ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ படிக்கலாம்!

Go down

பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ படிக்கலாம்! Empty பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ படிக்கலாம்!

Post by முஹைதீன் Wed Jan 11, 2012 5:46 pm

பிளஸ் டூ மாணவர்கள் ஐஐடியில் எம்ஏ
படிக்கலாம்!


பொன்.தனசேகரன்

பிளஸ் டூ
படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பில் சேர்ந்து
படிக்கலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத
விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.



சர்வதேச
அளவில் புகழ் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் பொறியியல்
படிப்புகளை மட்டுமல்ல
, கலைப்
படிப்புகளையும் படிக்க தற்போது வாய்ப்புகள் உள்ளன. டெவலப்மெண்ட்
ஸ்டடீஸ்
,
ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்புகளில்
பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். கலைப்புலம் மற்றும் சமூக
அறிவியலில் சிறந்த பயிற்சி பெற்றவர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்
வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்புகளில்
, கல்வி
நிறுவனங்கள்
,
அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தொண்டு
நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்
மாணவர்களை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு இருக்கும். இந்தப் படிப்பில் சேரும்
மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் பொதுவான பாடங்கள்
நடத்தப்படும். பின்னர்
, மூன்றாவது
ஆண்டிலிருந்து பாடப்பிரிவுகளைப் பொருத்து குறிப்பிட்ட சிறப்புப் பாடங்கள் கற்றுத்
தரப்படும். கலை மற்றும் சமூக அறிவியல் துறையுடன் இணைந்து
பொறியியல்
,
அறிவியல் மற்றும் மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் புதிய பாடப் பிரிவுகளில்
பாடம் நடத்துவார்கள். இந்தப் படிப்புகளை மாணவர்கள் தங்களது விருப்பப் பாடமாகவும்
தேர்வு செய்து கொள்ளலாம். என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பாட மாணவர்களுடன்
சேர்ந்து குறிப்பிட்ட சில பாடங்களுக்காக ஒரே வகுப்பில் படிப்பதற்கான வாய்ப்பும்
கிடைக்கும். அத்துடன் இந்தியப் பொருளாதாரம்
, தத்துவம்,
இலக்கியம்,
கலாசாரம்,
சமூகம்,
பொது நிர்வாகம் ஆகியவை குறித்தும் மாணவர்கள் நன்கு அறிந்துகொள்ள முடியும்
என்பது இந்தப் படிப்புகளின் சிறப்பு அம்சம். இந்தப் படிப்பில் சேர்ந்து படிக்கும்
மாணவர்கள் பிரெஞ்ச்
,
ஜெர்மன் ஆகிய மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம்.


டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் பாடப்பிரிவைப் பொருத்தவரை, பாலினம்,
அறிவியல்,
தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி, நகர்ப்புறமயமாதல் ஆகியவற்றில் பாடங்கள் இருக்கும். இந்தப் பாடங்களில்
மேலும் ஆர்வம் இருந்தால் இந்த மூன்று துறைகளில் ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து
அத்துறையில் ஆய்வுக் கட்டுரை எழுதலாம் அல்லது அதை விருப்பப்பாடமாக எடுத்துப்
படிக்கலாம். இந்தப் படிப்பை எடுத்துப் படித்தவர்கள் தேசிய மற்றும் சர்வதேச
மேம்பாட்டு நிறுவனங்களிலோ அல்லது கல்வி நிறுவனங்களிலோ வேலையில் சேரும் வகையில்
உரிய திறமைகளுடன் உருவாக்கப்படுகிறார்கள். இங்கிலீஷ் ஸ்டடீஸ் பாடப்பிரிவில் சேரும்
மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியம் மற்றும் ஆங்கில மொழித்திறன் அறிவுடன்
பொருளாதாரம்
,
சமூகவியல்,
வரலாறு,
தத்துவம் ஆகிய துறைகள் குறித்த அறிமுகமும் இருக்கும். இந்தப் படிப்பை
முடித்தவர்கள் ஆங்கில மொழி கற்றுத் தரும் பணியில் ஈடுபடலாம். இதழியல் துறையிலும்
பணி வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு
கிடைக்கும்.



இந்த ஐந்து
ஆண்டு ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பில் மொத்தம்
46 இடங்கள்
உள்ளன. முதல் மூன்று செமஸ்டர்களில் மாணவர்கள் பெறும்
மதிப்பெண்கள்
,
மாணவர்களின் விருப்பம், அந்தந்தத்
துறைகளில் உள்ள இடங்களின் நிலவரம் ஆகியவற்றைப் பொருத்து எந்தப் பாடப்பிரிவு என்பது
ஒதுக்கீடு செய்யப்படும்.



பிளஸ் டூ
தேர்வில் குறைந்தது
60 சதவீத
மதிப்பெண்கள் பெற்ற

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர
விண்ணப்பிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஊனமுற்ற
மாணவர்கள்
55
சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு
15
சதவீத இடங்களும் பழங்குடியின மாணவர்களுக்கு 7.5 சதவீத
இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். கிரீமிலேயர் பிரிவு அல்லாத ஓ.பி.சி.
மாணவர்களுக்கு
27
சதவீத இடங்களும் ஊனமுற்ற மாணவர்களுக்கு 3 சதவீத
இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்தப் படிப்பில் சேர விரும்பும் பொதுப் பிரிவு
மாணவர்கள்
1987ஆம் ஆண்டு
அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக் கூடாது.
தாழ்த்தப்பட்டோர்
,
பழங்குடியினர், மாற்றுத்
திறனாளிகள் ஆகியோர்
1982ஆம் ஆண்டு
அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாகப் பிறந்திருக்கக்கூடாது.



இந்தப்
படிப்பைப் படிக்க செலவு அதிகம் ஆகாது. முதல் ஆண்டில் முதல் செமஸ்டரில் கட்டணமாக
ரூ.
6,250
செலுத்த வேண்டியதிருக்கும். அத்துடன், திருப்பித்
தரத்தக்க காப்பீட்டுத் தொகையாக ரூ.
2 ஆயிரம்
கொடுக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரிலிருந்து படிப்புக் கட்டணம்
ரூ.
4,500
செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின
மாணவர்களுக்கு படிப்புக் கட்டணத்தில் ரூ.
3 ஆயிரம்
சலுகை உண்டு.



இந்தப்
படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்காகத் தனி நுழைவுத்
தேர்வு
(Humanities and Social Sciences Entrance
Examination - HSEE)
நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி
காலை
10
மணியிலிருந்து 1 மணி வரை
நடைபெறுகிறது. சென்னை
, பெங்களூரு,
கோவை,
ஹைதராபாத்,
கொச்சி,
கொல்கத்தா,
மதுரை,
மும்பை,
புதுடில்லி,
திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம்.
கேள்வித்தாள்கள் ஆங்கிலத்தில் இருக்கும். மூன்று மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வு
இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் தாளில் இங்கிலீஷ்
, காம்பிரிஹென்சன் ஸ்கில்ஸ், அனலிட்டிக்கல் அண்ட் குவாண்டிடேட்டிவ் எபிலிட்டி, பொது அறிவு
ஆகிய பிரிவுகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். சுதந்திரத்துக்குப்
பிறகு
,
இந்தியப் பொருளாதாரம், இரண்டாம்
உலகப் போருக்குப் பிறகு
, இந்திய
சமூகம்
,
தற்கால உலக நிலவரம், சுற்றுச்சூழல், சூழியல்
ஆகியவை குறித்து பொது அறிவுக் கேள்விகள் இருக்கும். முதல் பகுதிக் கேள்விகளுக்கு
விடையளிக்க இரண்டரை மணி நேரம் வழங்கப்படும். இந்தப் பகுதியில் உள்ள கேள்விகள்
அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும். கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வை எழுத
வேண்டியதிருக்கும். இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க அரை மணி நேரம் வழங்கப்படும். இது
கட்டுரைப் பகுதி. இதைத் தனியே வழங்கப்படும் விடைத்தாளில் பதில் அளிக்க வேண்டும்.
இந்த நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஐஐடி இணையதளத்திலும் விண்ணப்பத் தகவல்
அறிக்கையிலும் வெளியிடப் பட்டுள்ளது.இத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களும் ஐஐடி
இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



சென்னை
ஐஐடியில் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ்
, இங்லீஷ்
ஸ்டடீஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பில் சேர விரும்பும்
மாணவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.
1,600 செலுத்த
வேண்டும். தாழ்த்தப்பட்டோர்
, பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குக் கட்டணம்
ரூ.
800.
அனைத்துப் பிரிவு மாணவிகளுக்கும் கட்டணம் கிடையாது. ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து
சேர வேண்டிய
கடைசித் தேதி
20-01-2012.







Al
Quran -[40:39]"O my people! This life of the present is nothing but (temporary)
convenience: It is the Hereafter that is the Home that will last






--


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum