ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

4 posters

Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 1:06 pm

விஜயகுமார், சென்னையில் தனியார் நிறுவன ஊழியர். தன் குழந்தைகளின் எதிர்கால படிப்பிற்கு உதவும் என்று நினைத்து இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து கட்ட ஆரம்பித்தார். சரியாக மூன்று வருடம் அவரால் பணத்தைக் கட்ட முடியவில்லை. இன்று அந்த பாலிசி காலாவதியாகி, நிர்க்கதியாக கிடக்கிறது.

''இந்த பாலிசியில் மூணு வருஷம் மட்டும் கட்டினாப் போதும்; உங்க முதலீடு டபுளாயிடும்'' என்று சொன்னதை நம்பி பணத்தைப் போட்டார் வேலூர் சண்முகம். இன்று அவர் எடுத்த பாலிசி இருபது சதவிகிதம் மைனஸில் இருக்கிறதே என்று புலம்பித் தீர்க்கிறார்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த பலரும் இப்படி விதவிதமாகப் புலம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்காக நாம் வேறு யாரையும் குற்றம்சாட்ட முடியாது.காரணம், இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும் முன் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் என்று நாம் பார்ப்பதே இல்லை. இனியாவது, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் என்னென்ன விஷயங்களைக் கட்டாயம் கவனிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோமா?

யார் பெயரில் பாலிசி..?
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை பொறுத்தவரை, சம்பாதிக்கும் நபரின் பெயரில் எடுப்பதுதான் சரியானது. இன்ஷூரன்ஸ் என்பதே குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, அவர் இல்லாத நிலையில் சமாளிப்பதற்கான ஒரு முன்னேற்பாடுதான். இது தெரியாமல், பாசத்தைக் காட்டுகிறேன் என மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் பாலிசி எடுப்பவர்கள் ஏராளம்.

மனைவி வேலைக்குச் செல்லும் பட்சத்தில் அவர் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம்! வேலைக்குச் சென்று வருமானம் ஈட்ட வாய்ப்பில்லாதவர் எனும் பட்சத்தில் மனைவி மற்றும் பிள்ளைகள் பேரில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது வீண்தான். ஒரு உதாரணத்தைப் பார்ப்போமா?
ஒரு குடும்பத் தலைவர் தன் பெயரில் 10 லட்ச ரூபாய்க்கும், தன் மனைவி பெயரில் 8 லட்ச ரூபாய்க்கும், இரு பிள்ளைகள் பெயரில் தலா 5 லட்ச ரூபாய்க்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தார். குடும்பத் தலைவர் விபத்து ஒன்றில் சட்டென போய் சேர்ந்துவிட, பத்து லட்ச ரூபாய்க்கான இழப்பீடு மட்டும் கிடைத்தது. அது, அவர் ஏற்கெனவே வாங்கி இருந்த கடனை அடைக்கவே சரியாகப் போய்விட்டது. தொடர்ந்து வந்த மாதங்களில் மனைவி மற்றும் பிள்ளைகள் பெயரில் எடுக்கப்பட்ட பாலிசி களுக்கு பிரீமியம் கட்டுவதற்கு வழியில்லாமல் அந்த பாலிசிகள் எல்லாம் வீணாகப் போனது.
இதற்குப் பதில், குடும்பத் தலைவர் பெயரில் 28 லட்ச ரூபாய்க்கு பாலிசி எடுத்து இருந்தால், இழப்பீடு தொகை அதிகமாக கிடைத்திருக்கும். கடனை அடைத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை அவர் களின் எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! P24

காப்பீடா? முதலீடா?

கிட்டத்தட்ட 75 சதவிகிதத் துக்கும் அதிகமானவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசியை முதலீடாகவே கருதுகிறார்கள். இது தவறு. இப்படி பார்க்கும்போது அந்த பாலிசி மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறோமே ஒழிய, ஆபத்தான காலத்தில் நம் குடும்பத்திற்கு அது எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதைப் பார்க்கத் தவறி விடுகிறோம். எனவே, குழப்பத்தை தவிர்த்து, இனியாவது இன்ஷூரன்ஸை ஒரு காப்பீடாக மட்டுமே பார்ப்பது நல்லது.
கவரேஜை கவனிங்க!
அதிகபட்சம் 2 அல்லது 3 லட்ச ரூபாய் கவரேஜ் கொண்ட பாலிசிகளை மட்டுமே வைத்திருப்பவர்களே நம்மில் பலர். குறைவான கவரேஜ் கொண்ட பாலிசிகளைத் தேர்வு செய்வது நாம் செய்யக்கூடாத பெருந்தவறு.குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கொண்ட பாலிசி களையே நாம் தேர்வு செய்ய வேண்டும்.
உதாரணத்துக்கு, 40 வயதான ஒருவர் ஆண்டுக்கு 10,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறார். அவர் எடுத்தது யூலிப் பாலிசியாக இருந்தால் அவருக்கு கிடைக்கும் கவரேஜ் ஒரு லட்ச ரூபாய்தான். இதுவே டேர்ம் பிளான் என்கிறபோது இந்த 10,000 ரூபாய் பிரீமியத்துக்கு சுமார் 12 லட்ச ரூபாய் கவரேஜ் கிடைக்கும். பிரீமியம் ஒன்றுதான், ஆனால் நமக்கு கிடைக்கும் கவரேஜ் அதிகம் என்பதால் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க விரும்புகிறவர்கள் முதலில் டேர்ம் பிளானை தேர்வு செய்வதே நல்லது.

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! P25

எவ்வளவுக்கு பாலிசி..?

பொதுவாக ஒருவரின் ஆண்டு சம்பளத்தைப் போல 10 முதல் 12 மடங்கு தொகைக்கு பாலிசி எடுப்பது நல்லது. உதாரணமாக, ஒருவரின் மாதச் சம்பளம் 20,000 ரூபாய் என்றால், ரூ.24 லட்சம் முதல் ரூ.29 லட்சம் வரையில் பாலிசி எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கான பிரீமியத் தையும் உங்களால் கட்ட முடியும் என்றால் மட்டுமே அந்த தொகைக்கு பாலிசி எடுக்கலாம். இல்லை எனில், எவ்வளவு தொகைக்கு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கான பாலிசியை இப்போது எடுத்து விட்டு, தகுதி அதிகரித்தபிறகு கவரேஜ்-ஐ உயர்த்திக் கொள்ளலாம்.

கார் கடன், வீட்டுக் கடன் போன்றவை வாங்கியிருந்தால் அந்த தொகைக்கு இணையாக டேர்ம் பிளான் எடுத்துக் கொள்வது கட்டாயம். இந்த டேர்ம் பிளானை ஆன்லைன் மூலம் எடுக்கும்போது பிரீமியம் இன்னும் குறையும்.

பிரீமியம் கட்டும் ஆப்ஷன்..!
பிரீமியம் செலுத்துவதற்கான கால இடைவெளியை மாதத்திற்கு ஒருமுறை என்று வைத்துக் கொள்ளாமல் காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒரு முறை என வைத்திருப்பது நல்லது. மாதம்தோறும் கட்டினால் அதிகமாக பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதோடு, அதற்கான கிரேஸ் பிரீயட் 15 நாட்கள் மட்டுமே என்பதையும் மறக்கக்கூடாது.

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! P24a

யூலிப் பாலிசி!

காப்பீடு, முதலீடு என இரண்டையும் கலந்து செய்த கலவை இது! குறைந்த கவரேஜ் மட்டுமே இதில் கிடைக்கும். இந்த பாலிசியில் போடப்படும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே நம் லாப, நஷ்டம் அமையும் என்பதை நன்கு புரிந்து கொண்டு நீண்டகால நோக்கில் பணத்தைப் போட நினைக் கிறவர்கள் மட்டுமே இந்த பாலிசியை எடுக்கலாம்.

இதில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் பணத்தைக் கட்டிவிட்டு, மேற்கொண்டு பிரீமியம் கட்டாமல் விடுவது லாபகரமாக இருக்காது. அந்த ஆண்டுகளில் கமிஷன் மற்றும் பிரீமிய ஒதுக்கீடு கட்டணம் அதிகமாகச் சென்றிருக்கும் நான்காவது ஆண்டில் பிரீமியம் கட்டவில்லை எனில், இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் இதர கட்டணங்களுக்கு ஏற்கெனவே முதலீட்டிற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் யூனிட்களை விற்று பணம் எடுத்துக் கொள்வார்கள். எனவே, பத்து முதல் பதினைந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பிரீமியம் கட்ட நினைக் கிறவர்கள் மட்டுமே, யூலிப் பாலிசிகளை தேர்வு செய்யலாம்.

இது யூலிப் பாலிசிகளில் ஒன்றான என்.ஏ.வி. உத்தரவாத திட்டங்களுக்கும் பொருந்தும்.
வரிச் சலுகை!
வரிச் சலுகைக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறவர்கள்தான் நம்மில் பலர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை பலரும் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்குவது இந்த தவறான புரிதலின் அடிப்படையில்தான்.

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசாங்கம் நினைப்பதாலேயே தான் அதற்கு வரிச் சலுகை வழங்கி இருக்கிறதே ஒழிய, வரிச் சலுகைக்காக நாம் தேவையில்லாமல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கு வரிச் சலுகை கிடைக்கும். 10% வரியை மிச்சம் பிடிக்க நினைத்து அதற்கு மேல் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் பலர்..!

இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும் முன் இந்த விஷயங்களை கவனித்தால் புலம்பவேண்டிய அவசியம் இருக்காது!

- சி.சரவணன்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty Re: இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by முகம்மது ஃபரீத் Mon Jan 30, 2012 1:29 pm

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி இதனை ப்ரின்ட் செய்து கொண்டேன் சூப்பருங்க சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty Re: இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by பிரசன்னா Mon Jan 30, 2012 1:31 pm

முகம்மது ஃபரீத் wrote:அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி இதனை ப்ரின்ட் செய்து கொண்டேன் சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty Re: இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by சார்லஸ் mc Mon Jan 30, 2012 4:15 pm

நல்ல பயனுள்ள பகிா்வு இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 678642 இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550


இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty Re: இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by ந.கார்த்தி Mon Jan 30, 2012 4:29 pm

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! Empty Re: இன்ஷூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum