ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு

2 posters

Go down

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு Empty ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு

Post by பிரசன்னா Tue Jan 24, 2012 5:02 pm

சோப் பவுடர், சோப் ஆயில் போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார்.

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு Evening-Tamil-News-Paper_83978998662

கோவை உடையாம்பாளையத்தில் பாண்டியன், சேரன் ஆகிய பெயர்களில் சலவை சோப் தயாரித்து வரும் லதா. அவர் கூறியதாவது: நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.


தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும். இந்த அடிப்படையில்தான் நாங்கள் சோப் தயாரிக்கும் தொழிலை தொடங்கினோம்.எங்கள் தயாரிப்பு கொங்குமண்டல பகுதிகளில் நன்றாக விற்கிறது. போட்டி அதிகம் இருப்பதால் சோப் தயாரிப்பில் தரத்தை கடைபிடிப்பது முக்கியம். அதேபோல குறைந்த லாபத்தில் விற்க வேண்டும். அப்போதுதான், ஒருமுறை வாங்கியவர்கள் நம்மிடம் வாடிக்கையாக வாங்குவார்கள். பின்னர் விலையை சற்று கூட்டினாலும் ஏற்றுக் கொள்வார்கள். 2002ல் தொழிலை துவக்கினேன். உற்பத்தி, கொள்முதல் மற் றும் விற் பனையை கணவர் பார்த்து கொள் கிறார். நிர்வாகத்தை நான் பார் த்து கொள் கிறேன். துவக்கத்தில் கணவரும் நானும் தொழிலாளியாக களத்தில் இறங்கி உழைத் தோம். இதனால் உற்பத்தி செலவு குறைந்தது. குறைந்த விலைக்கு விற்க முடிந்தது. இப்போது சோப் போடு சலவை பவுடர், பாத்திரம் துலக்கும் சோப், பவுடர் ஆகியவை யும் தயாரித்து விற்கி றோம். புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட் டிக்கு தாக்கு பிடிக்க முடியும்.

தயாரிப்பது எப்படி?

சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும். அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
கட்டமைப்பு: 2500 சதுர அடி ஷெட் அட்வான்ஸ் ரூ.50 ஆயிரம், மின் இணைப்பு 5 எச்பி ரூ.5 ஆயிரம், சோப் தயாரிக்கும் இயந்திரம் ரூ.5 லட்சம், சோப் கட்டி அடுக்க டிரே 50 ரூ.2 ஆயிரம், 10 கேன் ரூ.2 ஆயிரம், இதர பொருட்கள் ரூ.1000. அடிப்படை கட்டமைப்பு செலவு ரூ.5.6 லட்சம், முதல் மாத உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம், மொத்த முதலீடு ரூ.11.37 லட்சம்.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க கெமிக்கல் செலவு ரூ.27 ஆயிரம் வீதம் 20 டன்னுக்கு ரூ.5.4 லட்சம். கட்டிட வாடகை ரூ.5 ஆயிரம், மின் கட்டணம் ரூ.2 ஆயிரம், 6 பேர் சம்பளம் ரூ.30 ஆயிரம் என மாத நிர்வாக செலவு ரூ.37 ஆயிரம். மொத்த உற்பத்தி செலவு ரூ.5.77 லட்சம். ஒரு டன் சோப் தயாரிக்க ரூ.28,850 செலவாகிறது.

வருவாய்: ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

தேவையான பொருட்கள் : சோடா (டன் ரூ.21 ஆயிரம்), சிலரி ஆயில் (டன் ரூ.95 ஆயிரம்), டினோபால் பவுடர் (கிலோ ரூ.1350), க்ளே (டன் ரூ.5 ஆயிரம்), கால்சைட் (டன் ரூ.3 ஆயிரம்), சிலிகேட்(டன் ரூ.8 ஆயிரம்), எஸ்டிபிபி பவுடர் (டன் ரூ.90 ஆயிரம்), சென்ட் (கிலோ ரூ. 1000), நீல நிற பவுடர் (கிலோ ரூ.100).

கிடைக்கும் இடங்கள் : சோடா - கோவை, சிலரி ஆயில் - புதுவை, டினோபால் பவுடர் - மும்பை, க்ளே - கேரளா, கால்சைட் - சேலம், சிலிகேட் - கோவை, எஸ்டிபிபி பவுடர், சென்ட், புளூ கலர் பவுடர் - கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும். மொத்தமாக வாங்கினால் குறைந்த விலையில் கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு

குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது. சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு Empty Re: ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு

Post by வாசுசெல்வா Tue Jan 24, 2012 6:37 pm

தங்கள் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி


ஜோரான லாபம் தரும் சோப் தயாரிப்பு Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum