ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

+4
ராஜா
ரா.ரா3275
உதயசுதா
சிவா
8 posters

Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by சிவா Sun Mar 25, 2012 12:53 pm

கொள்ளையர்களிடம் 317 நாட்கள் சிக்கித் தவித்தவரின் அதிர்ச்சி அனுபவங்கள்

கப்பலில் பணியாற்றும் இந்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள், சோமாலிய கடற்கொள்ளையர்கள். இவர்கள் திடீரென்று நடுக்கடலில் தோன்றி, அதிரடியாய் துப்பாக்கி, ஏவுகணைகளை பயன்படுத்தி கப்பலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள். கப்பலில் இருப்பவர்களை சிறைபிடித்து, கோடிக்கணக்கில் பேரம் பேசுவார்கள். பேரம்படியும் வரை, பிணையாளிகளை கொடுமைப்படுத்துவார்கள். அப்படி சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் 317 நாட்கள் சிக்கித் தவித்தவர், பிஜேஷ். அவர் தனது திகில் அனுபவங்களை விவரிக்கிறார்...

"இத்தாலிய நாட்டு எம்.வி.சவீனா காலின் என்ற எண்ணை கப்பல் சூடானில் இருந்து மலேசியாவிற்கு கிளம்பியது. அதில் 17 இந்தியர்களும், 5 இத்தாலியர்களும் இருந்தோம். பீர் அருந்தினார்கள். பாட்டுபாடினார்கள். ஆட்டம்போட்டார்கள். எங்கள் பயணம் ஜாலியாக தொடங்கியது. நான் கப்பலில் `என்ஜின் கேடட்'டாக பணிபுரிந்தேன்.

எங்கள் கப்பல் சோமாலியாவின் சுற்றுப்பகுதிக்கு செல்லாது என்பதால் எங்களுக்கு பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இருக்கவில்லை. பொதுவாக நாங்கள் எப்போதும் கடற்கொள்ளையர்கள் பற்றி பேசிக்கொண்டிருப்போம். பல நிறுவனங்கள் கடற்கொள்ளையர்களை எதிர்கொண்டு தாக்கும் அளவிற்கான கமான்டோ படை வீரர்களை தங்கள் கப்பல்களில் வைத்திருக்கிறார்கள். எங்கள் கப்பலில் அப்படி யாரும் இல்லை.

ஆனால் பாதுகாப்பிற்காக கப்பலின் ஓரங்களில் பீப்பாய்களில் தண்ணீர் நிரப்பிவைத்திருப்போம். கமான்டோ படை வீரர்களைப்போன்ற `டம்மி`களை உருவாக்கி, பக்கவாட்டில் நிறுத்தி வைத்திருப்போம். தூரத்தில் படகுகள் வந்தாலும் கண்டுபிடிப்பதற்கு வசதியாக, அதி நவீன கேமிராக்களையும் வைத்திருக்கிறோம். கடலை பொறுத்தவரையில் பாதுகாப்பான பகுதி என்றோ, பாதுகாப்பான பயணம் என்றோ எதுவும் இல்லை. மடகாஸ்கர், ஓமன் பகுதிகளிலும்கூட கடற்கொள்ளையர்கள் வருகிறார்கள். எங்கு வருகிறார்கள். எப்படி தாக்குகிறார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு பயந்தால் எங்களைப் போன்றவர்கள் கப்பலில் வேலை பார்க்கவும் முடியாது.

அன்று நாங்கள் இந்திய கடல்பகுதியில் இருந்து 150 மைல் தூரத்தில் இருந்தோம். அப்படியே இலங்கை கடற்பகுதி வழியாக மலேசியா செல்வது எங்கள் திட்டம்.

காலை நேரம். கடல் அமைதியாக இருந்தது. எனக்கு திடீரென்று கப்பல் வேகத்தை அதிகரிக்கப்போகிறோம் என்று ஒரு மெசேஜ் வந்தது. நாங்கள் காரணம் புரியாமல் தவித்தபோது, `நம்மை நோக்கி ஒரு படகு வருகிறது' என்று தகவல் சொன்னார்கள். முதலிலே அந்த படகை ரேடரில் பார்த்தோம். அதை மீன்பிடி படகு என்று நினைத்தோம். பைனாகுலரில் பார்த்தபோது அந்த படகு, எங்கள் கப்பலில் இருந்து 15 மைல் தூரத்தில் இருந்தது. திடீரென்று அந்த படகில் இருந்து இன்னொரு வெள்ளை படகு, கடலில் குதித்தது. அதன் மூலம் வருபவர்கள் கடற்கொள்ளையர்கள்தான் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது.

கப்பலில் எல்லோரும் உஷாராக இருக்கும்படி அறிவித்தார்கள். கப்பலின் வேகத்தையும் அதிகரித்தார்கள். அதிகபட்சமாக கப்பலால் 14 நாட்டிக்கல் மைல் வேகத்தில் தான் செல்ல முடியும். ஆனால் படகு 35-40 நாட்டிக்கல் வேகத்தில் வந்துகொண்டிருந்தது. உடனே நாங்கள் இந்திய கடற்படைக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள், `உங்கள் கப்பல் இருக்கும் பகுதிக்கு நாங்கள் வர இன்னும் 6 மணிநேரமாவது ஆகும்' என்று பதில் அனுப்பினார்கள்.

படகு அருகில் வந்ததும் அதிலிருந்து துப்பாக்கியால் சுட்டார்கள். கண்மூடித்தனமாக சுட்டுக்கொண்டே, கப்பலை நிறுத்துமாறு கூறினார்கள். நாங்கள் அவர்களிடம் சிக்கப்போகிறோம் என்பது எங்களுக்கு புரிந்தது.

கப்பலின் `அக்கோமேடேஷன் சைடில்'தான் பொதுவாக கடற்கொள்ளையர்கள் சுடுவார்கள். அந்தப் பகுதி தகர்ந்தால், கப்பல் உடைந்து உள்ளே தண்ணீர் புகுந்துவிடும். அவர்கள் சிறிய ரக ஏவுகணைகளையும் கப்பலை நோக்கி வீசினார்கள். கப்பலில் ஆங்காங்கே ஓட்டை விழுந்தது. அப்போது நான் என்ஜின் அறையில் இருந்தேன். என் அருகில் குண்டுகள் விழுந்தன. கப்பலில் இருந்த இரண்டு ராடர்கள் நொறுங்கிவிழுந்தன. என்ஜினின் இயக்கத்தை நிறுத்தி, கப்பலை முடக்குவது அவர்கள் நோக்கமாக இருந்தது.

என்ஜினின் இயக்கம் நின்றுபோய் விடக்கூடாது என்பதில் நாங்கள் அனைவருமே குறியாக இருந்தோம். அதுவரை இல்லாத வேகத்தில் கப்பலை இயக்கினோம். ஆனால் கொள்ளையர்கள் படகு எங்கள் அருகில் வந்துவிட்டது. நாங்கள் `எஸ்' வடிவில் கப்பலை இயக்கி, தண்ணீரில் பிரளயத்தை உருவாக்கினோம். அதனால் அவர்கள் படகு தத்தளித்தது. ஆனாலும் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் எங்களால் போராட முடியவில்லை. அதற்குள் அவர்கள் படகில் இருந்து இரும்பு கயிறை எடுத்து எங்கள் கப்பலை நோக்கி வீசினார்கள். மூன்று கொக்கிகளில் இரண்டு சரியாக கப்பலில் விழ, அதை பிடித்துக்கொண்டு 25 அடி உயர கப்பலில் ஐந்து கொள்ளையர்கள் வேகமாக ஏறினார்கள்.

உயரமாக, முரட்டு உடல்வாகுடன் காட்சியளித்தார்கள். `கம்..கம்' என்று எங்களை எல்லாம் அருகில் அழைத்தார்கள். பயத்தோடு நாங்கள் சென்றதும், கைகளை உயர்த்திக்கொண்டு கீழே உட்காரும்படி சொன்னார்கள். நாங்கள் அனைவரும் அவ்வாறே அமர்ந்தோம். `நோ பிராப்ளம்.. ஒன்லி மணி' என்று தங்கள் பண ஆசையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் கையில் ஏ.கே.47 மற்றும் மெஷின் துப்பாக்கிகள் இருந்தன. வேறு யாராவது இருக்கிறார்களா என்று எல்லா அறைகளிலும் தேடினார்கள். நாங்கள் யாரும் பேசவில்லை. ஏன்என்றால், `எதிர் தாக்குதல் நடத்தினால் நிலைமை விபரீதமாகிவிடும். அதனால் சரணடைந்துவிடுங்கள்' என்றுதான் எங்களுக்கு கப்பல் நிறுவனமே கூறியிருக்கிறது.

நாங்கள் கப்பலில் பல நாடுகளை சுற்றுவோம். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சட்டம். எங்கள் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வைத்திருந்தால்கூட, சில நாடுகளின் சட்டப்படி எங்களை கைது செய்துவிடலாம்.

கப்பலை நிறுத்தாமல் ஓட்டியதால் அந்த கொள்ளையர்கள் கடுங்கோபத்தில் இருந்தனர். அதனால் எங்கள் கேப்டனை பிடித்து ஒரு கொள்ளையன் அடித்தான். அதற்குள் பெரிய படகு கப்பலின் அருகில் வந்தது. அதிலிருந்து 30-க்கு மேற்பட்டவர்கள், சரசரவென கப்பலில் ஏறினார்கள். எல்லோர் உடலிலும் துப்பாக்கி சூடுபட்ட காயங்களும், குத்துபட்ட காயங்களும் இருந்தன.

முதலில் எங்கள் தலைமை சமையல்காரரை அழைத்து, உணவுப் பொருள் அறையை திறக்கச் சொன்னார்கள். அங்கிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் அவர்களது படகில் ஏற்றினார்கள். எல்லா அறைகளையும் சோதனை செய்து லேப்டாப், செல்போன், துணிகள் போன்ற அனைத்தையும் வாரி எடுத்தனர். அவர்கள் சோமாலிய மொழி பேசினார்கள். ஒரு சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார்கள். இரண்டு பேரை என்ஜின் அறைக்கு கொண்டு சென்று அவர்கள் தலையை ஏ.கே.47 துப்பாக்கியால் குறிபார்த்தபடி கப்பலை ஸ்டார்ட் செய்யச் சொன்னார்கள். சோமாலிய கடற்கரையை நோக்கி கப்பலை செலுத்த சொன்னார்கள். அவ்வாறே கப்பலை செலுத்தினோம்.

கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறியதுமே, நாங்கள் இத்தாலி கடற்படைக்கு தகவல் அனுப்பியிருந்தோம். அதனால் இரண்டு ஹெலிகாப்டரில் வீரர்கள் வந்தனர். எங்கள் கப்பலுக்கு மேல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் பறந்ததும், கொள்ளையர்கள் கொடூர முகம் காட்டத் தொடங்கினார்கள். அவர்களது படகில் இருந்து ஏராளமாக நவீன ரக ஆயுதங்களை, ஹெலிகாப்டரை தாக்குவதற்காக கப்பலில் ஏற்றினார்கள். எங்களை சுற்றிலும் பெட்ரோல் கேன்களை அடுக்கினார்கள். அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானால், எங்களையும் எரித்து கப்பலையே சாம்பலாக்கிவிடுவது அவர்கள் திட்டம். அந்த திட்டத்தை எங்கள் கப்பல் கேப்டன் ஹெலிகாப்டரில் இருந்தவர்களிடம் சொன்னதும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திரும்பிவிட்டார்கள்.

மறுநாள் காலையில் எங்கள் வீட்டிற்கு போன் செய்து, நாங்கள் பிடிக்கப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை கூறும்படியும், பணம் கொடுத்து உடனே மீட்கும்படியும் சொன்னார்கள். நானும் என் மனைவியை அழைத்து, அந்த தகவலை சொன்னேன்.

நாங்கள் டாய்லெட் போனால்கூட இரண்டு பேர் அருகில் இருப்பார்கள். கொள்ளையர்களில் பாதிபேர் எங்களை கண்காணிக்கும்போது, பாதி பேர் தூங்கிக்கொண்டிருப்பார்கள். ஷிப்டு போட்டு வேலைபார்த்தார்கள். எங்கள் கப்பலில் மூன்று மாதத்திற்கு தேவையான உணவு இருந்தது. கண்டபடி அவைகளை தின்றார்கள். எங்களுக்கு எப்போதாவது ஒரு சில பழங்களை தந்தார்கள்.

சில நாட்களில் கப்பல் சோமாலியா சென்றது. அங்கு நங்கூரம் பாய்ச்சினார்கள். எங்களுக்கு கரை தெரிந்தது. ஏற்கனவே இரண்டு கப்பல்களை அங்கு பிடித்துவைத்து, பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

எங்கள் நிறுவனம் முதலில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து எங்களை மீட்க சம்மதம் தெரிவித்தது. அதற்கிடையில் இன்னொரு கப்பல் நிறுவனம் தங்கள் கப்பலை மீட்க, எங்களை விட பெருந்தொகை கொடுத்துவிட்டதால் எங்கள் நிறுவனத்திடமும் அந்த அளவிற்கு உயர்த்தி கேட்டார்கள். மாதக்கணக்கில் பேச்சு நீண்டது. நாளுக்கு நாள் பணத்தின் அளவினை கூட்டிக்கொண்டே போனார்கள். அடிக்கடி எங்களை சித்ரவதை செய்யவும் செய்தார்கள்.

தினமும் ஒரு ஆட்டை எங்கள் கப்பலுக்கு எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள். எங்களுக்கு தினமும் கஞ்சி காய்ச்ச மட்டும் அனுமதி கொடுத்தனர். எங்கள் நிறுவனம் கொள்ளைக்காரர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதை கைவிட்டதும், கொள்ளையர்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீர்கூட தர மறுத்தனர். தூங்கவிடுவதில்லை. அடித்தனர். எங்கள் தலைமை என்ஜினீயர் தப்பிக்க கடலில் குதித்தார். அதன்பின்பு அவர் என்ன ஆனார் என்றே எங்களுக்கு தெரியாது..'' என்கிறார்.

317 நாட்கள் கழித்து கிட்டத்தட்ட 58 கோடி ரூபாய் கொடுத்து, இவர்கள் மீட்கப்பட இருந்த நேரத்தில் அடுத்த அதிரடியை தொடங்கியிருக்கிறார்கள். `இந்திய கடற்படை சோமாலிய கடற்கொள்ளையர்களை பிடித்துவைத்திருக்கிறது. அவர்களை விட்டால்தான் இந்தியர்களை விடுவோம். பணத்தை கொடுத்துவிட்டு இத்தாலியர்களை மட்டும் அழைத்துச் செல்லுங்கள்' என்றிருக்கிறார்கள்.

இத்தாலி கம்பெனியோ இந்தியர்களை விட்டால்தான் பணம் தருவோம் என்று கூற, கடைசியில் ஒரு ஹெலிகாப்டரில் வந்து, பணப் பையை இறக்கி, கப்பலில் போட்ட பிறகு அத்தனை பேரையும் கப்பலில் செல்ல அனுமதித்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கொள்ளையர்களோடு கழித்தது, பிஜேஷ்க்கு மறக்க முடியாத கொடிய அனுபவமாக இருந்தது. இவர் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்.

தினதந்தி


சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by உதயசுதா Sun Mar 25, 2012 1:09 pm

ஐயோ படிக்கும்போதே பயமா இருக்கு.இந்த நிலைய அனுபவித்தார்கள் எப்படி பயந்து இருப்பார்கள்? இந்த சோமாலியா கொள்ளைக்காரர்களுக்கு யாராலும் ஒரு முடிவு கட்ட முடியலையே ஏன்?


சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Uசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Dசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Aசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Yசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Aசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Sசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Uசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Dசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Hசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by ரா.ரா3275 Sun Mar 25, 2012 1:22 pm

அய்யோ அம்மா...படிக்கும்போதே ஆங்கிலப் படம் பார்க்கும் மிரட்சி வருகிறது...அனுபவித்தவர்களின் நிலை?....
பயங்கரமான அபாயகரமான நிகழ்வு...
பகிர்விற்கு நன்றி சிவா...


சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? 224747944

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Rசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Aசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Emptyசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Rசோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by ராஜா Sun Mar 25, 2012 1:42 pm

பொதுவாக சோமாலியா கடற்கொள்ளையர்கள் கப்பல் பணியாளர்களை துன்புறுத்துவதில்லை என்று கேள்விபட்டிருக்கிறேன். அவர்களின் நோக்கம் பணம் மட்டும் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by பிளேடு பக்கிரி Sun Mar 25, 2012 3:14 pm

அடப்பாவிகளா... படம் பார்த்த மாதிரி இருக்கு :அடபாவி:



சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by அருண் Sun Mar 25, 2012 6:15 pm

படிக்கும் போதே நெஞ்சை பாதரவைக்குதே அப்ப அனுபவித்தார்கள் எப்படி இருந்திருக்கும்..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by யினியவன் Sun Mar 25, 2012 6:41 pm

திகில் கதை படிப்பது போலவே இருந்தது நமக்கு
மாட்டிக் கொண்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by ரா.ரமேஷ்குமார் Sun Mar 25, 2012 8:37 pm

அதிர்ச்சி :அடபாவி: அதிர்ச்சி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி? Empty Re: சோமாலிய கொள்ளையர்கள் கப்பலை பிடிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum