Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செங்கல்பட்டு நகரசபை துணைத்தலைவர் வெட்டிக்கொலை
2 posters
Page 1 of 1
செங்கல்பட்டு நகரசபை துணைத்தலைவர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு நகரசபை துணைத்தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கார், வேனில் வந்த 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள்
காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கச்சூரில் வசித்து வந்தவர் ரவிபிரகாஷ் (வயது 32). செங்கல்பட்டு நகரசபை துணைத்தலைவராக இருந்தவர். இவருக்கு மகேஸ்வரி (25) என்ற மனைவியும், பிரதீபா (2) என்ற மகளும் உள்ளனர். தற்சமயம் மகேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
தி.மு.க.வை சேர்ந்த ரவிபிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 17 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இதில் செங்கல்பட்டு அ.தி.மு.க. நகர செயலாளர் குமார் கொலை வழக்கு, பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் ஆதிராஜா கொலை வழக்குகள் தவிர மற்ற வழக்குகளில் இருந்து ரவிபிரகாஷ் விடுதலையாகிவிட்டார்.
மு.க.ஸ்டாலின் வருகை
அண்ணா பிறந்தநாளையொட்டி தி.மு.க. சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விழா செங்கல்பட்டு ராதாதியேட்டர் அருகே இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மு.க.ஸ்டாலின் வருகிறார் என்பதால் பிரம்மாண்டமாக மேடை அமைக்கும் பணி நடந்துவந்தது.
இந்த மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு விட்டு தான் புதிதாக மசூதி தெருவில் கட்டி வரும் ஆடம்பர பங்களாவை பார்க்க ரவி பிரகாஷ் சென்றார்.
அந்த பங்களாவை பார்வையிட்டுவிட்டு இதன் அருகே உள்ள ரைட்டர் சபாபதி தெருவில் வசிக்கும் தனது நண்பர் வரதன் வீட்டுக்கு சாப்பிட ரவி பிரகாஷ் சென்றார். அவருடன் அவரது நண்பர்கள் பாலா (32), முரளி (35) ஆகியோரும் சென்றனர்.
சரமாரியாக வெட்டிக்கொலை
நேற்று மதியம் 3.15 மணி அளவில் நண்பர் வரதனின் வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு அங்கிருந்த ஒருவரிடம் ரவி பிரகாஷ் பேசிக்கொண்டிருந்தார். நண்பர்கள் பாலாவும், முரளியும் மாடிக்கு சென்று விட்டனர்.
அப்போது காரிலும், வேனிலும் முகத்தை துணியால் மூடியபடி வந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கத்தியுடன் ரவி பிரகாஷை துரத்தியது. இதனால் பீதியுடன் வரதனின் வீட்டினுள் ஓடிய ரவி பிரகாஷை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் அதே இடத்தில் ரவிபிரகாஷ் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
போலீஸ் வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து ரவிபிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் விரைந்து வந்து செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் இருந்த ரவிபிரகாஷின் உடலைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
ரவி பிரகாஷை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய 20 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகரசபை துணைத்தலைவர் கொலை செய்யப்பட்டதால் செங்கல்பட்டு ஜி.எஸ்.டி.சாலை உள்பட சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை முருகேசன் எம்.எல்.ஏ. கொலை நடந்த வீட்டை பார்வையிட்டார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செங்கல்பட்டு நகரசபை துணைத்தலைவர் வெட்டிக்கொலை
நகர சபை தலைவர் ரொம்ப நல்லவரா இருந்திருப்பார் போலசிவா wrote:தி.மு.க.வை சேர்ந்த ரவிபிரகாஷ் மீது 3 கொலை வழக்குகள் உள்பட 17 வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
Similar topics
» பெண்ணை கற்பழித்து ஆபாசபடம்: ராமேசுவரம் நகரசபை தலைவர் கைது
» மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்
» ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை
» இளம்பெண் வெட்டிக்கொலை
» அ.தி.மு.க., துணைச்செயலர் வெட்டிக்கொலை
» மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளராகிறார் காங்கிரசின் ஹரிபிரசாத்
» ராஜபாளையத்தில் அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை
» இளம்பெண் வெட்டிக்கொலை
» அ.தி.மு.க., துணைச்செயலர் வெட்டிக்கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|