ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

+3
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 12:49 pm

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Gallerye_090248588_376261

சென்னை: வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் என அஞ்சப்படுகிறது. தேச விவரம் குறித்து முழு விவரம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைவழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில், சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 107.526 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், படிப்படியாக நகர்ந்து, இன்று காலை, புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., சூறைக்காற்றுடன் இன்று பலத்த மழை பெய்யும். கரையை கடக்கும் பகுதியில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே,

456.989 கடல் மைல் தூரத்தில், "தானே' புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது.நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதுச்சேரி அருகே இன்று காலை கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை நாகை , உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யொட்டிய பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் காற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் தாக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடல் கொந்தளிப்பு மட்டும் இருந்தது. பெருத்த சேதம் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும்இல்லை. மழை மட்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் ஒருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது; கடுமையான காற்றும் வீசி வருகிறது. சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அதிகாரிகள் முகாம் இட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமலர்


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 12:51 pm

புதுச்சேரி : வங்க கடலில் உருவான "தானே' புயல் காரணாமாக கடுமையாகவும் முற்றிலும் முடங்கி போனது புதுச்சேரிதான். இங்கு மக்கள் வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. கடும் சீற்றத்துடன் வீசிய சூறைக்காற்று காரணமாக யாரும் வெளியே வரமுடியாமல் வீட்டிற்குள் முடங்கினர் .இங்கு தற்போதைய நிலவரப்படி ஒருவர் வீட்டின் மேற்கூறை இடிந்து உயிரிழந்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் மரம் விழுந்து 2 பேரும், சென்னையில் ஒருவரும் மொத்தம் இது வரை 4 பேர் பலியாகியிருக்கின்றனர்.

நேற்று இரவு 2 மணி முதல் பலத்த சூறாவளியுடன் புதுச்சசேரியில் மழை பெய்து வருகிறது. புயல் மணிக்கு 100 முதல் 150 கி.மீ., வேகத்தில் வீசி வருகிறது. இதனால் கூரை வீடுகள் முற்றிலும்

சேதமடைந்துள்ளன. சிமின்ட் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்துள்ளது. இரவு முதல் மின்சாரம் தடைபட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராஜவுடையார் தோட்டத்தில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் அருள்ராஜ் என்பவர் உயிரிழந்தார். தாவீது பேட்டையில் ஜான்ஜோசப் என்பவர் காயமுற்றார். சூறாவளி காற்று பலத்த வேகமாகவும், கடும் இரச்சலுடனும் இப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது. இரவு யாரும் தூங்கவில்லை. என்னநடக்குமோ என்ற அச்சத்துடன் இருந்தனர். காற்று காரணமாக நகரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் காற்றில் சரிந்து விழுந்தது. இது விழும் சப்தம் மக்களை கூடுதலாக அச்சுறுத்தியது. இங்கிருந்து

சென்னைக்கு செல்லும் போக்குவரத்து முற்றிலும்பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைவரும் வீட்டிற்குள் முடங்கினர். புதுச்சேரியில் கடந்த 2003 ம் ஆண்டில் லைலா புயல் ஏற்பட்ட போது கூட இவ்வளவு பயம் மக்களுக்கு ஏற்படவில்லை. ஆனால் தானே புயல் இப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழையும், கடுமையான காற்றும் வீசி வருகிறது.சங்கராபுரத்தில் மரம் விழுந்து குருவப்பன்நாயுடு மின்சாரம் தாக்கி பலியானார். கோட்டக்குப்பம் பகுதியில் மரம் விழுந்து சுகந்தி என்ற பெண் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சிலர் காயம் அடைந்தனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by மாணிக்கம் நடேசன் Fri Dec 30, 2011 12:53 pm

அது 'தானே' தானே கடந்து போனது, யாராச்சும் தள்ளி விட்டார்களா.?
இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திய இந்த சூறாவளி மீண்டும் தென்னிந்தியாவை தாக்குமா.
பாவம் தமிழக மக்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 12:58 pm

`தானே' புயலால் கடல் சீற்றம் எதிரொலி, சென்னை மீனவர்கள் 600 பேர் ஆந்திராவில் தஞ்சம். ராட்சத அலையால் 50 படகுகள் சேதம்; கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது


சென்னை காசி மேடு கடல் பகுதியில் `தானே' புயலால் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 150 படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 600 மீனவர்கள் காசிமேடுக்கு திரும்ப முடியவில்லை. இதனால் அவர்கள் ஆந்திராவில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

காசிமேட்டில் கடல் கொந்தளிப்பு

வங்க கடலில் உருவான `தானே' புயல் சென்னை அருகே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடலில் ராட்சத அலைகள் எழும்புகின்றன. கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது.

நேற்று காலை காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 20 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுகின்றன.

குடியிருப்புக்குள் கடல் நீர் புகுந்தது

காசிமேடு பகுதியில் பலத்த காற்றும், மழையும் பெய்து வருவதால் கடற்கரையோரமாக உள்ள குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்தது. இதனால் கடற்கரையோரமாக உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தானே புயல் காரணமாக காசிமேடு கடற்பகுதியில் தற்போது 125 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.

படகுகள் சேதம்

அலைகள் கடற்கரையோரமாக பாறைகளில் கட்டப்பட்டு இருக்கும் படகுகளில் வந்து மோதுகின்றன. இதனால் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சேதமடைகின்றன. இந்த வகையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தன.

மைக் மூலம் அறிவிப்பு

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடற்கரையோரமாக உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் `மைக்' மூலம் தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள பள்ளிகளுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து ஏராளமான மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு பள்ளிகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் கண்ணப்பன், ராயபுரம் உதவி ஆணையாளர் பீர்முகமது ஆகியோர் கடற்கரையோரம் முகாமிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அந்த பகுதிகளை கண்காணித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எப்போதும் கலகலப்பாக இருக்கும் காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை மீன்பிடிதுறைமுகப்பகுதி வெறிச்சோடி கிடக்கிறது.

600 சென்னை மீனவர்கள் ஆந்திராவில் தஞ்சம்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன் 150 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 600 மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக காசிமேடுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

அவர்கள் பாதுகாப்பு கருதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் ஆற்றில் படகுகளை செலுத்தி பத்திரமாக கரை ஒதுங்கி உள்ளனர். இதுபற்றிய செய்தி காசிமேடு பகுதி மக்களுக்கு தெரிய வந்த பின்னர் தான் அந்த பகுதி மீனவ மக்கள் அமைதியடைந்தனர்.

மீனவர்களை மீட்க கோரிக்கை

ஆந்திர மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ள 600 மீனவர்களுக்கும் உரிய பாதுகாப்பையும் தேவையான உணவுகளையும் வழங்கி அவர்களை பத்திரமாக காசி மேடு மீன் பிடிதுறைமுகத்துக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மீனவர் சங்கத்தலைவர் கிங் பிஷ் எம்.டி.தயாளன் கோரிக்கை விடுத்து உள்ளார்.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 12:59 pm

கடும் புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 11 மீனவர்கள், ஹெலிகாப்டரில் சென்று கடற்படை மீட்டது

ஆந்திர மாநிலம், நர்சப்பூரில் இருந்து மீனவர்கள் நேற்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது `தானே' புயல் பாதிப்பால் கடலில் கடுமையான அலைகள் சீறி எழுந்தன. இதனால் மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், அவர்களை மீட்கும்படி இந்திய கடற்படையினருக்கு வேண்டுகோள் விடுத்தது. இதனை ஏற்று, இந்திய கடற்படையினர் கடலுக்குள் தத்தளித்த அந்த 11 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்டு வந்தனர்.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 1:00 pm

மீட்பு பணிக்காக தயார்நிலையில் 2 கப்பல்கள், கடலோர காவல்படையின் குட்டி விமானமும் பயன்படுத்தப்படும்


தானே புயலில் சிக்கி கடலில் மீனவர்கள் தத்தளித்தால் அவர்களை மீட்க 2 கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன என்று கடலோர பாதுகாப்புப்படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பத்திரிகை தகவல் மையம்(ராணுவ பிரிவு) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

2 கப்பல்கள்

தானே புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரத்தில் புயலில் கடலில் சிக்கும் மீனவர்களை தேடுவதற்கும் பாதுகாப்பாக மீட்பதற்கும் முன் எச்சரிக்கையாக கடலோர பாதுகாப்புப்படையை சேர்ந்த விக்ரஹா மற்றும் வஜ்ரா ஆகிய 2 கப்பல்கள் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்தும், பரதீப் துறைமுகத்தில் இருந்தும் வரவழைக்கப்பட்டு தமிழ்நாடு-ஆந்திரா கடல்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குட்டிவிமானம்

மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்து கடலோர பாதுகாப்புப்படையைச்சேர்ந்த ஒரு குட்டி விமானமும், ஆந்திரமாநிலம் சாந்தப்பள்ளியில் இருந்து நர்சப்பூர்வரை கடல் பகுதியில் மீனவர்கள் யாராவது தத்தளித்தால் அவர்களை மீட்க ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போனதாக கூறப்படும் மீனவர்களையும் தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று கடலோரக்காவல்படை கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by ஜாஹீதாபானு Fri Dec 30, 2011 1:00 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது 'தானே' தானே கடந்து போனது, யாராச்சும் தள்ளி விட்டார்களா.?
இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திய இந்த சூறாவளி மீண்டும் தென்னிந்தியாவை தாக்குமா.
பாவம் தமிழக மக்கள்.

சியர்ஸ் சியர்ஸ்

காற்று சத்தத்தில் இரவு தூங்க முடியவில்லை என்று கவலையா இருந்தது சோகம்
ஆனால் இந்த புயலால் வீடிழந்து இருப்போரை நினைத்து ரொம்ப வருத்தமாயிடுச்சு . பாவம் கடலோர மக்களை ஆண்டவன் ரொம்ப சோதிக்கிறான் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 1:01 pm

புயல் எதிரொலியாக நடவடிக்கை: சென்னைக்குள் நுழைய கண்டெய்னர் வாகனங்களுக்கு தடை, கடற்கரை பகுதிக்கும் மக்கள் செல்ல அனுமதி இல்லை

புயல் எதிரொலியாக சென்னைக்குள் கண்டெய்னர் போன்ற வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு மக்கள் செல்லவும் போலீசார் அனுமதிக்கவில்லை.

துறைமுகத்துக்குள் செல்ல.....

தானே புயலையொட்டி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

சென்னை துறைமுகத்துக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்துக்குள் சரக்குகளை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் போன்ற வாகனங்களையும் சென்னை நகருக்குள் வர போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.

புயல் பீதியால் சென்னை நகர அனைத்து ரோடுகளிலும் நேற்று மாலையிலிருந்து வழக்கத்தை விட வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. வாகன நெரிசல் இல்லை.

மக்கள் வீடுகளுக்கு பகலிலேயே திரும்பி விட்டனர். சென்னை நகரின் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

மெரினா போன்ற கடற்கரை பகுதிகளில் மக்களை போலீசார் நேற்று மாலையிலிருந்து அனுமதிக்க வில்லை.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 1:03 pm

அறுந்து கிடக்கும் மின் கம்பங்களை தொடாதீர்கள் என்று எச்சரிக்கை

`தானே புயல் காரணமாக ஏற்படும் சூறாவளி காற்றால் பலத்த சேதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொட வேண்டாம் என்று மின்சார வாரியமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை இலாகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தானே புயல்

சென்னை அருகே வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள தானே புயல் நாளை (இன்று) அதிகாலை கரையை கடக்க உள்ளது.

எனவே, தமிழ்நாட்டின் வடக்குப் பகுதி மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில், அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யும். சில இடங்களில் 25 செ.மீ அளவிற்கும் அதிகமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தை ஒட்டி உள்ள தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அந்த சமயத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

135 கி.மீ. வேகம்

புயல் கரையை கடப்பதால், இன்று (நேற்று) தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். திடீரென 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இரவு நேரத்தில், தமிழ்நாட்டின் வடக்கு பகுதி மற்றும் தெற்கு கடலோர ஆந்திரா பகுதியில், புயல் காற்று படிப்படியாக அதிகரித்து மணிக்கு 110-120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதிகபட்சமாக 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை (இன்று) காலையில், புயல் கரையைக் கடக்கும்போது, சென்னை நகரில் மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்றுடன் மழை பெய்யும்.

மீனவர்களுக்கு அறிவுரை

இந்த புயல் காரணமாக, தமிழகத்தின் வடக்குப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரங்களில் கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படும். புதுச்சேரி மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களின் தாழ்வான கடற்கரையோர பகுதிகளில் 1-1.5 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் கடல் அரிப்பும் ஏற்படலாம்.

புயல் கரையை கடப்பதால், தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர மாநிலத்தின் கடலோர பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.

மேலும், இந்த புயல் காரணமாக, தமிழகத்தின் வடக்கு மற்றும் ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரையோர பகுதிகளில் குடிசைகள் மற்றும் கூரைகளில் வசித்து வரும் மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பு

புயல் காற்று மற்றும் மழையால் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பயிர்களை காப்பாற்றுவதற்காக, விவசாயிகள் அனைவரும் தங்களுடைய வயல் நிலங்களில் உபரியாக தேங்கி உள்ள நீர் அனைத்தையும் வெளியேற்றி விடுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

அதேபோன்று, வாழை விவசாயிகள் அனைவரும், தேவையற்று உள்ள இலைகளை வெட்டி விடுமாறும், வாழைக்கு உதவியாக தேவையான தாங்கல்களை கொடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கலெக்டர்களுக்கு தகவல்

இதேபோன்று, புயல் காரணமாக, மரக்கிளைகள் விழுந்து, மின் கம்பிகள், தொலைத் தொடர்பு வயர்கள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், மின் சப்ளை மற்றும் தொலைத் தொடர்புகளில் சிறு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் யாரும் தங்களுடைய வாகனங்களை மரங்களின் கீழே நிறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்படும் ஆபத்து இருப்பதால் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்ளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாரியம் வேண்டுகோள்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (மின்வாரியம்) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

`தானே' என்று பெயரிடப்பட்டுள்ள கடும் புயல் பற்றிய அறிக்கை வந்துள்ளதால் இது சம்பந்தமாக பொது மக்களுக்கு ஓர் முக்கிய வேண்டுகோள்:

மின் விபத்தை தவிர்க்க அறுந்து கிடக்கும் மின் கம்பிகளையும் மற்றும் மின்சார புதை வடங்களையும் தொடவோ அல்லது அப்புறப்படுத்தவோ முயல வேண்டாம்.

உடனே தகவல் தரவும்

வீட்டிலுள்ள மின் தளவாடங்களை ஈரமான பொருட்களை பயன்படுத்தி கையாள வேண்டாம். டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் விநியோகப் பெட்டிகள், மின் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் பிற மின் சாதனங்கள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்கவும்.

வீட்டில் உள்ள மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உடனே வீட்டிலுள்ள மெயின் சுவிட்சினை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு உடனடியாக அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கவும். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by சிவா Fri Dec 30, 2011 1:05 pm


திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் தயார் நிலையில் 3 ஆயிரம் போலீசார்



புயல் இன்று கரையை கடப்பதால், மீட்பு பணிக்காக கடலூருக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு வந்துள்ளது.

கடலூரில் ஐ.ஜி. முகாம்


வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள புயல் சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் கரையை கடக்கிறதால் கடலூர் மாவட்டத்துக்கு புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி கடலூரில் முகாமிட்டுள்ள வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

மீட்பு பணிக்கு 4,500 போலீசார்

`தானே' புயல் நாளை(அதாவது இன்று) காலையில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு மண்டலத்தில் மீட்புப்பணிக்காக 4500 போலீசார் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் முதல் ரெட்டிச்சாவடி வரை 1000 போலீசார் மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பேரிடர் மேலாண்மை மீட்பு பணி பயிற்சி பெற்ற 154 போலீசாரும், நீச்சல் வீரர்களும் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு


மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் 64 பேரும் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் 32 பேர் கடலூரிலும், மற்ற 32 பேர் சிதம்பரத்திலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் போலீசாரும், இளைஞர்களும் மீட்புப்பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

படகுகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,500 போலீசார் தயார் நிலையில் உள்ளனர். மகாபலிபுரத்தில் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் 1500 போலீசார் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் படகுகள், மரங்களை வெட்டுவதற்கான இயந்திரங்கள் மற்றும் மீட்பு பணிக்கான உபகரணங்கள் உள்ளன. ஆகவே புயல் தாக்கினால் மீட்பு பணியில் காவல்துறை முழுவீச்சில் ஈடுபடுத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை.

இவ்வாறு ஐ.ஜி.சைலேந்திரபாபு கூறினார்.


"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு  Empty Re: "தானே' புயல் கரையை கடந்தது:ஓடுகள் பறந்தன; மரங்கள் முறிந்தன; தொலைதொடர்பு துண்டிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் பெய்ட்டி புயல் கரையை கடந்தது; ஒடிசா, மே. வங்காளத்தில் மழை
» பைலின்' புயல் கரையை கடந்தது, கோரப்புயல் விடிய விடிய ருத்ரதாண்டவம்
» நள்ளிரவில் மாருதா புயல் கரையை கடக்கும்
» நீலம் புயல் குறித்த செய்திகள், படங்கள், கருத்துக்கள்!
» இன்று கரையை கடக்கிறது சூப்பர் புயல்'அம்பான்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum