ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

+5
ரா.ரா3275
உமா
பிஜிராமன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
சதாசிவம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சதாசிவம் Fri Jan 13, 2012 4:00 pm

வெள்ளை உடை தேவதை
முல்லை நிற சிற்றாடை
கிள்ளை நிற மெல்லாடை
பட்டு வைத்த பாவாடை
எட்டு இன்ச்சு கவர்ச்சிஉடை

அணியணியாய் அணிந்துவிட்டோம்
அணிந்தணிந்து அலுத்துவிட்டோம்
உடலோடு நிற்கவில்லை
உணர்வோடும் ஒட்டவில்லை
அத்தனையும் அணிஞ்சாச்சு
அடிவயிரை அணைச்சாச்சு

ஊர் ஊராய் சுத்திவிட்டோம்
உற்றாறாலும் உதரப்பட்டோம்
கண்ணீரை துடைத்துவிட்டோம்
கனவுகளை மறந்துவிட்டோம்
விலைக்கும் சிலர் சென்றுவிட்டோம்

கட்டழகு இடுப்பை வளைக்க வேண்டும்
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்

கலையை கற்க் வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்
முன் வரிசையில் ஆடிவிட்டோம் (அழகிருக்கும் வரை)
பின் வரிசையாய் சென்றுவிட்டோம் (அழகிழக்கும் வரை)

குதி குதியாய் குதித்து விட்டோம்
குலுக்கி குலுக்கி சலித்துவிட்டோம்
முன்னூறு படம் நடித்துவிட்டோம்
முன்னணியோடும் பாடிவிட்டோம்
குழு நடிகையாய் (குருப் டான்சர்)...............

உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை




சதாசிவம்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Jan 13, 2012 4:05 pm

மிகவும் அருமை...சதாசிவம் அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
உண்மை நிலையை உணர்த்தியுள்ளீர்கள் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by பிஜிராமன் Fri Jan 13, 2012 4:05 pm

அருமையான எழுதிவிட்டீர்கள் ஐயா............

ஆம், நிச்சயமாக அவர்கள் படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் நிச்சயம் அதிகம், தான் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடுகிறார்கள் என்பதை நினைத்து மகிழ்வோம்.

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by உமா Fri Jan 13, 2012 4:07 pm

மிகவும் அருமையான கவிதை...
அழகான வார்த்தை கோர்ப்பு ...
அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by ரா.ரா3275 Fri Jan 13, 2012 4:23 pm

[quote="சதாசிவம்"]"வெள்ளை உடை தேவதை
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்"

டேக் இல்லையென்றால் அவர்கள் கேமரா அருகில் நிற்கவே அவசியமில்லை-டேக் இல்லாதபோது போர்த்திக்கொண்டுதான் நிற்பார்கள்-
பேட்டா அவர்களுக்குத் தரவில்லை என்றால் டான்ஸர்ஸ் யூனியனில் இருந்து படத்திற்கே தடை போடுவார்கள்...எனவே அதற்கெல்லாம் அவர்களுக்கு இழப்பு வரவே வராது சதாசிவம் அவர்களே...

'கலையை கற்க வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்"

வேலை(டேக்) முடிந்ததென்றால் ஓரமாகச் சென்று அமர்ந்துவிடுவார்கள்...
சிலையாகக் கால்கடுக்க நிற்கத் தேவை இல்லை.



"உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை"

இந்த வரிகள் அருமை...ஆனால் அவர்கள் சினிமாவில் சம்பாதிக்காதது போல் ஒரு தோற்றம் காட்டியதில் உடன்பாடில்லை..

உண்மையில் சினிமாவில் பாவப்பட்டவர்கள் உதவி இயக்குனர்கள்தான்...
அவர்கள் நீரில் அழும் மீன்கள்...எனவே அந்தக் கண்ணீர் யாருக்கும் தெரியாது.... ஜெயித்த பிறகு அவர்களுக்கு சூரியனைபோல படு பிரகாசமான வாழ்க்கை என்பதுதான் வெளியே தெரியும்...




குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  224747944

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Aகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Emptyகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சிவா Fri Jan 13, 2012 4:40 pm

பலராலும் எழுத மறந்த சோகக் கதை இது. அழகுக் கவிதையில் வடித்துள்ளீர்கள் சதா!


குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சதாசிவம் Fri Jan 13, 2012 5:22 pm

ஊக்கம் அளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
நன்றி நன்றி


சதாசிவம்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சதாசிவம் Fri Jan 13, 2012 5:54 pm

[quote="RaRa3275"]
சதாசிவம் wrote:"வெள்ளை உடை தேவதை
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்"

டேக் இல்லையென்றால் அவர்கள் கேமரா அருகில் நிற்கவே அவசியமில்லை-டேக் இல்லாதபோது போர்த்திக்கொண்டுதான் நிற்பார்கள்-
பேட்டா அவர்களுக்குத் தரவில்லை என்றால் டான்ஸர்ஸ் யூனியனில் இருந்து படத்திற்கே தடை போடுவார்கள்...எனவே அதற்கெல்லாம் அவர்களுக்கு இழப்பு வரவே வராது சதாசிவம் அவர்களே...



'கலையை கற்க வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்"

வேலை(டேக்) முடிந்ததென்றால் ஓரமாகச் சென்று அமர்ந்துவிடுவார்கள்...
சிலையாகக் கால்கடுக்க நிற்கத் தேவை இல்லை.

ஒரு காட்சி படமாக்கும் போது, ஆடத் தெரியாத நடிகைக்காக, கட் என்றும் சில நிமிடம் கழித்து டேக் என்றும் கூறும் இடை வேளையில் இவர்கள் அப்படியே நிற்பதையும், கதாநாயகி நாற்காலி தேடுவதையும் கண்டு இருக்கிறேன். ஆதாலால் இந்த வரிகள், இதிலும் நன்றாக ஆடுபவர்கள் (குலுக்குபவர்கள்), அடுத்தவருடன் ஒத்து உழைப்பவர்களுக்கு தான் கூடுதல் வாய்ப்புகள், அதனால் தான் கவனம் சிதறினாலும் தேடி வரும் வாய்ப்பை இழக்க வேண்டி இருக்கும் என்பதற்காக இந்த வரிகள்.


"உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை"

இந்த வரிகள் அருமை...ஆனால் அவர்கள் சினிமாவில் சம்பாதிக்காதது போல் ஒரு தோற்றம் காட்டியதில் உடன்பாடில்லை..

அனைவரும் சம்பாதிக்கின்றனர், ஒவ்வொரு காசின் பின்னாடியும் ஒரு சில சோகங்கள் நிறைந்து தான் இருக்கின்றது. அப்படி ஒரு வலியின் வரிகள் தான் இவை.

உண்மையில் சினிமாவில் பாவப்பட்டவர்கள் உதவி இயக்குனர்கள்தான்...
அவர்கள் நீரில் அழும் மீன்கள்...எனவே அந்தக் கண்ணீர் யாருக்கும் தெரியாது.... ஜெயித்த பிறகு அவர்களுக்கு சூரியனைபோல படு பிரகாசமான வாழ்க்கை என்பதுதான் வெளியே தெரியும்...

பாவப்படுபவர்கள் இன்னும் பலர், பெரும் கனவுடன் வந்து துணைநடிகர்களை தேடி அலையும் ஏஜெண்டுகள், ஏதாவது ஒரு படத்திலாவது பாட்டு எழுதி விடாலாமா என்று துணை டைரெக்டர்களால் பாட்டீல் வாங்கிக் கொடுத்து கேலிக்குள்ளாகும் பாடலாசிரியர்கள், உலகில் எந்த பொருளை இயக்குனர் கேட்டாலும் அதை பத்திரமாக பாதுகாத்து கொடுக்கும் ஆர்ட் உதவியாளர்கள், இன்றைக்கு ஏதாவது பிணம் வராதா என்று காத்து இருக்கும் பண்டாரங்கள், குறும் பத்திரிக்கைகளில் எழுதியை பதிக்கலாம் என்று பதிப்பகம் பதிப்பகமாக அலையும் எழுத்தாளர்கள் என்று இன்னும் பலர்.....

அழகான, உண்மையான விமர்சனம் அளித்தமைக்கு மிகவும் நன்றி.
நன்றி நன்றி


சதாசிவம்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by ரா.ரா3275 Fri Jan 13, 2012 6:24 pm

நீங்கள் யாரோ தவறானவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கணும்...இல்லையேல் இயக்குனர்களையோ உதவி,துணை,இணை இயக்குனர்களையோ இப்படி குறிப்பாகக் குதற மாட்டீர்கள்...
என்ன செய்ய?...காசு உள்ள சிலர் தங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள டிரைவர்களை டைரக்டர்களாக்கிய கதையும் உண்டு...
நிஜமான பயிற்சியோடும் பசியோடும் முயற்சியோடும் வாழ்க்கை தேடும் லட்சியவாதிகளையும் மேற்கண்ட அடிபட்ட புலிகள் குதறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது...


குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  224747944

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Aகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Emptyகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Rகுதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by சார்லஸ் mc Fri Jan 13, 2012 6:35 pm

ராரா அவா்களே!

அசப்பில் உங்களைப் பாா்த்தால் நடிகா் நெப்போலியன் சாயல் தொிகிறதே. அவருக்கு நீங்கள் உறவுக்காரரா?

( குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  102564 - க்காக)


குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்  Empty Re: குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum