ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை ....

Go down

காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை .... Empty காதல் இரண்டு வகைப்படும்,,உங்கள் காதல் எந்த வகை ....

Post by மீனு Fri Oct 02, 2009 1:53 am

கண்ணும் கண்ணும் பார்க்கின்றன.
மனமும் மனமும் நினைக்கின்றன.
உடலும் உடலும் துடிக்கின்றன.
இது காதல்!
இலக்கியத்திலே இதற்குத்தான் தலையாய இடம்.
இளமையிலே இதுதான் ஒவ்வோர் உயிருக்கும் முதற் கொள்கை.
சரித்திரத்தில் கணிசமான அளவு போர்க் களங்களை இதுதான் ஏற்படுத்திற்று.
நீதிமன்றத்தில் பாதி மன்றம் இதனால் விளையும் தகராறுகளைக் கவனிக்கிறது.
தற்கொலைகளிலே முக்கால்வாசிக்கு இது தலைமை வகிக்கிறது.
படுகொலைகளிலே பாதியை இதுதான் விவசாயம் செய்கிறது.
அரசியல் தலைவர்கள் பெறமுடியாத இடத்தைப் பத்திரிகைகளின் மூலம்
இது பெறுகிறது.
பசியை விடவா இது பெரிது?
ஆடையை விடவா இது முக்கியமானது?
பல்லூழிக் காலமாக உலகம் அப்படித்தான் கருதி வருகிறது.
அந்நியர் வேதப்படி ஆதமும் ஏவாளும் ஆரம்பித்து வைத்த கதை,
தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது.

இயற்கை, உலகத்தின் வளர்ச்சியையும் இதற்குள் அடைத்து வைத்திருக்கிறது.
இது தூய்மையானது.
இது உயர்வானது.
இது எதிர்ப்புகளைக் கண்டு கலங்காதது.
-இப்படி எல்லாம் பெயர் பெற்றிருக்கிறது.
இயற்கையை முறியடிக்க எல்லா வழிகளையும் கண்ட விஞ்ஞானிகள்,
இதையும் முறியடிக்க முயன்றார்கள்.
அவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும், அவர்க்ளுக்குக் காதல் இல்லாமலிருந்தால்!
அணுவைத் துளைத்த விஞ்ஞானிக்கும் மனைவி இருக்கிறாள்
அகிலத்தை வளைக்க விரும்பிய சர்வாதிகாரியும் அந்தரங்கத்தில் ஒரு
காதலியைப் பெற்றிருந்தான்.
நெப்போலியனின் வீர விளையாட்டுகளைவிட,
காதல் சுவையானது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலெ பதினாறு வயதில் ஓர்
ஏழையைக் காதலித்து மாண்டுபோன இளவரசியின் எலும்புக் கூட்டை
எகிப்து இன்று கண்டெடுத்திருக்கிறது.

வடநாடு காண வருவோர் தவறாது காணும் தாஜ்மகால், இதில் முளைத்தது.

கணவனைக் கொன்று, அவன் மனைவியைத்திருடிய ஒர் மன்னன்
அதர்கும் காதலென்றுதான் பேர் சொன்னான்.

காதல் நாடகம் எழுதாத நாடக ஆசிரியர்கள் அநுதாபத்திற் குரியவர்கள்.
பிற பெண்கள் தன்னைப் பார்க்கவேண்டும் என்ரெ ஆடவன் தன்னை அழகு
செய்து கொள்கிரான்.
காதல் ஒரு முறைதான் வருமென்று இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆனால் வாழ்க்கையில் பலமுறை வருகிறதே!
நான் நினைக்கிறேன், ஒவ்வோரு பெண்ணிடமும் ஒருமுறைதான் வருமென்று
சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.
இளமையில்தான் காதல் வருமென்கிறது இலக்கியம்.

உருவத்தைப் பார்த்து உடல் துடிக்கிற தென்றால், அது பித்தம்.
பள்ளியறையிலேயே இருக்கத் தோன்றுகிறது என்றால், அது மயக்கம்.
பகலுமில்லை இரவுமில்லை யென்றால், அது சதைப்பசி.

இளமைக்கு இதுதான் மிஞ்சுகிறது.
இது எப்படிக் காதலாகும்?
வெறித்தனம் ஓயும்போது வரும் அன்புதான் காதல்.

இளமைக் காதல் கானல் போன்றது.
இளமைக் காலுக்கு இருதயமில்லை.
நடுப்பருவக் காதலுக்கு இருதயமே தலைவன்.

அன்னையிடம் தந்தை காண்பதுதான் காதல்.

இலக்கியம் இளமைக் காதலைப் பறைசாற்றுகிறது.
சரித்திரம் இளமைக் காத்லைச் சாவிலே முடிக்கிறது.
நமது தலைமுறையில் நிறைவேறிய காதலெல்லாம் கசப்பான அநுபவமாக
முடிகிறது.
எட்டி நிற்கும் வரை இனிக்கிறது.
கட்டி முடித்த பின் கசக்கிறது.

நிறைவேறிய காதலில் நுற்றுக்குத் தொண்ணூறு தோல்வி.

தத்துவம் கிடக்கிறது.
அநுபவம் இதைத்தான் சொல்லுகிறது.
நிறைவேறாத காதலே அழியாத இலக்கியம்!
காதல் தூய்மையானது, அது தோல்வியடைந்தல்!

காதல் உயர்வானது, அது நிறைவேறாவிட்டால்!
திருமணத்தில் முடிகின்ற காதல் காதலேஅல்ல!
தோல்வியுறுவது எதுவோ அதுதன் காதல்!
இலக்கியக்காரர்கள் இளைஞர்களுக்கு விளையாட்டுக் காட்டி விட்டுப்
போய் விட்டார்கள்.

நீங்கள் நம்பாதீர்கள்.

தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும்,
பொறுப்புள்ள புன்னகையும், துணைவாடத் தான் வாடும் ஓருயிர்
உணர்வும் எங்கே தோன்ருகின்றனவோ, அங்கே வாழ்வது தான் காதல்!

காதல் இரண்டு வகைப்படும்.
ஒன்று தோல்வியுதுவது!
மற்றொன்று முப்பது வயதுக்கு மேல் வருவது!


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum