ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்

3 posters

Go down

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Empty கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்

Post by மகா பிரபு Wed Mar 14, 2012 10:24 am

கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இ.கம்யூனிஸ்டு கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு எதிர்க்கட்சியானது முதல் முறையாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது. முதல் மந்திரியாக சங்கரன் நம்பூதிரிபாடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 5.4.1957 அன்று திருவனந்தபுரத்தில் இருக்கும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது.

முதல் மந்திரி சங்கரன் நம்பூதிரிபாடு உள்பட 11 மந்திரிகளுக்கு கவர்னர் ராமகிருஷ்ணராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கவுரி அம்மாள் என்ற பெண், மந்திரி சபையில் இடம் பெற்றார். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கப்பட்டது. அச்சுதமேனன், வி.ஆர்.கிருஷ்ண அய்யர் (பிரபல வக்கீல்) டி.வி.தாமஸ், கே.பி.கோபாலன் ஆகிய பிரபல தலைவர்களும் மந்திரி சபையில் இடம் பெற்றார்கள்.

முதல் மந்திரி நம்பூதிரிபாடு 1937 ம் ஆண்டில் கேரளாவில் கம்யூனிஸ்டு இயக்கத்தை ஆரம்பித்த தலைவர்களில் ஒருவராவார். எளிமையான வாழ்க்கையும், கடுமையான உழைப்பும் உடையவர். ஆங்கிலம், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர். பதவி ஏற்கும் முன்பு முதல் மந்திரி சங்கரன் நம்பூதிரிபாடு ஆலப்புழைக்குச் சென்று மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் பி.கிருஷ்ணபிள்ளை சமாதியில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சியை தொடங்கி அதனை கட்டிக்காத்தவர் கிருஷ்ணபிள்ளை ஆவார். அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது பாம்பு கடித்து இறந்து போனார். அவரது உடல் ஆலப்புழையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் உயிர் துறந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்தது. பதவி ஏற்ற பிறகு முதல் மந்திரி நம்பூதிரிபாடு அறிக்கை வெளியிட்டார்.

அதில் புதிய அரசின் திட்டங்களை விளக்கி கூறியிருந்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:-

(1) கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம். இப்போது இருக்கிற சூழ்நிலையில் அது கஷ்டமானது. இருந்தாலும் உடனடியாக சில உறுதிமொழிகளை நிறைவேற்ற உத்தரவு போடுவோம்.

(2) இதர சில உறுதி மொழிகளை நிறைவேற்ற சட்டசபையில் புதிய சட்டம் கொண்டு வருவோம். வேறு சிலவற்றை அவசர சட்டம் போட்டு நிறைவேற்றுவோம்.

(3) வெகு விரைவில் நிலச்சட்டங்கள் சிலவற்றை கொண்டு வருவோம். இதன்படி ஒருவர் இவ்வளவு நிலம்தான் வைத்திருக்கலாம் என்று கட்டுப்படுத்தப்படும். அதிகப்படி நிலத்தை பிடுங்கி நிலம் இல்லாதவர்களுக்கு பங்கு போட்டு கொடுப்போம்.

இவ்வாறு நம்பூதிரிபாடு கூறியிருந்தார்.

மக்களை பாதிக்காத வகையில் புதிய வரி போடப்படும் என்றும், வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் ரப்பர், காபி எஸ்டேட்டுகளை அரசே கைப்பற்றி நடத்தும் என்றும் அறிவித்தார். வரி விதிப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். நம்பூதிரிபாடு தலைமையிலான அந்த ஆட்சி 2 ஆண்டுகளே நீடித்தது. கம்யூனிஸ்டு ஆட்சிக்கு எதிராக திடீர் கிளர்ச்சி நடந்தது.

சுமார் 48 நாட்கள் அது தொடர்ந்தது. கொல்லம் நகரில் மோதல் ஏற்பட்டு 7 வீடுகள் கொளுத்தப்பட்டன. 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஆசிரியர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள். எர்ணாகுளம் அருகே போலீசார் தடியடி நடத்தியதில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். கேரளாவில் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டுடன் தொடர்பு கொள்வதை கேரள கம்யூனிஸ்டு அரசாங்கம் மறைமுகமாக தடை செய்கிறது என்று கேரள சட்டசபை தமிழ் உறுப்பினர் கணபதி (காங்கிரஸ்) குற்றம் சாட்டினார்.

மேலும் கேரள அரசாங்கம் பற்றி மத்திய அரசிடம் காங்கிரசார் புகார் கூறி வந்தனர். ஆனால் அவற்றை கம்யூனிஸ்டு தலைவர்கள் மறுத்து வந்தார்கள். கேரளாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று பிரதமர் நேரு யோசனை தெரிவித்தார். இதனை கம்யூனிஸ்டு கட்சி நிராகரித்தது. இந்த நிலையில் கேரளாவில் நடந்து வரும் கிளர்ச்சி பற்றி ஆலோசிக்க மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் நேரு தலைமையில் நடந்தது.

சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். மந்திரிசபை கூட்டம் முடிந்த பிறகு, ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத்தை நேரு சந்தித்தார். கேரள அரசாங்கம் மீது காங்கிரசார் சாட்டிய குற்றச்சாட்டுகள் பற்றியும், அதற்கு நம்பூதிரிபாடு கூறிய பதில் பற்றியும், கேரள கவர்னர் அனுப்பிய குறிப்பு பற்றியும் ஆலோசனை நடத்தினார்கள்.

மீண்டும் மறுநாள் (30.7.1959) மந்திரிசபை கூடி விவாதித்தது. கேரளாவில் ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதனை அடுத்து 31.7.1959 அன்று கேரள மந்திரிசபையை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் உத்தர விட்டார். இந்த உத்தரவை மத்திய அரசு அதிகாரி விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சென்று கவர்னரிடம் வழங்கினார்.

உடனே கவர்னர் அதனை நம்பூதிரிபாடுவுக்கு அனுப்பினார். அன்று மாலை 5.30 மணிக்கு மந்திரி களுக்கு கவர்னர் தேனீர் விருந்து கொடுத்தார். அது முடிந்ததும் ஆட்சி பொறுப்பை கவர்னரிடம் நம்பூதிரிபாடு ஒப்படைத்தார். மாலை 6 மணி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கம்யூனிஸ்டு ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி நடத்தியவர்கள் வெற்றி விழா ஊர்வலம் நடத்தினார்கள்.

அந்த ஊர்வலத்தில் கிளர்ச்சி கமிட்டி தலைவர் மன்னத்து பத்மநாபனின் படத்தை எடுத்துச்சென்றார்கள். அவர் படத்துக்கு மாலை அணிவித்து ஆரவாரம் செய்தார்கள். மன்னத்து பத்மநாபன், முன்னாள் முதல் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளை மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களை கவர்னர் அழைத்து பேசினார். ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டதால் கிளர்ச்சியை நிறுத்தும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

கிளர்ச்சி கைவிடப்பட்டது. கேரளாவில் ஜனாதிபதி ஆட்சி வருவது பற்றி நம்பூதிரிபாடு மந்திரிசபையில் சட்ட மந்திரியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

ஜனாதிபதி ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சியோ, ஆர்ப்பாட்டமோ செய்யமாட்டோம். கம்யூனிஸ்டுகள் பொறுமையாக இருப்பார்கள். மத்திய அரசு நியாயமான முறையில் நடந்து கொள்ள வில்லை.எங்கள் மீது காங்கிரஸ்காரர்கள் கூறிய குற்றச் சாட்டுகளை `பொய்' என்று நிரூபிக்க சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக முடிவு செய்து கொண்டார்கள். "துன்ப நாடகம்" முடிந்து விட்டது. `

வில்லன்' வெற்றி பெற்றுவிட்டான். கலகக்காரர்களின் கோரிக்கையை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாக இதுவரை யாரும் கேள்விப்பட்டது இல்லை. கிளர்ச்சிக்காரர்களை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூப்பிட்டு சொல்லியிருந்தால், கிளர்ச்சி அடங்கி இருக்கும். ஆனால் அதற்குப்பதில் தலைவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு மறைமுகமாக ஊக்கம் கொடுத்தார்கள். அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இதைப்பார்க்க காந்தி கூட உயிரோடு இல்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் நினைக்கிறார்கள். வேறு கட்சி ஆட்சிக்கு வருவதை அவர்கள் பொறுக்க மாட்டார்கள். கேரளாவில் ஜனாதிபதி ஆட்சி ஏற்பட்டு இருப்பது இதைத்தான் நிரூபிக்கிறது.

இவ்வாறு கிருஷ்ணய்யர் கூறினார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி `டிஸ்மிஸ்' செய்யப்பட்டதற்கு கம்ïனிஸ்டு தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரள மாநிலம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். முக்கிய நகரங்களில் கண்டன ஊர்வலம் நடந்தது. கடைகள் அடைக்கப்பட்டன.

மாலைமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Empty Re: கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்

Post by பிரசன்னா Wed Mar 14, 2012 1:13 pm

இது ஒரு வரலாற்று பதிவு என்று தலைப்பில் சொல்லி இருக்கலாம்!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Empty Re: கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்

Post by நேரு Wed Mar 14, 2012 1:28 pm

கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசாங்கம் வந்தாலும் காங்கிரஸ் அரசாங்கம் வந்தாலும் தேசிய நலனுக்கு எதிராக மாநில தன்மையை முன்ன்டுத்து செல்வதில் மற்ற மாநில எதிர்ப்பு நிலையை (முல்லை பெரியாறு ) சம்பாதித்து கொள்வதுதான் கம்யூனிஸ்ட் கொள்கையா ?


பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்  Empty Re: கேரளாவில் கம்யூனிஸ்டு மந்திரிசபை: இந்தியாவின் முதல் எதிர்க்கட்சி அரசாங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கேரளாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அனிருதன் மரணம்
» கேரளாவில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஒரே மேடையில் போராட்டம்
» விஜயகாந்த்-ஜெ படங்கள் : முதல்வர் பதவி ஏற்பு விழா.முதல் முறையாக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஒரே விழாவில் சந்திப்பு...
» கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன
» குட்கா, பான்மசாலாவுக்கு கேரளாவில் தடை உடனடியாக அமலுக்கு வருவதாக முதல்-மந்திரி அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum