ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
ayyasamy ram
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
mohamed nizamudeen
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
VENKUSADAS
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 

Top posting users this month
heezulia
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
ayyasamy ram
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
mohamed nizamudeen
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 
VENKUSADAS
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_m10நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

5 posters

Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by கேசவன் Tue Jan 17, 2012 11:57 am


அருட்பிரகாச வள்ளலார் கடவுளை ஜோதி வடிவமாக கண்டார் நாயன்மார்களும் ஆழ்வார்களும் கூட நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நிர்மல பொருளான இறைவனை ஜோதியன் என்றே அழைக்கிறார்கள் சனாதன தர்மமான நமது இந்து மதத்தில் ஜோதி வழிப்பாடு என்ற திருவிளக்கு வழிப்பாடு இதனால் சிறப்பு மிக்க இடத்தினை பெறுகிறது அக்னி வளர்த்து யாகம் செய்வது கூட ஒரு வித ஜோதி வழிப்பாடுதான் தீப வழிப்பாட்டை தத்துவ நோக்கில் அறியாமை என்ற இருளை நீக்க ஞானம் என்ற தீபம் ஏற்றப்படுகிறது என்று பலவாறு சிறப்பித்து ஞானிகளும் அருளாளர்களும் சொல்கிறார்கள்

இந்துக்களின் இல்லங்களில் தினசரி மாலை நேரத்தில் தீபம் ஏற்றப் படுவது முக்கிய நிகழ்வாகும் பிறப்பு சடங்கில் துவங்கி இறப்பு சடங்கு வரை ஒவ்வொரு இந்துவின் வாழ்விலும் தீபம் என்பது கூடவே வருவதாகும் வீட்டுக்கு வருகின்ற குலமகளான மருமகளை விளக்கேற்ற வந்தவள் என்று அழைப்பதும் கிரக லக்ஷ்மி என்று போற்றுவதும் இதனால்தான் பெண் என்பவள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்குபவளாக இருக்கிறாள் இதானாலே அவள் இல்ல விளக்கு அதாவது குடும்பத்தில் உள்ள தேக்கம் என்ற இருளை போக்கி வளர்ச்சி என்ற வெளிச்சத்தை கொண்டு வருபவள் என்று அழைக்கப்படுகிறாள்


நமது இந்து மதத்தில் கடைபிடிக்கப் படும் சடங்குகளுக்கும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் எதாவது ஒரு தத்துவம் பின்னணியாக இருக்கும் இந்த விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி எது என்று மேலே பார்த்தோம் இந்த சடங்கில் பயன் படுத்தப் படும் குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால் இது திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது

அடிப்பாகத்தில் இருந்து மேல் நோக்கி வளருகின்ற தண்டு பாகம் ஓங்கி வளர்ந்து நிற்பதனால் ஈரடியால் பூமியையும் ஆகசத்தையும் அளந்த திருவிக்கிரமனான மகா விஷ்ணுவை குறிக்கிறது அதற்கு மேல் இருக்கின்ற அகல் விளக்கு பாகம் என்ற விளக்கின் மேல் பகுதி குழி விழுந்து எண்ணெயை உள் வாங்கி கொள்வதனால் கங்கையை தலைபாகத்தில் அடக்கிய மகேஸ்வரனை குறிப்பதாகும் மேல் பகுதியில் திரி ஏற்றுவதற்காக உள்ள ஐந்து முகங்களும் சிவ பெருமானையே அடையாளப் படுத்துவதாகும்


குத்து விளக்கின் மேல் பகுதியில் உள்ள காம்பு பகுதி கும்ப கலசம் போல இருக்கும் இது உருவமாகவும் அருவமாகவும் உள்ள சதாசிவ தத்துவத்தை குறிப்பதாகும் இந்த விளக்கில் இடுகின்ற எண்ணெய் அல்லது நெய் உலக முழுவதும் பரவியுள்ள நாத பிரம்மத்தை குறியீடாக காட்ட வல்லதாகும் வெள்ளை நிற பஞ்சு திரி அன்னை சரஸ்வதி தேவியையும் அதில் பிரகாசிக்கும் ஒளி ஞானத்தையும் சுடர் மகா லட்சுமியையும் அதன் சூடு ருத்திரனின் தேவியான பராசக்தியையும் குறிப்பதாகும்

இது தவிர விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் போன்றோர்களை குறிப்பதாகும் சுருக்கமாக சொல்வது என்றால் காமதேனு என்ற பசுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்


இந்து மதத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஜோதிட சாஸ்திரத்தில் விளக்கேற்றி வழிப்படுவதால் பல தனி மனித பிரச்சனைகள் நீங்குவதாக சொல்லப் பட்டிருக்கிறது தீபம் ஏற்றுவதிலுள்ள மகத்துவத்தை ஆரம்ப காலத்தில் நான் உணராததால் எனக்கு அதில் அவ்வளவான நம்பிக்கை அப்போது இல்லை இருந்தாலும் எதையும் பரிசோதனை செய்து பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி விடுவதோ சரி என்று ஏற்று கொள்வதோ அறிவுக்கு பொருந்தி வரக்கூடிய சங்கதியாகாது

எனவே தீப பரிகாரத்தை பரிட்ச்சித்து பார்க்க விரும்பினேன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் அடிக்கடி நோய்களால் துன்பப்பட்டு வந்தார் அவரை ஒரு மண்டல காலத்திற்கு வைத்திய நாதனான திரு முருகன் சன்னதியில் வேப்ப எண்ணெய் விட்டு விளக்கேற்ற சொன்னேன் அவரும் நான் சொன்னப்படி செய்தார் முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது அடிக்கடி நோய்வாய் படும் அவர் சிறிது சிறிதாக அந்த தொல்லையிலிருந்து விடுபடலானார் இதன் மூலம் தீபம் ஏற்றுவதில் ஜோதிட சாஸ்திரம் சொல்வது மிக சரி என்று எனக்கு பட்டது



நமது ஜோதிட சாஸ்திரம் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிப்படுவதற்கு காலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை சிறந்த நேரம் என்கிறது இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சர்வ மங்களமும் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதே போல மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இதை போலவே கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அகலும் வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும் என்றும் மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை மற்றும் சனி தோஷம் விலகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது

செல்வம் பெருகுவதற்கும் குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்கள் இளைஞர்கள் ஆகியோரின் திருமண தடைகள் விலகி சுபகாரியங்கள் நடப்பதற்கும் குழந்தைகள் நல்ல விதமாக கல்வியில் தேறி வெற்றி பெறுவதற்கும் வடக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தெற்கு முகமாக ஏற்றினால் பாவம் ஏற்படும் மரணபயம் உண்டாகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது


திசையை மட்டும் சாஸ்திரம் தீர்மானிக்க வில்லை திபம் ஏற்றுவதற்கு பயன் படுத்தும் திரியில் கூட கிடைக்கும் பலாபலன்களை சாஸ்திரம் விவரிக்கிறது வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும் என்றும் மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும் என்றும் வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் பேய் பிசாசுகளின் தொல்லை ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்பு போன்றவைகள் அண்டாமல் இருக்க எருக்கம் பஞ்சு திரி உதவும் என்றும் பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது

இதே போல மகா லஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பீடைகள் அகன்று ஸ்ரீ மத் நாராயணனின் அருள் கிடைக்கும் என்றும் இலுப்பை எண்ணெய் பயன் படுத்தினால் ருத்ராதி தேவதைகளின் அனுக்கிரகம் வாய்க்கும் என்றும் தேங்காய் எண்ணெய் தீபம் கணபதியின் அருளை பெற்று தரும் என்றும் வேப்ப எண்ணெய் தீபம் ஆரோக்கியம் தரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பரிகார நூல்கள் தெளிவாக சொல்கிறது

தீபம் ஏற்ற பயன் படுத்தும் விளக்கின் வகையில் கூட பல பலன்கள் இருக்கின்றன மண்ணால் ஆன விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகளின் அருள் கிடைக்கும் பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் ஏற்படும் வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்றும்

குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றினால் ஐஸ்வரியம் ஏற்படும் நான்கு முகத்தில் தீபம் ஏற்றினால் பசுக் கூட்டம் வளரும் மூன்று முகத்தில் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்ப சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் ஒரு முகத்தில் தீபம் ஏற்றினால் சமமான பலன் கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது

பொதுவாக குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருப்பதை நாம் சாதரணமாக பார்த்திருப்போம் இந்த ஐந்து முகமும் மனிதனுக்கு வேண்டிய ஐந்து விதமான பண்புகளை குறிக்கிறது அன்பு அறிவு உறுதி நிதானம் பொறுமை ஆகிய ஐந்து பண்புகளை மனிதன் பெற்றால் அவன் வாழும் மண்ணுலகிலும் வாழப்போகும் வின்னுலகிலும் நற்கதியை பெறுவான் என்பதே இதன் பொருளாகும்

பொதுவாக தீபம் பூஜை அறையில் மட்டும் தான் ஏற்றப் படுகிறது ஆனால் வீட்டின் நடு முற்றம் சமயலறை துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன இதில் எதையாவது ஒன்றை பரிசோதனைக்காகவாவது நீங்கள் செய்து பாருங்கள் சர்வ நிச்சயமாக நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்

நன்றி : www.ujiladevi.blogspot.com


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! 1357389நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! 59010615நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Images3ijfநோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty Re: நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 12:04 pm

நல்ல பதிவு..பகிர்விற்கு நன்றி..


நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! 224747944

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Rநோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Aநோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Emptyநோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Rநோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty Re: நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by இளமாறன் Tue Jan 17, 2012 12:10 pm

எனவே தீப பரிகாரத்தை பரிட்ச்சித்து பார்க்க விரும்பினேன் எனக்கு
மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் அடிக்கடி நோய்களால் துன்பப்பட்டு வந்தார் அவரை ஒரு மண்டல காலத்திற்கு வைத்திய நாதனான திரு முருகன் சன்னதியில் வேப்ப எண்ணெய் விட்டு விளக்கேற்ற சொன்னேன் அவரும் நான் சொன்னப்படி செய்தார் முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது அடிக்கடி நோய்வாய் படும் அவர் சிறிது சிறிதாக அந்த தொல்லையிலிருந்து விடுபடலானார் இதன் மூலம் தீபம் ஏற்றுவதில் ஜோதிட சாஸ்திரம் சொல்வது மிக சரி என்று எனக்கு பட்டது

கடவுள் பக்தி நல்லவைகளே தரும் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty Re: நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by ராஜா Tue Jan 17, 2012 12:17 pm

நன்றி பகிர்வுக்கு நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty Re: நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by உமா Tue Jan 17, 2012 12:39 pm

அனைத்திருக்குமே காரணம் நம்பிக்கை தான்.
நன்றி பகிர்வுக்கு. நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! 678642



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை ! Empty Re: நோய்களை விரட்டும் விளக்கு பூஜை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum