ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

5 posters

Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by கே. பாலா Mon Dec 19, 2011 7:42 pm

திமுகவிலும் சரி, ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தபோதும் பொறுமையாக இருந்த ஜெயலலிதா, சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கியதும், சீர்குலைவு நடவடிக்கைகளை முடுக்கி விட்டதாலும்தான் பொறுக்க முடியாமல் சசிகலா கும்பலை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக கூறப்படுகிறது.

1991ம் ஆண்டுக்கு முன்பு போக வேண்டும் ஜெயலலிதா, சசிகலா இடையிலான நட்பை அறிந்து கொள்ள. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்தபோது அவருக்கு சாதாரண முறையில்தான் அறிமுகமானார் சசிகலா.

ஆணாதிக்கம் மிக்க அரசியல் துறையில், உற்ற தோழியாக சசிகலா வந்ததாலும், தன்னைப் புரிந்து கொண்டு நடந்ததாலும் சசிகலாவை தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. சசிகலாவும், ஜெயலலிதாவின் மனதறிந்து அவருக்கு உற்ற தோழியாக நடந்து கொண்டார். இந்த நட்பு நாளுக்கு நாள் இறுகி இணை பிரியாத தோழிகளாக ஜெயலலிதாவும், சசிகலாவும் மாறிப் போயினர். நாளடைவில் ஜெயலலிதாவின் உதவியாளராக உருவெடுத்தார் சசிகலா. மேலும் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கும் அவர் மாறினார்.

1991ம் ஆண்டுதான் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலா ஒரு முக்கிய அதிகார மையமாக உருவெடுத்தார். 91 முதல் 96 வரை நடந்த முதலாவது ஜெயலலிதா ஆட்சியின்போது சசிகலாவைத் தாண்டித்தான் காற்றாக இருந்தாலும் கூட ஜெயலலிதாவை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

சர்வ வல்லமை படைத்த அதிகார மையமாக மாறிய சசிகலா படிப்படியாக தனது குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சிக்குள் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தனது கணவர் நடராஜனைக் கூட உதறித் தள்ளத் துணிந்தார். பல ஆண்டுகளாகி விட்டது சசிகலாவும் நடராஜனும் பிரிந்து (இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்திப்பதுண்டு என்ற தகவலும் உண்டு).

ஜெயலலிதாவின் வலது கரமாகவும், இடதுகரமாகவும் மாறிப் போனதால் சசிகலா வைத்ததே சட்டம் என்ற நிலை கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் உண்டாகி விட்டது.

சசிகலாவின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு அவரது அக்காள் மகன்களான சுதாகரன், திவாகரன், பாஸ்கரன் ஆகியோர் அதிமுகவில் தலை தூக்கினர். உறவினர்களான அக்காள் கணவர் விவேகானந்தன்,டாக்டர் வெங்கடேஷ், ராவணன் உள்ளிட்டோரும் அதிகார மையங்களாகினர்.

அதிமுகவில் ஏதாவது நடக்க வேண்டும் என்றால் இவர்களில் யாரையாவது ஒருவரைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு அதிமுகவினர் தள்ளப்பட்டனர். இந்த மன்னார்குடி வகையறாவின் ஆதிக்கத்தால், ஆளுமையால் பல மூத்த தலைவர்கள் கட்சியை விட்டு ஒதுங்கிச் சென்றனர், பலர் தூக்கியடிக்கப்பட்னர் – முத்துசாமி போல.

தற்போதைய கதைக்கு வருவோம். ஜெயலலிதாவின் 3வது ஆட்சி தொடங்கிய கடந்த 6 மாதங்களில் சசிகலாவின் ஆதிக்கமும், ஆட்டமும் கட்சிக்குள் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மேலும் ஆட்சியிலும் அவர் பெருமளவில் தலையிடுகிறார் என்ற புகார்களும் கிளம்பின.

தனக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளில் அமர்த்தினார் சசிகலா. அதேபோல அமைச்சர்கள் நியமனத்திலும் அவரது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. இடமாறுதல்கள் உள்ளிட்டவற்றிலும் பெரிய அளவில் விளையாடினார் சசி என்பது இன்னொரு குற்றச்சாட்டு.

இந்த குழப்பத்தால்தான் ஜெயலலிதாவின் இந்த ஆறு மாத கால ஆட்சியில் பல அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், துறைச் செயலாளர்கள், பல அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு ஆட்சிக்கும், கட்சிக்கும் பெரும் கெட்ட பெயர் ஏற்படுத்த காரணமாகி விட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக உளவுத்துறை ஐஜியாக இருந்து வந்த பொன் மாணிக்கவேல் நியமனமும், இடமாற்றமும் ஒரு முக்கிய உதாரணமாக கூறப்படுகிறது. இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர். இதனால்தான் அந்தப் பதவிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடுகள் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காததால் அதிரடியாக அந்தப் பதவியிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. இது சசிகலாவுக்கு முதல் ஷாக் என்கிறார்கள்.

உளவுத்துறை தகவல்களை தன்னிடம் நேரடியாக கொடுக்காமல் சசிகலாவிடம் போய் பொன் மாணிக்கவேல் தொடர்ந்து கொடுத்து வந்ததாகவும், இதனால்தான் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, பொன் மாணிக்கவேலை தூக்கினார் என்றும் கூறுகிறார்கள்.

அதேபோல நடராஜனுக்கு மிகவும் நெருக்கமானவரான ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தையும் அதிரடியாக, அவருக்குக் கொடுக்கப்பட்ட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து தூக்கி 2வது ஷாக்கைக் கொடுத்தார் ஜெயலலிதா.

இப்படி அடுத்தடுத்து சசிகலாவுக்கு ஆப்பு வைத்தார் ஜெயலலிதா. இதன் பிறகாவது அவர் ஆட்சியில் தலையிடுவதை நிறுத்துவார் என்பதுதான் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு.

ஆனால் ஜெயலலிதாவே எதிர்பாராத வகையில் சசிகலா தரப்பின் சதிச் செயல்கள் இருந்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தங்களுக்கு ஆதரவான அதிகாரிகளை வைத்து ஆட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவது, பின்னர் தங்களுக்குச் சாதகமாக எம்.எல்.ஏக்களை வளைத்து கட்சியைக் கைப்பற்றுவது என்ற திட்டமும் தீட்டப்பட்டதாக ரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் வழக்கம் போல ஜெயலலிதாவின் விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் போன்றவர்கள் பதவிக்கு வந்து விடாமல் தடுத்து நடராஜனை முதல்வராக்கும் மிகப் பெரிய திட்டமும் சசிகலா தரப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்திற்குப் போனதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்தே சசிகலாவை நீக்கும் அதிரடி முடிவுக்கு அவர் வந்ததாக கூறுகிறார்கள்.

இதை விட இன்னொரு முக்கிய விஷயம் உள்ளது. அது வரைமுறையே இல்லாமல் தாறுமாறாக பணம் பார்க்க ஆரம்பித்து விட்டார் சசிகலா என்பதுதான். சாதாரண பியூன் நியமனம் முதல் அரசுத் துறை ஊழியர்களின் பதவி உயர்வு, இடமாறுதல் என எல்லாவற்றிற்கும் மிகப் பெரிய அளவில் காசு வாங்க ஆரம்பித்து விட்டார்கள் என்பதே அது.

டெண்டர், நியமனம், இடமாறுதல், பதவி உயர்வு என எதுவாக இருந்தாலும் ஒரு ரேட்டை நியமித்து சசிகலா தரப்பு கறாராக வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதெல்லாம் சேர்ந்துதான் சசிகலாவை கட்சியை விட்டு தூக்கும் முடிவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்றதாக பேசுகிறார்கள்.

நந்தி போல சசிகலா உட்கார்ந்து கொண்டு இருந்ததால் ஜெயலலிதாவின் நிழலைக் கூட அணுக முடியாமல் இருந்த அதிமுகவினரும், தலைவர்களும், விசுவாசிகளும் சசிகலாவின் நீக்கச் செய்தியால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. இனிமேலாவது முதல்வரை நேரில் பார்க்க முடியும், அதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும் ஜெயலலிதா, சசிகலாவை கட்சியை விட்டு தள்ளி வைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

எனவே இன்றைய நீக்கம் எந்த அளவுக்கு வீரியம் மிகுந்தது என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

நன்றி: அலைகள்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty Re: ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by 2009kr Mon Dec 19, 2011 8:42 pm

முன்பு போல் மனம் மாறாமல் இருந்தால் சரி!!!
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty Re: ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by சார்லஸ் mc Mon Dec 19, 2011 9:04 pm

கடந்த முறை மக்கள் , கட்சி தொண்டா்கள் நெருக்கங்களினால் பிாிய மனமில்லாவிட்டாலும் பிாிவது போல பிாிந்து , பின்பு சோ்ந்து கொண்டாா்கள்.
இப்பொழுதோ - இருவரும் கருத்து வேறுபாடு நிமித்தம் ஒருவரையொருவா் பிாிந்து இருக்கிறாா்கள். பிாிந்தது மட்டுமல்லாமல், அனைத்து உாிமைகளும் பறிக்கப்பட்ட நிலைவேறு. இருவருக்கும் மனக்காயங்கள் அதிகமாகி முற்றிய நிலையில்தான் முடிவெடுக்கப்பட்டு பிாிந்திருக்கிறாா்கள். எனவே, மீண்டும் மனம் மாறி சேர நினைத்தாலும் இப்போது ஏற்பட்ட மனகாயங்கள் மீண்டும் இரு தரப்பினருக்கும் மறைய நீண்டகாலம் பிடிக்கும் என தொிகிறது.
இரு தோழிகள் பிாிவது சற்று வருத்தப்பட வ‌ேண்டிய விஷயம்தான். ஏனென்றால், ஒரு முதல்வருக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் அதில் தோழி மிக உதவியாக, ஆறுதலாக தனிப்பட்ட முறையில் இருந்திருக்கிறாா். அதை நாம் அறிய இயலாது.
இவா்களது பிாிவு தமிழகத்திற்கு அரசுக்கு நிா்வாகத்திற்கு நல்லதென்றால் சாி. இல்லா விட்டால் நட்பிற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.


ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty Re: ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by Aathira Mon Dec 19, 2011 9:31 pm

உயிர்த்தோழி?.. உயிரை எடுக்கும் தோழி?...


ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Aஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Aஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Tஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Hஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Iஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Rஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Aஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty Re: ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by கேசவன் Tue Dec 20, 2011 9:05 am

முன்பும் 1997ம் ஆண்டு ஒருமுறை அவர் கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா. அப்போது 11 மாதங்களுக்கு போயஸ் கார்டன் பக்கமே வராமல் இருந்தார் சசிகலா. பின்னர் ஜெயலலிதாவே, சசிகலாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
மீண்டும் இதுபோல் நடக்காமல் இருந்தால் சரிதான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 1357389ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- 59010615ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Images3ijfஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா- Empty Re: ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு சிந்திக்கத் தொடங்கிய சசிகலா-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பஞ்சாங்கம் வாசிப்பு - தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும்!
» எந்த அளவுக்கு பிடிக்கும்
» ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறி பிடித்திருக்கிறது-அன்புமணி
» ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறி அனாதைகளாகி விட்ட தலைவர்கள்-ஸ்டாலின்
» பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum