ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடும் கொடியும்

2 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாடும் கொடியும் Empty நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:05 am




ஒருநாடு என்றால் அதற்குக் குறிப்பிட்ட எல்லைக்கு ஒரு நிலப்பரப்பு இருக்க வேண்டும். அதில் வாழ குடிமக்கள் இருக்க வேண்டும். அவர்களை ஆள்வதற்கு அரசாங்கமும், ஆட்சியும் இருக்கவேண்டும்.

அந்த நாட்டுக்கென்று ஒரு தேசியக்கொடியும், தேசிய கீதமும், சின்னமும் (இலச்சினை) இருக்கவேண்டும். இந்திய தேசத்திற்கென்று ஒரு கொடி இருக்கிறது. மூவண்ணக்கொடி அது. மேலே ஆரஞ்சு, நடுவில் வெள்ளை, அதன் நடுவில் அசோகச் சக்கரம், கீழே பச்சை ஆகியவற்றைக் கொண்டதுதான் இந்தியத் தேசியக் கொடியாகும்.

இந்தியாவின் தேசிய கீதம்—‘ஜன கண மன‘ என்ற பாடலாகும். இந்தியத் தேசப் பாடல் ‘வந்தே மாதரம்‘ ஆகும்.

இந்திய நாட்டின் தேசியச் சின்னம் (இலச்சினை) மூன்று சிங்கங்களின் முகங்கள். இந்தியத் தேசிய வாசம் ‘சத்யமேவ ஜெயதே‘ இந்தியாவின் தேசிய விலங்கு புலி.

தேசியப் பறவை மயில். தேசிய மலர் தாமரை. உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மிகப் பழங்காலம் தொட்டே உலக நாடுகள் பலவும் தனித்தனிக் கொடிகளைக் கொண்டிருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இன்று உலகநாடுகள் அனைத்துக்குமே அவற்றின் தேசியச் சின்னமாகக் கொடிகள் அமைந்திருக்கின்றன. அந்தக் கொடிகளின் நிறமும், அவை அமைந்துள்ள பாங்கும், அவற்றில் பொறிக்கப்பட்டுள்ள இதர சின்னங்களும் அந்த நாடுகளின் கொள்கைகளை விளக்குவனவாக இருப்பதையும் காணலாம்.

இவ்வாறு ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு கொடியைத் சின்னமாகத் தேர்வு செய்து பயன்படுத்த ஆரம்பித்தது. எப்பொழுது தெரியுமா? பைபிள் காலத்திற்கும் முன்னதாகவே இந்தப் பழக்கம் உலகத்தில் இருந்துவந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி தேசியக்கொடி தோன்றியது ஒரு சுவையான கதையாகும். பண்டைக் காலத்தில் தோன்றிய தேசியக் கொடிகள் துணியில் செய்யப்பட்டிருக்கவில்லை.

ஒரு கம்பத்தின் மீது மரத்தினால் ஏதாவதொரு பொருள் அல்லது பறவை அல்லது விலங்கினத்தின் உருவத்தைச் செதுக்கிவைத்து விடுவார்கள். உலகத்தில் தோன்றிய முதல் கொடி இப்படி மரக்கொடியாகத்தான் தோன்றியது. அதுவும் ஓர் அவசியத்தை முன்னிட்டுத்தான் தோன்றியது. அதாவது இரண்டு நாடுகள் போரிடும்பொழுது இருநாட்டுப் படைகளும் நேர் எதிர்த்திசைகளிலிருந்து புறப்பட்டு ஒரு பொது இடத்திற்குச் சென்று சங்கு அல்லது ஏதாவதொரு ஒலிப்பானை ஒலிக்கச் செய்துவிட்டு போரிடத் தொடங்குவதுதான் பண்டைக் காலத்திய வழக்கமாகும்.

அப்படிப் போருக்குச் செல்லும் ஒரு நாடு அல்லது குழுவின் வீரர்கள் ஒரே அணியாகச் செல்லவும், அடையாளம் கண்டு கொள்ளவும்தான் இப்படிப்பட்ட மரக்கொடிகளைத் தயார் செய்து பயன்படுத்தினார்கள். போர்க்களத்தில் போர் நடக்கும்பொழுது இந்த மரக்கொடிகளை வெட்டிச் சாய்ப்பதையே இருதரப்பு வீரர்களும் முதல் பணியாகக் கருதி முயற்சிப்பார்கள். ஒவ்வொர் தரப்பினரும் தங்கள் கொடி சாய்ந்துவிட்டால் அவர்களுடைய அரசன் அல்லது படைத்தலைவனே சாய்ந்து விட்டதாக அவர்கள் கருதியதுதாம் இதற்குக் காரணமாகும். துணியினால் ஆன முதல் கொடியை ரோமானிய நாட்டவர்தான் முதன் முதலாக உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதாக ஒரு வரலாறு கூறுகிறது.

பண்டைய ரோமானியர்கள் போர்க்களத்தில் வண்ணத்துணிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்துவிடுவார்கள். அந்த இடத்திற்கு அவர்களுடைய படைவீரர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். பின்னர் அவர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க, எதிரிநாட்டுப் படைகள் வந்து சேர்ந்ததும் போர் குழப்பமில்லாமல் நடக்கும். யூதர்கள் ஒரு தனிக்கொடியைப் பயன்படுத்தியதாகப் பைபிளிலேயே ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் கி.பி. 1218-ஆம் ஆண்டில் ஒரு கொடியை உருவாக்கி அதைத் தேசியச் சின்னமாக ஏற்று முதன்முதலில் உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நாடு டென்மார்க்தான்.

அடுத்து 1339 ஆம் ஆண்டில் ஸ்விட்ஸர்லாந்து நாடும் தன்னுடைய தேசியச் சின்னமாக ஒரு கொடியை அமைத்துக் கொண்டது. அதற்குப் பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துத் தான் பிரிட்டன் தன் தேசியக் கொடியை அமைத்துக் கொண்டது. யூனியன் அமெரிக்கத் தேசியக் கொடி தோன்றியது. அமெரிக்காவின் கொடியில் அதன் 50 மாநிலங்களையும் குறிக்கும் வகையில் 50 நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன! பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்காவைப் பின்பற்றிப் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் கொடிகளை அமைத்துக் கொண்டன.

உலகத்தின் மிகப்பழமையான கொடி ஏதாவது உள்ளதா என்று தேடியபோது 1972ஆம் ஆண்டில் ஈரான் நாட்டில் உள்ள கபிளில் என்ற ஊரில் ஒரு பழமையான கொடி கிடைத்தது. உலோகத்தால் செய்யப்பட்ட அந்தக் கொடி கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இன்றைக்கு. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கொடியாகும் அது! ஆனால், உலகத்திலேயே மிகப்பெரிய கொடி ஒன்று 1980 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. 411X210 சதுர அடி பரப்பளவும் 7.7 டன் எடையும் கொண்ட அந்தக் கருங்கல் கொடியை உருவாக்கியவர் லென் சில்வர் பைன் என்பவராவார், ஃதி கிரேட் அமெரிக்கன் ஃபிளாக்“ என அழைக்கப்படும் அந்தப் பிரமாண்டமான கொடியை அவர் அமெரிக்க ஜனாதிபதிக்குப் பரிசளித்தார்.

இன்று அந்தக் கொடி வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் இருக்கிறது. உலகத்திலேயே கொடிக் கம்பங்களில் பறக்கும் கொடிகளில் மிகவும் பெரிய கொடி தென் அமெரிக்காவில் உள்ள பிரேஸில் கொடி தான்! பிரெஸில் நாட்டின் தலைநகரான பிரேஸிலியாவில் பறந்து கொண்டிருக்கும் அந்தக் கொடியின் நீளம் 328 அடி 1 அங்குலம்; பெரிய பொடி சோவியத்யூனியன் உட்பட உலகின் எந்த நாட்டிலும் பறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். நம் இந்திய நாட்டை எடுத்துக் கொண்டால் நமது கடவுள்களுக்குக் கூட தனித்தனிக் கொடிகள் உண்டு.

உதாரணம்: முருகப் பெருமானின் சேவல் கொடி. பண்டைத் தமிழ் மன்னர்களை எடுத்துக் கொண்டால் சேர மன்னர்களுக்கு வில் கொடியும், பாண்டிய மன்னர்களுக்கு மீன் கொடியும், சோழமன்னர்களுக்கு புலிக்கொடியும் இருந்திருக்கின்றன. ஒரு நாட்டின் கொடிக்கு எப்பொழுதும் தனிமரியாதை உண்டு. அந்தக் கொடிக்கு அரசன் முதல் ஆண்டிவரை தலை வணங்கி மரியாதை செலுத்துவார்கள். ஒரு நாட்டின் கொடியை எவரேனும் அவமதித்தால், அது அந்த நாட்டையே அவமானப்படுத்துவதாகும். அந்தக் காலத்தில் அரசர்களின் தேர்களில் அவர்களுடைய நாட்டுக் கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தன. இந்தக் காலத்தில் நாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் கார்களில் தேசியக்கொடிகள் கம்பீரமாகப் பறக்கின்றன. தேசியக் கொடியைப் பற்றி இந்திய தேசத்தின் தந்தை‘ யாகிய அண்ணல் மகாத்மா காந்தியடிகள் சொல்லியிருப்பவை வருமாறு: “எல்லா நாடுகளுக்கும் கொடி இருப்பது அவசியம். அதற்காக இலட்சக்கணக்கானோர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.

இது ஒரு வகையான விக்கிரக ஆராதனை என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இதை ஒழிப்பது பாவம். ஏனென்றால் ஓர் இலட்சியத்தின் சின்னமாகக் கொடி விளங்குகிறது. யூனியன் ஜாக் கொடியை ஏற்றிவைக்கும் போது ஆங்கிலேயரின் நெஞ்சத்தில் அளப்பரிய வலிமையுடன் உணர்ச்சிகள் பொங்கி எழுகின்றன. நட்சத்திரங்களும் பட்டைகளும் பொறித்த கொடியை ஓர் உலகத்துக்கே ஈடாகப் போற்றுகின்றனர் அமெரிக்கர்கள்.

நட்சத்திரத்துடன் கூடிய பிறைக் கொடியைக் கண்டால் இஸ்லாமியர்களுக்கு வீர உணர்வு பொங்கி எழும். இந்தியர்களாகிய நாம் இந்துக்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பார்ஸிகள், இன்னும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட மற்றவர்கள் ஒரு பொதுக் கொடியை தேசியக் கொடியாக வரித்துக் கொண்டு அதற்காக வாழவும், சாகவும் முன் வருவது அவசியம்“ என்கிறார் அண்ணல் அவர்கள் தேசியக் கொடியின் முக்கியத்துவத்தைப் பற்றிக் காந்தியடிகள் மட்டுமின்றி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஜவஹர்லால் நேரும், டாக்டர் ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்ற தேசியத் தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு சமயம் சுபாஷ் சந்திரபோஸ் அயல் நாடுகளிலிருந்து திரும்பி, பம்பாய் துறைமுகதத்தில் வந்து இறங்கியதும் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது பத்திரிகை நிருபர் ஒருவர் சுபாஷ் பாபுவை நெருங்கி “நாட்டு மக்களுக்குத் தாங்கள் விடுக்கும் செய்திகள் என்ன?“ என்று கேட்டபோது அந்தத் தியாகத் தலைவன் சொன்ன ஒற்றை வரிச் செய்தி, “தாயின் மணிக்கொடியைத் தாழவிடாதீர்கள்!“ என்பதுதான்.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:05 am

அதாவது தாயின் மணிக்கொடியைத் தாழவிடாமல் தேசத்து விடுதலைப் போராட்டப் பணியைத் தொடர்ந்து நடத்துங்கள் என்பதே அதன் பொருளாகும்.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் இலட்சோப லட்சம் விடுதலைப் போர் வீரர்களுக்கு இது வீர உணர்ச்சியை அளித்தது காங்கிரஸ் இயக்கத்தின் மூவண்ணக் கொடிதான். அது வெறும் கொடியாக மட்டும் இருக்கவில்லை. இந்திய மக்கள் அனைவரின் நம்பிக்கையின் சின்னமாகவும், உத்வேகத்தின் அடையாளமாகவும், வீர உணர்வின் வெளிப்பாடாகவும் திகழ்ந்தது.

அந்தக் கொடியைத் தாழ விடாமல் உயர்த்திப் பிடித்ததற்காகத்தான் தியாக சீலன் திருப்பூர் குமரனின் தலையில் அடித்து மூளையைச் சிதறடித்துச் சாகடித்தனர் பிரிட்டிடீஷ் போலீஸார்! அந்தத் தாயின் மணிக்கொடியை ஏந்திப் பிடித்ததால்தான் பம்பாய் வீதியில் பாபுகனு என்ற பதின்மூன்று வயதுச் சிறுவனின் மீது லாரியை ஏற்றிக் கொன்றனர் பிரிட்டிஷ் போலீஸார்!அந்தக் கொடியை உயர்த்திப் பிடித்து ஊர்வலமாகச் சென்றதற்காகத்தான் லாகூர் வீதியில் பாஞ்சால சிங்கம் லாலாலஜபதிராயின் மீது பிரிட்டிஷ் போலீஸார் மிருகத்தனமான தடியடியை நடத்தி நெஞ்சிலும் தோளிலும் இரத்தக்காயங்களை ஏற்படுத்தி, அடுத்த சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவச் செய்தனர்!

அந்த வீரமணிக் கொடியை ஏந்தி ஊர்வலம் சென்றதற்காகத்தான் தியாகத்தழும் பேறிய ஜவஹர்லால் நேருவின் அன்னை ஸ்வரூபராணியையும், மனைவில் கமலா நேருவையும், மகள் இந்திராவையும், அலகாபாத் தெருக்களில் சரமாரியாகத் தடியடி நடத்தி இரத்தவெள்ளத்தில் மிதக்கச் செய்தனர்.

நம் தேசியக் கொடியைப் பகிரங்கமாகத் தோளில் சுமந்து கொண்டு போகக் கூடாது என்று பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தடை விதித்ததை எதிர்த்துத்தான் நாகவுரி கொடிப் போராட்டம் நடந்தது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கொடியேற்றி நடந்து தடையை உடைத்தெறிந்தார்கள். சிறைச்சாலைகளையும் நிரப்பினார்கள்.

இப்படி எண்ணற்ற தியாக சீலர்கள் சிந்திய இரத்தத்திலும், கண்ணீரிலும் தோய்ந்து தோய்ந்து உரம் பெற்று ஓங்கிப் பறந்ததுதான் தாயின் மணிக்கொடி!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிங்கப்பூரில் தற்காலிக சுதந்தர இந்திய அரசை அமைத்த போதும், அந்தமான் தீவை முதன் முதலாகச் சுதந்தரம் பெற்ற இந்திய பூமியாக அறிவித்தபோதும் ஏற்றி மகிழ்ந்த கொடிதான் தாயின் மணிக்கொடி! நமது இம்மூவண்ணக் கொடி!

இந்தியதேசிய இராணுவ வீரர்களோடு பர்மா எல்லையிலிருந்து இம்பால் போர்முனையில் பிரவேசித்து ஒரு பகுதி இந்திய பூமியை விடுவித்தபோது ஏற்றிய சுதந்தரக் கொடியும் இதே தாயின் மணிக்கொடிதான்!

அந்த விடுதலைப் போராட்ட வீரர் தம் மணிக்கரங்களில் தவழ்ந்த மூவண்ணக் கொடியிலிருந்துதான் இன்றைய நம் தேசியக்கொடி உதயமானது.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:06 am

தேசியக் கொடியின் தோற்றம்!

இந்த இருபதாம் நூற்றாண்டில் நம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களையெல்லாம் நமது தேசியக் கொடியின் வரலாறு பிரதிபலிக்கிறது. நம் நாட்டின் பல்வேறு அரசியல் இயக்கங்கள், வகுப்புப் பிரச்சினைகள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் முதலியவை எல்லாம் கொடி பற்றி நமது மக்கள் கொண்டுள்ள மனோபாவத்தில் வெளிப்படுகின்றன.

முதல்கொடி

நம்முடைய தேசியக் கொடி முதன் முதலாக 1906 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதியன்று கல்கத்தா பார்ஸி பகான் சதுக்கத்தில் (இன்றைய கிரீன் பார்க்) ஏற்றி வைக்கப்பட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. அந்தக் கொடியில் மேலே பச்சையும் ஆரஞ்சும் கீழே சிவப்புமாக மூன்று வண்ணப் பட்டைகள் இருந்தன என்றும். மேலே உள்ள பச்சைப் பட்டையில் எட்டுத் தாமரை மலர்களின் உருவங்கள் சம அளவில் வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன என்றும். நடுவில் உள்ள ஆரஞ்சு வண்ணப்பட்டையில் ‘வந்தே மாதரம்‘ என்ற சொற்கள் தேவநாகரி எழுத்தில் கருநீல வண்ணத்தில் பொறிக்கப்பட்டிருந்தன என்றும் அந்தக் குறிப்பில் காணப்படுகிறது.

ஆனால் முதல் தேசியக்கொடி கல்கத்தாவில் ஏற்றப்படவில்லையென்றும், அது பெர்லின் நகரில் ஒரு சர்வதேச மாநாட்டில் மேடம் காமா என்னும் இந்தியப் புரட்சிக்காரரால் 1905 ஆம் ஆண்டிலேயே ஏற்றி வைக்கப்பட்டதாகவும் இன்னொரு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது. மேடம் காமாவால் தயாரிக்கப்பட்ட அந்தத் தேசியக் கொடியில் மேலே சிவப்பு, நடுவில் மஞ்சள், கீழே பச்சை என்று மூன்று பட்டைகளும், சிவப்புப் பட்டையில் ஒரு தாமரை மலரும், ஏழு நட்சத்திரங்களும் (சப்தரிஷி நட்சத்திரங்கள்) பொறிக்கப்பட்டிருந்த தாகவும், மஞ்சள் பட்டையில் நீலவண்ணத்தில் வந்தே மாதரம் பொறிக்கப்பபட்டிருந்ததாகவும், கீழேயுள்ள பச்சைப்பட்டையின் இடது மூலையில் சூரியனின் உருவமும், வலது மூலையில் இளம் பிறையும் இருந்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.



நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:07 am

இரண்டாவது கொடி


மேடம் காமாவால் பெர்லின் நகரில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி 1905 இல் ஏற்றப்பட்டதாக ஒரு குறிப்பும், 1907 இல் ஏற்றப்பட்டதாக மற்றொரு குறிப்பும் கூறுகிறது.

மேடம் காமா என்றழைக்கப்படும் ருஸ்தம் பிகாஜி கர்மா, 1861 செப்டம்பர் 24ஆம் தேதியன்று, பம்பாயில் வாழ்ந்து வந்த சோரப்ஜி ஃபிரேம்ஜி பட்டேல் என்ற பார்ஸி செல்வந்தரின் மகளாகப் பிறந்து, அலெக்ஸாண்ட்ரா பார்ஸி. பெண்கள் பள்ளியில் கல்வி பயின்று அனைத்துப் பாடங்களிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர். இளம் வயது முதல் தேச விடுதலைப் போரிலும், விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாக சிலர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதிலும் பேரார்வம் கொண்டிருந்த மேடம் காமா, தாமும் விடுதலைப் போரில் குதித்தார்.

அதைக் கண்டு வருத்தமுற்ற அவருடைய தந்தை மகளின் போக்கை மாற்றுவதற்காக 1885 ஆகஸ்டு 3 ஆம் தேதியன்று ருஸ்தம் காமா என்பவருக்கு மனமுடித்து வைத்தார்.

ருஸ்தம் காமா பிரிட்டிஷ் ஆட்சியின் பலத்த ஆதரவாளர். மேடம் காமாவோ அவருக்கு நேர் விரோதமானவர். அதனால் செல்வச் செழிப்பு மிக்க கணவரின் வீடு போக்களமாயிற்று. ஏராளமான வசதியும், சுகபோகங்களும், அந்தஸ்தும் மேடம் காமாவைத் துளியும் கவரவில்லை.

கிரிதான் (கண்ணன்) மேல் கொண்ட பக்தியினால் கணவனைப் பிரிந்து சென்ற மீராவைப் போலத், தேசத்தின் மீது கொண்ட பக்தியினால் தம் கணவரைப் பிரிந்தார் காமா அம்மையார்!

அப்பொழுது பம்பாயில் பிளேக் நோய் பரவி பெருவாரியான மக்களைப் பலி கொண்டு வந்தது. பயங்கரமான அந்தத் தொற்று நோயைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்வதில் ஈடுபட்டார் காமா அம்மையார். அதன் விளைவாக அவருக்கும் அந்நோய் பிடித்தது. இருப்பினும் தேச சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்ட அந்த வீரப் பெண் மணியைச் சாவும் நெருங்க அஞ்சியது! விரைவிலேயே குணமாகி எழுந்து நடமாடிய காமா அம்மையார், மிகவும் நலிந்து பலவீனமாக இருந்ததால் அவரை ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு வற்புறுத்தினர்.

அதனால் மேடம் காமா 1902 ஆம் ஆண்டில் ஐரோப்பாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். ஜெர்மணி, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளில் மூன்றாண்டு காலம் தங்கி சிகிச்சையும் ஓய்வும் பெற்ற மேடம் காமா 1905 இல் லண்டனுக்குச் சென்றார். அங்கே அவருக்கு ஓர் அறுவைச் சிகிச்சை நடந்தது. முழு ஓய்வும் சிகிச்சையும் அவரை முழு நலம் பெறச் செய்தது.

அப்பொழுது லண்டனில் இருந்த மிகச் சிறந்த அறிவாளியும், கல்விமானும், தேச பக்தருமான தாதாபாய் நெளரோஜியைச் சந்தித்த மேடம் காமா, சுமார் ஒன்றரை ஆண்டுக் காலம் அவருடைய செயலாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தில் ‘இந்தியா ஹவுண்‘ என்ற பெயரால் ஒரு விடுதியை அமைத்து இந்திய விடுதலைக்காகப் பாடு படுவோரையெல்லாம் ஒன்று திரட்டி வந்த ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா, வ.வே. சு. ஐயர், வீரசாவர்க்கார் போன்ற தேசபக்தர்களின் அறிமுகமும் நட்பும் மேடம் காமாவிற்குக் கிட்டியது.

1907 ஆகஸ்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டடட்கார்ட் நகரில் சர்வதேச சோசலிஸ்ட் மாநாடு ஒன்று நடக்க இருப்பதாகக் கேள்விப்பட்ட மேடம் காமா, அந்த மாநாட்டுக்குச் சென்று அடிமை இந்திய மக்களின் இன்னல்களைப் பற்றிப் பேசி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை உலகறியப் பறை சாற்றுவதென்று முடிவு செய்தார்.

அந்த மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர் மாநாட்டு மேடையில் பல வண்ணங்கள் ஜொலிக்கும் இந்தியப் புடவையை அணிந்து கொண்டு அழகே உருவான காமா அம்மையார், கம்பீரமாக அமர்ந்திருந்ததைக் கண்ட அந்த மாநாட்டுப் பிரதிநிதிகள் அவரை ஒர் இந்திய மகாராணி என்றே நினைத்தனர்.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by ந.கார்த்தி Thu Jan 26, 2012 10:08 am

சூப்பருங்க பகிர்வுக்கு நன்றி அண்ணா


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நாடும் கொடியும் Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:08 am

அந்த மாநாட்டில் பேசிய மேடம் காமா இந்தியர்களின் அவல வாழ்க்கையையும், ஆண்டுதோறும் 35 மில்லியன் பவுன்களை இந்தியாவிலிருந்து சுரண்டிச் செல்லும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொள்ளைக்காரப் புத்தியையும் எடுத்துரைத்து, இந்திய விடுதலைக்கு இந்த மாநாடு ஆதரவு தர வேண்டும் என்று ஒரு தீர்மானத்தையும் முன்மொழிந்தார், தீர்மானம் நிறைவேறியதும் இந்திய தேசியக்கொடி ஒன்றை எடுத்து விரித்து உயர்த்திக் காட்டிய மேடம் காமா “இதுதான் இந்தியச் சுதந்தரத்தைப் பிரதிபலிக்கும் எங்கள் தேசியக் கொடி, இந்தக் கொடி இப்பொழுது வானவளாவப் பறக்கிறது. இது 1905 ஆம் ஆண்டிலே லண்டனில் உருவாகி, பெர்லினில் பறந்து இப்பொழுது உங்கள் மத்தியில் பறந்து கொண்டிருக்கிறது.

இன்னுயிரை ஈந்த எத்தனையோ இளைஞர்களின் புனித இரத்தத்தால் உருவாக்கப்பட்ட கொடி இது! இங்கே குழுமியுள்ள கனவான்கள் அனைவரையும் ஒரு நிமிடம் எழுந்து நின்று இந்திய சுதந்தரக் கொடிக்கு வணக்கம் செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். உலகம் முழுவதிலும் உள்ள சுதந்தர விரும்பிகளையெல்லாம் இந்தக் கொடியோடு ஓத்துழைக்குமாறு இந்தக் கொடியின் பெயரால் நான் கேட்டுக் கொள்கிறேன்!“ என்று முழங்கினார் மேடம் காமா.

அவர் அப்படிக் கூறியதும் ஏதோ ஒரு மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டவர்கள் போல அங்கே அமர்ந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் எழுந்து நின்று மேடம் காமாவால் உயர்த்திக் காட்டப்பட்ட இந்தியத் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்தினார்கள்!

இவ்வாறு இந்தியத் தேசியக் கொடியை முதன் முதல் அந்நிய நாடுகளில் பறக்க விட்ட முதல் பெண்மணி மேடம் காமாதான்! அந்த மாநாட்டில் மட்டுமல்ல; வேறு எந்தக் கூட்டத்தில் அவர் பேசினாலும் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட பின்னர்தான் பேசுவது வழக்கம்.

1905 ஆம் ஆண்டில் ஒருநாள் லண்டன் நகர ‘இந்தியா ஹவிஸ்‘ மாளிகையில் மேடம் காமாவும் வீரசாவர்க்காரும், வ.வெ.சு. ஐயரும், ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவும் பேசிக் கொண்டிருந்தபோது இந்தியத் தேசியக் கொடி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று யோசித்து ஆளுக்கு ஒரு யோசனையைக் கூறியபோது அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதுதான் முதல் மூவண்ண இந்தியத் தேசியக் கொடியாகும்.

அப்பொழுது கொடியின் மாதிரியை உருவாக்க சிவப்புத் துணி கிடைக்காததால் மேடம் காமா தம் புடவையின் ஒரு பகுதியைக் கிழித்துக் கொடுத்தார் என்றும், அதை இணைத்து மாதிரிக் கொடியை வீர சாவர்க்கார் உருவாக்கினார் என்றும் ஒரு செய்தி, பிரபல இந்தியப் புரட்சி வீரரான மன்மதநாத் குப்தா எழுதிய “அவர்கள் அபாய நிலையில் வாழ்ந்தார்கள் (They lived dangerously) என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. 1905 இல் லண்டனில் உருவான அந்த இந்தியத் தேசியக் கொடி அதே ஆண்டின் பெர்லின் நகரிலும், 1906 ஆம் ஆண்டில் வங்காளத் தலை நகரான கல்கத்தாவிலும ஏற்றப்பட்டது? 1907 ஆம் ஆண்டில் ஸ்டட்கார்ட் நகர சர்வதேச சோசலிஸ்ட் மாநாட்டில் பறக்க விடப்பட்டது என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேடம் காமாவும், வீரசாவர்க்கார் முதலிய புரட்சி வீரர்களும் சேர்ந்து தயாரித்த முதலாவது தேசியக் கொடியில் அடிப்பக்கம் இடம் பெற்ற ஆரஞ்சு (காவி) வண்ணம் வெற்றியையும், தைரியத்தையும், பச்சைப் பட்டையில் உள்ள எட்டுத் தாமரை மலர்கள் எட்டு இந்திய மாநிலங்களையும் (அப்பொழுது இந்தியா எட்டு மாநிலங்களாகவே பிரிக்கப்பட்டிருந்தது.) குறிப்பதாகவும், வந்தே மாதரம் என்பது தாயகத்தை வணங்குகிறோம் என்பதைக் குறிப்பதாகவும், உதயசூரியனும், பிறை வடிவமும் இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் குறிப்பதாகவும் அப்பொழுது விளக்கம் தரப்பட்டது.

இந்த முதல் தேசியக் கொடியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் வீர சாவர்க்கார்தான் என்று மேடம் காமாவே குறிப்பிட்டிருக்கிறார்.

அதே 1907 அக்டோபர் 28ஆம் தேதி அன்று அமெரிக்காவில் வால்டோர்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் நடந்த ஒரு கூட்டத்திலும் மேடம் காமா இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அதற்கு அனைவரையும் வணக்கம் தெரிவிக்கச் செய்து அதன் பின்னர் இந்தியா விடுதலை பெறவேண்டிய அவசியத்தைப் பற்றிப் பேசினார்.

1908-இல் லண்டனுக்குத் திரும்பிய மேடம் காமா அங்கேயும் ‘இந்தியா ஹவுஸ்‘ விடுதியில் சில கூட்டங்களை நடத்தி வீரவுரையாற்றினார். இந்தியத் தேசியக் கொடியையும் பறக்க விட்டார். அப்பொழுது மேடம் காமாவின் நடவடிக்கைகளால் நடுக்கமுற்ற பிரிட்டீஷ் அரசு தன் ஒற்றர் மூலம் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியது, ஒரு சமயம் அந்த வீராங்கனையைக் கொலை செய்து விடவும் முயற்சி செய்தது.

பிரிட்டிஷ் உளவாளிகளின் தொல்லையைத் தாளமுடியாத மேடம் காமா பாரிஸ் நகருக்குச் சென்று ‘வந்தே மாதரம்‘ என்ற பத்திரிகையைத் தொடங்கி புரட்சி இயக்கத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:09 am

மூன்றாவது கொடி

அதன் பின்னர் இந்திய அரசியலில் அன்னிபெஸண்ட் அம்மையாரின் தொண்டும் லோகமான்யத் திலகரின் சேவையும் வெகுவாக ஓங்கின. ‘ஹோம் ரூல் இயக்கம்‘ என்ற அன்னிபெஸண்ட் அம்மையாரின் இயக்கம் இந்தியாவின் படித்த வர்க்கத்தினரை வெகுவாகக் கவர்ந்தது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் இந்திய மக்களைத் தட்டியெழுப்பி சுயாட்சி உரிமைபெறும் போராட்டத்தில் ஈடுபட அறை கூவி அழைத்தார். இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சிக்கும் தலைமை வகித்தார். மிகவும் தீவிரவாதத் தலைவர் என்று கருதப்பட்ட லோகமான்ய பால கங்காதர திலகர் கூட அன்னிபெஸண்ட் அம்மையாரோடு ஒத்துழைத்துச் சுயாட்சிக் கோரிக்கையை (ஹோம் ரூல்) ஏற்றுக் கொண்டார்.

சுதேசியப் பொருள்களை ஆதரித்தல், அன்னியப் பொருள்களைப் புறக்கணித்தல், தேசியக் கல்வியை வளர்த்தல், சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தல் முதலியவை அடங்கிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. டாக்டர் அருண்டேல் தலைமையில் தேசியக் கல்வி வளர்ச்சி சங்கம் ஒன்றை ஆரம்பித்த அன்னிபெஸண்ட் சென்னை அடையாறில் தேசியப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். நியூஇந்தியா என்ற ஒரு பத்திரிகையையும் தொடங்கினார்.

அந்தக் காலகட்டத்தில்தான், 1917 ஆம் ஆண்டில் மூன்றாவது தேசியக் கொடி உருவாயிற்று. திலகரும். அன்னிபெஸண்ட் அம்மையாரும் சேர்ந்து உருவாக்கிய கொடி அது.

அந்தக் கொடியில் மேலிருந்து கீழாக ஐந்து சிவப்புப் பட்டைகளும், நான்கு பச்சைப் பட்டைகளும் மாறி மாறி வரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் முதல் ஏழு நட்சத்திரங்கள் (சப்தரிஷி நட்சத்திரங்கள்) பொறிக்கப்பட்டிருந்தன. கொடியின் வலது உச்சியில் வெள்ளை நிற இளம்பிறையும் அதற்குமேல் ஒரு நட்சத்திரமும் இடம் பெற்றிருந்தன.

உச்சியின் இடது மூலையில் பிரிட்டிஷ் கொடியும் சிறிய அளவில் இணைக்கப்பட்டிருந்தது.

இது அப்போதைய இலட்சியங்களையும் விருப்பங்களையும் பிரதிபலிப்பதாக இருந்தது. பூரண சுயராஜ்யம் என்ற கோரிக்கையே உதயமாகாத அந்தக் காலத்தில் சுயாட்சி உரிமைக்கு வழிவிடும் டொமினியன் அந்தஸ்தே போதும் என்ற நிலை அப்போது இருந்ததால் பிரிட்டிஷ் கொடிக்கும் தேசியக் கொடியில் இடம் அளிக்கப் பெற்றிருந்தது.

ஆனால், தேசியக் கொடியில் யூனியன் ஜாக்குக்கு இடமளிக்கப் பட்டிருந்ததைத் தேச பக்தர்கள் ஆதரிக்கவில்லை. இவ்வளவு பச்சையாகப் பிரிட்டிஷ் ஆட்சியோடு சமரசமாகப் போக வேண்டுமா? என்று பலரும் குமுறினார். நாட்டு மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் தங்களை வழிநடத்திச் செல்ல வேறு ஒரு புதிய தலைவரை எதிர்பார்க்கத் தொடங்கினர்.

1915 ஆம் ஆண்டில் கோபால கிருஷ்ண கோகலே உயிர் நீத்தார். அதே ஆண்டின் இறுதியில் மற்றொரு பிரபல காங்கிரஸ் தலைரவரான பெரோஷா மேத்தாவும் காலமாகி விட்டார். பண்டித மதன் மோகன் மாளவியா மிதவாதிகளின் தலைவராக இருந்ததால் அவராலும் காங்கிரசுக்கு வழிகாட்ட முடியவில்லை. 1915 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய காந்திஜி அப்பொழுதுதான் காங்கிரஸ் கட்சிக்கு அறிமுகமாகிக் கொண்டிருந்தார்.

1917 – குஜராத் விவசாயிகள் பிரச்சினை, 1918 –ஆமதாபாத் ஆலைத் தொழிலாளர் வேலை நிறுத்தம், 1919 ஆம் ஆண்டில் ரெளலட் சட்ட எதிர்ப்பு சத்தியாக்கிரகம், 1920 பாஞ்சாலப் படுகொலைக்கு எதிராகவும் கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவாகவும் மேற்கொண்ட சாத்வீக சட்ட மறுப்பின் ஆடிப்படையிலான ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்த காந்திஜி, 1921 ஆம் ஆண்டில் காங்கிரஸ் இயக்கத்தின் சக்தி மிக்க தலைவராக மாறிவிட்டார். 1920 இல் லோகமான்ய பால கங்காதர திலகரும் மரணமடைந்து விட்டார். அப்பாழுது காங்கிரஸ் இயக்கத்தின் தலைமைப் பீடம் வெற்றிடமாக இருந்தது!

அந்த இடத்தை காந்திஜி சுலபமாகக் பூர்த்தி செய்தார். 1920 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான ஓர் ஆண்டு ஆகும். இந்திய மக்கள் மனதில் அலைவீசி நின்ற அரசியல் விருப்பங்களும், ஆசைகளும் ஒருமுகமாகப் பொங்கி எழுந்து உலகமே என்றும் காணாத வகையில் ஒரு மகத்தான ஒத்துழையாமை இயக்கத்தில் நாட்டை ஆழ்த்திய ஆண்டு அதுதான்! காந்தி என்ற சூரியன் இந்திய அரசியல் வானில் தன் செம்பொற் கிரணங்களை வீசிப் படர்ந்து பூரண ஜோதியுடன் தோன்றி ஒத்துழையாமை இயக்கத்திற்கு வழி காட்டியதும் தலைமை தாங்கியதும் அந்த ஆண்டில்தான்! அவருடைய அற்வுதமான செயலாற்றலையும், ஆன்ம சக்தியையும் கண்டு உலகமே பிரமித்து நின்றது அக்காலத்தில்தான்! அகில இந்திய சுயாட்சி சங்கத்தின் (ஹோம் ரூல்) தலைமைப் பதவியைக் காந்திஜி ஏற்றுக் கொண்டதும் அதே ஆண்டில்தான்.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:09 am

நான்காவது கொடி

1921 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் அனைத்து இந்திய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டம் நடந்தது. காந்திஜி காங்கிரசின் தளகர்த்தரானார்.

அப்பொழுதுதான் இந்தியாவின் இன்றைய தேசியக் கொடியின் முன் மாதியின மூவண்ணக் கொடியும் அறிமுகமானது. அதை உருவாக்கியவர் ஆந்திர இளைஞர் ஒருவர் தான். அவர் உருவாக்கிய அந்தக் கொடியில் இரண்டு பட்டைகள் இருந்தன. மேல்புறம் பச்சையும், கீழ்புறம் சிவப்பும் இருந்தன. பச்சையும் சிவப்பும் இந்தியாவின் இரண்டு பிரதான வகுப்பு மக்களை (இந்து, முஸ்லிம்), குறிக்கிறது என்றார் அந்த இளைஞர்.

அதைக் கவனமுடம் பரிசீலித்த காந்திஜி, அந்த இளைஞரை வெகுவாகப் பாராட்டி விட்டு ஒரு புதிய யோசனையையும் வழங்கினார். கொடியின் மேல்புறத்தில் இந்தியாவின் இதர வகுப்பு மக்களைக் குடறக்க ஒரு வெள்ளைப் பட்டையைச் சேர்க்க வேண்டும். முன்னேற்றத்தின் சின்னமாக நடுவில் ஓர் இராட்டைச் சின்னத்தைச் சேர்க்க வேண்டும் என்பது காந்திஜி கூறிய யோசனை. அதை அந்த இளைஞர் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு அன்றே அந்தக் கொடியை உருவாக்கி காந்திஜியிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

இப்படித் தான் மூவண்ணக் கொடி பிறந்தது. அந்தக் கொடியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அங்கீகரிப்பதற்கு முன்னரே காந்திஜி அங்கீகரித்து விட்டதால் அது மிகவும் பிரபலமடைந்து விட்டது. காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநாடுகளிலும் அந்த மூவண்ணக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் அந்தக் கொடியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அங்கீகரித்தது. அடுத்த பத்தாண்டு காலத்திற்கு அந்த மூவண்ணக் கொடிதான் தேசியக் கொடியாக விளங்கியது. அதாவது இந்தியக் தேசிய விடுதலைப் பேரியக்கமான காங்கிரஸ் கொடியாக விளங்கி வந்தது.

என்றாலும் கொடியில் இம் பெற்றிருந்த நிறங்களின் தத்துவார்த்தம் சம்பந்தமாமக இந்துக்களுக்கிடையிலும், முஸ்லிம்களுக் கிடையிலும். சீக்கியர் முதலிய இதரவகுப்பாருக்கிடையிலும் சில கடுமையான கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டு பலத்த விவாதங்கள் நடந்து வந்தன. அதன் காரணமாக சில இடங்களில் வகுப்புப் பூசல்களும் நடந்தன. இந்து – முஸ்லிம் வகுப்பாருக்கிடையே பெரும கருத்து வேற்றுமையும் ஏற்பட்டு வளர்ந்து கொண்டிருந்தது. கொடிக்கு வகுப்புவாத விளக்கம் கொடுக்கும் போக்கும் வலுத்து வந்தது.

இதனால், 1931ஆம் ஆண்டில் கராச்சியில் காங்கிரஸ் மகாசபை கூடியபோது கொடிப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் ஒரு கொடியை உருவாக்குவது அவசியம் என்றும், அதை விரைவில் முடிக்க வேண்டுமென்றும் அந்தத் தீர்மானம் கூறியது.

இதற்கிடையில் பொது மக்களின் கருத்தை அறிந்து காரியக் கமிட்டிக்குக்கூறுவதற்காக ஏழு பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சீக்கியர்கள் தங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தை தேசியக் கொடியில் சேர்க்க வேண்டும் என்று மிகவும் வலியுறுத்தினார்கள். அதனால்தான் பொது மக்கள் கருத்தறிய ஒரு தனிக்குழு நியமிக்கப்பட்டது. கராச்சி காங்கிரசுக்குச் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமை வகித்தார்.

உப்புச் சத்தியாக்கிரகம் முடிந்து காங்கிரஸ் தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு விடுதலையான காலகட்டத்தில் கூடிய கராச்சி காங்கிரஸ் கொடி சம்பந்தமாக அநாவசியமான சர்ச்சைகள் ஏற்படுவதை விரும்பவில்லை.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:18 am

கமிட்டியின் சிபாரிசு

பொதுமக்களிடம் விசாரணை (கருத்துக கணிப்பு) நடத்தி அதற்கேற்ப புதிய கொடியை உருவாக்க புதிய யோசனைகளைக் கூறுவதற்காக நியமிக்கப்பட்ட குழு தன் கருத்துக் கணிப்பை முடித்து ஓர் அறிக்கையை அளித்தது.

ஐந்தாவது கொடி

அதன்படி வெறும் குங்குமப்பூ வண்ணத் துணியின் இடது கோடியில் செங்கபில நிறத்தில். ஒரு கைராட்டைச் சின்னத்தைப் பொறிக்கலாம் என்பதே அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த சிபாரிசு. ஆனால்இ அந்த யோசனையை அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் வேறு பல யோசனைகளும், மாற்று யோசனைகளும் தெரிவிக்கப்பட்டன.

ஆறாவது கொடி

தேசியக் கொடி வரலாற்றின் 1931 ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டு ஆகும். அந்த ஆண்டின் மத்தியில்தான் இப்போதைய தேசியக் கொடியின் தந்தையான மூவண்ணக் கொடி தேசியக் கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

மூவண்ணக்கொடியில் ஆரஞ்சு, வெள்ளை பச்சை ஆகிய மூன்று பட்டைகள் இருக்கும். நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் நீல நிறத்தில் கைராட்டைச் சின்னம் பொறிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

· தீரத்திற்கும், தியாக உணர்வுக்கும் ஆரஞ்சு நிறம்.

· சத்தியத்துக்கும், சாந்திக்கும் வெள்ளை நிறம்.

· நம்பிக்கை, தயை, கருணை வளத்துக்கு பச்சை நிறம்.

· முன்னேற்றத்தைக் குறிக்க இராட்டைச் சின்னம்.

மூன்றுக்கு இரண்டு பங்கு என்ற அளவில் நீள அகலம் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இது தவிர கொடியில் உள்ள நிறங்கள் வகுப்புவாதம் எதையும் குறிக்காது. அப்படிப் பட்ட உட்பொருளோ, மறைபொருளோ இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின் மூலமாக மூவண்ண இராட்டைக் கொடி தேசியக் கொடியாக காங்கிரஸ் கட்சியால் அதிகாரம் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

அன்று முதல் அதுவே நமது தேசியக் கொடியாக ஆயிற்று. நமது சுதந்திரப் போரின் சின்னமாகவும் அது ஆயிற்று. 1947 ஜூலை 22 ஆம் தேதியன்று அதே கொடியைச் சுதந்திர இந்தியாவின் தேசியக் காடியாகவும் இந்திய அரசியல் நிர்ணய சபை அங்கீகரித்தது.

சுதந்திரம் பெற்ற பின்னரும் அக்கொடியின் தத்துவார்த்த விளக்கமும் வண்ணங்களும் மாறவில்லை, மாற்றப்பட வேண்டும் என்று கோரப்படவும் இல்லை.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொடியாகவும் அதுவே விளங்கி வந்ததால்இ அரசாங்கக் கொடிக்கும், கட்சிக் கொடிக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய மாறுதல் மட்டும் செய்யப்பட்டது. நடுவில் உள்ள கைராட்டைக்குப் பதிலாக அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் கொடியில் இன்னமும் கைராட்டைச் சின்னமே நீடித்து வருகிறது.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by சிவா Thu Jan 26, 2012 10:19 am

கொடித் தீர்மானம்

1947 ஜூலை 22 ஆம் தேதியன்று இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் அதன் தலைவராகிய ஜவஹர்லால் நேரு தேசியக் கொடி பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்தார் அது வருமாறு

ஆழ்ந்த குங்குமப்பூ நிறம்இ வெள்ளை, கரும் பச்சை ஆகிய மன்று வண்ணங்கள் சம அளவில், (குறுக்கில்) அமைந்தது இந்தியாவின் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று இச்சபை தீர்மானிக்கிறது. வெள்ளைப் பட்டையின் மத்திய்ல சர்க்கா (ராட்டை) வுக்குப் பதிலாகக் கருநீல நிறத்தில் உள்ள ஒரு சக்கரம் இடம்பெற வேண்டும். சாரநாத்தில் அசோக மன்னன் நிறுவிய தூணின் தலைப்பாகத்தின் விலாப்புறத்தில் உள்ள சக்கரத்தைப் போல இந்தச் சக்கரத்தில் உருவம் இருக்க வேண்டும்.

ஏறக்குறைய வெள்ளைப் பட்டையின் அகலத்தைப் போல சக்கரத்தின் விட்டம் அமைய வேண்டும்.

கொடியின் நீளத்துக்கும் அகலத்துககும் இடையே உள்ள விகிதாச்சாரம் மூன்றுக்கு இரண்டு என்ற அளவில் இருக்க வேண்டும்.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்து பிரதமர் நேரு நிகழ்த்திய சொற்பொழிவு நமது தேசியக் கொடியைப் பற்றிய பல்வேறு சர்ச்சைகளுக்கும் முடிவு கட்டியது. அது வருமாறு

“இப்பொழுது நான் பெற்றுள்ள விறுவிறுப்பையும் எழுச்சியையும் இச்சபையின் உறுப்பினர்கள் பலரும் பெற்றுள்ளனர் என்று நான் உறுதியாக நம்அபுகிறேன். ஏனென்றால், சபையின் அங்கீகாரத்துக்காக நான். பெருமிதத்தோடு சமர்ப்பித்துள்ள இந்தத் தீர்மானத்துககும் கொடிக்கும் பின்னணியில் ஒரு வரலாறே இருக்கிறது. ஒரு நாட்டின் வரலாற்றைச் சேர்ந்த சாரமிகுந்த சிறிய கால கட்டம் ஒன்று இருக்கிறது.

சில சமயங்களில், நூற்றாண்டுகளின் அனுபவங்களைக்கூட ஒரு சிறு கால கட்டத்தில் நாம் பெற்று விடுகிறோம்.... நமது மகத்தான தேசத்தின் மகத்தான போராட்டத்தின் ஏற்ற இறக்கங்கள் என் நினைவில் இருக்கின்றன. பெருமிதத்துடனும் உற்சாகத்துடனும் மாத்திரமின்றி, நரம்புத் துடிப்போடும், உணர்வுக் கிளர்ச்சியோடும் இந்தக் கொடியை முன்பு நாம் நோக்கிய துண்டு. சில சமயங்களில் நாம் சோர்ந்து கிடந்தபோது இந்தக் கொடியைப் பார்த்து ஊக்கம் பெற்றுத் தொடர்ந்து முன்னேறியதுண்டு. இவையெல்லாம் எனக்கு நினைவில் இருக்கின்றன. இந்தச் சபையிலுள்ள பலருக்கும் நினைவில் இருக்கும்.


நாடும் கொடியும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாடும் கொடியும் Empty Re: நாடும் கொடியும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum