ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Go down

காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள் Empty காஞ்சிபுரம் மாவட்டக் கோயில்கள்

Post by பிரசன்னா Thu Feb 09, 2012 11:30 am



அஷ்டபுஜகர பெருமாள் கோயிலுக்கு மேற்கே, "தூப்புல்' எனுமிடத்தில் அமைந்துள்ளது, தீபப்பிரகாசர் கோயில்.
இத்தலத்துப் பெருமாளை என்றும், திவ்யப் பிரகாசர் என்றும் அழைப்பர். அறியாமை இருளை அகற்றுபவனும் அந்தப் பரந்தாமன்தானே! தனது ஒவ்வொரு அவதாரத்திலும், அறிந்தும் அறியாதும் தவறு இழைத்தவர்களை தண்டித்துத் தடுத்தாட் கொண்ட பெருமை திருமாலுடையதே!

ஜெய - விஜயர்களே, இரணியாட்சன், இரணியகசிபுவாகவும் கொடுங்கோலர்களாக அவதரித்ததை அவன் அறியானா? ஒரு தவறு செய்தால் அதுவும் தெரிந்தே செய்தால் அவன் விடுவானா? தவறு செய்வோருக்கு, திருந்த பல வாய்ப்புகளை தந்து இறுதியில் தான் அவரகளது கணக்கினை முடிப்பான் பரந்தாமன்! சிசுபாலனின் தாய் சாத்துவதிக்குக் கொடுத்த வாக்கினை நினைவில் கொண்டு, நூறு தவறுகள் வரை பொறுத்த பிறகே அல்லவா சிசுபாலனை வதம் செய்தான் கண்ணன்!

திருத்தண்கா
சரஸ்வதி தேவியின் துணையில்லாது, வேள்வியை நடத்திட, குளிர்ச்சி பொருந்திய இடத்தையே தேர்ந்தெடுத்தான் பிரம்மா. அந்த இடம்தான் திருத்தண்கா என்று பெயர் பெற்றது. அதுவே தற்போது "தூப்புல்' என்றும் அழைக்கப்படுகிறது. இதுபற்றி, பிரமாண்ட புராணம் விரிவாகக் கூறுகிறது.
நதியாக உருமாறி, வெள்ளப் பெருக்கினால் பிரம்மதேவனின் யாக சாலையை நிர்மூலமாக்கிட முதலில் முயற்சி செய்த சரஸ்வதி தனது முயற்சி தோல்வியுற்றதும், வெட்கித் தலை குனிந்த தலமே திருவெட்கா. அதன்பின் அரக்கர்களையும், அஷ்டபுஜகாளியையும் படைகளோடு அனுப்பினாள். அவர்களது தாக்குதலை முறியடிக்க எம்பெருமான் அட்டபுயகரத்தானாக எழுந்தருளிய தலமே அட்டபுயகரம். அரக்கர்களை காஞ்சிபுரம் வரை விரட்டியடித்து "ஆள்-அரி'. இத்தனை அனுபவித்த பின்னர் சரஸ்வதிதேவி என்ன செய்வதென்று அறியாது திகைத்தாள்.

இருளில் மூழ்கடிக்க!
பிரம்மதேவனின் யாகசாலை இருந்த இடத்தை காரிருளில் மூழ்கடித்து, வேள்வியை நடைபெறாது செய்துவிடத் திட்டமிட்டாள் நாமகள். "மாயாநளன்' எனும் அசுரனை அழைத்து அந்தப்பணியை அவனிடம் ஒப்படைத்தாள். "மாயா நளன்' பூவுலகம் முழுவதையுமே இருட்டாக்கி, சூரிய ஒளி சிறிதளவும் படராது முடக்கினான். காரிருள் சூழ்ந்திட, பிரம்மதேவன் திகைத்தான். திருமாலை சரணடைந்தான். "எனது யாகம் எந்தவித விக்னமுமின்றி செவ்வனே நடந்திட பேரருளாளனான நீயே பேரொளியாகத் திகழ வேண்டும், தீபப்பிரகாசராக எழுந்தருளி காத்திட வேண்டும்' என்று மன்றாடினான்.

விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே!
பிரம்மதேவனின் கோரிக்கையை ஏற்ற பெருமான் விளக்கொளியாக... விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே பேரொளியாகத் தோன்றினார். அந்தப் போரொளியால், உலகம் அனைத்துமே ஒளி தரும் சந்திர சூரியர்களும் கூட திகைத்துப் போயினர். அவர்களது கண்களையே கூச வைக்கும் கோடி சூரியப் பிரகாசராக, தீபப்பிரகாசர் தோன்றி, யாகசாலைக்கு ஒளியூட்டினார். பிரம்ம தேவன் தனது யாகத்தைத் தொடர்ந்தான்.
தோல்வி கண்டு துவண்டுவிடுவாளா சரஸ்வதி? மீண்டும் வியூகம் வகுத்திட்டாள். அசுரர் கூட்டத்தையே ஒரு தீப்பந்தாக்கி, யாகசாலையை நோக்கி அனுப்பி வைத்தாள். உருண்டோடி வந்த தீப்பிழம்பு, யாகசாலையையும், அங்கு அமர்ந்திருந்தவர்களையும் தனது உஷ்ணத்தால் தாக்கி சிதறடிக்க முற்பட்டது. தீபப்பிரகாசர் அதனைத் தொலைவிலேயே நிறுத்தி, அப்படியே தமது கரங்களில் ஏந்திக் கொண்டார். தீபப்பிரகாசரின் பேரொளி, பெருவிளக்காய்ப் பளிச்சிட்டது.

பகலோன் பகல் விளக்காய்!
ஸ்ரீ பாஷ்யகார சித்தாந்தம் போதித்த ஸ்ரீ வேதாந்த தேசிகர், திருத்தண்காவில் அவதரித்தவர். அனந்த சூரி - தோதாராம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, ஆசிரியர் அப்புள்ளாரிடமிருந்து அனைத்து கிரந்தங்களையும் அறிந்தவர். தீபப்பிரகாசர் கோயிலில், ஞானமுத்திரையுடன் கூடிய அவரது சிலாரூபத்தை தனிசந்நதியில் காணலாம். வாழ்நாள் முழுதும் அவர் பூஜித்த லட்சுமி ஹயக்ரீவர் சந்நதியும் இங்கு உள்ளது. தேசிகர் எழுதிய "பாதுகாசஹஸ்ரம்' என்ற நூல் ஆயிரம் ஸ்லோகங்களைக் கொண்டதாகும்.

மேற்கு நோக்கிய மற்றொரு திருக்கோயில்
சின்னக்காஞ்சிபுரத்தில் சேவித்துவரும் மேற்கு நோக்கிய பெருமாள் கோயில்களுள் விளக்கொளிப் பெருமாள் கோயில் ஐந்தாவது. மூன்று நிலை ராஜகோபுரமும், இரண்டு பிராகாரங்களும் கொண்ட திருக்கோயில். மேற்கு நோக்கியபடி தீபப்பிரகாசர், திருமகள், நிலமகளுடன் சேவை சாதிக்கிறார். பிரம்மனின் கோரிக்கையை ஏற்று, இங்கேயே எழுந்தருளியுள்ளார்.
தாயார் மரகதவல்லி என்ற திருநாமத்துடன், பச்சை வண்ண மேனியளாக பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
ஆறாகப் பெருகிவந்த சரஸ்வதிதேவி, யாகசாலையையும், சுற்றுப்புறத்தையும் குளிர்வித்துத் திருக்குளமாக மாறி தனது தோல்வியை ஒப்புக் கொண்டாள். திருக்கோயிலின் புனித தீர்த்தமே சரஸ்வதி தீர்த்தம் ஆகும்.
விளக்கொளிப் பெருமாளாக எழுந்தருளிய பெருமான், ஞானஒளி தரும் ஹயக்ரீவராகவும் இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்பு.

சின்னக்காஞ்சியில் சிவாலயங்கள்
இதுவரை சின்னக் காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் விஷ்ணு காஞ்சியில் ஐந்து திருமால் ஆலயங்களை வலம் வந்துவிட்டோம். காஞ்சிபுரத்தில் மொத்தம் 108 சிவாலயங்கள் இருந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. நகரின் பல பகுதிகளில் வரைபடத்துடன் கூடிய விவரங்களும் உள்ளன. அவற்றுள் எத்தனை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? எத்தனை கோயில்களில் தினசரி வழிபாடு தவறாது நடைபெறுகிறது? என்பதையெல்லாம் சுற்றிப்பார்த்து அறிந்திட பல நாட்கள் வேண்டும்.
இருந்தாலும், சின்னக்காஞ்சியில் உள்ள சிவாலயங்கள் சிலவற்றை தரிசித்துவிட்டு, பெரிய காஞ்சிபுரத்துக்கு செல்வோம்!

ஆதிபதேசுவரர் திருக்கோயில்
விளக்கொளிப் பெருமாள் கோயிலுக்கு எதிரிலேயே உள்ளது ஆதிபதேசுவரர் திருக்கோயில். கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகிறார், ஆதிபதேஸ்வரர்.
சரஸ்வதிதேவி, நதி உருவெடுத்து வந்தபோது, நள்ளிரவில் அவளைக் காண முடியாத நிலையில், திருமால், சிவலிங்கம் ஸ்தாபித்து, பூஜை செய்து, துணைக்கு அழைத்தார். திருமாலின் கோரிக்கையை ஏற்று, தீபம்போல பிரகாசித்தபடி, சிவபெருமான் காட்சி தந்ததாக, தலவரலாறு கூறுகிறது. அப்படி வந்த ஈசனே ஆதிபதேசுவரர்.

மணிகண்டீசுவரர்
சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயிலுக்கு சற்றுக் கிழக்கே அமைந்துள்ளது மணிகண்டீசுவரம். மேற்கு நோக்கிய சந்நதி. பெரிய நந்தி, பிரமிக்க வைக்கிறது. தேவாதி தேவர்கள் கூடி தங்கள் முன்வினைப் பாவங்கள் நீங்கிட பூஜித்த தலம்.

சாந்தாலீசுவரர்
சின்னக் காஞ்சிபுரம், திருக்கச்சிநம்பித் தெருவிற்கு வடக்கே, வேகவதி நதிக்கரையில், சாந்தாலீசுவரர் திருக்கோயில் உள்ளது. "சார்ந்தாசயம்' என்று கச்சிபுராணம் கூறும் தலம் இது.
வியாசமுனிவர் "நாராயணனே பரப்பிரம்மம்' என்று கூறி வந்ததால் உருவான சிவ அபராதத்தைப் போக்கிட வேண்டி, இங்கு ஒரு சிவலிங்கத் திருமேனியை ஸ்தாபித்து, அருள் பெற்ற தலம். அதனால், மூலவரை வியாச சாந்தாலீசுவரர் என்றே அழைக்கிறார்கள்.
வைணவகுலத்தில் பிறந்தபோதிலும் "சிவபெருமானே' முழுமுதற் கடவுள் என, அக்னித் தகட்டின்மீது நின்றபடி சத்தியம் செய்த "ஹரதத்தர்' வரலாறும் நினைவுகூரத் தக்கதாகும். இங்குள்ள அழகிய சுதைச் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

புண்ணி கோடீசுவரர்
சின்னக் காஞ்சிபுரம், செட்டித் தெருவிற்கு தென்கிழக்கில் இருக்கிறத புண்ணிய கோடீசுவரர் திருக்கோயில். புவனேசுவரியுடன் அருள்பாலிக்கிறார் புண்ணியகோடீசுவரர். பிரமனையும், பதினான்கு உலகங்களையும் படைக்க விரும்பிய திருமால், காஞ்சியில் ஓர தடாகத்தை உருவாக்கி, அதன் அருகில் சிவலிங்கத் திருமேனியையும் அமைத்து வரம்தா வரம்தா என்று இறைவனை பலமுறை அழைத்தால் எம்பெருமானும், அவருக்கு காட்சி தந்து, அவர் கேட்ட வரங்களை தந்தருளினாராம், அதோடு, பெருமாறை நோக்கி எம்மை வர(ம்)தா வர(ம்)தா என அழைத்து முறையிட்டதால் நீவிர் வரதராஜன் என பெயர் பெற்று இத்தலத்தில் எழுந்தருளுக என்று ஈசன் அருளிய தலம் இது.

சிவாத்தானம்
சின்னக்காஞ்சிபுரத்திலிருந்து ஒரிக்கை என்று அழைக்கப்படும் தேனம்பாக்கம் செல்லும் வழியில் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள சிவாலயம் இது. பிரம்மதேவன் வழிபட்ட பிரம்மபுரீசுவரர், கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சுயம்புலிங்க திருமேனி, தொண்டை மண்டலத்துக்கே உரிய கஜப்ருஷ்ட விமானம் கருவறையை அழகுபடுத்துகிறது. பிரம்ம தீர்த்தம் நான்முகன் நிறுவியது. முள் ஏதும் இல்லாத வில்வ மரம் இங்கே தல மரம். எனது ஆத்தானமாகியது இத்தலத்தினை உமது ஆத்தனமாக கொண்டமையால் சிவாத்தானம் என்று அழைக்கப்பட வேண்டும் என்று பிரம்மதேவன் சிவபெருமானை வேண்டிய திருத்தலம். வாசகி என்ற நாகராஜன் பூஜித்த வாசுகீசுவரர், காளகண்டீசர், முகதீசுவரர், பாணாதரீசுவரர், விரூபாட்சிசுவரர், பாரசரேசுவரர் சதாசிவர் திருக்கோயிலிகளும் இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தக்கீசுவரர்
பிள்ளையார் பாளையம் கச்சியப்பன் தெருவில் உள்ளது. தக்கீசுவரர் திருக்கோயில் சிவபெருமானையே தனது மருமகனாக பெற்றிருந்தபோதிலும், அவரை அவமதிக்கும் வகையில் அவரை அழைக்காமலேயே ஒரு யாகத்தை நடத்த முற்பட்டான் தக்கன், சிவகணங்கள், வீரபத்திரர் தலைமையில் சென்று தக்கனின் சிரத்தை அறுத்து, அந்த வேள்வியையும் அழித்தனர். தேவர்கள் அனைவரும் திக்குக்கு ஒரு வராய் ஓடினார். தக்கனின் உடலுக்கு ஆட்டுத்தலயை பொருத்தி அவனுக்கு மீண்டும் வாழ்வளித்தார் எம்பெருமான். தக்கன், இந்த தலத்தில் ஈசனின் திருமேனியை ஸ்தாபித்து பூசித்து, இறைவனின் திருவருள் பெற்று சிவகணங்களில் ஒன்றாகினான்.

அஷ்டபைரவர் போற்றும் சோளீசுவரர்
அஷ்ட பைரவர்கள்... ருருபைவர், சம்ஹார பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், காபால பைரவர், பீஷண பைரவர், அசிதாங்க பைரவர், விஷ்வக்சேன பைரவர் என்று எட்டு பைரவர்கள்.
சதாசிவத்தைப் போல் தனக்கும் ஐந்து முகங்கள் இருப்பதாக இறுமாப்பு கொண்டான் பிரம்மதேவ்ன. அவனது செருக்கினை ஓடக்கிட பைரவர் தோன்றி, அவனது ஒரு தலயை கிள்ளியெறிந்தார். நான்முகனாகவே இருந்து, படைப்பு தொழிலை தொடரந்து நடத்திட தனக்கு அருள் தர வேண்டுமென பிரம்மதேவன், சிவபெருமானை வேண்டினான். இறைவன் பிரம்மனுக்கு அருளிய தலம் இது.மூலவர் சோளீஸ்வரரின் கருவறையை சுற்றிலும், எட்டு பைரவர்களும், பூஜித்த சிவலிங்கங்கள், எட்டு திசையிலும் தனித்தனி சந்நதிகளில் இடம் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. மக்கள் இந்த திருக்கோயிலை பைரவர் கோயில் என்றே அழைப்பதும் குறிப்பிடத்தக்கது.


நன்றி - குமுதம் பக்தி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum