ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

+3
ராஜா
மகா பிரபு
இளமாறன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by இளமாறன் Sat Jan 07, 2012 2:43 pm

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

இன்று (07.01.2012) காலையில் வெளியான நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.


100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.கவினரின் த்ôக்குதலைக் கண்டு நடுங்கி ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.


தொடர்ந்து கற்களும் சோடாபாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வ்ந்து செய்தி சேகரிக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க ரவுடிகள் கற்களை வீசினர்.


போலீசார் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, போலீசாரைத் தள்ளிவிட்டுவிடடு அ.தி.மு.க ரவுடிகள் தாக்குதலைத் தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலக்ததிற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது.

காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். தற்போதும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by இளமாறன் Sat Jan 07, 2012 4:35 pm

சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.


'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம்

நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி எரித்தனர்.

சிதம்பரத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலர் வி.கே.மாரிமுத்து தலைமையில் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

சாத்தூரில் அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பஸ்நிலையம் அருகே வாரப்பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்சி எம்எல்ஏ பரஞ்ஜோதி தலைமையிலும், வேலூரில் அமைச்சர் விஜய் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியாத்தம் டவுன், அரூர் மற்றும் பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுகவினர் அந்த பத்திரிகையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குன்னூரில் நகராட்சி சேர்மன் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

அலுவலகம் முற்றுகை... தாக்குதல்

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினர் கடும் தாக்குதல் நடத்தினர். சோடா பாட்டில், பெரிய பெரிய கற்கள் மற்றும் உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து உடைத்தனர்.

100க்கும் அதிகமான அ.தி.மு.கவினர் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தினர். பாதுகாப்புக்காக வந்த போலீசார் எதையும் தடுக்க முயற்சிக்காமல் அமைதியாக நின்றதாக நக்கீரன் தரப்பு புகார் கூறியுள்ளது.

மேலும் அதிமுக எம்எல்ஏ கலைராஜன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் போய் அமர்ந்து கொண்டு, நக்கீரன் அலுவலகத்துக்கு எந்த பாதுகாப்பும் தரவேண்டாம் என வற்புறுத்தியதாகவும் பத்திரிகை அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.கவினரின் தாக்குதலைக் கண்டு பயந்து ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர். தாக்குதல் நடந்த போது நக்கீரன் ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ், செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பத்திரிகை அலுவலகத்துக்குள் இருந்தனர்.

நக்கீரன் அலுவலகத்துக்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்களும் தாக்குதலை நேரடியாக எதிர்கொண்டனர். பிற்பகலுக்குப் பிறகும் தாக்குதல் தொடர்ந்ததாக நிருபர்கள் தெரிவித்தனர்.

நக்கீரன் அலுவலகத்தைப் பூட்டிய எம்எல்ஏ

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.

அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by மகா பிரபு Sat Jan 07, 2012 5:15 pm

எங்கள் பகுதியிலும் நக்கீரன் புத்தகங்களை கடைகளில் இருந்து பிடுங்கி சாலையில் போட்டு எரித்தார்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by Guest Sat Jan 07, 2012 5:24 pm

நக்கீரன் தொழில் அப்படி .... சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by ராஜா Sat Jan 07, 2012 5:31 pm

இந்த நக்கீரன் , ஒரு சிறந்த வார இதழ் என்ற நிலையில் இருந்து என்றோ திசை மாறிவிட்டது. மஞ்சள் பத்திரிகை என்ற பெயர் வாங்கவில்லை அவ்வளவு தான்.

இது எல்லாம் ஒரு பரபரப்பை ஏற்படுத்த போட்ட செய்தியாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by இளமாறன் Sat Jan 07, 2012 5:36 pm

மக்களின் அரசியல் சார்ந்தவர்களா என்று கணக்கெடுக்கிறார்களா அதிர்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by மகா பிரபு Sat Jan 07, 2012 5:42 pm

ஆனால் ஒருவகையில் இது பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான செயல் தானே!. அதிர்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by pgasok Sat Jan 07, 2012 6:03 pm

பத்திரிகை சுதந்திரம் என்பது குறிப்பிட்ட ஒருவரை பற்றிய தவறான ( நல்லவ அல்ல ) செய்திகளை பற்றி மட்டுமே வெளி எடுவது அல்ல
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by மகா பிரபு Sat Jan 07, 2012 6:08 pm

pgasok wrote:பத்திரிகை சுதந்திரம் என்பது குறிப்பிட்ட ஒருவரை பற்றிய தவறான ( நல்லவ அல்ல ) செய்திகளை பற்றி மட்டுமே வெளி எடுவது அல்ல
உண்மை தான் நண்பா. ஆனால் இதே வேலையை தான் போன ஆட்சியில் ஒரு தொலைகாட்சி செய்தது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by உதயசுதா Sat Jan 07, 2012 6:09 pm

ராஜா wrote:இந்த நக்கீரன் , ஒரு சிறந்த வார இதழ் என்ற நிலையில் இருந்து என்றோ திசை மாறிவிட்டது. மஞ்சள் பத்திரிகை என்ற பெயர் வாங்கவில்லை அவ்வளவு தான்.

இது எல்லாம் ஒரு பரபரப்பை ஏற்படுத்த போட்ட செய்தியாக இருக்கும்.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Uநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Dநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Aநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Yநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Aநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Sநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Uநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Dநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Hநக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்! Empty Re: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum