ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!!

2 posters

Go down

நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! Empty நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!!

Post by முஹைதீன் Tue Dec 20, 2011 9:39 pm

குட் டச், பேட் டச்” ன்னு சொல்றதைக் கேட்டிருப்பீங்க. நல்ல தொடு தல், மோசமான தொடுதல். பொ துவா எல்லோருக்குமே தெரிஞ் ச விஷயம் தான் இது. ஆனா லும் இன்னிக்கும் பல்லாயிரம் பேர் இத னால் பாதிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார் கள்.

சுருக்கமா இதைச் சொல்லணு ம்ன்னா, நல்ல தொடுதல் ஒரு அம்மாவோட அரவணைப்பைப் போல அன்பானது. எந்தவிதமான கள்ளம் கபடம் இல்லாத தூய்மையான நேசம் உடை யது. குறைந்த பட்சம் எந்த தப்பான சிந்தனையும் இல்லாத தொடுதல் நல்ல தொடுதல்.

மோசமான தொடுதல்ங்கறது தலை கீழ். தப்பான சிந்தனையோட தொடறது. குறிப்பா பெண் குழந்தைக ளைக் கொஞ்சுவது போலவோ, விளை யாடுவது போலவோ பாவனை காட்டி உள்ளுக்குள் வக்கிரமாய் தொடுவது என சொல்லலாம். இதைத் தவிர குழ ந்தைகளை அடிக்கிறது, உதைக்கிறது, அவர்களைக் காயப்படுத்தறது என நல் ல தொடுதல் இல்லாத எல்லாமே மோச மான தொடுதல்களில் வரும் விஷயங் கள் தான்.

தப்பான தொடுதலில் மிக முக்கியமா னது பாலியல் ரீதியிலான தொடுதல். இந்தியா மாதிரி கூட்டுக் குடும்பங்கள் கலாச்சாரம் இருக்கிற இடங் களில் இது ரொம்பவே அதிகம். மாமா, மச்சான் ன்னு புடை சூழ வீடு நிரம்பியிருக்கும்போ பல தப்பான விஷ யங்களும் நடந்து விடுகிறது. தப்பான தொடுதலுக்கு ஆளா ன குழந்தைகள் இதை பெரும்பா லும் வெளியே சொல்வதில்லை ங்கறது தான் கவலைக்குரிய முத ல் விஷயம். சுமார் 72.1 சத வீதம் குழந்தைகள் இதைப் பற் றி யார் கிட்டேயும் சொல்வதே இல்லையாம்! இது இந்தியாவி ல் அரசு சார்பாக நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவரம் சொல்லும் சேதி !!

90சதவீதம் தொந்தரவுகளும் குழந்தைக்குத்தெரிந்த நபர்களால் தான் வருதுங்கறது தான் ரொம்பவே அதிர்ச்சியூட்டும் செய்தி. இந்த பேட் டச் விஷயத்தை பெற்றோர்கள் அறிந்து கொள்வதும், அதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதும் ரொம்ப ரொம்ப முக்கிய மான தேவைகள். ஒரு குழந்தை மூன்று வயதாக இருக்கும் போதே பெற்றோர் இந்த எச்சரிக்கையையும், வழிகாட்டுதலையும் குழந்தை களுக்கு வழங்கலாம் என்பது உளவியலார் கருத்து ! எனவே பிள்ளை வளரட்டும்ன்னு காத்திருக்காதீங்க.

குழந்தைங்களை ஒரு பாதுகாப்பான சூழலில் வளர் த்துவதும். எது நல்லது, எது கெட்டதுங்கற புரிதலை குழந்தைகளுக்குச் சொல்வதும் இன்றையதேதியில் ரொம்ப முக்கி யமான விஷயங்கள்.

இதொண்ணும் நிலாவுக்கு ராக்கெட் விடறமாதிரி கஷ்டமான விஷ யம் கிடையாது. சிம்பிள் தான். நான் சொல்லப் போற தகவல்களை மனசுல வெச்சுருந்தீங்கன்னா போதும் !

1. குழந்தை ஸ்கூல் போயிட்டு வந்தாலோ, வெளியே யார் வீட்டு க்காவது போய் வந்தாலோ அங்கே நடந்த எல்லா விஷயங்களை யும் கேளுங்க. கள்ளம் கபடமில்லாமல் பிள்ளைங்க சொல்ற விஷய ங்களை வெச்சே நீங்க விஷயத் தைப் புரிஞ்சுக்க முடியும். ஒரு வேளை ஏதாச்சும் தப்பு நடந்தி ருக்குன்னு தெரிஞ்சா கூட பதட் டப்பட்டு குழந்தைகளைப் பய ப்படுத்தாதீங்க. முழுசா கேளுங் க.

2. “நோ” ன்னு சொல்ல குழந்தை யைப் பழக்கணும். குழந்தைகிட் டே குழந்தையோட உடம்பு குழ ந்தைக்கு மட்டுமே சொந்தமானதுங்கற உண்மையை சொல்லுங்க. யாராச்சும் தப்பா தொட முயற்சி பண்ணி னா “நோ” ன்னு அழுத்தமா, சத்தமா சொல்லப் பழக்குங்க.

3. குழந்தையை தன்னம்பிக்கை உடைய குழந்தையா வளர்க்க வே ண்டியது அவசியம். அப்பா அம்மா அதுக்கு முன் மாதிரிகையா இரு க்கணும். குழந்தைங்க கூட ரொம்ப நேரம் செலவிடுங்க. அவங்களுக்கு ஒரு பாதுகா ப்பு உணர்வு வரவேண்டியது அவசியம்.

4. அம்மாவுக்கும் குழந்தைக் கும் இடையே நல்ல உரையா டல் பழக்கம் வேணும். அன் பான, விரிவான, அமைதியா ன உரையாடல் ரொம் ப முக்கியம். தினமும் குழந்தை கூட பேசுங்க. “அம்மா கிட்டே எதுன்னாலும் நம்பிக்கையா சொல்லலாம்” ங்கற நிலமை தான் இரு க்கணும். அதுதான் அடிப்ப டை. இல்லே ன்னா, குழந்தை உங்க கிட்டே விஷ யத்தை மறைக்கவும் வாய்ப்பு உண்டு.

5. குழந்தை என்ன சொல்லு தோ அதை ரொம்பக் கவனமா கேளு ங்க. எந்த குழந்தையும் கற்பனையா ஒரு பாலியல் தப்பை உருவாக்கிச் சொல் லாது. பொதுவா தெரிந்த நபர்கள் விளை யாட்டுங்கற போர்வைல தான் இதைச் செய்வாங்க. அதைக் கவன த்துல வெச் சுக்கோங்க. குழந்தைகளை முழுக்க முழுக்க நீங்க நம்ப வேண் டியது ரொம்ப முக்கியம்.

6. “எனக்கு அந்த மாமாவைப் புடிக் காது” ன்னு ஒரு குழந்தை சொன் னா உள்மனசுல ஒரு சின்ன மணி அடிக் கட்டும். ஒருவேளை ஏதேனும் சில் மிஷம் நடந்திருக்கலாம். குழந்தை யை வற்புறுத்தாதீங்க. யாராச்சும் குழந்தை கூட பழகற விதத்துல சந் தேகம் தெரிஞ்சா அந்த நபரை முழு மையா தவிர்க்க வேண்டியது ரொம் ப ரொம்ப முக்கியம்.

7. நீங்க இல்லாதப்போ குழந்தையை ஒரு மூணாவது நபர் கிட்டே ரொம்ப நேரம் விட்டுட்டு போகாதீங்க. உங்களுக்கு சந்தேகமே வரா த இடத்துல கூட குரூரமான மனசு ஒளிஞ்சிருக்கலாம்.

8. “அம்மா கிட்டே சொல்லாதே” ன்னு யா ராச்சும் ஏதாச்சும் சொன் னாங்களான்னு கேளுங்க. பிள்ளைங்க கள்ளம் கபடமில் லாதவங்க. நீங்க கேட்டா சொல்லிடுவாங் க. நிறைய தப்புகள் இந்த வாக்குறுதிக்குப் பின்னால இருக்க வாய்ப்பு உண்டு.

9. அதே மாதிரி “அம்மா கிட்டே சொல்லு வேன், அப்பா கிட்டே சொல் லுவேன்” ன்னு யாராச்சு மிரட்டினாங்களான்னும் கேளுங் க. இப்படி ப்பட்ட பிளாக் மெயில் தொந்தரவு ரொம்ப ஆபத்தானது ! தொடர்ச்சியான பாலியல் தொந்தரவுகளுக்கு இது காரணமாகி விடும்.

10. யாராச்சும் சாக்லேட் குடுத்தா ங்களா ? கிஃப்ட் குடுத்தாங்களா ? ஏதாச்சும் வாங்கித் தரேன்னு சொன்னாங்களான்னு கேளுங் க. இதெல்லாம் மோசமான தொ டுதலுக்கான முன்னுரைகளாய் இருக்க லாம். இந்த விஷயத்துல மட்டும் படிச்சவங்க, படிக்காதவ ங்க, ஏழைங்க, பணக்காரங் கன்னு வித்தியாசமே கிடையாது . இது உங்க மனசுல இருக்க வே ண்டியது அவசியம்.

11. குழந்தை கிட்டே பதட்டமோ, சோகமோ, கவலையோ இருந்தா அமைதியா உக்காந்து என்ன விஷயம் ன்னு கேளுங்க. குழந்தையோட உடம் புல ஏதாச்சும் காயம், அடையாளம் ஏதா ச்சும் இருக்கான்னும் பாருங்க. வித்தியா சமா ஏதாச்சும் தெரிஞ்சா உஷாராயிடு ங்க.

12. இப்படி ஏதாச்சும் தப்பு நடந்தா, தப்பான விஷயத்தை யாராச்சும் பண்ண முயற்சி பண்ணினா, யார் கிட்டே தகவல் சொல்ல ணும்ங்கற விஷயத்தை குழந்தை கிட்டே சொல்லிடுங்க. முக்கியமான போன் நம் பர்களை குழந்தைகிட்டே எழுதிக் குடு த்திருங்க.

13. குழந்தைங்க தப்பு செய்தா உடனே எகிறிக் குதிச்சு களேபரம் பண் ணாதீங்க. அதுக்காக தப்பை கண்டிக்காதீங்கன்னு சொல்ல வரலை ! தப்பு பண்றது சகஜம், ஆனா அதை திரும்ப பண்ணக் கூடா துங்கறதை சொல்லிப் புரியவை யுங்க. தப்பு பண்ணினா கூட அதை உங்க கிட்டே சொல்ற அளவுக்கு குழந்தைகளை பழக் குங்க.

14. திரையரங்கு, பேருந்து, பள் ளிக்கூடம், பூங்கா போன்ற இட ங்கள்ல எப்படி நடந்துக்கணும் ங்கறதை அவங்களுக்கு சொல்லிக் குடுங்க. எப்படியெல்லாம் எச்ச ரிக்கையா இருக்கணுங்கறதை அவங்களுக்கு அமைதியா சொல்லி க் குடுங்க. அதுக்காக அவங்களை ஒரேயடியா பயமுறுத்தி வைக் காதீங்க.

15. திடீர்ன்னு யாராச்சும் சொந்த க்காரங்க குழந்தை கிட்டே ரொ ம்ப பாசமா இருந்தா கவனிங்க. கடைக்குக் கூட்டிட்டு போறேன், சினிமாக்கு கூட்டிட்டு போறே ன்னு சொன்னா மறுத்துடுங்க. இந்த தொந்த ரவு தருபவர்களில் எல்லா வயசு மனிதர்களும் உண் டு. பதின் வயது விடலைகள் முத ல், நரை விழுந்த கிழடுகள் வரை. எனவே விழிப்பு அவசியம்.

16. ஆபாசப் புத்தகம், படம் இப்படியெல்லாம் யாராச்சும் காட்டினா வீட்ல சொல்லச் சொல்லுங்க. குழந்தைங்களை தப்பான சிந்தனைக் குள்ள கொண்டுபோய் அவங்களை பயமுறு த்தி பாலியல் பிரச்சினை செய்றவங்க ஏரா ளம்.

17. யாராச்சும் குழந்தையை போட்டோ எடுக்க வந்தால் “வேண் டாம்”ன்னு சொல்லப் பழக்கு ங்க. குழந்தைகளை மோசமா படம் எடுக் கவும் இது வழி வகுக்கும்.

18. அதேபோல குழந்தைங்க கிட்டே ஒரு தடவை இதைப் பற்றி சொ ல்லிட்டேன்னு விட்டுடாதீங்க. அடிக்கடி கேட்டுட்டே இருங்க. குழந் தைங்களை மத்தவங்க சீக்கி ரம் ஏமாத்திட முடியும் !

19. கிராமத்து அம்மாக்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. இந்த மாதிரி பேட் டச் சமாச்சாரங்க ளெல்லாம் நகரத்துல மட்டும் தான்னு ! ஆனா அது ரொம்ப தப் பான அபிப்பிராயம். இந்த விஷ யத்துல எல்லா இட த்துலயும் சிக்கல் உண்டு. அதுவும் சம அளவில் !

20. தப்பு நடந்தது தெரிஞ்சா அதை லேசா எடுத்துக்காதீங்க. “அவரு தெரியாம பண்ணியிருப்பாரு. இனிமே பண்ண மாட்டாரு” ன்னு நீங் களா தீர்ப்பு எழுதாதீங்க. இந்த மாதிரி சிந்தனை உள்ளவங்க சினிமா வோட கிளைமேக்ஸ் மாதிரி சட்டுன்னு திரு ந்த மாட்டாங்க.

எது தப்பு எது சரின்னு தெரியாத மழலைப் பருவத்தில் இப்படிப்பட்ட எச்சரிக்கைகளை க் கொடுப்பது குழந்தைகள் பாதுகாப்பா இரு க்க வழி வகுக்கும். இன்னொரு முக்கியமா ன விஷயம். பாலியல் சிக்கல் பெண் குழ ந்தைகளுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் உண்டு. சுமார் 18 சதவீதம் ஆண் குழந்தை கள் இந்த சிக்கலை சந்திக்கிறாங்க என்கி றது ஒரு புள்ளி விவரம்.

ஒட்டு மொத்த சமூகமும் ஒரு நாளில் திரு ந்தி விடப் போவதில்லை. பெற்றோர் விழிப் பாய் இருப்பதும், குழந்தைகளை விழிப்பாய் இருக்கப் பழக்குவதுமே இந்தக் சிக்கலை எதிர்கொள்ளும் வழிக ளாகும்!

http://vidhai2virutcham.wordpress.com


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! Empty Re: நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!!

Post by சார்லஸ் mc Tue Dec 20, 2011 9:47 pm

நல்ல பயனுள்ள தகவல்.


நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550நல்ல தொடுதல், மோசமான தொடுதல் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க..!! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum