ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!

Go down

திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!  Empty திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!

Post by பிரசன்னா Mon 6 Feb 2012 - 13:41

திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!
on Monday, February 6, 2012 | 0 Comment

திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!  Images+(11)

போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டவுடன், அவர் போய் தி.நகரில் முடங்கிக் கொண்டாலும், வெளியே நடப்பவை அனைத்தும் விலாவாரியாக அவரது காதுக்கு வந்து சேர பக்காவான முன்னேற்பாடு இருந்தது. தமது ஆட்கள் ஒவ்வொருவருக்கும் செக் வைக்கப்பட்டுக் கொண்டு வருவதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.

பாஸ் என்று அ.தி.மு.க. சர்க்கிளில் அழைக்கப்பட்ட திவாகரன் மன்னார்குடியிலேயே தங்கியிருக்க, வெளிவேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நபரின் பெயர் வினோதன் (வினோதகன் அல்ல. அவர் வேறு நபர்) வினோத் என்றும் அவரை கட்சி வட்டாரங்களில் தெரியும். இந்த வினோத் மற்றும் அவரது நெருங்கிய நட்பு வட்டம் விசாரணை வளையத்துக்குள் வந்த உடனேயே “பாஸ் இன் ட்ரபிள்” என்பதைப் புரிந்து கொண்டார் அவர்.

உளவுத்துறையின் பூரண கண்காணிப்பில் இருந்த சசிகலாவை, அப்போது அவரது கணவர் நடராஜன் நேரில் வந்து சந்திக்கவில்லை. ஆனால், நடராஜன் சார்பில் அடிக்கடி வந்து சந்தித்துக் கொண்டிருந்த நபர், முன்பு காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர்தான். இந்த ஆள் வந்து போவது நடராஜனின் மெசஞ்சராக என்பதை உளவுத்துறையும் தெரிந்து வைத்திருந்தது.திவாகரன் சிக்கலில் மாட்டுகிறார் என்று தெரிந்தவுடன் சசிகலா செய்த முதல் மூவ், தன்னை வந்து சந்திக்கும் நடராஜனின் மெசஞ்சர் மூலமாக பெசன்ட் நகருக்கு ஒரு அவசர தகவல் அனுப்பியதுதான். “நீங்க என்ன செய்வீர்களோ தெரியாது, திவாகரனை இந்த சிக்கலில் இருந்து வெளியே எடுத்து விடுங்கள். பிரச்னை முடியும்வரை அவரை எங்காவது வெளிநாட்டுக்கு, இவர்களால் ரீச் பண்ண முடியாத இடத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்பதுதான் அந்த மெசேஜ்.

போஸ்ட்மேனாக தகவல் காவித் திரிந்த நபர், உளவுத்துறை தம்மையும் வாட்ச் லிஸ்டில் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாத காரணத்தால், முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்தார்.சசிகலா பாஸ் பண்ணிய மெசேஜை நடராஜனிடம் சொன்னதுடன் நின்றுவிடாமல், ஆர்வக் கோளாறில் தாமும் சோலோவாக முயற்சி ஒன்றைச் செய்தார். அப்போது சுந்தரகோட்டையில் தங்கியிருந்த திவாகரனை தொடர்பு கொண்டு, இது பற்றி டிஸ்கஸ் பண்ணியதில், இப்படி ஒரு லைன் ஓடுவது உளவுப் பிரிவுக்கும் தெரியவந்தது.

வெளிநாடு செல்வதென்றால், சிங்கப்பூர் செல்வது என்றும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதும், உளவுத்துறைக்கு தெரியவந்து விட்டது.இது நடந்தபோது, திவாகரனை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. திவாகரன் தடையில்லாமல் நடமாட விடப்பட்டிருந்தார். இவர்களது திட்டப்படி இந்தியாவை விட்டு திவாகரன் கிளம்பினால், பிற்பாடு சிக்கல் ஏற்படும் என்று புரிந்து கொண்ட உளவுத்துறை, திவாகரனுக்கு மறைமுக மெசேஜ் ஒன்றைக் கொடுத்தது.
…கொஞ்சம் பயந்துபோன திவாகரன் அடுத்து என்ன செய்வார் என்பதையும் உளவுத்துறை ஊகித்து வைத்திருக்கிறது. “சிங்கப்பூர் செல்லும் திட்டம் ஏதும் இருந்தால், அதை மறந்திடுங்க. தேவையில்லாமல் ஏர்போர்ட்டில் கைதாக வேண்டியிருக்கும்” என்ற மெசேஜ் திவாகரனுக்கு நெருக்கமான போலீஸ் அதிகாரி ஒருவர் மூலமாகவே சொல்லப்பட்டிருக்கிறது…
இந்த மெசேஜ் கிடைத்ததாலோ, என்னவோ, வெளிநாடு செல்லும் பிளானை சிறிது காலம் மூட்டைகட்டி வைத்து விட்டார்கள்.இதற்கிடையே நடராஜன் ‘வேறு விஷயமாக’ ஒருமுறை மலேசியாவுக்கு சென்று திரும்பினார். அவரது ட்ரிப் உளவுத்துறையை அலர்ட் பண்ணியது. மலேசியா கனெக்ஷன்கள் தொடர்பாக உளவுத்துறை துருவத் தொடங்கியது.தமிழக காவல்துறை என்னதான் தம்மை டிஃபென்ட் பண்ணினாலும், நடராஜனால் முன்பு காவல்துறைக்குள் பிளாண்ட் செய்யப்பட்ட ஆட்கள் இன்னமும் அவருக்கு விசுவாசமாகவே உள்ளார்கள். அவர்கள் மூலம், தமது மலேசியா கனெக்ஷன்கள் துருவப்படுகின்றன என்ற விபரம், நடராஜனுக்கும் போய் சேர்ந்தது. அவர் உஷாரானார்.

இந்தச் சமயத்தில்தான், சசிகலா உறவினர்கள் இல்லங்களில் சற்று வில்லங்கமான அன்-ஆஃபிஷியல் ரெயிடுகள் நடந்தன. சில சூட்கேஸ்கள் எடுக்கப்பட்டு, தமிழக எல்லைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன. அதில் சில கோடி இழப்பு ஏற்படவே, மீதியாகவுள்ள பல கோடிகளை காப்பாற்ற ஓவர்ஸீஸ் மணி-ட்ரான்ஸ்பர்கள் அவசியமாகின. நடராஜன் மீண்டும் வெளியே செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டது.இதில் திவாகரனின் கோடிகளும் அடக்கம் என்கிறார்கள். எனவே இந்த ட்ரிப்பில் திவாகரனையும் அழைத்துச் செல்வது என்று முடிவாகியதாக தெரிகிறது. திவாகரனும் சென்னைக்கு தருவிக்கப்பட்டார்.தமது மலேசிய விவகாரங்களை உளவுத்துறை கவனிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட நடராஜன், சிறியதாக ட்ரிக் ஒன்று செய்திருந்தார். அதை உளவுத்துறை அப்போது அறிந்திருக்கவில்லை.

நள்ளிரவுக்கு சற்றுமுன் பெசன்ட் நகர் வீட்டில் இருந்து கிளம்பிய அவர்கள் ஏர்போர்ட் சென்றபோது, உளவுத்துறை பின்தொடர்ந்தது. ஏர்போர்ட்டில் அவர்கள் மலேசியாவுக்கு விமானம் ஏறுமுன் மடக்கலாமா என்றுகூட யோசித்தார்கள். இருவரையும் மடக்குவதா, அல்லது திவாகரனை நிறுத்திக் கொண்டு, நடராஜனை பயணம் செய்ய அனுமதிப்பதா என்று மேலதிகாரிகள் மட்டத்தில் தலையை உடைத்துக் கொண்டு இருந்தார்கள்.இதற்கிடையே, இந்த விவகாரம் டிஸ்கஸ் பண்ணப்படும் இன்ஃபர்மேஷன், நடராஜனுக்கு அவரது காவல்துறை கனெக்ஷன் மூலம் தெரிய வந்தது. “திவாகரனை அழைத்துச் செல்லாதீர்கள். நிச்சயம் மடக்குவார்கள். நீங்கள் மட்டும் சென்றால் விட்டுவிட சான்ஸ் உள்ளது”

இந்த தகவலின்பின், நடராஜன் திடீர் முடிவை எடுத்தார். ஏர்போர்ட்வரை அழைத்துச் சென்ற திவாகரனை திருப்பி அனுப்பி விட்டார். தாம் மட்டும் ஏர்போர்ட்டுக்குள் சென்றார்.இந்த திடீர் திருப்பத்தில் உளவுத்துறை குழம்பிவிட, அவர்களுக்கு அடுத்த ஷாக் ஒன்றைக் கொடுத்தார் நடராஜன். அவர் மலேசியா செல்லும் விமான கௌன்டர் பக்கம் செல்லவில்லை. அதுதான் அவர் ஏற்கனவே செய்து வைத்திருந்த ட்ரிக்!சென்னையில் இருந்து நள்ளிரவு 12.15-க்கு புறப்பட்டு பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானம் TG338-ல் போர்டிங்-பாஸ் பெற்றுக் கொண்டார்.புதிதாக ஏதோ விவகாரம் சிக்க போகின்றது என்று நினைத்தோ, என்னவோ, உளவுத்துறை நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க, நடராஜன் பாங்காக் பறந்து விட்டார்.

அதன்பின், இவர்கள் சென்னை ஏர்போர்ட்டில் பாங்காக்கில் இருந்து வரும் விமானங்களை வாட்ச் பண்ண ஆள் போட்டு வைத்திருந்தார்கள். அதில் நடராஜன் வரவில்லை.அவர் புறப்பட்டுச் சென்று 3-வது நாள், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கினார் நடராஜன். அதே விமானத்தில் வந்த மற்றொரு வி.ஐ.பி. தயாநிதி மாறன். சென்னை விமான நிலையத்தில், இருவரும் பேசிக்கொண்டதை பார்த்த உளவுத்துறை, இதை அரசியல் ரூட்டில் பார்க்கத் தொடங்கியது. நடராஜனின் வெளிநாட்டு முதலீடு விவகாரம் செகன்டரியாக போனது!

நாம் இந்த விவகாரத்தில் கொஞ்சம் டீப்பாக துருவியபோது, சென்னையில் இருந்து பாங்காக் சென்ற நடராஜனிடம் தாய்லாந்து விசா இருந்த போதிலும், அவர் தாய்லாந்துக்குள் செல்லவில்லை என்று தெரியவந்தது. காலை 5.10-க்கு பாங்காக்கில் இறங்கிய அவர், இமிகிரேஷன் சோதனைகளுக்கு செல்லாமல், ட்ரான்சிட் ஹாலுக்கு சென்று மற்றொரு இ-டிக்கெட்டுக்கு போர்டிங்-பாஸ் பெற்றுக் கொண்டார்.

அந்த போர்டிங்-பாஸ், காலை 8.45-க்கு கோலாலம்பூர் செல்லும் TG415 விமானத்துக்குரியது. அதில் பயணித்து, காலை 1155க்கு மலேசியா சென்று விட்டார் நடராஜன்!திரும்பி வரும்போது, மலேசியாவில் இருந்து நேரே சென்னை வராமல், மலேசியா டு சிங்கப்பூர் தரை மார்க்கமாக சென்று, சிங்கப்பூர் டு சென்னை பிளைட் பிடித்தால், இந்தியாவில் எந்த ரிக்கார்டும் கிடையாது.சரி. இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட வேண்டுமே… சென்னை ஏர்போர்ட்டில் அவர் பாங்காக் செல்ல போர்டிங்-பாஸ் எடுத்தபின், அந்த ஏர்லைன் கம்ப்யூட்டரில் அவரது பி.என்.ஆரை (PNR – Passenger Name Record) பார்த்தால் அவர் ட்ரான்ஸிட் மூலமாக மலேசியா செல்வதை உளவுத்துறை தெரிந்து கொள்ளலாமே?

அதற்கும் ஒரு ட்ரிக் உள்ளது. சொல்லித் தருகிறோம், வெளியே சொல்லி விடாதீர்கள்.
1) நடராஜன் சென்னையில் இருந்து புறப்படும் முன், அவரது வெளிநாட்டு கிரெடிட் கார்டு நம்பரை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும்.
2) பாங்காக் விமானம் கேட்டில் இருந்து புறப்பட்டதும், தாய் ஏர்வேஸ் தமது கம்ப்யூட்டரில் அந்த பிளைட்டை பைனலைஸ் செய்வார்கள். அதை எஃப்.எஃப். ஸ்டாட்டஸ் என்பார்கள்.
3) பிளைட் ஏர்-போர்ன் ஆனதும், ஏர்லைன் கம்ப்யூட்டரே அந்த பிளைட்டை போஸ்ட் டிபாச்சர் நிலைக்கு மாற்றிவிடும். அதை பி.டி. ஸ்டாட்டஸ் என்பார்கள். அதன்பின் நடராஜனின் சென்னை பி.என்.ஆர். புதிய புக்கிங் எதனுடனும் ஆட்டோமேட்டிக்காக அசோசியேட் ஆகாது.
4) இந்த விமானம் 3 மணி நேரம் பறக்கும். அந்த நேரத்தில், நடராஜனின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி, பாங்காக் கோலாலம்பூர் விமானத்தில் புக்கிங் செய்தால், புதிய பி.என்.ஆர். இலக்கத்துடன் இ-டிக்கெட் ஒன்று அவரது பிளாக்பெரிக்கு ஃபோர்வார்ட் பண்ணப்படும். (அதற்கு முன்னரே புக்கிங் செய்தால், அதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது)
5) அதிகாலை பாங்காக்கில் இறங்கியபின், இமிகிரேஷன் போகாமல், ட்ரான்சிட் லவுஞ்சுக்கு போனால், இந்த புதிய இ-டிக்கெட்டை வைத்து கோலாலம்பூர் செல்ல போர்டிங்-பாஸ் எடுக்கலாம். சென்னை-பாங்காக் பக்கேஜ் டாக்கை காண்பித்தால், சூட்கேஸ்களை ஏர்லைன்ஸே ட்ரான்ஸ்பர் பண்ணி விடுவார்கள்… BINGO!


தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி
» அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்ல பிரதமர் தடை
» அமைச்சர் நாராயணசாமி வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா?
» 2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி வெளிநாடு செல்ல அனுமதி
» மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum