ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:05

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:59

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை

2 posters

Go down

முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை Empty முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை

Post by சிவா Sun 18 Dec 2011 - 8:29

முல்லைப்பெரியாறு அணை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைகள் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணையை கட்டியே தீருவோம் என்பதில் கேரள அரசு உறுதியாக இருப்பதால், இதுதொடர்பான பிரச்சினையின் வேகம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்துக்கு இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கேரளாவிற்கு செல்லும் தமிழக அய்யப்ப பக்தர்கள் தாக்கப்படுகின்றனர். அந்த மாநிலத்தில் ஓடும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளை கல்வீசி தாக்குகிறார்கள்.

கடைகள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல்

கொலைவெறியுடன் நடைபெறும் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கு வசிக்கும் தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி தேனி போன்ற எல்லையோர மாவட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதன்காரணமாக தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேரளத்தினர் நடத்தும் கடைகள், ஓட்டல்கள், நிதி நிறுவனங்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.

தொடரும் போராட்டம்

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையால் தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

அவர்கள் கம்பம் பகுதியில் 13 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கண்டன பேரணியும் நடத்தப்பட்டது. கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் உருவ பொம்மை ஆங்காங்கே எரிக்கப்படுகிறது.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் போக்கினை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். கடையடைப்பு போராட்டமும் நடத்தப்படுகிறது. வக்கீல்கள் கோர்ட்டுகளை புறக்கணித்து போராடுகின்றனர். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏதாவது போராட்டத்தை நடத்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு போராட்டம் காரணமாக அய்யப்ப பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு செல்ல முடியாமல், தமிழ்நாட்டில் ஆங்காங்கே உள்ள அய்யப்பன் கோவில்களிலேயே விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள்.

இருமாநிலங்களிலும் இயல்பு நிலை இப்போதைக்கு திரும்புவதாக தெரியவில்லை. இதற்கிடையே, கேரளத்தில் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். அதனால், போராட்டத்தின் வேகம் குறைக்கப்பட்டாலும், போராட்டம் தொடரும் என்று அங்குள்ள அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.

அதேநேரத்தில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் பிரிவினை சக்திகளுக்கு கேரள மக்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் விஞ்ஞானப்பூர்வமாகவும், சட்டரீதியாகவும் தீர்வு காண்பதற்கு தமிழக மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருந்தபோதிலும், எல்லைப்பகுதியில் மக்கள் இன்னமும் எழுச்சியுடன் போராடி வருகிறார்கள்.

சட்டம்-ஒழுங்கு நிலை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையம் ஒரு சில வாரங்களில் செயல்பட தொடங்கும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து இருப்பதை எதிர்த்து தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) ஜார்ஜ், புலனாய்வுத்துறை ஐ.ஜி. தாமரைக்கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மின்சார நிலைமை

தமிழகத்தின் மின்சார நிலைமை குறித்தும் மின்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆலோசனை மேற்கொண்டார்.

தினதந்தி


முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை Empty Re: முல்லைப்பெரியாறு, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை - ஜெயலலிதா அவசர ஆலோசனை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun 18 Dec 2011 - 12:59

தமிழகத்தில் இன்று பெரும் பிரச்சினைகள் இவை இரண்டும். முதல்வர் இவ்விரண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருதல் மிக அவசியம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்
» போர்விமானம் தாக்கினாலும் கூடங்குளம் அணுமின்நிலையம் பாதிக்கப்படாது - அணுமின் நிலைய இயக்குனர்
»  கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூடு-ஒருவர் பலி
» சென்னையில் நிலநடுக்கம்.
» அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum