ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

+4
உதயசுதா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிஜிராமன்
செல்ல கணேஷ்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by செல்ல கணேஷ் Sat Jan 28, 2012 11:58 pm

தோழமைக்கு,
நாம் பார்க்கிற பாரதி என்கிற மகாகவி அவரின் மனைவி பார்வையில், இந்த உரை என்னை அதிகம் நெருட செய்தது. தயவு செய்து முழுதும் வாசிக்கவும். கொஞ்சம் அதிக நேரம் தேவைப்படலாம் வாசிப்பதற்கு ஆனாலும் வாசிக்கவும்.

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்" என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம். கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்? கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிளிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிடமிருக்க முடியுமா?

கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். சூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

வாசித்தபின் என்னுள் நிறைந்த மௌனம் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்.
நன்றி !


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by பிஜிராமன் Sun Jan 29, 2012 12:08 am

மகாகவி என்றறிந்த பின்னும், முழுதும் வாசிக்காது செல்ல அனுமதிக்குமா இந்த உள்ளம்.

எவ்வளவு பொக்கிசமான பதிவு இது. மிகவும் நன்றிகள் ஐயா....இந்த பதிவை நான் என் கணினியில் கோப்பாக சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by செல்ல கணேஷ் Sun Jan 29, 2012 11:40 am

பிஜிராமன் wrote:மகாகவி என்றறிந்த பின்னும், முழுதும் வாசிக்காது செல்ல அனுமதிக்குமா இந்த உள்ளம்.

எவ்வளவு பொக்கிசமான பதிவு இது. மிகவும் நன்றிகள் ஐயா....இந்த பதிவை நான் என் கணினியில் கோப்பாக சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.

மிகவும் நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி
தோழமைக்கு,
நன்றி !
ஆம் இது பொக்கிசமே!


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 29, 2012 12:02 pm

நான் முன்பே இதுகுறித்து படித்துள்ளேன். என்றாலும் உங்கள் பதிவை மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். விரும்பினேன் உங்கள் பதிவை. நன்றி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by செல்ல கணேஷ் Sun Jan 29, 2012 12:05 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நான் முன்பே இதுகுறித்து படித்துள்ளேன். என்றாலும் உங்கள் பதிவை மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை படித்தேன். விரும்பினேன் உங்கள் பதிவை. நன்றி மகிழ்ச்சி
தோழமைக்கு,
மிக்க நன்றி. காரணம் நம் முன்னோடி ஆளுமைக்கு நாம் செய்யும் நன்றியறிதலே இது. நன்றி !


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by உதயசுதா Sun Jan 29, 2012 12:20 pm

நாமெல்லாம் பாரதிய புகழ்கிறோம் என்றால் அதற்கு ஒரு காரணம் அவர் மனைவியும்தான். அவங்க அவரை எந்த விதத்திலும் தொல்லை படுத்தாமல் இருந்ததால தானே அவர் புகழ்பெற முடிந்தது.
நல்ல பதிவு. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Uஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Dஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Aஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Yஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Aஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Sஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Uஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Dஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Hஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by ந.கார்த்தி Sun Jan 29, 2012 1:02 pm

சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by செல்ல கணேஷ் Sun Jan 29, 2012 11:11 pm

தோழமைகளுக்கு,
வாசித்த அனைவருக்கும் நன்றி.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Thu Jun 07, 2012 7:49 pm

சிலர் எப்போதும் விதையாக கடவுளால் ஊன்றப்படுகிரார்கள் ! பாரதியின் பாடல்கள் அன்றைய சுதந்திர வேள்வியில் ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தது ! அதனால் அநேகர் உந்தப்பட்டு தம்மை அர்ப்பணித்தனர் ! இன்று அதன் பலனை அறுக்கும் அநேகருக்கு அவர்களின் மகத்துவம் தெரியாது ! மனிதர்களால் மறக்க பட்டாலும் கடவுள் ஏற்ற பலன் கொடுக்காமல் இருப்பதில்லை !
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 29/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by கேசவன் Thu Jun 07, 2012 10:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  1357389என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  59010615என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Images3ijfஎன் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது  Empty Re: என் கணவர் -மகாகவி பாரதி பற்றி அவரின் மனைவி சொன்னது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum