ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_m10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10 
VENKUSADAS
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_m10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_m10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10 
VENKUSADAS
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_m10மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

5 posters

Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by ரேவதி Fri Dec 09, 2011 3:24 pm

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Osthe-dec8-1



சிம்புவை விரல் நடிகர்னு ஊரே நக்கலடிக்கும். அதனால ‘இந்த படத்துலயாச்சும்
பத்து வெரலையும் கட்டிவச்சிட்டு நடிங்க பாஸ்’னு டைரக்டர் கொஞ்சி
கேட்டிருப்பார் போல. பயபுள்ள வெரலை கட்டிப்போட்டுட்டு கண்ணு காது மூக்கு
முழி இடுப்பு உடுப்புனு டோட்டல் பாடி பார்ட்ஸ்லயும் வளைச்சி வளைச்சி
வித்தைககாட்டி படம் பாக்கற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்ணிடுச்சி. அதுவாச்சும்
பரவால்லங்க படம் முழுக்க திருநெல்வேலி பாஷை பேசுறேனு அடித்தொண்டைல பேசி
ஏலே வாலே ஓலேனு இழுத்து இழுத்து பஞ்ச் டயலாக் பேசி ஸ்ஸ்ஸ்ப்பா.. ஒருமனுஷன்
எவ்ளோ நேரந்தான் வலிக்காத மாதிரியே இருக்கறது.

இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே
பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம்
அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு.
போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம்
சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க
சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே
சிரிச்சி மகிழுதுய்யா!

பாவம் தரணி! குருவினு ஒரு படமெடுத்து டோட்டல் தமிழ்நாடே குனியவச்சி
குளிப்பாட்டினதாலே கொஞ்சநாள் தலைமறைவாகி மறுபடியும் திரும்பி
வந்துருக்காப்ல! இந்த வாட்டி ரொம்பவே ரிஸ்க் எடுக்காம ஹிந்தில சல்மான்கான்
நடிச்ச தபாங்கையே ரிமேக்கிட்டாப்ல. நல்லதுதேன். ஆனாப்பாருங்க ஹிந்தில
காமெடியா நக்கலா எடுத்த படத்த சிம்புவ வச்சு ஏன் இம்பூட்டு சீரியஸா
எடுக்கோணும்னு கேக்கேன்! முழு உழைப்பகொட்டி படமெடுத்துருந்தாலும் ஆக்கின
சோத்துல பல்லிவிழுந்த மாதிரி சிம்புவச்சுலா படம் எடுத்துருக்காரு!

நேர்மையான போலீஸு + பயங்கரமான கெட்ட வில்லன் + அம்மாவ கொன்னுடறான் வில்லன் +
ஹீரோவோட தம்பி துரோகம் பண்றான் + ஹீரோயின லவ்பண்றான் ஹீரோ + கிளைமாக்ஸ்ல
தம்பி திருந்தி வில்லன் சாவுறான்! இவ்ளோதான் கதை. நான் பொறக்கறதுக்கு
முன்னாடி வெளியான பழிவாங்கற படம், போலீஸ் படம், அம்மா சென்டிமென்ட் படம்னு
அந்தப் படங்களோட கதைகளையெல்லாம் மிக்ஸ் பண்ணி எடுத்த ஹிந்தி படத்தோட
கதையப்போயி என்ன மைசூருக்கு காசு குடுத்து ரைட்ஸ் வாங்கி ரிமேக்
பண்ணோனுங்கறேன்! அதுமில்லாம இன்னைக்கு பம்பைக்காரனே தமிழ்படத்த
ரீமேக்கிட்டு திரியும்போது ஹிந்தி படத்த ரிமேக்கறதெல்லாம் சிம்புவாலதாம்லே
முடியும்! (விஜய் காட்டிய வழியா இருக்கலாம்) அது புரொடியூசர் படும் பாடு
நமக்கேன் பொச்செரிச்சல்றேன்.

அந்த பொண்ணு ஹீரோயினு படம் முழுக்க அங்கிட்டிருந்து இங்கிட்டு நடக்குது..
இங்கிட்டுருந்து அங்கிட்டு நடக்குது.. ஒன்னு ரெண்டு வசனம் பேசுது.. பாட்டுல
கூட சிம்புதான் ஆடுதாரு. ஹீரோயின் நடந்துகிட்டே இருக்குது. அஜித்து
அண்ணன்கிட்ட நடிப்பு டிரெயினிங் எடுத்துகிட்ட புள்ளையோ என்னவோ.. இடுப்புல
தங்கத்துல அர்ணாகொடியோ என்னவோ மாட்டிகிட்டு ஜிங்கு ஜிங்குனு செம நடப்பு
குட் இடுப்பு! அதிர்ச்சியூட்டும் வகைல ஜித்தன் ரமேஷ் ஓரளவு சுமாரா
நடிச்சிருக்காப்ல..

வில்லன் நடிகர் சோனுசூட் எப்பயும் போல ஏஏஏஏஏஏய் னு கத்தறதையும் டாடா
சுமோவுல பாஞ்சு பாஞ்சு துறத்தறதையும் நல்லா திருப்தியா செஞ்சுருகாப்ல.
படத்தோட ஒரே சந்தோசம் பேரரசு இஸ்டைல் மசாலா வசனங்கள்! அப்புறம் அந்த கலாசலா
கலாசலானு எல்ஆர் ஈஸ்வரியோட பாடி மல்லிகா ஷெராவத்து ஆடற குத்துப்பாட்டு..
அந்த ஒரே ஒருபாட்டுக்காக படம் பாக்கலாம். சந்தானம் போர் அடிக்க
ஆரம்பிச்சிருகாப்ல.. அடுத்தவருஷம் ரீல் அந்துரும்னுதேன் தோணுது.

இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம்
காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி
வருது..

மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய
துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது
மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா
பாத்துக்கலாம்.










நன்றி அதிஷா


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:31 pm

இந்த சிம்புபையன் சாதாரண தமிழ்ல பஞ்ச் டயலாக் பேசினாலே இந்தியாவுக்கே
பொறுக்காது.. இதுல திருநெல்வேலி பாஷைல பன்ச் அடிச்சா 2011லயே உலகம்
அழிஞ்சிராதா! பயபுள்ள போலீஸ் வேஷத்துல வேற நடிச்சி தொலைச்சிருக்கு.
போஸ்டர்ல ஏதோ கிராபிக்ஸ் பண்ணி பாக்க மீசையில்லாத தங்கப்பதக்கம்
சிவாஜியாட்டம் லிட்டில் சூப்பர் ஸ்டாரை காட்டிட்டாலும் ஸ்க்ரீன்ல பாக்க
சொல்ல கோயம்புத்தூரு ஸ்டேன்ஸ் ஸ்கூலு பத்தாம்ப்பூ பையனாட்டம்.. தியேட்டரே
சிரிச்சி மகிழுதுய்யா!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இத்தன கொடுமைக்கு மத்தில கிளைமாக்ஸ்ல சிம்பு சிக்ஸ்பேக்ஸ் பாடியெல்லாம்
காட்டுறாரு. கண்ணு ரெண்டையும் தோண்டி காக்காய்க்கு போட்டுரலாம்போல கொலைவெறி
வருது..

மத்தபடி பெருசா சொல்ல ஒன்னுமில்லே.. அரைச்ச மாவ அரைப்போமா துவைச்ச துணிய
துவைப்போமானு ஒரு படம். எங்களுக்கும் மசாலா படம் புடிக்கும்லே.. ஆனா இது
மொன்னை மசாலா. ஒன்னும் அர்ஜன்ட் இல்லலே... டிவில போடுறப்ப பொறுமையா
பாத்துக்கலாம்.

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
இதைத் தான் நான் செய்வேன் காசு குடுத்து மொக்கை வாங்கமாட்டேன் நடனம் நடனம் நடனம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by ரேவதி Fri Dec 09, 2011 3:35 pm

ஜாஹீதாபானு wrote:
இதைத் தான் நான் செய்வேன் காசு குடுத்து மொக்கை வாங்கமாட்டேன் நடனம் நடனம் நடனம்
சியர்ஸ் சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by ஜாஹீதாபானு Fri Dec 09, 2011 3:45 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
இதைத் தான் நான் செய்வேன் காசு குடுத்து மொக்கை வாங்கமாட்டேன் நடனம் நடனம் நடனம்
சியர்ஸ் சியர்ஸ்
நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by கே. பாலா Fri Dec 09, 2011 6:29 pm

குருவி,
தெலுங்கு பங்காரத்துக்கு முன் வரை அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்த
இயக்குனர் தரணி. விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு இவரை
பிடிக்காதவர்களுக்கும் பிடித்துப் போன நடிகரான சிம்பு. ஏற்கனவே
இந்தியாவெங்கும் சூப்பர் ஹிட்டான “தபாங்”கின் ரீமேக் என்பது போன்ற
விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்க, படத்தின்
டெபிஸிட் காரணமாய் நேற்று காலை வெளியாகாமல் மதியத்திற்கு மேல் ஒரு வழியாய்
வெளியாகியது.



சிம்பு ஒரு தடாலடி போலீஸ் இன்ஸ்பெக்டர். யாரைப் பற்றியும் கவலைப்படாதவர்.
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம். இவருக்கும் இவரது வளர்ப்பு தந்தை,
தம்பிக்குமான உணர்வுபூர்வமான ப்ரச்சனை ஒருபுறம். ஊரில் எலக்‌ஷனில் நிற்கு
அரசியல்வாதி பாக்ஸர் அர்ஜுன் ப்ரசனை ஒருபுறம் என்று ஓட, இவற்றையெல்லாம்
எப்படி சமாளித்து எப்படி வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Osthe-complete-gallery-166_thumb%25255B3%25255D
என்ன தான் எஸ்.டி.ஆர். என்று பெயரை மாற்றிக் கொண்டாலும் சிம்பு தான்
பழக்கதிற்கு வருகிறது. இந்தி தபாங்கில் வரும் சல்மான்கானின் அலட்டலை
கம்பேர் செய்யவில்லை என்றால் சிம்பு நிஜமாகவே உழைத்திருக்கிறார்.
சாதாரணமாகவே திரையில் பெரிதாய் அலட்டும் இவரின் மேனரிசங்கள் இப்படத்தின்
கேரக்டருக்கு சரியாகப் பொருந்துகிறது. படம் முழுவதும் மனிதர் படா பந்தாவோடு
அலைகிறார். இவரது உயரத்துக்கு மாச்சோவாக காட்ட நிறைய லோ ஆங்கிள்
ஷாட்டுகளை வைத்திருப்பதால் பில்டப் தாங்குகிறது. இவரது திருநெல்வேலி
ஸ்லாங்கும் பர்பெக்டாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.


மயக்கம் என்னவுக்கு பிறகு ரிச்சாவின் நடிப்பில் வந்திருக்கும் படம்.
என்னதான் கம்பேர் செய்யக்கூடாது என்று நினைத்தாலும், இந்தி ஹீரோயின்
சோனாக்‌ஷியை மீறி மனதில் நிற்க முடியவில்லை. இருந்தாலும் ஓகே. முதல் பாதி
முழுவதையும் சும்மா எல்லாரையும் அடா புடாவென அடித்து பிரித்து
மேய்ந்திருக்கிறார் சந்தானம். பல இடங்களில் செம நச். வர வர பல படங்களை
சந்தானம் தான் காப்பாற்றி வருகிறார். அதில் இதுவும் ஒன்று. ஒரு பாட்டின்
நடுவில் சிம்பு மாதிரி டான்ஸு ஆடுகிறார். ஹீரோயினின் குடிகார அப்பாவாக
விடிவி கணேஷ். பெரிதாய் ஒட்டவில்லை. சிம்புவின் வளர்ப்பு அப்பா நாசர்,
தம்பியாக ஜித்தன் ரமேஷ், மயில்சாமி, வில்லன் சோனு சூட், விஜயகுமார் என்று
ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நிறைவாக செய்திருந்தாலும். முதல்
காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சி வரை எதிர் டீமில் இருந்து கொண்டு
சிம்புவை புகழ்ந்து கொண்டு அவரிடமும், வில்லனிடமும் அடிவாங்கிக்
கொண்டிருக்கும் அந்த ரவுடி கேரக்டர் சூப்பர். அதே போல் மல்லிகா ஷெராவத்
பெருசாய் எடுபடவில்லை.
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Osthe-complete-gallery-135_thumb%25255B3%25255D
கோபிநாத்தின் ஒளிப்பதிவு இம்மாதிரியான மசாலா படங்களுக்கு தேவையான எல்லா
எபெக்டுகளையும் சரியாய் கொடுத்திருக்கிறது. பரதனின் வசனங்கள், திருநெல்வேலி
ஸ்லாங்கில் நச்சென இருக்கிறது. சில இடங்களில் அட போட வைக்கிறது. தமனின்
இசையில், வாலியின் வரிகளில் எல்லாமே குத்து பாடல்களாய் அமைந்துவிட்டது.
அதற்கான ஆடியன்ஸுக்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாய்
கொடுத்திருக்கிறார். பின்னணியிசையில் ஓரளவு இரைச்சல் குறைந்திருப்பது
சந்தோஷமாய் இருக்கிறது.
மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Osthe-complete-gallery-157_thumb%25255B3%25255D
திரைக்கதை, இயக்கம் தரணி. பெரும்பாலும் இந்தி படத்தை அப்படியே
ஒத்தியெடுத்திருக்கிறார். கதைக்கான களமாய் திருநெல்வேலியை எடுத்தது
ஸ்மார்ட் மூவ். லாஜிக் பற்றி எந்த ஒரு கவலையில்லாமல் ஒரு மாஸ் படத்தை தர
முயன்று அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கேள்வி கேட்க
வேண்டும் என்றால் ஒரிஜினல் படத்திலேயே கேட்டிருக்க வேண்டும். ஏற்கனவே
வெற்றி பெற்றதை எதற்கு ரிப்பேர் செய்ய வேண்டும் என்று யோசிப்பது சரிதான்.
ரிச்சாவின் கேரக்டரில் ஒரு சின்ன மென்சோகம் இந்தியில் இருக்கும் அது
ரிச்சாவை பார்க்கும் போது வரவில்லை. அதே போல ரிச்சாவின் அப்பா தன்
மகளுக்காக சாகும் சீன் இன்னும் உருக்கமாய் அமைந்திருக்கும் அது இங்கு
குறைவே. வில்லன் சோனு சூட் க்ளைமாக்ஸில் சிக்ஸ் பேக்கோடு சண்டைப் போடுவதை
தவிர, பெரியதாய் ஏதும் செய்யவில்லை என்றாலும், ஏதோ செய்வது போன்ற்
இம்பாக்டை க்ரியேட் செய்யும் திரைக்கதை இண்ட்ரஸ்டிங். மல்லிகா ஷெராவத்தின்
பாடல் ஒண்ணும் எடுபடவில்லை. சிம்புவை ஒரு மாச்சோவாக காட்ட எடுத்துக் கொண்ட
டெக்னிக்கல் முயற்சி வெற்றி என்றே சொல்ல வேண்டும். சிம்புவின் வளர்ப்பு
தந்தை, தம்பி, அம்மாவுக்கிடையே ஆன நெக்ஸஸ் தான் படத்திற்கு முக்கியமான
லைன். அதை அப்படியே எடுத்தாண்டு சரியாய் கொடுத்து, படத்தின் முடிவில்
சிம்புவுக்கு சிக்கன் லெக் பீஸையெல்லாம் எடுத்து ஊட்டி விட்டு எவ்வள்வு
கஷ்டப்பட்டு இப்படத்தை வெற்றிகரமாய் கொடுக்க உழைத்திருக்கிறார் என்பதை
டைரக்டோரியல் டச்சாய் வெளிபடுத்தியிருக்கிறார்.

நன்றி : கேபிள் சங்கர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 6:44 pm

இந்த படத்திற்கு முதல் காட்சி பார்க்கப் போயிருந்தேன்..
என் நல்ல நேரம் கோயம்புத்தூர் ல படமே வரல.. சாயந்தரம் 4 மணிக்கு தான் முதல் காட்சியே போட்டாங்க..
அதனால பாக்க முடியல..
இப்ப பாக்கவும் போறதில்ல.. நன்றி ரொம்ப ரொம்ப நன்றி அக்கா,.


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by Guest Fri Dec 09, 2011 6:51 pm

சில அவதூறான வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன நீக்கவும் .. நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Dec 09, 2011 6:54 pm

நல்ல விமர்சனம்...ஆனால் எனக்குப் பிரயோசனம் இல்லை. காரணம் நான் முழுமையா ஒரு படம் தியேட்டரில் பார்த்து ஒரு இருபது வருடம் இருக்கும். என் வீட்டில் டிவி யில் படம் பார்ப்பார்கள். நான் எழுந்து கணினிக்கு வந்துவிடுவேன். ஆபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் கொஞ்சநேரம் டிவியில் வடிவேல் ஜோக்ஸ் பார்ப்பேன். அது மிகவும் மனதுக்கு ரிலாக்ஸ் ஆக இருக்கும். விருப்ப பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்  Empty Re: மொக்கைக்கு லிமிட்டே கிடையாதுலே! ஒஸ்தி விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum