ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

+2
கே. பாலா
முஹைதீன்
6 posters

Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by முஹைதீன் Sat Dec 24, 2011 10:01 pm


கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.






கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Merry-Christmas-Pictures

Video-Batcha
உலகில்
இன்றைக்கு " கிறிஸ்துமஸ் " பெருவிழாவைக் கொண்டாடுகிறவர்கள் "கிறிஸ்மஸ்
மரம்" இல்லாமல் கொண்டாடுவதில்லை என்கிற அளவுக்கு ஒரு முக்கியத்துவம்
பெற்றுவிட்டதை நாமறிவோம். கிறிஸ்தவர்களிடையே எப்படி யிந்தப் பழக்கம்
உருவானது? அந்தப் பழக்கம் எப்போதிருந்து வழக்கமானது? நல்லதோ கெட்டதோ நமது
அப்பம்மாக்களுக்கு அவர்களது அப்பப்பாக்கள், அம்மம்மாக்கள் வழிவழியாக
விட்டுச்சென்ற பழக்கத்தை கெட்டியாகபிடித்துக் கொள்கிறோம். கால
மாற்றத்திற்கு ஏற்ப சிறுசிறு மாற்றங்களோடு அத்தகைய நினைவுகளைப்
புதுப்பித்துக் கொள்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும்
இதன்பாற்பட்டதுதானோ!

நதிமூலம்
வரலாறுகளில்
நாம் பின்னோக்கி வழுக்கியபோது, சிக்கிய தடயங்களை, இயந்திரகதியாய்
இயங்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்குச் சொல்லி வைக்கலாமே என்ற எண்ணம்
எழுந்ததன் விளைவுதான் இங்கே.. இந்தக் " கிறிஸ்மஸ் மரம் " முளைவிடக்
காரணமாகிப் போனது.

"கிறிஸ்மஸ்
மரம்" ஐரோப்பிய நாடுகளிலிருந்து வேர்விட்டு முளைத்துத் தழைத்துச் செழித்து
இன்று உலகெங்கும் விருட்சமாக படர்ந்துள்ளது. நதிமூலம் பார்க்கிறபோது நம்மை
11ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு இட்டுச் செல்கிறது. மக்கள் மனம் மகிழ
கனிவகைகளை, எதிர்பார்ப்பின்றி அள்ளித் தருகிற மரங்களுக்கு நன்றிகூறும்
நற்பண்பில் ரோமானியர்களும் இங்கிலாந்தினரும் திளைத்திருந்திருக்கின்றனர்.
கிறிஸ்து பிறந்த மாதமான டிசம்பர் மாத முதல் வாரத்தில் மரங்களை சிவப்பு
ஆப்பிள்களால் அலங்கரித்து ஆராதித்திருக்கின்றனர்.

15ம்
நூற்றாண்டில்தான் வீடுகளில் மரங்களை வைத்து மகிழ்ந்து
கொண்டாடியிருக்கின்றனர். ஆதாம் - ஏவாள் தினமாக டிசம்பர் 24ம் தேதியைக்
நிர்ணயித்து, மனிதப்புனித சந்ததி உருவாக காரணமாயிருந்த "கனி" மரத்தினை
வீடுகளில் வைத்தனர். மரங்களை குட்டை, குட்டையாக வெட்டி எடுத்து வீடுகளில்
வைத்து அலங்கரித்து ஆனந்தப்பட்டிருக்கின்றனர்.

முதல் மரம்
"கிழக்கு
பிரான்சு நாட்டில் மேற்கு ஜெர்மனியின் எல்லைக்கோட்டை ஒட்டி அமைந்துள்ள
அல்சாஸில் (Alsace ) முதல் "கிறிஸ்மஸ் மரம்" வீட்டில்
வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் பிரான்சு தேசம் முழுவதும் வீடுகளில்
வைக்கும் பழக்கம் ஏற்பட தொடர்ந்து ஜெர்மனி, ரோம், நார்வே, ஸ்திரியா என
வழக்கம் பல விழுதுகளாய் கால் பரப்பியிருக்கிறது.

பிரிட்டிஷ்
இளவரசர் ஆல்பர்ட், விண்ட்ஸர் கோட்டையில் 1841ம் ண்டு டிசம்பர் மாதம்
கிறிஸ்மஸ் மரத்தை வைத்து நாட்டு மக்களுக்கு கிறிஸ்மஸ் செய்தி விடுத்தார்.
அந்தக் கிறிஸ்மஸ் மரம் நார்வே நாட்டு மக்களின் அன்புப் பரிசாக
அளிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் கைகொடுத்து உதவியதற்கு
தங்கள் நன்றியை வெளிப்படுத்தும் முகமாக இந்த மரத்தை அளித்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து முழுவதும் வீடுகளில் கிறிஸ்மஸுக்கு கிறிஸ்மஸ்
மரங்களை வீட்டில் வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

அறுவடைத் திருநாள்
இங்கிலாந்தில்
பாகான் என்ற யினத்தவர்கள் மதச் சடங்குகளில் மரங்கள் வைப்பதை வழக்கமாகக்
கொண்டு வந்திருக்கின்றனர். எப்படி தமிழகத்தில், சடங்கோ, திருமணமோ, கோவில்
திருவிழாக்களோ வாழை மரம்முக்கிய பங்கு வகிக்கிறதோ அதுபோல இங்கிலாந்திலும்
யிடம் பெற்றே வந்திருக்கிறது. ட்ரூயிட்ஸ்(Druids) என்பார் (விவசாயத்தையே
தொழிலாகக் கொண்டவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.) ஓக்
மரங்களைஅலங்கரித்து பழங்களை தொங்கவிட்டு சிறு மெழுகுவர்த்தி விளக்குகளை
மரக் கிளைகளில் தொங்கவிட்டும் தங்கள்
அறுவடைத் திருநாளைச் சிறப்பித்திருக்கின்றனர்.

ரோமானியர்கள்,
சேட்டர்நலியா என்ற கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னரே வரும் விழாநாளிலேயே
மரங்களை அலங்கரித்து மரத்தைச் சுற்றி பரிசுப் பொருட்கள் இனிப்பு வகைகளை
வைத்து கொண்டாடும் பழக்கத்தை உடையவர்களாய் இருந்திருக்கின்றனர்.

11ம்
நூற்றாண்டில் வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பியவில் வசித்த வைக்கிங்
இனத்தவர்கள், பனிக்காலமானாலும் வெய்யில் காலமானாலும் என்றும் தன் பசுமைப்
புன்னகை மாறாத பைன், ஸ்புரூஸ், சைப்ரஸ், யீ அல்லது ·பர் போன்ற மரங்கள்,
துயர் மிகுந்த இருண்ட பனிக்காலம் மறைந்து மீண்டும் வசந்தத்தை வருவிக்கும்
உன்னத மரங்கள் என நம்பினர்.

உயிர்த்தெழுந்தது
அது
சரி. மரம் எப்படி கிறிஸ்மஸ் விழாவின் பிரிக்கமுடியாத அங்கமானது? அதைக்
கடைசிவரை சொல்லாமல் சஸ்பென்ஸா கொண்டு போறேனேன்னு பாக்குறீங்களா? இதோ உங்கள்
ஆவல் பூர்த்தியாகும் நேரம் வந்துவிட்டது!

ஜெர்மானிய
கத்தோலிக்க கிறிஸ்தவ போதகரான புனிதர் St.போனி·பேஸ் (St.Boniface)
என்பார்தான் இதற்கு மூல காரணமாகக் கருதப்படுகிறார். ஜெர்மானிய பாகான்
இனத்தவர்கள் தங்கள் தேவைகளுக்காக 'ஓக்' மரங்களை வெட்டி அழித்து வந்தனர்.
மின்சாரம் இல்லாத அந்நாட்களில் குளிரை விரட்ட 'ஓக்' உருட்டுக் கட்டைகள்தான்
வீட்டு "Fire Place"ல் பயன்படுத்திவந்தனர். குடும்பங்களை வெதுவெதுப்பாக,
கதகதப்பாக வைத்திருப்பதில் மையப் பொருளாக 'ஓக்' திகழ்ந்தது.

இப்படியே
மரங்கள் வெட்டி அழிக்கப்படுமானால் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின்
முகவரியே தெரியாமல் போய்விடும். எனவே ஒரு 'ஓக்' மரம் வெட்டப்பட்டால் அந்த
இடத்தில் மூன்றாம் நாளே ஒரு மரக் கன்று துளிர் விட வேண்டும். எப்படி,
மரித்த மூன்றாம் நாள் கிறிஸ்து உயிர்த்து எழுந்தாரோ அதைப் பிரதிபலிக்க
வேண்டும், என்று புனிதர் போனி·பேஸ் வேண்டுகோள் விடுத்தார். இதன் பிறகு
ஜெர்மானியர்கள் ஒரு 'ஓக்' மரம் வெட்டினால் ஒரு 'ஓக்' மரம் அல்லது ஒரு
'·பிர்' மரத்தை நட்டு உயிர்ப்பித்தனர். கிறிஸ்துவின் நினைவாக இதனைச்
செய்யத் தலைப்பட்ட ஜெர்மானிய பாகான் இனத்தவர்கள், கிறிஸ்து பிறக்கிற
மாதங்களில் தங்கள் இல்லங்களில் 'ஓக்' மரங்களையோ '·பிர்' மரங்களையோ
அலங்கரித்து வைப்பதை வழக்கமாகக் கொள்ளத் துவங்கினர்.

இந்தப்
பழக்கம் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளில் பரவியதோடு ஜெர்மானியர்கள்
அமெரிக்காவில் குடியேறியபோதுஅமெரிக்காவிலும் பரவி, அன்றும், இன்றும்,
என்றும் என கிறிஸ்மஸ்ஸும் கிறிஸ்மஸ் மரமும் பிரிக்க இயலாத அளவுக்கு
ஆகிவிட்டது.

மார்ட்டின் லூத்தர்
இன்னொரு
ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் ஒன்றும் உள்ளது. கிறிஸ்தவ மதத்தின்
கோட்பாடுகளில் முரண்பட்டுப்புரட்சி செய்து புரட்டெஸ்ட்டண்ட்டிஸத்தை நிறுவிய
தளகர்த்தரான மார்ட்டின் லூத்தர் இவ்வழக்கத்திற்கு காரணவாதி என்பாரும்
உண்டு.

மரங்களடர்ந்த
காட்டுப்பகுதியில் ஒரு இரவு மார்ட்டின் லூத்தர் நடந்து
போய்க்கொண்டிருந்தார். அந்தக் காட்டு வெளியிடையில் கண்ட காட்சி அவரை மெய்
மறக்கச் செய்தது. அந்த அற்புத வனத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு வானத்து
நட்சத்திரங்கள் இடம் பெயர்ந்து மரக்கிளைகளில் வந்தமர்ந்தது போன்ற ரம்மியமான
காட்சியைக் கண்டார்.

தென்றல்
காற்றின் தாலாட்டலில் அசைந்தாடும் இலைகளை ஊடுருவி மின்மினிப்
பூச்சிகளைப்போல் சஞ்சரிக்கிற நட்சத்திரங்கள் தருகிற உணர்வில் சொக்கிப்
போனாராம் மார்ட்டின் லூத்தர். சோகங்களைக்கூடச் சோரம் போக வைத்து,
சிந்தனையில் தெளிவினைச் சேர்க்கும் சக்தி பீரிட்டெழுவதை மன வானில் கண்ட
மார்ட்டின் லூத்தர் மனதிற்குள் ஒரு யோசனையும் பூத்தது.

வானத்து
நட்சத்திரங்கள் வனத்துக்கு மட்டுமா சொந்தம்? என்வீட்டுக்கும் சொந்தமே
என்கிற அவரின் நினைவுகள் நிச்சயித்தது ஒன்றை; என்றும் பசுமையான ஒரு சிறிய
மரத்தை அவரே வெட்டினார். வீட்டிற்கு எடுத்துச் சென்றார். காட்டில் கண்டதை
வீட்டில் பார்க்க ஆசை; அவருடைய கரங்கள் அந்த மரத்துக்கு அழகுசேர்த்தது.

ஒளியுமிழும்
மெழுகுவர்த்தி விளக்குகள் கொண்டு அதன் கிளைகளுக்கு வெளிச்ச உயிர்
கொடுத்தார். வனம் போன்ற வனப்பு அங்கே மிளிர்ந்தது. அந்த இனிய நாள்
"கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் இல்லங்கள் எல்லாம் முகிழ்த்திருந்த நன்னாள்!
அடுத்தடுத்த "கிறிஸ்மஸ்" கொண்டாட்டங்களில் "X'MAS TREE" விதவிதமான
அலங்கரிப்புகளோடு முக்கியத்துவம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

நன்றி..
கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. TOLOGO-Christmas
http://www.tamiloviam.com/unicode/12220509.asp


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by கே. பாலா Sat Dec 24, 2011 10:09 pm

அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by சார்லஸ் mc Sun Dec 25, 2011 12:23 am

மரத்தைப்பற்றி இவ்வளவு தொிந்து வைத்திருக்கும் மக்கள் கிறிஸ்து இயேசுவைக்குறித்து, அவரது பிறப்பின் நோக்கம், அவா் மரணத்தின் காரணம், அவரது உயிா்த்தெழுதலின் வல்லமை, அவரது உபதேசங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சித்தால் ... இந்த கிறிஸ்துமஸ் நாளில் மிக் பொிய ஆசீா்வாதத்தை அது கொண்டு வரும் என்பதில் துளியளவு கூட சந்தேகமில்லை.


கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by அசுரன் Sun Dec 25, 2011 12:50 am

சார்லஸ் mc wrote:மரத்தைப்பற்றி இவ்வளவு தொிந்து வைத்திருக்கும் மக்கள் கிறிஸ்து இயேசுவைக்குறித்து, அவரது பிறப்பின் நோக்கம், அவா் மரணத்தின் காரணம், அவரது உயிா்த்தெழுதலின் வல்லமை, அவரது உபதேசங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முயற்சித்தால் ... இந்த கிறிஸ்துமஸ் நாளில் மிக் பொிய ஆசீா்வாதத்தை அது கொண்டு வரும் என்பதில் துளியளவு கூட சந்தேகமில்லை.
சரியாய் சொன்னீங்க சார்லஸ்... சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by ராஜா Sun Dec 25, 2011 2:13 pm

பகிர்வுக்கு நன்றி கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by kitcha Sun Dec 25, 2011 4:10 pm

பகிர்ந்தமைக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை. Empty Re: கிறிஸ்மஸ் மரம்பற்றிய ஒரு பார்வை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum