ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!

Go down

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்! Empty ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!

Post by தாமு Wed Sep 30, 2009 7:14 am

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்!


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கரைந்து போகும் சிறுநீரகக் கற்கள்! 23medi

என் மகளுக்கு வயது 23. சிறுவயதிலிருந்தே சிறுநீரகக் கற்களால் அவதிப்பட்டு வருகிறாள். அவள் குணம் பெற உணவும் மருந்தும் என்ன சாப்பிடலாம்?

தி.சங்கரநாராயணன், மணலி புதுநகர்.

மனித உடலில் சில மாறுபாடுகள் தானாகவே நடக்கக் கூடியவை. வேறு சில நடப்பதற்குச் சக்தி தேவை. சக்தி தேவைப்பட்டாலும் படாவிட்டாலும், ஏறக்குறைய எல்லா மாறுபாடுகளும் உடம்பில் ஒழுங்காக நடைபெற, கிரியா ஊக்கி (என்ûஸம்) தேவைப்படுகிறது. இந்த கிரியா ஊக்கி, உடம்பில் தயாராகும் ஒரு புரதப் பொருள். இது மாறுபாடுகளைத் துரிதமான முறையில் நடத்த உதவுகிறது. வாழைப்பழத்தை நெருப்பிலிட்டால் அது மாறுபாடு அடைய மிகுந்த நேரமாகும். ஆனால் அதே வாழைப்பழம் உடம்பிலே விரைவிலேயே மாறுபாடு அடைகிறது. இதற்குக் காரணம் கிரியா ஊக்கிகள்தான். ஏதாவது ஒரு கிரியா ஊக்கி குறைந்தால் கூட தீராத நோய் ஏற்படலாம்.

ஒரு குடும்பத்தில் தந்தையிடமோ, தாயிடமோ இந்தக் கிரியா ஊக்கி இல்லாமல் இருந்தாலோ, குறைவான அளவில் இருந்தாலோ அல்லது தேவையற்ற இரசாயன மாறுபாட்டைத் துரிதப்படுத்துவதாக இருந்தாலோ, அதனால் பெற்றோர்கள் அனுபவிக்கும் நோய், சில குழந்தைகளுக்கும் பிறவியிலேயே ஏற்படலாம். இம்மாதிரி நோய்களுக்குப் பிறவியிலேயே ஏற்படும் இரசாயன மாறுபாடுகளின் தவறுகள் என்று பெயராகும். இவற்றிற்கு அணு சம்பந்தப்பட்ட நோய்கள் என்றும் பெயர் உண்டு. இந்த நோய்களினால் உடலில் ஏற்படும் வழக்கமான இரசாயன மாறுபாடுகளில் தடைகள் ஏற்பட்டுத் தேவையற்ற பொருட் களும், விஷப் பொருட்களும் உடலில் சேரலாம்.

உங்கள் மகளுக்கு சிறுவயது முதலே சிறுநீரகங்களில் வடிகட்டப்பட்டபின் மறுபடி சில பொருட்கள் கிரியா ஊக்கிக் குறைவால் இரத்தத்தில் உறிஞ்சப்படாமல் படிகங்கள் ஏற்பட்டு கற்களாக உருவாகியிருக்கலாம். அவை அகற்றப்பட்டாலும் இந்த கிரியா ஊக்கிக் குறைபாடு நீங்காமல் இருப்பதால் மறுபடியும் கற்கள் உருவாகியிருக்கலாம்.

உடலில் உள்ள புரதப் பொருட்கள், கிரியா ஊக்கி உட்பட உடம்பில் எங்கும் நிறைந்துள்ள சர்வ வல்லமையும் வாய்ந்த டி.என்.ஏ. என்னும் பொருளின் கண்காணிப்பில் உள்ளன. இந்த டி.என்.ஏ. எனப்படும் ஜீன்களின் மூலமாகத்தான் புரதப் பொருட்களின் உற்பத்தியின் ஆரம்பம் உள்ளது. ஜீனுக்கு ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடலிலுள்ள புரதங்களும், கிரியா ஊக்கியும் விரும்பத்தகாத வகையில் மாறுபாடு அடைந்து நோய்கள் ஏற்படும். இது வம்ச பரம்பரையாக வந்து கொண்டிருக்கும் பாரம்பரிய இயல்பைச் சேர்ந்த நோய்.

மேற்கூறிய காரணங்களால் உங்கள் மகளுக்கு வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்மை, எடைக்குறைவு போன்ற உபாதைகள் தோன்றியிருக்கலாம். "ஸம்ஸ்பந்தனம்' எனும் துடிப்பு, வாயுவின் செயலால் உடல் முழுவதும் நடைபெறுகிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக உடலெங்கும் கொண்டு செல்வது, மலம், சிறுநீர் ஆகியவற்றின் தேக்கத்தை ஏற்படாதவாறு அவற்றை வெளியே தள்ளுவது, உணவுப் பையில் அசைவுகளை உருவாக்கி, உண்ட உணவைச் செரிக்கச் செய்து, அவ்விடத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, அமிலச் சுரப்பை ஏற்படுத்தி பசியைத் தூண்டுவது, இதயத்தின் உள்ளே தங்கியிருந்து அதன் விரிவு மற்றும் சுருங்குதல்ó ஆகிய செயல்களைச் சீராகச் செய்வது, உட்புறக் குழாய்களில் படிகங்கள் எங்கும் படியாதவாறு, எண்ணெய்ப் பசையை ஏற்படுத்தி அப்படிகங்களை வியர்வை, சளி, ஜலதோஷங்களின் மூலம் வெளியேற்றுவது போன்ற சிறப்பான செயல்களைச் செய்கிறது. இந்த ஸம்ஸ்பந்தனம் எனும் செயலை யார் சிறப்பாகப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் அவ்வளவு எளிதாக எந்த நோய்க்கும் ஆட்படுவதில்லை. அதற்கு வேண்டிய முயற்சிகளை உங்கள் மகள் விஷயத்தில் நீங்கள் செய்ய வேண்டும்.

செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சிறிது கடுகெண்ணெய் ஆகியவற்றைக் கலந்து வெதுவெதுப்பாக வயிறு, முதுகு,தலை ஆகிய பகுதிகளில் தேய்த்து நன்றாக ஊறிய பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளித்தல், அன்றைய உணவில் சூடான மிளகு ரசம், கருவேப்பிலைத் துவையல், தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த பூசணிக்காய் கூட்டு, மோர் ,கேரட் உசிலி என்ற வகையில் சாப்பிடுதல், வெதுவெதுப்பான நீரைப் பருகுதல், காலை வேளையில் வெறும் வயிற்றுடன் உள்ள போது சிறிது நேரம் ஸ்கிப்பிங் எனப்படும் கயிறுதாண்டும் உடற்பயிற்சி செய்தல், வீட்டிலுள்ள வேலைகளைத் தானாகவே எடுத்துக் கொண்டு சுறுசுறுப்புடன் செயல்படுதல் போன்றவற்றைச் செய்தல் நலம்.

பிருகத்யாதி கஷாயம், வீரதராதி கஷாயம், கண்மத பஸ்மம், பிரவாள பஸ்மம் போன்ற சில ஆயுர்வேத மருந்துகள் சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் மகள் இவற்றில் எது சிறந்ததோ அதைப் பயன்படுத்திக் குணம் பெறலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum