ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள்

Go down

கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள் Empty கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள்

Post by பிரசன்னா Sat Mar 10, 2012 1:40 pm

கலாச்சாரம் காக்கும் கைவினைப் பொருள்கள் BT_1328782233

குடிசைத் தொழில்கள், கிராமியத் தொழில்கள், கதர், கைத்தறி ஆடை நெய்யும் தொழில்கள் இவைதான் நமது பாரம்பரியத்தை அடுத்தடுத்த லைமுறைகளுக்கு எடுத்துச் செல்கின்றன. கலாசாரத்தைப் பறைசாற்றும் பொருள்கள்.
இவற்றின் மீது உயர்ந்த மதிப்பீடு கொண்டிருப்பது மட்டும் போதாது; கைவினைப் பொருட்களுக்கு ஆதரவு வேண்டும். இந்த கைவினைப் பொருட்களின் தயாரிப்பு குடிசைத் தொழிலாக, கிராமியத் தொழிலாக நடைபெற்று வருகின்றன.
எவ்வளவு அழகான கலைப் பொருட்கள்...
விலை இருபது முப்பது என்று ஆரம்பித்து, செய்யப்படும் கலைப் பொருட்களின் கலை நுணுக்கங்களையும் உபயோகப்படுத்தும் மூலப்பொருளையும் பொருத்து, விலை சில நூறுகளில், சில ஆயிரங்களில் இருக்கலாம்.
எல்லாரும் எல்லாப் பொருட்களையும் வாங்க முடியாதுதான். அவரவர்கள் சக்திக்கு வசதிக்கும் ஏற்ப கைவினைப் பொருட்களை வாங்கி ஆதரிக்கலாமே...

மூங்கில் இழைச் சித்திரங்கள் (பாயில் செய்யலாம்)
மெல்லிய மூங்கில் இழைகளைக் கொண்டு அல்லது பாயில் தயாரித்த சித்திரங்கள்... ஓடம், யானை போன்றவைகளில் இருந்து பல தரப்பட்ட கற்பனைகள்... ஒவ்வொன்றும் அழகானவை.
வாங்கி வீட்டில் மாட்டி வைக்கலாம். கிருகப் பிரவேசம் போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும்போது பரிசாகத் தரலாம்.

சுடுமண் சிற்பங்கள்
டெர்ரகோட்டா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சுடுமண் பொருட்கள் சிற்பங்கள் தனித்தன்மை வாய்ந்தவை.
அந்தூரியம் போன்ற அலங்காரப் பூக்களைச் செருகி வைக்கும் சிறிய வட்டமான தட்டு முதல் பெரிய அளவில் உள்ள யானைகள், குதிரைகள் வரை சுடுமண் பொருட்களில் உண்டு.
கீழே விழுந்தால் உடைந்துபோகும் என்பதற்காக பயந்துகொண்டு பலரும் இதனை வாங்க முன் வருவதில்லை.
இதே காரணத்திற்காக விசிறி முதல் பூச்செடிகள் வைக்கும் பூத்தொட்டிகள் வரை உடையாத பிளாஸ்டிக்கில் வர ஆரம்பித்துவிட்டன.
உடைந்துபோய் விடுமோ என்பதற்காக, நாம் பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்க ஆரம்பித்தால், நமது நாட்டில் வறுமைக் கோட்டிலும், அதற்குக் கீழிலும் வாழும் லட்சக்கணக்கான இந்தத் தொழில் செய்யும் சுடுமண் கலைஞர்களுக்கு நாம் இழைக்கும் தீங்கு, அநீதி. நாம் ஓரளவுக்கு வசதியான நிலையில் இருக்கும்போது நம்மால் செய்ய முடிந்த காரியத்தினால் - சில பேருடைய வறுமையைப் போக்க முயற்சி செய்யலாமே. நாம் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்கி உடயோகிப்பது, மறைமுகமாக அவர்களுடைய வறுமையைப் போக்க உதவுகிறது என்பதை உணர்வோம்.

பித்தளை மற்றும் வெங்கலப் பொருட்கள்
எவர்சில்வர் பாத்திரமும் குக்கர்குளம் வந்த பிறகு, பித்தளை, வெங்கலப் பாத்திரங்கள் ஓடி ஒளிந்து கொண்டன என்பது உண்மை. இத்தகைய பாத்திரங்களை நேரக்குறைவு காரணமாக அல்லது வேறு காரணங்களால் உபயோகப்படுத்த முடியாவிட்டாலும், ஒரு சில பொருட்களையாவது அலங்காரப் பொருள்களாக உடயோகப்படுத்தலாமே. கேரளத்தில் உருளி, பறை (நெல் அளக்கும் பாத்திரம்) போன்ற பித்தளை, வெங்கலப் பொருட்களை அலங்காரப் பொருட்களாக வரவேற்பு அறையில் வைத்திருப்பதைப் பார்க்கலாம். பெரிய அளவில் உள்ள குத்துவிளக்குகளையும் வரவேற்பு அறையில் அவர்கள் வைக்கிறார்கள்.

மரச்சிற்பங்கள்
ஃப்ளவர்வாஸ் போன்ற பொருட்களில் இருந்து கலை நுணுக்கம் வாய்ந்த சிற்பங்கள் வரை மரத்தில் செய்யப்படுகின்றன. உற்சாக மூட்டும் வித்தியாசமான வாசகங்கள் அடங்கிய மரப்பொருள்களையும் வரவேற்பு அறைகளில் வைக்கலாம். அலுவலகங்களில் வைக்கலாம்.

பொம்மைகள்
காற்றில் தலையை ஆட்டி இடுப்பை ஆட்டி நடனமாடும் பொம்மைகளை வைத்த நேரம் இருந்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எவ்வளவு அழகான பொம்மைகள். அலங்காரப் பொம்மைகளாக வைக்கலாம். பொம்மைகள் என்று சொல்லும்போது, மண்பொம்மைகள் தவிர, பேப்பர் கூழினால் செய்த பொம்மைகள், பிளாஸ்டர் ஆஃப் பாரிசினினால் செய்த பொம்மைகள் என்று பலவிதமான பொம்மைகள் விற்பனைக்கு வருகின்றன.
ஒவ்வொரு அறையிலும் அந்தந்த அறையின் உபயோகத்திற்குத் தகுந்த மாதிரி பொம்மைகளை வாங்கி வைக்கலாம்.
உதாரணமாக, பெட்ரூமில் சிங்கார ரசம் ததும்பும் ராதாகிருஷ்ணர் பொம்மை, அங்கலட்சணங்கள் அமைந்த அழகு ததும்பும் பொம்மைகளை வைத்த பெட்ரோமை அழகு படுத்தலாம்.
இன்னும் எத்தனை எத்தனையோ வகைக் கலைப்பொருள்கள் உள்ளன.

அன்றாட உபயோகத்திற்கும்...
கைத்தறி வேட்டி, புடவைகளை வாங்கி உபயோகிக்கலாம். கதர் விற்கும் கடைகளுக்குச் சென்று சந்தன பேண்ட், சந்தன ஊதுபத்தி போன்ற தரமான பொருட்கள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
இன்னும் மேசை விரிப்பு, படுக்கை விரிப்பு, திரைச்சீலைகள் போன்றவற்றிற்குத் தகுந்தவற்றை வாங்கி ஆதரிக்கலாம்.
நாம் வாழ்க்கையில் உயர உயர நம் வீட்டில் கிராமியப் பொருட்களின் உபயோகத்தை அதிகரித்துவந்தால், பார்ப்பவர்களின் மனதில் நம்மைப்பற்றிய உயர்வான அபிப்பிராயம் உருவாகும்.
என்ன புறப்பட்டுவிட்டீர்களா! கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு.
கைவினைப் பொருட்களை ஆதரிப்போம். அதைப் பார்த்து, மகாத்மா காந்தியும் நம்மை ஆசிர்வதிப்பார்.

- கமலநாதன்

மஞ்சரி ( From பிப்ரவரி 05,2012 To மார்ச் 10,2012 )
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum