ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
heezulia
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
mohamed nizamudeen
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
Abiraj_26
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 
mini
நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_m10நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

4 posters

Go down

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Empty நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

Post by சிவா Mon Mar 26, 2012 7:29 am

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Desi

`ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...' என்று பாடுவது மிகவும் சுலபம். ஆனால், சில பல நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வையோ அல்லது செய்த செயலையோ சரியாக நினைவில் வைத்திருந்து சொல்வது மிகவும் கடினமான ஒன்று. இது ஞாபக மறதிக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், ஒரு சிலர் இருக்கிறார்கள், முப்பது நாப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது கேட்டாலும் மிக துல்லியமாக நினைவு கூர்ந்து இம்மி பிசகாமல் அப்படியே விவரிப்பார்கள். இது நமக்கு பிரமிப்பாக இருக்கும்.

`உண்மையில் எவ்வளவு விஷயங்களை நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது என்பதில் பெரிய விசேஷம் ஒன்றுமில்லை. ஆனால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சரியாக நினைவு கூர்ந்து எப்படி சொல்ல முடிகிறது என்பதுதான் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கிறது' என்கிறார் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர் பிரைஸ் குல்.

பழைய நினைவுகளுக்கும் புதிய நினைவுகளுக்கும் இடையில் நடக்கும் போட்டிதான் `நினைவுத்திறன்' என்கிறது அறிவியல். நினைவுத்திறன் குறித்த முழு புரிதல் மற்றும் நினைவுத்திறன் குறைபாட்டினால் ஏற்படும் மூளைக் கோளாறுகள் குறித்து ஆய்வுகள் செய்யும் குல், புதிய நினைவுகளுக்கும் பழைய நினைவுகளுக்கும் இடையிலான போட்டியை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்காக, குல் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினர் 24 இளங்கலை மாணவர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் `ஒரு புகைப்படம் மற்றும் ஒரு வார்த்தை' சேர்ந்த பல இணைகளை கொடுத்து அவற்றை வரிசையாக நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள். அதன் பிறகு, கடைசியாக கொடுக்கப்பட்ட புகைப்படம், வார்த்தை இணை குறித்து விவரிக்கச் சொன்னார்கள். மாணவர் களுக்கு ஒரு நினைவை உருவாக்க, ஒரு முகம் அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு காட்சி, இவற்றுக்கு மேலே ஒரு சம்பந்தமில்லாத வார்த்தையை காண்பித்து நினைவில் வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

உதாரணமாக, அமெரிக்க அரசியல்வாதி `அல் கோரே'வின் புகைப்படத்துக்கு மேலே `நீச்சல்' எனும் ஒரு வார்த்தை காண்பிக்கப்பட்டது (இது பழைய நினைவு).அதன்பிறகு, நீச்சல் எனும் வார்த்தைக்கு கீழே உள்ள அல் கோரேவின் புகைப்படத்தை நீக்கிவிட்டு அங்கு `க்ராண்ட் கேன்யான்' (எசுஹஙூக்ஷ இஹஙூட்ச்ஙூ) எனும் பிரபல இடத்தின் புகைப்படம்/காட்சியை வைத்து நினைவு வைத்துக்கொள்ளச் சொன்னார்கள் (இது புதிய நினைவு). அதன்பிறகு, மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு ஸ்கேனருடன் மாணவர்களை இணைத்துவிட்டு, நீச்சல் எனும் வார்த்தையை அவர் களுக்கு காண்பித்து அதற்கு கீழே புதிய நினைவில் என்ன புகைப்படம் இருந்தது என்று கேட்டார்கள். மூளையின் குறிப்பிட்ட பாகங்கள் வெவ்வேறு வகையான புகைப்படங்களுக்கு (முகம்/காட்சி/பொருள்) ஏற்றவாறு எதிர்வினை செய்யக் கூடியவை. மூளை ஸ்கேன் தகவல்களை அடிப்படையாக வைத்து, ஒருவர் ஒரு முகத்தை அல்லது ஒரு காட்சியை அல்லது ஒரு பொருளை பார்க்கிறாரா என்பதை அறிய முடியும். மேலும் இந்த விவரத்திலிருந்து ஒருவருடைய புதிய மற்றும் பழைய நினைவுகளின் உறுதியை வரையறுத்துச் சொல்ல முடியும் என்கிறார் குல்.

இந்தப் பரிசோதனையில், ஒருவருடைய பழைய நினைவு தொடர்பான மூளைச் செயல்பாடு அதிகரித்தபோது அவரால் புதிய நினைவை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்பது தெரியவந்தது. மேலும், ஒருவர் புதிய நினைவை சரியாக ஞாபகம் வைத்துச் சொன்னபோதும் அவருடைய பழைய நினைவு இடையில் வந்து குறுக்கிட்டது கண்டறியப்பட்டது.

ஒருவருடைய பழைய மற்றும் புதிய நினைவு ஆகிய இரண்டின் உறுதியும் சமமாக இருந்தபோது, அவர்கள் ஞாபகம் குறித்த கேள்விக்கான பதிலைச் சொல்ல நிறைய நேரம் எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒருவர் தேவையில்லாத ஒரு விஷயத்தை மறக்க முயற்சி செய்கிறார்கள்.

புதிய நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது, தேவையில்லாத பழைய நினைவுகள் குறுக்கீடு செய்து நினைவுத் திறன் குறைபாடுகளை உருவாக்குகின்றனவா என்கிற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது என்கிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் ஆய்வாளர் டேவிட் பாத்ரே. ஆனால், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த புதிய ஆய்வு முறையின் மூலம் இந்த நினைவுத் திறன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முடியும் என்கிறார் பாத்ரே.

நினைவுத் திறன் குறைபாடுகள் இல்லாத, ஆரோக்கியமான இளங்கலை மாணவர்கள் மீதான இந்த ஆய்வு முறையை பயன்படுத்தி, நினைவுத் திறன் குறைபாடுள்ளவர்களின் மூளையில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து அறிந்துகொள்ள முடியும். அதன்மூலம் நினைவுத் திறன் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வை கண்டறிந்துவிட முடியும் என்பது ஆய்வாளர் குல்லின் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை? குல்லின் ஆய்வு முயற்சிகள் விரைவில் வெற்றி பெறட்டும்.

-முனைவர் பத்மஹரி


நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Empty Re: நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

Post by அசுரன் Mon Mar 26, 2012 8:34 am

இது முற்றிலும் உண்மை சிவா! படத்துடன் கூடிய சொற்கள் மற்றும் பக்கங்கள் அதிகம் நினைவில் இருக்கும், ஆனால் இப்படி சோதனைக்காக படத்தை மாற்றி மாற்றி சேமிக்கும் போது மூளை குழம்புகிறது.

நான் பாடம் எடுக்கும் போது எப்போதும் ஒரு சிறு விளையாட்டுடன் தான் ஆரம்பிப்பேன். பல மாணவர்கள் என்னிடம் வந்து பரிட்சையில் நிறைய கேள்விகளுக்கு படிக்காமலே விடை தெளிவாக தெரிகிறது என்று சொன்னதை கண்டு வியந்திருக்கிறேன்.

அரிய தகவலுக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Empty Re: நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

Post by றினா Mon Mar 26, 2012 11:15 am

முற்றிலும் உண்மை.
ஞபக சக்தியை கூடுதலாக வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் அடிக்கடி மீட்டல்களில் ஈடுபட வேண்டுமென்று எனக்கு ஒரு விரிவுரையாளர் கூறியது ஞாபகம் வருகிறது.
அவர் கூறினார், மூளையில் உள்ள செல்களில் அனைத்து விடயங்களும் பதிவாகின்றன. ஒன்று கூட மறக்கப்படுவதில்லை.
ஆனால், மீட்டல் இல்லாத காரணத்தினால் அந்த ஒரு செல்லுடன் விடயம் நின்றுவிடும்.
அடிக்கடி மீட்டும்போது விடயம் பல செல்களில் பதிவாகி இலகுவாக ஞாபகப்படுத்திக் கொள்ள உதவும்.
கல்வியில் மாணவர் ஒருவரின் வெளிப்பாடு குறைவானதாக இருக்கும். ஆனால் தன்னுடைய காதலி தொடர்பான விடயத்தில் பூரணமாகக் காணப்படுவார். அடிக்கடி காதலியைப் பற்றி மீட்டுவதுதான் காரணம். கல்வியை மீட்டினால்.....


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Empty Re: நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

Post by பது Mon Mar 26, 2012 11:20 am

இது உண்மைதான் சிவா அண்ணா ஆய்வு ஒன்றில் ஒருவிசயத்தை நேரில் பார்த்து சில நிமிடங்களுக்கு அதிலேயே கவனம் இருந்தால் 90% ஜாபகம் இருக்குமாம்
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை! Empty Re: நினைவுத் திறன்: ஓர் அறிவியல் பார்வை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum