ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

+6
கேசவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
யினியவன்
அருண்
அசுரன்
balakarthik
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Sun Mar 25, 2012 5:41 pm

இங்கே மஸ்கட்டில் அந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் இந்த குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் என்று நிறைய வந்து விட்டன.

விலை எல்லாம் பகல் கொள்ளையாக இருந்தாலும் உட்கார இடம் கிடைப்பதில்லை. செலவு பண்ணுகிற சோர்ஸ்களைத் தேடி அலைகிற ஜனங்கள் நிறைய ஆகி விட்டார்கள்.

இது மாதிரி ஓட்டல்களில் கல்யாணம் ஆகாத விடலைப் பையன் – பெண் காம்பினேஷன்களை நிறைய பார்க்க முடிகிறது. அவர்கள் ஒரணா பெறாத விஷயங்களைக் கிறக்கத்துடன் பேசுகிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் ஊட்டி விடுகிற ரசாபாசங்களைச் செய்கிறார்கள். ஊடல்கள், சிணுங்கல்கள், வாடா – போடா விளிப்புகள்…….

நான் எழுத வந்தது அதை இல்லை. வேறொரு முக்கியமான வயிற்றெரிச்சலைப் பகிர்ந்து கொள்ளத்தான் இந்தப் பதிவு.

சென்னையில் மிகவும் பிரேபலமான ஹோட்டலின் ஓமன் கிளை அது. (நம்ம கிளை வேற)

சூப்பர்வைசர்கள் தவிர மீதி எல்லாரும் கோர்காலாண்ட், அஸ்ஸாம் பக்கத்திலிருந்து வந்தவர்கள். ரோபாட் மாதிரி சொன்ன வேலையைச் செய்கிறார்கள்.

மெனு கார்டில் இட்லி, பூரி, பொங்கல் மாதிரி பழகின பெயர்கள் எதுவும் இல்லை.

கல் தோசை என்று ஒரு ஐட்டம் இருந்தது.

மற்ற தோசையை எல்லாம் எதில் செய்கிறார்கள்?

ரெண்டு தோசை இருபத்தாறு ரூபாயாம். அடேடே அப்படி ஒன்றும் கிராக்கியாக இல்லையே…..

சரிதான் என்று ஆர்டர் செய்தேன்.

ரொம்ப ஜபர்தஸ்தாக ஆர்டரை பிளாக் பெரியில் பதிவு செய்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் சீனாக்காரி மாதிரி இருந்த ஒரு குட்டைப் பாவாடைப் பெண் தோசையைக் கொண்டு வந்தாள்.

புளிச்ச மாவில் வார்த்த மாவு தோசை.

தட்டில் ரெண்டு தோசை மட்டுமே இருந்தது. சட்டினி சாம்பார் ஒரு இழவும் இல்லை.

சரிதான் கொண்டு வருவார்கள் என்று காத்திருந்தால், பதினைந்து நிமிஷமாகியும் எதுவும் வரவில்லை.

கொஞ்ச நேரத்தில் அதே சீனாக்காரி எதிர் சீட் ஆட்களுக்கு லாரியில் அடிபட்ட கோழி மாதிரி ஒரு சிவப்புக் கூழைக் கொண்டு வந்தாள்.

“என்னம்மா, தொட்டுக்கற ஐட்டம் ஹோட்டல் மூடறதுக்குள்ள வந்துடுமா?” என்று கேட்டேன்.

நான் ஏதோ கெட்ட வார்த்தை பேசினது மாதிரி தலையைக் குனிந்து சிரித்தாள்.

எரிச்சலாகி சூப்பர்வைசரை அழைத்தேன்.

“என்னங்க இது, செந்தில் கிட்ட ஆர்.சுந்தரராஜன் வெறும் இட்லி வாங்கிட்டு வரச் சொன்ன மாதிரி வெறும் தோசையைக் கொண்டு வந்து வச்சிருக்கீங்க… தொட்டுக்க ஒண்ணும் கிடையாதா?”

“டிஷ் தனியா ஆர்டர் பண்ணனும் சார்”

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி”

மெனு கார்டை வாங்கிப் பார்த்தால் எல்லா டிஷ்ஷும் எழுபது ரூபாய், எண்பது ரூபாய்க்கு மேலே!

செட்டினாடு ஸ்பெஷல் வெஜிடபிள் க்ரேவி என்கிற சமாச்சாரத்தை ஆர்டர் செய்தோம்.

மினியேச்சர் முதியோர் தாழி மாதிரி இருந்த ஒரு வாணாவில் கொண்டு வந்தார்கள்.

சுடப் பண்ணின நேற்றைய கத்தரிக்காய் ரசவாங்கி மாதிரி இருந்தது.

சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்கால் பணம் என்கிற மாதிரி, இருபத்தாறு ரூபாய் தோசைக்கு அறுபத்தொன்பது ரூபாய் டிஷ்!

இதைப் பார்த்து, நம்முடைய மிடில் கிளாஸ் ஹோட்டல்கள் கெட்டுப் போகிற அபாயம் இருக்கிறது.

இட்லி பதினைந்து ரூபாய், சட்டினி நாலு ரூபாய், சாம்பார் எட்டு ரூபாய் என்றெல்லாம் அவர்கள் மாறினால்,

என் மாதிரி சாமானியர்கள் கதை கந்தல்.

அடுத்த தரம் இந்த மாதிரி ஹோட்டல்களுக்குப் போகிற போது ஒரு மிளகாய்ப் பொடி பொட்லமும், கொஞ்சம் எண்ணையும் எடுத்துப் போக உத்தேசம்.

உங்கள் அனுபவம் எப்படி?



ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by அசுரன் Sun Mar 25, 2012 5:47 pm

அட ரொம்ப தான் நொந்திருக்கீங்க.. புன்னகை இதெல்லாம் இப்போது பேஷனாகிவிட்டது.. சைடு டிஷ் கலாச்சாரம்...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Sun Mar 25, 2012 6:00 pm

அதவிட கொடுமை சப்பாத்தி பரோட்டா வெறும் அம்பது பைசாத்தான் (Baiza) ஆனால் அதுக்கு தொட்டுக்கொள்ளும் கிரேவி 1 Rial


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by அருண் Sun Mar 25, 2012 6:05 pm

ஆரம்பத்தில் எல்லாருக்கும் அதிர்ச்சிய்கதான் இருக்கும் போக போக பழக்கியா வேண்டியதா போயிற்று..!
இங்கவும் தான் சப்பாத்தி 10 ரூபா என்றால் குருமா 40 கொடுக்க வேண்டிய நிலைமை இங்க சாதாரண ஹோட்டலிலில் இதே நிலைமை தான்..!
அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by யினியவன் Sun Mar 25, 2012 6:10 pm

நொந்தவனுக்கு சென்ற இடமெல்லாம் நூலும் நூடுல்சும் தான் போலிருக்கே?

ஆகா என்ன கொடுமை இது என்ன கொடுமைன்னு பாடிட்டே
வெறும் வயித்த தடவிட்டு வரணும் போலிருக்கே?

மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய
பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by balakarthik Sun Mar 25, 2012 6:17 pm

கொலவெறி wrote:மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.

அவுங்க தல ரசிகரா இருந்தா பரவா இல்லை ஒருவேளை தளபதி ரசிகரா இருந்தா புல்லா கட்டிடுவாங்களே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by யினியவன் Sun Mar 25, 2012 6:25 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:மொளகாப் பொடிய கொண்டு போறது நல்ல ஐடியா அநியாய பில்ல பாத்துட்டு அவங்க கண்ணுல தூவிட்டு எஸ் ஆயிடலாம்.

அவுங்க தல ரசிகரா இருந்தா பரவா இல்லை ஒருவேளை தளபதி ரசிகரா இருந்தா புல்லா கட்டிடுவாங்களே
தளபதி ரசிகர்ன்னா நாம கில்லியா எகிறிடுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Mar 25, 2012 7:29 pm

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பே இதுபோல் எனக்கு அனுபவம், நம்ம ஊர் இட்டலி தோசையில் அல்ல, பஞ்சாபி தாபா என்கிற நெடுஞ்சாலைகளில் உள்ள வட நாட்டவர் ஓட்டலில் கிடைத்தது. நல்ல தாபா வாகத் தெரிகிறதே என்று காரை நிறுத்திவிட்டு உள்ளே போய் அமர்ந்தாவுடன் நல்ல வரவேற்பு, மோர் சாப்பிடுங்கள், ஷர்பத் வேண்டுமா என்று. கடுமையான வெய்யிலில் உள்ளே சென்றவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்துடன் பார்க்க....இதற்கு காசு வேண்டாம் , ப்ரீதான் என்றார்கள். குடித்துவிட்டு புல்கா எவ்வளவு என்று கேட்டோம்? ஒரு ரூபாய்க்கு இரண்டு என்று பதில் வந்தது. மிகுந்த ஆச்சரியத்துடன் சரி எங்களுக்கு பத்து புல்கா ரொட்டிகள் வேண்டும் என்றோம். பின்பு டால் பிறையின் விலையைக் கேட்டு சற்று அதிர்ச்சி. அடுத்து எக்கு பிறை , சிக்கன் பிறை, மாட்டான் பிரையின் விலையில் மயக்கமே வந்து விட்டது. வேறு வழி இல்லாமல் இரண்டுபேர்க்கு 200 ரூபாய் மேல் கொடுத்துவிட்டு (15 வருடங்கள் முன்பு) உண்மையான வயிற்று எரிச்சலுடன் காரை ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by கேசவன் Sun Mar 25, 2012 8:46 pm

இரண்டுபேர்க்கு 200 ரூபாய் மேல் கொடுத்துவிட்டு (15 வருடங்கள் முன்பு) உண்மையான வயிற்று எரிச்சலுடன் காரை ஒட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். சோகம்
அதனால்தான் ஐயா தங்கள் அனுபவசாலியாக உள்ளீர்கள் .


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  1357389ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  59010615ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Images3ijfஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by அசுரன் Sun Mar 25, 2012 8:53 pm

மக்கள் ஓட்டல்களை தேடிப்போவதன் விளைவு தான் இதெல்லாம். வீட்டுல ஒழுங்கா சமைச்சி கொடுத்தா இல்ல சமைச்சிக்கிட்டா என்னவாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்  Empty Re: ஹோட்டல் மெனுவும் விலை பட்டியலும் - நொந்த அனுபவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum