார்ப்பார்கள். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

(எனக்கு எல்லா வகுப்பும் நன்னடத்தை வகுப்பே. மொழிப்பாடம் நூறு விழுக்காடு நடத்தையுடன் தொடர்புடையதே என்பதால்)

ஆரோக்கியமான நல்ல பதிவு. நன்றி பாலா. நன்றி அன்பு மலர்


பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Aபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Aபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Tபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Hபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Iபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Rபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Aபள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு Empty Re: பள்ளிகளில் நன்னடத்தை வகுப்பு நடத்த வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  10ம் வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்- ஐகோர்ட்டில் வழக்கு
» இந்தியில் தயாரான “சிங்கம்” படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு
» எலைட் மதுபான கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும், ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்
» 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்; தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum