ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

3 posters

Go down

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Empty ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Post by சிவா Mon Jan 02, 2012 9:38 am

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் First

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்தனர்.

பிறந்தது புத்தாண்டு

2011-ம் ஆண்டு இனிதே நம்மிடம் இருந்து விடைபெற்று, 2012-ம் ஆண்டு நேற்று பிறந்தது. 2012-ம் ஆண்டில் அமைதியும், சமாதானமும் அமைய வேண்டிய பல்வேறு தரப்பினரும் ஆண்டின் முதல் நாளில் கோவில்களில் சிறப்பு பிராத்தனைகள் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக சென்னை நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசனம் செய்தனர்.

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் புத்தாண்டு தின சிறப்பு பூஜைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தரிசனத்துக்காக, பொது தரிசனம், ரூ.25, ரூ.50 சிறப்பு கட்டண தரிசனங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

வடபழனி முருகன்

வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காலை 4 மணியில் இருந்து பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரமும், பகல் 1 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரத்துடன் கூடிய பூஜைகளும் நடைபெற்றது.

மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கபாலீஸ்வரருக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடைபெற்றது. கோவில் பிரகாரத்தை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று இறைவனையும், இறைவியையும் வணங்கினர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம்

பூங்கா நகர் தங்கசாலைத்தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. காமாட்சி அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, விழா நடைபெற்றது.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மைய வெங்கடாசலபதி கோவிலில், அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கடும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்திலேயே கோவிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். பகல் 11.30 மணி, பகல் 12 மணியில் இருந்து 3 மணி, மாலை 4 மணியில் இருந்து 7.30 மணி, இரவு 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை சர்வதரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சாய்பாபா கோவில்

எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள கற்பக விநாயகர் மற்றும், திருச்சடை அம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகளும் நடைபெற்றது.

சென்னை மைலாப்பூரில் உள்ள அகில இந்திய சாய் சமாஜம் சாய்பாபா கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காலை 8 மணிக்கு, உலக நன்மைக்காக, ஸ்ரீமகாலட்சுமி யாகம், தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஜய யாகமும், சத்குரு சாய்நாதர் யாகமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவின் அருள் பெற்று பெற்றனர்.

கொடுங்கையூர் ஆர்.வி.நகர். அய்யப்பன் கோவில், நாகத்தமன் கோவில், பெரம்பூர் பாலம் விநாயகர் கோவில், நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், வானகரம், மேட்டுக்குப்பத்தில் உள்ள மச்சக்கார சாமிநாத பாலமுருகன், ராம ஆஞ்சநேயர் கோவிலில் காலை 5.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில், சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது.



கிறிஸ்தவ தேவாலயங்களில்...

சாந்தோம் தேவாலயம், மைலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள புனித பிரகாச மாதா ஆலயம் உள்பட சென்னையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் புத்தாண்டு பிரார்த்தனை மிகச்சிறப்பாக நடைபெற்றன.

சிறுவர், சிறுமிகள் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தியும், பலூன்களை பறக்கவிட்டும் புத்தாண்டை வரவேற்றனர்.

மெரினா கடற்கரையில்

சென்னை மெரினா கடற்கரை இரவு 11 மணிக்கு மேல் களை கட்டியது. கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் காணப்பட்டனர். மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரையில் இளைஞர் பட்டாளம் புத்தாண்டை வரவேற்க திரளாக கூடியிருந்தனர்.

நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், ஒருவருக்கொருவர் கை குலுக்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

மெரினா கடற்கரை மட்டுமின்றி, எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர், கொட்டிவாக்கம் கடற்கரையில் திரண்டிருந்த சிறுவர் சிறுமிகள் மட்டுமின்றி பெரியவர்களும் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறப்பையொட்டி, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றன. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் புத்தாண்டு தின விழா நடைபெற்றன. இதேபோல், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள், மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார்கள்.

பாதுகாப்பு பணியில் 12,000 போலீசார்

புத்தாண்டு தினத்தில் அசம்பாவிதம் நிகழாதவாறு, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தினத்தந்தி.


ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Empty Re: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jan 02, 2012 12:55 pm

டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Empty Re: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Post by உமா Mon Jan 02, 2012 1:13 pm

மாணிக்கம் நடேசன் wrote:டாஸ்மார்க் கடைகளில் பேரலையாக மோதிய குடிகாரக்கூட்டம்
நிச்சயம் இந்த பக்தர் கூட்டத்தை விட மிக அதிகமாகவே இருந்திருக்கும்.

உண்மை .... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எவ்ளோ டிராபிக் இந்த கூட்டாத்தாலே. கோபம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் Empty Re: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலம் அண்ணா பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
» கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி
» இன்று மகரஜோதி: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
» திருமலையில் பக்தர்கள் கூட்டம் உண்டியலில் கூடுதல் காணிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum