ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்

Go down

எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்  Empty எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்

Post by பிரசன்னா Mon Feb 06, 2012 12:07 pm

எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்
on Monday, February 6, 2012 | 0 Comment

எனக்கு வயதானாலும் மனதளவில் நான் இன்னும் இளைஞர்தான்-மு.க.ஸ்டாலின்  05-stalin-300-8

எனக்கு 59 வயதாகிறது. வயதானாலும் நான் இளைஞராகவே உணருகிறேன் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளரும், இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸடாலின்.


திமுகவில் மு.க.ஸ்டாலினுக்கு பதவி உயர்வு தரப்படும் என்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், அந்தப் பேச்சுக்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் சிதறுத் தேங்காய் போல சிதறிப் போன நிலையில, ஸ்டாலினின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.



திருச்சிக்கு வந்த ஸ்டாலின் அங்கு கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திமுக இளைஞர் அணி நேர்காணலில் கலந்து கொண்டார்.



அப்போது அவர் பேசுகையில்,



இளைஞரணி தான் தி.மு.க.வின் சொத்து. 1950-ல் மதுரை ஜான்சி ராணி மைதானத்தில் இளைஞர் அமைப்பு தொடர்பான கூட்டம் நடந்தது. அதன்பின்னர் திருச்சியில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது இளைஞரணிக்கு தலைவர் யார் என கேட்கப்பட்டது. அப்போது தி.மு.க. கட்சிக்கு தலைவர் கலைஞர், இளைஞரணி தலைவர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்கள்.



அந்த சமயம் பொது செயலாளர் அன்பழகன், இளைஞரணி அமைப்பு குழுவை ஏற்படுத்தி அதன்பின்னர் நிர்வாகிகள் தேர்வு செய்யலாம் என்றார். அந்த குழுவில் நான், பரிதி இளம்வழுதி, சிவா எம்.பி., பஞ்சவர்ணம், பாரதி இளவல் உள்ளிட்டோர் இடம் பெற்றோம்.



இந்த குழு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகளை சந்தித்தோம். அதன்பின்னர் மாவட்டம், ஒன்றியம், நகரம், வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அதன் பிறகுதான் நான் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதால் இப்போது வயதானவர்களாக உள்ளனர்.



எனக்கு 59 வயதாகிறது. வயதானாலும் நான் இளைஞராகவே உணருகிறேன். இருப்பினும் இளைஞர் அணியில் மாற்றம் வந்தால்தான் வலு சேர்க்க முடியும் என்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைவர் உத்தரவிட்டு உள்ளார்.



கடந்த 2 நாட்களாக நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பல கருத்துக்குள் பரிமாறப்பட்டன. அப்போது சிவா எம்.பி. பேசுகையில் அன்று இருந்த இளைஞர்களுக்கு உள்ள உணர்வு இப்போது உள்ள இளைஞர்களுக்கு இல்லை. மொழிப்பற்று, இனப்பற்று குறைவு என்று கூறினார். இது உண்மைதான். ஆனால் தற்போது கால சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது.



கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சிக்கு வர அண்ணாவின் பேச்சாற்றல், கலைஞரின் உழைப்பு ஆகியவை இருந்தாலும் இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி, இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவையும் முக்கிய காரணம்.அத்தகைய உணர்வு உள்ள இளைஞர்கள், இளைஞர் அணியில் இன்றைக்கு தேவை.



இன்று நடந்த இளைஞரணி நேர்காணில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். தற்போது தேர்வாகும் நிர்வாகளுக்கு மாவட்டம் தோறும் பாசறை கூட்டம் நடத்தப்படும். இளைஞரணிக்கு தேர்வு செய்யப்படுவது போல தொண்டரணி, மாணவரணி, வக்கீல் அணிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். எத்தனை அணிகள் தி.மு.க. வில் இருந்தாலும் இளைஞர் அணிதான் தி.மு.க.வின் சொத்து என்றார் அவர்


தகவல் பகிர்வு :தமிழ் வாரஇதழ் செய்திகள் :ARRKAY BLOGSPOT-:
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum