ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:09 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:55 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:39 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 2:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி

Go down

சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி Empty சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி

Post by ராஜா Tue Dec 27, 2011 8:46 pm

சுவிட்சர்லாந்துக்கு வரக்கூடாது என்று "எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது'' நடிகை சங்கீதா-பாடகர் கிரிஷ் பேட்டி
சென்னை, டிச.27-
"சுவிட்சர்லாந்தில் நடைபெறும் புத்தாண்டு விழாவுக்கு வரக்கூடாது'' என்று கொலை மிரட்டல் வருவதாக நடிகை சங்கீதாவும், அவருடைய கணவர் கிரிசும் கூறினார்கள்.

சுவிட்சர்லாந்து விழா
சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் அமைப்பு நடத்தும் புத்தாண்டு விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பாடகருமான கிரிஷ் ஆகிய மூன்று பேரும் கலந்துகொள்வதாக இருந்தார்கள். விடுதலைப்புலிகளின் எதிர்பாளரான கருணா கோஷ்டியினர் இந்த விழாவை நடத்துவதாகவும், எனவே அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் திடீர் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் ஜீவா அந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தமிழர்கள் மனம் புண்படுகிற மாதிரி எந்த நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி, சுவிட்சர்லாந்து பயணத்தை அவர் ரத்து செய்து விட்டார்.

சங்கீதா பேட்டி

இந்த நிலையில், நடிகை சங்கீதாவும், அவருடைய கணவர் பாடகர் கிரிசும் சென்னையில் நேற்று மாலை பேட்டி அளித்தார்கள். அப்போது சங்கீதா கூறியதாவது:-
"நான் தமிழ்ப்பெண். இங்கேயே பிறந்து வளர்ந்தவள். தப்பான நிகழ்ச்சிக்கு போக மாட்டேன். நான், நேர்மையான பெண். பணத்துக்கு ஆசைப்பாட்டு சுவிட்சர்லாந்துக்கு போகவில்லை. கடந்த வருடம் இதே அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். நிகழ்ச்சியை நடத்தியவர்கள், எங்களிடம் மிகவும் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அதற்காகவே பணம் வாங்காமல் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல சம்மதித்தோம்.

கொலை மிரட்டல்
அவர்களுக்குள் உள்ள போட்டி காரணமாக, யாரோ சிலர் எங்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. இந்த மிரட்டல் பற்றி நான் போலீஸ் கமிஷனரிடம் பேசினேன். `உங்கள் தொழில் தொடர்பாக செல்வதை யாரும் தடுக்க முடியாது' என்று அவர் கூறினார். நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடமும் கூறினேன். `நீங்கள் இலங்கைக்கு செல்லவில்லை. சுவிட்சர்லாந்துக்குத்தானே செல்கிறீர்கள். அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது' என்றார்.

சுவிட்சர்லாந்து நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அங்குள்ள கமிஷனர் கலந்து கொள்கிறார். அதனால் எங்களுக்கு சிறந்த முறையில் பாதுகாப்பு கிடைக்கும். எனவே 31-ந் தேதி அன்று இரவு இங்கிருந்து நாங்கள் சுவிட்சர்லாந்துக்கு புறப்பட இருக்கிறோம்.''
இவ்வாறு சங்கீதா கூறினார்.

கிரிஷ் பேட்டி

சங்கீதாவின் கணவர் பாடகர் கிரிஷ் கூறியதாவது:-

"இலங்கையில் நடந்த போருக்குப்பின், தலைவர் இல்லாததால் தமிழ் அமைப்புகள் இரண்டு மூன்றாக பிரிந்து கிடக்கிறது. அவர்களுக்குள் நடக்கும் சண்டையில், எங்களை பிரச்சினைக்குள்ளாக்குவது எந்தவிதத்தில் நியாயம்? இது, எல்.கே.ஜி. குழந்தைகளுக்கு இடையே நடைபெறும் சண்டை போல் உள்ளது.

இதனால் எங்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எங்களை நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பவர், தமிழர்களுக்கு எதிரானவர் என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். எனக்கு பாட மட்டுமே தெரியும். அரசியல் தெரியாது.''

மேற்கண்டவாறு கிரிஷ் கூறினார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சங்கீதா - கிரிஷ் துக்கடாக்களின் திமிர் பேட்டி ( வீடியோ )
» ரத்த வங்கியில் மோசடி செய்த சிரஞ்சீவி - தட்டிக்கேட்ட நடிகை ஜீவிதா மீது கொலை மிரட்டல்
» முதல்வர் கருணாநிதிக்கு 2வது கொலை மிரட்டல்
» முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல்
» ஜெ.வைத் தொடர்ந்து கருணாநிதிக்கும் கொலை மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum